சனி, 8 பிப்ரவரி, 2020

தற்போதைய நம் அனைவருடைய எதார்த்த வாழ்க்கையின் உண்மையான நிலை


அமெரிக்க நாட்டின் ஒரு நகரத்தில் வானாளவ உயர்ந்த ஒருவீட்டினுடைய 80 ஆவது மாடியில் 2 சகோதரர்கள் வாழ்ந்த வந்ந்தனர். ஒரு நாள் அவ்விருவரும் வெளியில் தங்களுடைய பணிகளை முடித்தபின்னர் திரும்பி தங்களுடைய வீட்டின் கீழ்தளத்திற்கு வந்ததும், மாடிவீடுகளில் மேல்தளத்திற்கு செல்ல உதவிடும் லிஃப்ட் வேலை செய்யவில்லை என்பதையும், அவர்கள் 80 ஆவது மாடியிலுள்ள தங்களுடைய வீட்டிற்கு படிக்கட்டுகளின் வழியாக மட்டுமே ஏறிசெல்ல வேண்டும் என்பதையும் கண்டு அவர்கள் திகைத்துநின்றுவிட்டனர். அதனை தொடர்ந்து எப்படியாவது தங்களுடைய வீட்டிற்கு சென்று சேரவேண்டுமே என படிகட்டுகளின் வழியாக 20ஆவது மாடிவரை போராடி ஏறியபின், அவர்களுடைய உடல் மிகசோர்வாகவும் மனநிலை மிகபதட்டமாகவும் இருந்தநிலையில் அவ்விருவரும், தங்களுடைய கைகளில் வைத்திருந்த பைகளை எடுத்துகொண்டு படிஏறுவது மிககடிணமானசெயலாகும் என அந்த 20ஆவது மாடியிலேயே தங்களுடைய கைகளில் வைத்திருந்த பைகளை வைத்துவிட்டால் படிஏறவது சுலபமாக இருக்கும் நம்முடைய பைகளை மறுநாள் வந்து எடுத்துகொள்ளலாம் என அவர்கள் வர முடிவு செய்தனர். தொடர்ந்து அவர்கள் தங்களுடைய கைபைகளை அங்கே 20ஆவதுமாடியிலே வைத்துவிட்டு படிஏறினார்கள். அவ்வாறு படிகளின் வாயிலாக அவ்விருவரும்40 ஆவது மாடிவரை போராடிஏறியபோது தம்பியின் கால்களிரண்டும் வலிஅதிகமாகிவிட்டது மேலும் எவ்வாறு படிஏறுவது எனமுணுமுணுக்க ஆரம்பித்தார் அதனைதொடர்ந்து இருவரும் சண்டையிட ஆரம்பித்தனர். இருந்தபோதிலும் எப்படியோ 60ஆ வது மாடிவரை ஒருவருக்குவர் நீயா நானா என செல்லும் வழியெல்லாம் சண்டையிட்டு கொண்டே தொடர்ந்து படிகளின் வாயிலாக ஏறிக்கொண்டிருந்தனர். மிகுதி ஏறுவதற்கு இன்னும் 20மாடிகள் மட்டுமே இருப்பதை உணர்ந்த அவ்விருவரும், படியேறும்போது சண்டையிட்டு கொண்டிருந்தால் உடல் சக்திதான் வீணாகுமே தவிர மாடிபடிஏறுவதற்கான திறன் குறைந்துவிடும் என சமாதானமாக சண்டையை நிறுத்தி, நிம்மதியாக தொடர்ந்து ஏற முடிவு செய்தனர். மிகநீண்ட காலஅவகாசம் எடுத்துகொண்டு அமைதியாக மிகுதி படிகளை ஏறி இதற்குமேல் தங்களுடைய கால்களால் ஒரு அடிகூட எடுத்துவைத்து நடக்கமுடியாது என்ற நிலையில்ஒருவழியாக 80 ஆவது மாடியிலிருந்த தங்களுடைய வீட்டின் வாயிற்கதவிற்கு முன்அவ்விருவரும் வந்தடைந்தார்கள். ஆயினும் அவ்விருவரும் கதவின் முன் அமைதியாக நின்று மற்றவர் கதவைத் திறக்கக் காத்திருந்தனர். ஆனால் அவ்விருவரும் 20 ஆவது மாடியில் வைத்துவிட்டு வந்த தங்களுடைய கைப்பைகளில்தான் தங்களுடைய வீட்டின் சாவி இருப்பதை அப்போதுதான் அவ்விருவருக்கும் தெரியவந்தது அதனால் மீண்டும் 20 ஆவது மாடிக்கு சென்று தங்களுடைய