திங்கள், 13 ஜனவரி, 2020

தனியார் நிறுமத்தை நான்கு எளியபடிமுறையில் பதிவுசெய்திடலாம்


வணிகச் சந்தையில் புதியதான நம்முடைய நிறுவனத்தை இணைத்திடு-வதற்கு நாம் கூடுதலாக அனைத்து சட்டப்பூர்வ மான தேவைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்பதால், புதியதொரு வர்த்தக நிறுவனத்தை துவங்குதல் என்பது எந்தவொரு வியாபாரிக்கும் மிகவும் சிக்கலான சிரமமான பணியாகின்றது. பொதுவாக புதியதாக தொழில் முனைவோர் அனைவரும் தம்முடைய வியாபார நிறுவனத்தை துவக்கி நல்லநிலையில் வணிகத்தை நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்த தயாராக உள்ளனர், ஆயினும் அவ்வாறான நிறுவனத்தை சட்டநடைமுறைபடி பதிவு செய்திடும் பணியை செயல்படுத்துவதற்காக தயாராக இருக்கும் உள்ளூர் பகுதியில் தொழில் நுட்ப வல்லுநர்களை அனுகினால் அதிக செலவிட வேண்டியிருக்கும் என அவ்வாறான நிறுவனத்தை சட்டநடைமுறைபடி எந்தவித தொந்திரவுமில்லாமல பதிவுசெய்வதில் மட்டும் கவணம் செலுத்தாமல் விட்டிடுகின்றனர் அவ்வாறானவர்கள் அதிக செலவில்லாமல் பின்வரும் எளிய படிமுறையை பின்பற்றி நேரடியாக இணையத்தின் வாயிலாக தம்முடைய புதிய நிறுவனத்தை பதிவுசெய்து வியாபாரநிறுவனத்தை துவங்கலாம் . படிமுறை-1.இரும கையொப்பசான்றிதழ் பெறுதல் முதல் பணியாகDSC என சுருக்கமாக அழைக்கப்படும் இருமகையொப்ப சான்றிதழ் பெறுவதாகும் தற்போது நிறுமத்திற்கான MCA இணையபக்கமட்டுமல்லாமல் நம்மடைய அனைத்து நடவடிக்கைகளும் இணையத்தின் வாயிலாகவே நடைபெறுவதால் அவை ஒவ்வொன்றிலும் அதனை பதிவேற்றுபவரின் கையொப்பமிடுவதற்கு பதிலாக அங்கீகாரம் பெற்றவர்களின்இந்த இருமகையொப்ப சான்றிதழை இணைத்தால் போதும் இந்த சான்றிதழை பெறுவதற்காக அவ்வாறு இரும கையொப்ப சான்றிதழ் பெறவிரும்புவோரின் மார்பளவு உருவப்படம்,சுயமாக கையொப்பமிட்டஅவருடைய முகவரிக்கான ஆதாரசான்றிதழின் நகல், சுயமாக கையொப்பமிட்ட அவருடைய வருமானவரி எண் அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பித்தால் உடன் விண்ணப்பம் செய்வோருக்கான இரும கையொப்பசான்றிதழ் கிடைக்கப்பெறும் படிமுறை-2 எந்தவொரு நிறுவனத்திலும்இயக்குநர்குழுவே இடைநிலையில் முகவர்களாக இருந்து செயல்படுவராவார்கள். நிறுமத்தின் MCA இணையதளத்தின் வாயிலாக அவ்வாறான நிறுவன இயக்குநர் குழுவின் ஒவ்வொரு இயக்குநருக்கும் (DIN)என சுருக்கமாக அழைக்கப்படும் இயக்குநர் சுட்டிஎண் ஒன்று வழங்கப்படுகின்றது அதனை இயக்குநராக பதிவுசெய்திட விரும்பும் ஒவ்வொருவரும் பெறவேண்டும் இதற்காக அவ்வாறு DIN பெறவிரும்புவோரின் மார்பளவு உருவப்படம்,சுயமாக கையொப்பமிட்ட அவருடைய முகவரிக்கான ஆதாரசான்றிதழின் நகல், சுயமாக கையொப்பமிட்ட அவருடைய வருமானவரி எண் அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பித்தால் உடன் விண்ணப்பம் செய்வோருக்கான இயக்குநர்சுட்டிஎண் கிடைக்கப்பெறும் படிமுறை-3 இந்திய நாட்டில் ஒரு தனியார் நிறுமமாக பதிவுசெய்வதற்குமுன் அந்நிறுமத்திற்கான பெயரை முதலில் ஒதுக்கீடுசெய்து கொள்ளவேண்டும் இதற்கான விண்ணப்பமாக புதியதனியார் நிறுமத்திற்கு INC-1எனும் மின்படிவத்தை பூர்த்தி செய்து போதுமான