ஞாயிறு, 12 ஜனவரி, 2020

வினைவிதைத்தவன் அந்தவினையையே அறுவடைசெய்வான்


ஒரு நாள் அலுவலக ஊழியர்கள் அனைவரும் தம்முடைய அலுவலகத்தை அடைந்தபோது, நுழைவு வாயிலிற்கு அருகில் உள்ள அறிவிப்பு பலகையில் “நேற்று இந்நிறுவனத்தில் பணிபுரிந்த உங்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த நபர் ஒருவர் இயற்கை எய்திவிட்டார். அவருடைய உடலிற்கு இறுதி மறியாதை செய்வதற்காக அருகிலுள்ள ஜிம்மிற்கான அறைக்கு உங்களை அழைக்கிறோம் ” என்று எழுதப்பட்ட அறிவிப்பு ஒன்றினை கண்டனர் அவ்வாறான இறுதி மரண அஞ்சலி அறிவிப்பினை கண்டவுடன் .அவர்கள் அனைவரும் தங்கள் சக ஊழியர்களில் ஒருவரின் மரணத்திற்கு வருத்தமடைந்தனர், ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு, நம்முடைய வளர்ச்சியை தடுத்த அந்த நபர் யார் என்பதை அறிய மிகவும் ஆர்வம் காட்டத் துவங்கினர். இந்த செய்தி காட்டுத்தீ போன்று பரவியதால் ஜிம்செயற்படுத்திடும் அறைக்குள் ஏராளமான அளவில் ஊழியர்கள் “இந்த நிறுவனத்தில் என்னுடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த அந்த நபர் யார்?“ என்பதை காண மிகவும் பரபரப்புடன் சென்றனர், அதனால் அந்த அறைக்குள் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான பாதுகாவலர்கள் ஒழுங்குபடுத்திடும் பணியைசெயற்படுத்திடும் அளவிற்கு கூட்டம் கட்டுக்குள் அடங்காமல் உயர்ந்துகொண்டிருந்தது “ அந்த துரோகி நேற்றோடு நம்மைவிட்டு ஒழிந்தான் பரவாயில்லை! அவ்வாறான துரோகி இறந்ததும் .நல்லதுதான், “ என மனநிம்மதியுடன் ஆனாலும் அந்த துரோகியார்தான் என காணும் ஆவலால் உந்தப்பட்டு பெருந்திரளான அலுவலக ஊழியர்கள் சவப்பெட்டியை காண ஒன்று சேர்ந்ததால் அந்த அறை முழுவதும் வெப்பகதிர்வீசும் அளவிற்கு இடநெருக்கடி ஏற்பட்டுவிட்டது. பார்வையாளர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக சவப்பெட்டியை காண அனுமதிக்கப்பட்டனர்,ஆனால் அவர்கள் சவப்பெட்டியின் உள்ளே பார்த்தபோது அதுவரையில் ஆரவாரத்துடன் வந்து கொண்டிருந்த அவர்கள் அனைவரும் திடீரென்று அதிர்ச்சியடைந்தவர்களாக ஒவ்வொருவரும் பேச்சுமூச்சில்லாமல் மாறிவெளியேறினர். ஏனெனில் காலியான சவப்பெட்டிக்குள் அவர்களுடைய உருவம் பிரிதிபலிக்குமாறான ஒரு கண்ணாடியானது பார்வையாளர்களின் உருவத்தையே காண்பித்தது மேலும் "உங்கள் வளர்ச்சிக்கு தடையாக நிற்கும் திறன் கொண்டஒரேயொருவர் மட்டுமே இருக்கிறார்: அது நீங்கள்தான்." "உங்கள் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரே நபர் நீங்கள் தான். உங்கள் மகிழ்ச்சியையும் உங்கள் வெற்றியையும் பாதிக்கக் கூடிய ஒரே நபர் நீங்கள்மட்டும் தான். நீங்களே உங்களுக்கு உதவக்கூடிய ஒரே நபர்ஆவீர்கள். நீங்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மாறும்போதும், உங்களுடைய நண்பர்கள் மாறும்போதும், உங்கள் வாழ்க்கை மாறாது. ஆனால் நீங்கள் அதற்கேற்ப மாறும்போது உங்கள் வாழ்க்கை மாறியமைகின்றது, உங்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பு என்பதை நீங்கள் உணருங்கள் " என்ற சிறுஅறிவிப்பு வேறு அதில் எழுதப்பட்டிருந்ததை படித்தபின்னர் பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் தான்மட்டுமே தன்னுடைய முன்னேற்றத்திற்கு காரணமானவனா என அதிர்ச்சி அடைந்து பேச்சுமூச்சற்று வெளியேறிகொண்டிருந்தனர் . நீதி: உலகவாழ்க்கையானது ஒரு கண்ணாடி போன்றது. ஒருவர்எண்ணங்களின் பிரதிபலிப்பையே அதுஅவருக்கு திருப்பித் தருகிறது. வினைவிதைத்தவன் அந்தவினையையே அறுவடைசெய்வான் எனும் பழமொழிக்கு ஏற்ப இவ்வுலகின் யதார்த்த வாழ்க்கைநிலையானது அந்த சவப்பெட்டியில் உள்ள கண்ணாடிபோன்று நம்முடைய செயலையே பிரதிபலிப்பவையாகும், . அதில் நீங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதம் தான் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...