வெள்ளி, 27 டிசம்பர், 2019

வருமான வரிபடிவங்களை சமர்ப்பிக்கும்போது பொதுவாக நம்மனைவரிடமும் எழும் தவறுகளும் அவற்றினை தவிர்ப்பதற்கான வழிமுறைகளும்


1.தவறானவருமானவரிபடிவத்தை தெரிவுசெய்தல்(SELECTION OF WRONG ITR): நம்முடைய வருமானம் என்னென் அதற்கு பொருத்தமானவருமானவரி படிவம் எதுஎன தெரியாமல் குழப்பத்தில் தவறான படிவத்தை தெரிவுசெய்திடுவர் இதனை தவிர்த்திட https://www.incometaxindia.gov.in/Supporting%20Files/ITR2018/Instructions/Instruction_ITR7_2018.pdf/ என்ற முகவரியில் கூறிய அறிவுரைகளை நன்கு படித்தறிந்து நம்முடைய வருமானத்தினை எந்தவகையான படிவத்தில் சமர்ப்பிக்கவேண்டுமென சரியான படிவத்தை தெரிவுசெய்திடுக 2 வருமான வரியை அதிகமாக அல்லது குறைவாக பிடித்து செலுத்தியதாக சமர்பித்தல் (UNDER/OVER REPORTING OF DEDUCTIONS): நம்முடைய வருமானம் எவ்வளவு அந்த வருமானத்திற்கு நடப்புநிதியாண்டின் எவ்வளவு வரிசெலுத்தவேண்டும் என சரியாக கணக்கிடாமல் அதிக வரிபிடித்தம் செய்வது அல்லது குறைவாக பிடித்தம் செய்து செலுத்துவது ஆகிதவறுகளை சரிசெய்திட நமக்கு வழங்கப்பட்ட படிவம் 16 அல்லது 26Sஆகியவற்றின் வாயிலாக எவ்வளவு வருமானவரி பிடித்தம் செய்து செலுத்தப்பட்டது என அறி்ந்து கொண்டு அதற்கேற்ப நம்முடைய வருமானவரியை சரியாக கணக்கிட்டு செலுத்திடுக 3 வருமான வரிபடிவத்தில் அனைத்து வருமானங்களையும் காட்டாது விட்டிடுதல் (NOT DISCLOSING ALL INCOME IN ITR): சம்பளதாரர்களெனில் அதற்கான படிவம் 16 கொடுத்துள்ளது மட்டும்தான் தம்முடைய வருமானம் என்றும் வியாபாரம் செய்பவர்கள் அதுமட்டும்தான் தம்முடைய வருமானம் என்றும் மற்றவகையில் கிடைக்கும் வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர் இந்நிலையில் FDds, mutual fund, shares, interest ,income from freelance work போன்ற பல்வேறு வகையில் கிடைக்கின்ற வருமானங்களையும் விடுபடாமல் இருப்பதற்காக இவைகளனைத்திற்கும் PAN எனும் பொதுவான ஒரே வருமானவரிஎண் பயன்படுத்தப்பட்டால் அவைகளுக்காக வழங்கபடும் வருமானவரிபிடித்த சான்றிதழ்களைகொண்டுமிகச்சரியாக வருமானவரி கணக்கிட்டு சமர்ப்பிக்கலாம் 4 வரிவிலக்கு வருமானங்களை அறிக்கையில் காண்பிக்காது விட்டிடுதல் (NON-REPORTING OF EXEMPT INCOME): PPF இற்கான வட்டி ,டிவிடென்ட், நீண்டகாலமுதலீட்டு ஆதாயம் ,ஆயுள்காப்பீட்டு முதிர்வுதொகை போன்றவைகளை அதற்கான பகுதியில் குறிப்பிடுவது நல்லது 5 கடைசிநேரம்வரை காத்திருத்தல்: நம்மில் பெரும்பாலானோர் வருமான விவரங்களை கணக்கிட்டவுடன் வருமானவரிபடிவம்தயார்செய்து சமர்ப்பிப்போம் என்றில்லாமல் கடைசிநாள்வரை காத்திருந்து கடைசிநாளன்று அனைவரும் ஒட்டுமொத்தமாக வருமானவரி இணையதளத்திற்குள் உள்நுழைவுசெய்வதால் சரியான நேரத்திற்குள் நம்முடைய வருமானவரிபடிவத்தை சமர்ப்பிக்கமுடியாமல் தத்தளிக்கின்ற நிலையை ஏற்படுத்திடுகின்றனர் இதனை தவிர்த்து வருமானவிவரங்களை கணக்கிட்டு முடிந்தவுடன் உடனடியாக எப்போது வேண்டுமானாலும் வருமானவரிபடிவத்தை தயார்செய்து சமர்ப்பிப்பது நல்லது 6 வருமானவரி படிவஏற்புகை படிவத்தை கையொப்பமிட்டு சமர்ப்பிக்கதவறுதல்: பொதுவாக நாம்தான் இணையதளத்தில் நம்முடைய வருமான வரிபடிவத்தை சமர்ப்பித்துவிட்டோமே அதனால் தனியாக அதற்கான ஏற்புகை படிவத்தை கையொப்பமிட்டு எதற்காக சமர்ப்பிக்கவேணடும்என விட்டுவார்கள் அவ்வாறானவர்கள் E-VERIFY என்பதை தெரிவுசெய்து சரிபார்த்திடுக அல்லது ITR V (ACKNOWLEDGEMENT)என்பதை பதிவிறக்கம்செய்து நம்முடைய கையொப்பமிட்டு குறிப்பிட்ட காலகெடுவிற்குள் சமர்ப்பித்திடுக.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...