சனி, 25 ஜனவரி, 2020

நிறுமம் அல்லது பொறுப்புவரையறுக்கப்பட்ட கூட்டாண்மை இரண்டில் எதுசிறந்தது


நிறுமம் என்பது இந்திய நிறுமங்களின் சட்டம்2013 இன்படி பதிவுசெய்யப்பட்டதாகும் இவைகளை தனியார்வரையறுக்கப்பட்ட(Pvt) நிறுமம் என்றும் பொதுவரையறுக்கப்-பட்ட(Public Ltd) நிறுமம் என்றும் இரண்டுவகையாக பிரிக்கலாம்இங்கு ஒப்பீட்டிற்கு தனியார்வரையறுக்கப்பட்ட(Pvt) நிறுமத்தையே கணக்கில் கொள்கின்றோம் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை(LLP) என்பது கூட்டாண்மையின் தன்மைகளும் நிறுமங்களின் வசதியும் ஒன்றினைந்து மேம்படுத்தப்பட்டு உருவாக்கப்-படுவதாகும் இவ்விரண்டில் எதுசிறந்தது இவ்விரண்டிலும் உள்ளநன்மை தீமைகள் யாவை என்பன பற்றி ஒரு பறவை பார்வை பாரத்திடுவோம் நெகிழ்வுதன்மையுடன் இயங்குதல் LLPஆனது கூட்டாண்மையின் தன்மைகளுடன் கூட்டாளிகளுக்கிடையே கூட்டாளிகளால் உருவாக்கி கூட்டாளிகள் அனைவராலும் ஏற்றுகொள்ளப்படும் கூட்டாண்மைஒப்பந்தம்( partnership deed) எனும் ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் தொடர்ச்சியாக இயங்கிடும் (perpetual succession) தன்மையுடனும் கூட்டாண்மை நிறுவனத்தின் பெயரில் மட்டுமேசொத்துகளையும் பொறுப்புகளையும் கொண்டு இயங்கவல்லதாகும் Pvt நிறுமம் ஆனது நிறுமங்களின் சட்டங்களின் படியும் வழிகாட்டுதல்களின் படியும் இயங்கவல்லது 2.சட்டஅங்கிகாரம் LLP ஆனது பொறுப்புவரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம் 2008 இன் படிபதிவுசெய்யப்பட்டு செயல்படும். Pvt நிறுமம் ஆனது நிறுமங்களின் சட்டம் 2013 இன்படி பதிவுசெய்யப்பட்டு செயல்படும். 3.இயங்குவதற்கான நிருவாகசெலவு மேம்பட்ட LLPஐ நிருவகிப்பதற்கு மிககுறைந்த அளவே செலவிடவேண்டியிருக்கும் ஆயினும் Pvt நிறுமத்தில் இயக்குநர்களின் குழுக்கூட்டம் பொதுப்பேரவை கூட்டம் தணிக்கையாளர்கள் நியமித்தல் பல்வேறு அறிக்கைகளை சமர்ப்பித்தல் காலதாமதமானால் அதற்கானஅபராத கட்டணம் செலுத்துதல்என நிருவாக செலவு அதிகஅளவு ஏற்படும் 4 குறைந்த பட்சஅதிகபட்சஉறுப்பினர்களின் எண்ணிக்கை LLP இல் குறைந்த-பட்சம் இரண்டு தனிநபர்கூட்டாளிகளும் அதிகபட்சம் எவ்வளவு நபர் வேண்டு-மானாலும் கூட்டாளிகளாக சேர்ந்து LLP ஐ உருவாக்கி இயக்கலாம் Pvt நிறுமத்தில் குறைந்தது 2 தனிநபர்களும் அதிகபட்சம் 200 நபர்கள் மட்டும் உறுப்பினர்களாக இணைந்து இயக்கமுடியும் 5.