புதன், 4 டிசம்பர், 2019

நிறுமங்களின் அனைத்து பொதுபங்களும் இனி தாராளமயமாக்கல் வடிவத்தில்(Demat) மட்டுமே கையாளபடும்


பொதுபங்குகளின் வெளியீடுகளின் மூலம் பொதுமக்களிடமிருந்து பங்குத்தொகை பெற்று பங்குசந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களும் 2.10.2018 முதல் மேலும் புதிய பங்குகளை வெளியிடுவதாக இருந்தாலும் பங்குதாரர்களுக்கிடையே பங்குகளை பரிமாற்றம் செய்வதாக இருந்தாலும் தாராளமயமாக்கல் வடிவம்(Demat) எனும் புதிய வழிமுறையில் மட்டுமே செய்யவேண்டும் என நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகம் தனது சுற்றறிக்கையின் வாயிலாக உத்திரவிட்டுள்ளது அதாவது இதுவரையில் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே தாராளமயமாக்கல் வடிவத்தில்(Demat) இருந்துவந்ததற்கு பதிலாக அனைத்து நிறுவனங்களும் மேலும்புதியதாக வெளியிடும் பங்களையும் பங்கு பரிமாற்றங்-களையும் தாராளமயமாக்கல் வடிவத்தில்(Demat) மட்டுமே 2.10.2018 முதல் செயற்படுத்தவேண்டும் என உத்திரவிட்டுள்ளது நிறுவனங்களில் பங்குபரிமாற்ற நடவடிக்கைகளில் மேலும் வெளிப்படைத்தன்மை,, முதலீட்டாளர்களின் பாதுகாப்பு நிறுமங்களின் நிருவாகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் இதன்பொருட்டு நிறுமங்களின் விதிகளும் திருத்தப்பட்டிருக்கின்றன இதன்வாயிலாக கிடைக்கும் முக்கிய நன்மைகள் பின்வருமாறு 1பங்குசான்றிதழ்கள் காணாமல் போதல், திருட்டுபோதல், அழிந்துபோதல், மோசடியாக அபகரித்தல் என்பனபோன்ற அபாயங்களை அறவே அகற்றப்படும் 2. வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், பினாமி பங்குதாரர் நடவடிக்கைகள் , நிறுமனங்கள் தம்முடைய பங்குதாரர்களுக்கு முன் தேதியிடப்பட்டு பங்குகளை வழங்குதல் என்பனபோன்ற பல்வேறு தவறான நடைமுறைகளை தடுக்கும் வகையில் நிறுவனங்களின் நிருவாக அமைப்புமுறை இதன்மூலம்மேம்படுத்தப்படும் 3.பங்குகளின் பரிமாற்றத்தின்போது முத்திரை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு. அளிக்கப்படும் 4. பங்குகளின் பரிமாற்றம்செய்தல் ,அடைமானம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை எளிமையாக்கபடும் ஆகியனவாகும் பொதுமக்களுக்காக பங்குகளை வெளியிடுவதற்கான விதிமுறைகள் 2014 விதிமுறை 9 க்குப் பின்,"9A. எனும் திருத்தம் செய்வதன் வாயிலாக இந்த புதிய நடைமுறை 2.10 .2018 நடைமுறைக்கு வருகின்றது அதனை தொடர்ந்து 2.10.108 முதல்எந்தவொரு பட்டியலிடப்படாத பொது நிறுவனமும் பொதுபங்குகளை இனி வெளியிடுவதாக இருந்தால் தாராளமயமாக்கல் வடிவத்தில்(Demat) மட்டுமே வெளியிடப்படவேண்டும் இதனை தொடர்ந்து பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்கள் அனைத்தும் வைப்புத்தொகைச் சட்டம், 1996 ன் விதிமுறைகளுக்கு இணங்க தாம் இதுவரை வெளியிடுதல் செய்து தற்போது நடப்பு பங்குகளை வைத்திருக்கும் அனைத்து பங்குதாரர்களின் பங்கு பத்திரங்களின் வகைக்கேற்ப உலகளாவிய பொதுப்பங்குகளின் சுட்டிஎண் (International security Identification Number (ISIN))ஒன்றினை ஒதுக்கீடு செய்து அந்த தகவலை பங்குதாரர்களுக்கு அறிவிப்பு செய்திடவேண்டும் மேலும் புதிய பங்குகளை வெளியிடுதல் அல்லது மிகைஊதிய பங்குகளை(Bonus Share) வழங்குதல் அல்லது உரிமை பங்குகள் (Right Share)வழங்குதல் ஆகியவற்றின் எந்தவொரு பங்குபத்திரமும் வழங்குவதற்கு, முன்னர், அதன் விளம்பரதாரர்கள், இயக்குநர்கள், முக்கிய மேலாளர்கள் ஆகியோரின் பங்குபத்திரங்கள் அனைத்தையும் நிறுமமானது தாராளமயமாக்கல் வடிவத்திற்கு(Demat) மாற்றிடவேண்டும் பத்திரங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனை வாரிய (டெபாசிட்டரிகள் மற்றும் பங்கேற்பாளர்கள்) விதிமுறை 55Aஇன் கீழ் தணிக்கை அறிக்கையை ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறை தங்களுக்கு அருகேயுள்ள நிறுமங்களின் பதிவாளருக்கு சமர்ப்பிக்கவேண்டும் பங்குசந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களின் பங்குகளை வைத்திருக்கும் எந்தவொரு நபரும் தன்னுடைய பங்குகளை மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்யவிரும்பினால் முதலில் தான் வைத்திருக்கும் பங்குகளுக்கான பத்திரத்தை தாராளமயமாக்கல் வடிவத்தில்(Demat)உருமாற்றம் செய்தபின்னரே மற்றவர்களுக்கு பங்குகளை பரிமாற்றம் செய்திடும் பணியை மேற்கொள்ளமுடியும் இத்தகைய தாராளமயமாக்கல் வடிவம்(Demat) செய்வதால் எழும் எந்தவொரு குறைபாடுகளையும் அல்லது பங்குசந்தையில் பட்டியலிடப்படாத பொது நிறுவனங்களின் பங்குகளை வைத்திருக்கும் தனிநபர்களுக்கு குறைகள் ஏதேனும் இருந்தாலும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிய ஆணையத்தினை (The Investor Education and protection Fund Authority( IEPF)) அனுகிதீர்வு செய்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...