சனி, 14 டிசம்பர், 2019

எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்


முன்னொரு காலத்தில், காட்டில் வாழும் சிங்கம் ஒன்று மிகவும் வயதாகி, தனது உணவுக்காக அங்கிங்கும் என அலைந்து திரிந்து எந்தவொரு விலங்கையும் தன்னுடைய இரையாக கொன்று தின்ன முடியாத நிலை ஏற்பட்டது . எனவே, அது தனக்குத்தானே , என் வயிற்று பசியை தனிப்பதற்காக நான் ஏதாவது செய்ய வேண்டும், இல்லையென்றால் நான் பட்டினியால் இறந்துவிடுவேன். என்னசெய்வது என யோசித்துக்கொண்டே இருந்தது, கடைசியில் ஒரு அருமையான யோசனை ஒன்றினை அடைந்தது. அதாவது அந்த சிங்கமானது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக நடித்து கொண்டு குகையில் படுத்துக்கொள்ள முடிவு செய்தது , பொதுவாக இவ்வாறு நமக்கு அருகில் இருப்பவர்கள் யாருக்காவது உடல்நிலைசரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடக்கின்றனர் எனில் உடன் சுற்றுபுறத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒருவர் பின்ஒருவராக அவர்களுடை வீட்டில் அவர்களுக்கு அருகில் சென்று நலம் விசாரிப்பதுநம்முடைய வழக்கமல்லவா அதேபோன்று மற்ற விலங்குகள் தன்னுடைய உடல்நிலை குறித்து விசாரிக்க எந்த விலங்காவது குகைக்குள் வந்து சேரும் நாம் உடன் அதனை அடித்து தின்று நம்முடைய வயிற்று பசியை ஆற்றிகொள்ளலாம் என முடிவுசெய்து பொல்லாத திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்ததுஅதனை தொடர்ந்து அந்த சிங்கத்திற்கான நலம் விரும்பிகள் பல அந்த சிங்கத்தினை நலம்விசாரிக்க குகைக்குள் சென்றவுடன் அவைகள் கொல்லப்பட்டு அந்த சிங்கத்திற்கு நல்ல இரையாகிவிட்டன. ஒரு நாள், ஒரு நரி அந்த சிங்கத்தைப் பார்க்க வந்தது. நரிகள் இயற்கையாகவே புத்திசாலித்தனமாக இருப்பதால், அந்நரி குகையின் வாயில் நின்று பார்த்தது. அதனுடைய ஆறாவது உணர்வு வேலை செய்தது மேலும் அது யதார்த்தநிலையை அறிந்து கொண்டது . எனவே, அது வெளியில் இருந்துகொண்டே சிங்கத்திடம், “ஐயா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் உடல்நிலை இப்போது பரவாயில்லையா என நலன் விசாரித்தது” அதற்கு சிங்கம் , “எனக்கு உடல்நிலை சரியில்லை. நடக்கவே முடியவில்ல ஆனால் நீ ஏன் உள்ளே என்னுடைய அருகில்வந்து நலன்விசாரிக்ககூடாது? ” என பதிலளித்தது அதனை தொடர்ந்து நரி , “நானும் குகைக்குள் உங்களுக்கு அருகில் வந்து நலன்விசாரிக்க விரும்புகிறேன், ஐயா! ஆனால் உள்வரும் வழித்தடத்தை பார்த்தவுடன், குகைக்குச் வரும் பாதையில் உள்ளே அனைவரும் வந்ததற்கான கால் தடம் மட்டுமே காணப்படுகின்றன ஆனால் அவை வெளியே திரும்பி வந்ததற்கான காலடி எதுவும் காணவில்லை ஐயா அதனால் அவ்வாறாக , திரும்பி வெளியேறமுடியாமல் உள்ளே மட்டும் வருவதற்கு நான் ஒன்றும் முட்டாள்தனமாக இருக்கமாட்டேன். என கூறி , நரி மற்ற விலங்குகளை எச்சரிக்கச் சென்றுவிட்டது. நீதி: எந்தவொரு சூழ்நிலையிலும் அடுத்த படிமுறையை பின்பற்றுவதற்கு முன் அதனால் நமக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்படுமாவென எப்போதும் எச்சரிக்கையாக கவணமுடன் செயல்படுக

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...