கட்டணத்துடன் நாம் பெயரிடவிரும்பும் புதியநிறுமத்திற்கான பெயர்களாக ஆறுபெயர்களை மட்டும் வரிசைபடுத்தி MCA இணையதளத்தில் பதிவேற்றம்செய்தால் அவ்வாறான பெயர் வேறுயாரும் தெரிவுசெய்யவில்லை என தேடுதல்செய்து சரிபார்த்தபின் அவற்றுள் ஒரு பெயர் மட்டும் நிறுமபதிவாளரால் 60 நாட்களுக்குள் அனுமதிக்கப்படும் அல்லது நாம் பட்டியலிட்டபெயர் ஏற்கனவே வேறு நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தால்வேறு பெயர் பட்டியலை கூடுதலாகமீண்டும் சமர்ப்பிக்குமாறு கோரப்படுவதை ஏற்று சமர்ப்பித்தால் சரிபார்த்து அவற்றுள் ஒரு பெயர்மட்டும் நிறுமபதிவாளரால் அனுமதிக்கப்படும் இவ்வாறாக நாம் சமர்ப்பிக்கும் பெயரானது உச்சரிக்கவும் நினைவில் கொள்ளவும் எளியதாகவும் சுருக்கமாகவும் இருந்திடுமாறு பார்த்துகொள்க படிமுறை-4 SPICe என சுருக்கமாக அழைக்கப்படும் நிறுவனத்தை இணைப்பதற்கான எளிமையான மின்னனுநடைமுறை படிவத்தை சமர்ப்பித்திடவேண்டும் 1. பொதுவாக ஒரு நிறுமத்தின் அடிப்படை நோக்கம் செயல் குறிப்புகள் அடங்கிய MoA எனசுருக்கமாக அழைக்கப்படும் Memorandum of Association of Companyஎன்பதும் அவற்றை எவ்வாறு செயல்படுத்தபோகின்றோம் என விளக்ககுறிப்புகளடங்கிய AoA எனசுருக்கமாக அழைக்கப்படும் Articles of Association. என்பதும் ஆன அடிப்படையான மிகமுக்கியமான ஆவணங்களை அதற்கான தொழில்நுட்ப வல்லுனர்களின் துனையுடன் மிக கவனமாக உருவாக்கிவிடவேண்டும் 2.அதனைதொடர்ந்து SPICe எனும் படிவத்துடன் நிறுமத்தின் பதிவுஅலுவலகம் அமையவுள்ள இடத்திற்கான சொந்தகாரரின் NOC சான்றிதழ் , 2.அ.வாடகை அலுவலகம் எனில் வாடகை ஒப்பந்தபத்திரமும் வாடகை பெற்றதற்கான சான்றும், 3.நிறுமத்தில் இயக்குநராக செயல்பட சம்மதி்த்த நபர்களின் DIR – 2 எனும் படிவத்தின் வாயிலாக ஒப்புதல் , 4.முதன்முதலாக முதலீடு செய்பவர்கள் ,இயக்குநர்கள் ஆகியோர்களின் INC – 9 எனும் படிவத்தின் வாயிலாக வெளிப்படையான வாக்குமூலமும் அறிவிப்பும் அதனோடு அவை பதிவுபெற்ற சட்டவல்லுனரின் சான்றொப்பமும் கொண்டதாகஇருக்கவேண்டும் 5.முதன்முதலாக முதலீடு செய்பவர்கள் ,இயக்குநர்கள் ஆகியோர்களின் இருப்பிடத்தின் சுயமான சான்றிதழ் 6. நிறுமத்தை பதிவுசெய்வதற்காக அரசிற்கான கட்டணம் முத்திரைத்தாள் கட்டணம் ஆகியவை செலுத்திய சான்று 7.நிறுமத்திற்கு தேவையான PAN , TAN ஆகியவற்றை பெறுவதற்கான விண்ணப்பம்செய்த நகல் ஆகிய சான்றுகளுடன் SPICe இணைத்தின் வாயிலாக MCA இணையதளத்தில் பதிவேற்றம்செய்திட்டால் நிறுமபதிவாளர் இவைகளை சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கின்றதுஎன திருப்தியுற்றால் Certificate of Incorporation (CoI) எனும் புதியநிறுமத்தினை பதிவுசெய்ததற்கான சான்றிதழை வழங்குவார் இதனை தொடர்ந்து புதிய தனியார் நிறுமம் தன்னுடைய வியாபாரத்தை செயல்படச் செய்யலாம் அதன்பின்னர் நிறுமங்களின் சட்டம்2013 இன்படி தேவையான படிவங்களையும் வருடாந்திர படிவங்களையும் ஒவ்வொரு வருடமும் அல்லது குறிப்பிட்டகால இடைவெளியில் தொடர்ந்து MCA இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சமர்ப்பித்து கொண்டே இருக்கவேண்டும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...