சனி, 4 ஜனவரி, 2020

ஒரு அதிசயத்தின்விலைநூற்று பதினோரு ரூபாய்மட்டுமே


தம்பி அறிவின் உடல்நிலையே பற்றி அம்மாவும் அப்பாவும் பேசுவதைக் கேட்டபோதுஅருள்மொழி எட்டு வயதுடையசிறுமியாவாள் . அவளுக்குத் தெரிந்ததெல்லாம், தனது தம்பி அறிவு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்துவருவதும், அதற்கான மருத்துவும் செய்வதற்காக போதுமான பணமெதுவும் தங்களுடைய குடும்பத்தில் இல்லைஎன்பதுதான் .மேலும்இதுவரையில் தம்பியின் மருத்துவசெலவினால் கைவசம் இருந்த பணம்முழுவதும் காலியாகிவிட்டது வீட்டில் போதுமான பணம் இல்லாததால் தற்போது குடியிருக்கும் பெரியவீட்டிற்கான வாடகைதொகை செலுத்தமுடியாத நிலைஉருவாகிவிட்டது அதனால் வேறொரு சிறியவீட்டிற்குள் அடுத்த மாதம் செல்லவிருக்கின்றனர். மிகவும் விலையுயர்ந்த அறுவைசிகிச்சையால் மட்டுமே இப்போதுதம்பியை காப்பாற்ற முடியும், மேலும் அந்த அறுவுசிகிச்சைக்கு தேவையான பணத்தினை அவர்களுக்குக் கடன் கொடுத்து உதவ யாரும் இல்லை என்றநிலை இருந்தது. அவளுடைய அப்பா கண்ணீர் மல்க விரக்தியுடன் , "ஒரு அதிசயம் மட்டுமே இப்போது அறிவை காப்பாற்ற முடியும்." என தன்னுடைய தாயிடம் கூறியதை மட்டுமே அருள்மொழி கேட்டாள் அதனை தொடர்ந்து அருள்மொழி தனது படுக்கையறைக்குச் சென்று, அங்கு தான்வைத்திருந்த உண்டியலை திறந்து தரையில் கொட்டி எவ்வளவு தொகை இருக்கும்என கவனமாக எண்ணினாள். பின்னர் அந்த தொகையை சிறிய பணப்பையில் வைத்துகொண்டு ஏராளமான நபர்கள் வந்து கொண்டும் போய்கொண்டும் இருந்தசிவப்பு கூட்டல்குறி அடையாளமிட்ட அந்த பிரபலமான பெரியஆங்கில மருந்துகடைக்கு சென்றாள். மருந்தாளுநர் அவளிடம் திரும்பி என்னவேண்டும் என கேட்கும்வரை அவள் மிகவும் பொறுமையாகக் காத்திருந்தாள், ஆனாலும் மருந்தாளுநர் அவளை திரும்பிகூட பாராமல் மிகவும் பரபரப்பாக இருந்தார் அதனால் . மருந்தாளுநரின் கவணம் தன்பக்கம் திரும்பிடுமாறு அருள்மொழி தொண்டை யிலிருந்து ஒரு கரகரப்பான ஒலிவருமாறு செருமினாள் பின்னர் கையிலிருந்தசிறிய பணப்பையினால் மேஜையை தட்டினாள் இவ்வாறு பல்வேறு முயற்சிகளுக்குபின்னர் "உனக்கு என்ன வேண்டும்?" என அந்த ஆங்கிலமருந்தகத்தின் மருந்தாளர் சிறிது எரிச்சலூட்டும் குரலில்அருள்மொழியிடம் கேட்டார். "நான் இந்த நகரில் வசிக்கும் எனது தம்பிக்காகஉங்களிடம் பேசவேண்டியுள்ளது " என்றுவேண்டுகோள்விடுத்தாள் அதனைதொடர்ந்து "வேலை என்னுடைய தலைக்குமேல் ஏராளமாக இருக்கின்றன பொறுமையாக பேசுவதற்கு எல்லாம் எனக்கு நேரம் இல்லை " என அந்த மருந்தாளுநர் பதில் கூறியதும் . "சரி, நான் என்னுடைய தம்பியை பற்றி உங்களுடன் பேச விரும்புகிறேன்," என அருள்மொழி மீண்டும் கோரிக்கைவிடுத்தாள்.பின்னர் தொடர்ந்து "என்னுடைய தம்பி உடல்நிலை சரியில்லாமல் இருக்கின்றான் ..அதனை சரியாக்குவதற்காக. நான் உங்கள் கடையிலிருந்து ஒரு அதிசயத்தை வாங்க விரும்புகிறேன்." என கோரினாள் “ சரியாக கேட்கவில்லை என்ன மருந்துவேண்டும்? மீண்டும் கூறு” என்றார் மருந்தாளுநர். "எனது தம்பி அறிவின் தலையில் ஏதோ மோசமாக வளர்ந்து கொண்டிருக்கின்றதாம் , ஒரு அதிசயம் இருந்தால் மட்டுமே இப்போது அவனைக் காப்பாற்ற முடியுமாம் என்னுடைய அப்பா கூறுகின்றார். ஒரு அதிசயத்தின்விலை எவ்வளவு? ” என அருள்மொழி கேட்டாள் அதனை தொடர்ந்து அந்த மருந்தாளுநர் “நாங்கள் இங்கே அதிசயம் எல்லாம விற்க மாட்டோம்,போ போ வேறு கடைக்கு செல் , ”என்று மருந்தாளுநர் அருள்மொழியை விரட்டினார்.