பதிவுசெய்தல் LLPஐ LLP சட்டம்2008 இன்படி www.mca.gov.in எனும் முகவரியின் நிறுமங்களுக்கான இணையதள வாயிலில் பதிவுசெய்து கொள்ளவேண்டும் தற்போது 2.10.2018 இலிருந்து LLP-RUN(ஒருங்கிணைந்த பெயர் ஒதுக்கீடு(Reserve Unique Name)), FiLLiP ஆகிய இரண்டு புதிய வழிமுறையின் படி ஒருLLPக்கான பெயரை ஒதுக்கீடு-பெற்று இயக்குநர்களுக்கான எண்களை பெற்று LLPஐ பதிவுசெய்து அதற்கான பதிவுசான்றிதழைபெற்றபின்னர் LLPஐ துவங்கமுடியும் Pvt நிறுமத்தினை இதேwww.mca.gov.in எனும் முகவரியின் நிறுமங்களுக்கான இணையதள வாயிலில் RUN (ஒருங்கிணைந்த பெயர் ஒதுக்கீடு(Reserve Unique Name)), SPICe ஆகிய புதிய வழிமுறைகளின் அடிப்படையில் பெயர் ஒதுக்கீடு பெற்று இயக்குநர்களுக்கு எண்களை பெற்று , பதிவுசான்றிதழை பெற்றபின்னர் ஒருPvt நிறுமத்தை துவங்க-முடியும் தொடர்ந்து Pvtக்கு தேவையான PAN , TAN ஆகியவைகளும் நிறுவனம் துவங்கி வியாபார செயல் தடையில்லாமல் இயங்குவதற்கு ஏதுவாக வழங்கப்படும் 6.வருமானவரிவிகிதங்கள் LLP இல் ஈட்டப்படும் இலாபத்தில் 30%உம் அதனோடு மேல்வரியும் சேர்த்து வருமானவரியாக அரசிற்கு செலுத்திடவேண்டும் மிகுதியான இலாபத்தினை கூட்டாளிகள் பிரித்து கொள்ளும் இலாப பகிர்விற்கு வருமான வரி எதுவும் செலுத்த தேவையில்லை Pvt நிறுமத்தில் ஈட்டப்படும் இலாபமானது ஆண்டிற்கு ரூ.250 கோடி வரை25%உம் அதனோடுமேல்வரியும் சேர்த்து வருமானவரி செலுத்திடவேண்டும் அதற்குமேல் எனில் 30%உம் அதனோடுமேல்வரியும் சேர்த்து வருமானவரி செலுத்திட வேண்டும் ஆனால் உறுப்பினர்களுக்க வழங்கப்படும் பங்காதாய (Dividend) தொகையில் 16.55%உம் அதனோடுமேல்வரியும் சேர்த்து வருமானவரி செலுத்திடவேண்டும் 7 முக்கிய அடிப்படைஆவணங்கள் LLP இக்கு LLP சட்டம்2008 இன்படி கூட்டாண்மை ஒப்பந்தம்ஒன்றினை கூட்டாளிகளால் உருவாக்கி அதனை அனைத்து கூட்டாளிகளும் ஏற்று அதில் கையொப்பமிட்டு இருக்கவேண்டும் இந்த ஒப்பந்தத்தில் கூட்டாளிகள் விரும்பியவாறு அனைவரும் ஏற்றுகொண்டு மாற்றி யமைத்து கொள்ளலாம் Pvtஇல் நிறுமங்களின்சட்டம்2013இல் வறையறுத்தவாறு MoA , AoA ஆகிய இரண்டும் அத்தியாவசிய தேவையாகும் இதில் விருப்பப்பட்டவாறு எளிதாக மாற்றி கொள்ளமுடியாது பொதுப்பேரவையின் சிறப்பு தீர்மானத்தின் வாயிலாக தனிஅனுமதிபெற்றால் மட்டுமே மாற்றியமைத்திடமுடியும் 8 கூட்டங்கள் LLPஇல் LLPஇன் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில் கூட்டம் நடத்தவேண்டும் இல்லையெனில் விரும்பினால் கூட்டம் நடத்தலாம். Pvtஇல் நிறுமங்களின்சட்டம்2013இன்படி காலண்டர் ஆண்டில் ஒவ்வொரு காலாண்டிற்கு ஒன்றுவீதம் குறைந்தபட்சம் நான்கு இயக்குநர்களின் குழுக்கூட்டமும் ஒரு நிதியாண்டிற்கு ஒரு பொதுப்பேரவை கூட்டமும் அரசு விடுமுறை இல்லாத