புதன், 8 ஜனவரி, 2020

பொருட்களைவழங்குவதற்கான பயன்பாடுகள்(Delivery Driver Apps)


தற்போது கணினி, மடிக்கணினி ,கைக்கணினி, கைபேசி, திறன்பேசி என எங்கெங்கும் நம்முடைய வாழ்வின் அனைத்து செயல்களிலும் நீக்கமற நிறைந்து நம்முடைய வாழ்க்கையின் ஒரு உறுப்பாகவே ஆகிவிட்டநிலையில் இவைகளை நம்முடைய அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தி கொள்வதற்கு பொருத்தமான பயன்பாடுகள்தான் மிகமுக்கியபங்கு வகிக்கின்றன இவைகளை ப்ளேஸ்டோர் அல்லது வேறு இடங்களில் இருந்து பெறமுடியும். பணபரிமாற்றம் ,மருத்துவர்கள் மருத்துவமணைகளில் நாம் செல்வதற்காக பதிவுசெய்தல் விமாணபயனம் ,தொடர்வண்டிபயனம் ,பொழுதுபோக்கு காட்சிக்கு பதிவுசெய்தல ஆகியவற்றிற்காக பதிவிசெய்திடுதல் அதுமட்டுமல்லாது நமக்கு தேவையான மளிகை பொருட்கள் இதரபொருட்களை கொள்முதல் செய்தல் குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே கொள்முதல்செய்தல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் ஏதாவதொரு பயன்பாட்டின் வாயிலாகவே நடைபெறுகின்றன ஆயினும் இந்த பொருட்களை நம்முடைய வீட்டிற்கு கொண்டுவந்து சேர்ப்பதற்காக .Delivery Driver Appsஎனும் பயன்பாடும் மிகமுக்கியதேவையாகும் அதாவது ஒரு பொருளை கொள்முதல் செய்பவர் அதனை விற்பவரிடம் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து அதற்கான தொகையை இணையத்தின் வாயிலாக செலுத்திவிடுகின்றார் இந்த நடைமுறைகளுக்கான பயன்பாடுகள் இந்த பொருட்களை கொள்முதல் செய்தல் அதற்கன பணபரிவர்த்தனை ஆகிய செயல்களை செயல்படுத்திடுகின்றன. அதற்கடுத்ததாக அவ்வாறு கொள்முதல் செய்த பொருட்களை விற்பணையாளரிடமிருந்து கொள்முதல் செய்பவருக்கு கொண்டு சென்று சேர்த்திடவேணடுமல்லவா இங்குதான் Delivery Driver Appsஎனும் பயன்பாடானது இவ்விருவருடைய விருப்பத்தையும் பூர்த்திசெய்திடும் இடைமுகவராக இருந்து செயல்படுகின்றன வாடிக்கையாளர் தான் இருந்த இடத்திலிருந்தவாறு தனக்கு தேவையான உணவுப்பொருட்களை இந்த பயன்பாடுகளின் வாயிலாக கோரி பெறமுடியும் அவ்வாறே தன்னுடைய வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களையும் மற்ற மணை அணிய பொருட்களையும் இந்த பயன்பாடுகளின் வாயிலாக பெறமுடியும் அதனால் அவர் அதற்காக செலவிடும் நேரத்தை வேறு பயனுள்ள வகையில் பயன்படுத்தி கொள்ளமுடியும் இந்த பயன்பாட்டினால் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டுசேர்ப்பதற்கான புதிய வேலைவாய்ப்பு உருவாகின்றது என்ற செய்தியை மனதில் கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...