இருந்தாளும்அவள்தொடர்ந்து “அந்த அதிசயத்திற்கான பணம் என்னிடம் உள்ளது. இது போதாது என்றால், மீதியைப் கொண்டுவருகின்றேன். எவ்வளவு பணம் வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள். ” என மீண்டும்வலியுறத்தி கோரினாள் அப்போது அந்த அந்த மருந்து கடைக்கு வந்த நன்கு உடையணிந்த மனிதர். குனிந்து அந்தச் சிறுமியிடம், “உங்களுக்கு என்ன அதிசயம் தேவை?” என்று கேட்டார். "எனக்குத் தெரியாது," எனஅருள்மொழி பதிலளித்தாள் தொடர்ந்து. "ஆனால் என்னுடைய தம்பி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அறிவேன், எனதுதம்பிக்கு ஒரு அறுவை சிகிச்சை தேவை என்றுஅம்மா கூறினாள். ஆனால் என் அப்பா அதற்கு போதுமான பணம் இல்லை ஏதாவது அதிசயம் இருந்தால் சரியாகும் என கூறினார் , எனவே அந்த அதிசயத்தை வாங்குவதற்கு நான் சிறிது சிறிதாக சேமித்து வைத்த எனது பணத்தைஇங்கு எடுத்து வந்துள்ளேன் . ”என விவரித்தாள்அருள்மொழி "உங்களிடம் எவ்வளவு இருக்கிறது?" என்று அவர் கேட்டார். "நூற்று பதினொரு ரூபாய்,உள்ளது" என அருள்மொழி பதிலளித்தார். “ என்னிடம் உள்ள எல்லாப் பணமும்இவ்வளவுதான், ஆனாலும் அந்த அதிசயத்திற்காக இன்னும் தேவைப்பட்டால் கொண்டுவந்து கொடுப்பேன்“ என அருள்மொழி பதில் கூறினாள் . "சரி,பரவாயில்லை," அந்த மனிதன் சிரித்தார். தொடர்ந்துஅவர்"நூற்று பதினொரு ரூபாய் - அருள்மொழியின் தம்பி அறிவிற்கான ஒரு அதிசயத்தின் சரியான விலை." என கூறிகொண்டு அவளுடைய பணத்தை ஒரு கையில் வாங்கிகொண்டு அவளுடைய கையை பிடித்து, "நீங்கள் வசிக்கும் இடத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள். நான் உங்கள் சகோதரனைப் பார்த்திடவிரும்புகின்றேன். உங்களுக்கு தேவையான அதிசயம் என்னிடம் இருக்கிறதா என்று பார்ப்போம். ” என கூறினார் நன்கு உடையணிந்த அந்த மனிதர் பிரபலமான, ஒரு அறுவை சிகிச்சை நிபுணர்ஆவார், அவர் நரம்பியல் அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர். அவர்களுடைய வீட்டிற்கு சென்று அவளுடையதம்பியை பார்த்தபின்னர் தன்னுடைய மருத்துவமனைக்கு அழைத்து கட்டணம் எதுவும் வசூலிக்காமல் சரியான அறுவைசிகிச்சை செய்து அவளுடைய தம்பிஅறிவின் உடல்நிலையை பழையநிலைக்கு கொண்டுவந்து மீண்டும் வீட்டிற்கு வந்து நன்றாகச் செயல்படுமாறு செய்தார் . அவளுடைய அம்மாவும் அப்பாவும் “அந்த அறுவை சிகிச்சை உண்மையில் ஒரு அதிசயம்தான். அதற்கு எவ்வளவு செலவாகியிருக்கும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? ” என அவளுடைய தம்பியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சரிசெய்த நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.. அந்த ஒரு அதிசயத்திற்கான விலை நூற்று பதினொரு ரூபாய் -என்று அருள்மொழி மனதிற்குள் சிரித்தாள் இதுதான் இளம் சிறுவர்களின் உண்மையான நம்பிக்கையாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...