கைப்பையிலிருக்கும் சாவியை எடுத்துகொண்டு வருவதா அல்லது வேறு என்ன செய்து தங்களுடைய 80 ஆவது மாடியிலுள்ள வீட்டிற்குள் செல்லமுடியும் என திகைத்து தலையில் கைவைத்து கொண்டு அவ்விருவரும் உட்கார்ந்து விட்டனர் . அதேபோன்று நம்மில் பலர் நம்முடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள் ,நண்பர்கள். சுற்றத்தார்கள் ஆகியோர்களின் கனவு எதிர்பார்ப்பு ஆகியவற்றை நிறைவேற்றும் பொருட்டாகவே 20 வயதுவரை வாழ்ந்து வருகின்றோம்.அதனால் நம்முடைய லட்சியங்களையும் விருப்பங்களையும் கனவாக மட்டுமே காண்கிறோம் ஆயினும் நம்முடைய விருப்பம் கனவு போன்றவைகளுக்கு ஏற்ப நாம் வாழஆரம்பிப்பது என்பது ஒருசிலருக்கு மட்டும் மிகஅரிதாகவே இருக்கும், சுற்றியிருப்பவர்களின் ஆசையை நிறைவேற்று வதற்காகவே நாம் வாழவேண்டியநிலையில் மன அழுத்தத்தினாலும் பணிச்சுமையினாலும் சோர்வடைகின்ற நிலைக்கு தள்ளப்பட்டு புதிய வாழ்க்கையை துவக்கவேண்டிய இக்கட்டான நிலையில் நாம் வாழ துவங்குகின்றோம் இருந்த போதிலும் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டும் விடுபடாமலும் நம்முடைய கனவை கைவிட்டுவிட்டு சுற்றியுள்ளவர்களின் ஆசையின் அடிப்படையில் உற்சாகமாக நம்முடைய பணியை செய்யவேண்டிய கட்டாயத்தில் நம்முடைய வாழ்க்கையை நடத்திவருகின்றோம் . இவ்வாறாக நாம் 40 ஆவது வயதை எட்டும் நேரத்தில், நம்முடைய நோக்கங்களையும் கனவுகளையும் இழக்க ஆரம்பிக்கின்றோம். அதனால் நாம் வாழ்கின்ற நம்முடைய வாழ்க்கையும் திருப்தியடையாமல் நம்முடைய இலட்சியவாழ்க்கையையும் அடையமுடியாமல் , புகார் கூறி விமர்சிக்க ஆரம்பிக்கின்றோம். நம்முடைய மனம் ஒருபோதும் திருப்தி அடையாததால் நம்முடைய வாழ்க்கையானது துன்பகரமாக அமைகின்றது இவ்வாறாக நாம் . 60 ஆவது வயதினை எட்டும்போது, இனிமேல் புகார் செய்வதற்கு எதுவும் இல்லை ஏ மாற்றுவதற்கு எதுவுமில்லை வாழ்க்கையானது துன்பமெதுவும் இல்லாமல் அமைதியாக செல்ல ஆரம்பிக்கும்போதுதான் நாம் நம்முடைய 20 ஆவது வயதில் நம்முடைய லட்சியங்களையும் விருப்பங்களையும் செயல்வடிவம் கொடுக்காமல் அடடா நம்முடைய 20 ஆவது வயதில் கைவிட்ட கனவுகளையும் நம்முடைய லட்சியங்களையும் விருப்பங்களையும் கண்டிப்பாக செயல் படுத்தியிருந்தால் இன்று நம்முடைய வாழ்க்கையின் மிகஉயரத்திற்கு வந்திருக்கலாமே மீண்டும் 20 ஆவது வயதிற்கு திரும்பசென்று நம்முடைய லட்சியங்களையும் விருப்பங்களையும் திரும்பவும் செயல்படுத்தமுடியுமா என திகைத்து தலையில் கைவைத்து கொண்டு சோர்வடைந்து நம்முடைய இறுதி வாழ்க்கையை யும் நிம்மதியாக வாழ முடியவில்லை யே என மனஅதிருப்தியுடன் வருத்தத்துடன் நம்முடைய வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கின்றோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...