நாட்களில் மட்டும் வியாபார நேரத்திற்குள் கூட்டத்திற்கானகுறிப்பிட்ட நாட்களுக்கமுன்பு கூட்டமுன்னறிவிப்பு அனுப்பி கண்டிப்பாக கூட்டவேண்டும் 9 உடைமையாளரை சேர்த்தல் அல்லது மாறுதல்கள் செய்தல் LLPஇல்கூட்டாளிகளை சேர்த்தல் நீக்குதல் ஆகிய செயலிற்கு LLPஒப்பந்தத்தில் திருத்தம் செய்திடவேண்டும் அதனோடு தேவையான முத்திரைக்கட்டணம் செலுத்தி பதிவுசெய்துகொள்ளவேண்டும் அதனால் கூட்டாளிகள் சேர்த்தல் அல்லதுநீக்குதல் என்பதுLLPஇல் மிகச்சிக்கலான பணியாகின்றது. Pvtஇல் சம்பந்தபட்ட உறுப்பினரின் சம்மதம் இயக்குநர்களின் குழுத் தீர்மானம் ஆகிய இரண்டுடன் படிவம் எண் SH-4 ஐ நிறுமங்களுக்கான பதிவாளரிடம் சமர்ப்பித்து அனுமதிபெறுவதன் அடிப்படையில் உறுப்பினர்களை சேர்த்தல் நீக்குதல் ஆகிய பணிகளை மிகஎளிதாக செயற்படுத்தலாம் 10 அறிக்கை சமர்ப்பித்தல் LLPஇல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 இற்குள் முந்தைய ஆண்டிற்கான கணக்குபதிவியலிற்கானபடிவம் 9, மே31 இற்குள் முந்தைய ஆண்டில் இருந்த உடைமையாளர்களின் அறிவிப்பிற்கான படிவம் 11 ஆகிய இரண்டு மட்டும் நிறுமங்களுக்கான பதிவாளரிடம் சமர்ப்பிக்கவேண்டும் Pvtஇல் ஒவ்வொரு ஆண்டும் முடிவுற்றதும் இலாப நட்ட கணக்கு, இருப்பநிலை குறிப்பு ,ஆண்டு அறிக்கை இயக்குநர்களின் மாறுதல்களின் அறிக்கை பொதுப்பேரவை கூட்ட அறிக்கை, தணிக்கையாளர் நியமித்தற்கான அறிக்கைஎன எண்ணற்ற அறிக்கைகளை அதற்கான தனித்தனி படிவங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறுமங்களுக்கான பதிவாளரிடம் சமர்ப்பிக்கவேண்டும். 11 தணிக்கையாளர் நியமனம் LLPஇல் தணிக்கையாளர் நியமனம் அத்தியாவசிய-மன்று ஆனால் ஆண்டுவருமானம் குறிப்பிட்ட அளவிற்கு மேல் உயரும்போது மட்டும் கண்டிப்பாக LLPஇல் தணிக்கையாளர் நியமனம் தேவையாகும். Pvtஇல் தணிக்கையாளர் நியமனம் கண்டிப்பாக செய்யவேண்டும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தணிக்கையாளரை மாற்றிடவேண்டும் இவ்வாறான இரண்டு அமைப்புகளுக்குமிடையேயான சாதக பாதகங்களை பார்த்துவரும்போது அதிகஅளவுமுதலீடு தேவைப்படாத தொழில்முறை(Professional) பணிகளுக்கும், சேவைத்துறை பணிகளுக்கும் LLP வகையிலும் அதிகஅளவு முதலீடு தேவைப்படும் பொருட்களின் உற்பத்தி ,போக்குவரத்து போன்ற சேவைத்துறை அல்லாத வகைகளுக்கு பொதுமக்களிடமிருந்து பங்குகள், இட்டுவைப்புத்தொகைகள், கடன்பத்திரங்கள் ஆகியவைகளில் முதலீட்டினை திரட்டும்நிலையில் கண்டிப்பாக Pvt வகையிலும் பதிவுசெய்து துவங்குவது நல்லது என பரிந்துரைக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...