தற்போது உணவு ,பானங்கள் போன்ற நுகர்வு பொருட்களின் தேவை அதிகரித்து வருவதால், இவைகளின் உற்பத்தியாளர்கள் கட்டுதலில் கூடுதல் மதிப்பை உருவாக்க வேண்டிய தேவைஉருவாகின்றது. இந்நிலையில்நெகிழ்வான கட்டுதலானது உணவுத் தொழில்துறைக்கு மறுக்கமுடியாத ஆபத்துதவியாளராக விளங்குகின்றது, ஏனெனில் இது உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், நீடித்து நிலைக்கும் தன்மைக்கும் பொருந்தக்கூடிய தன்மையையும் வழங்குகிறது. நெகிழ்வானகட்டுதலை உணவகபொருட்கள் உற்பத்தியில் பயன்படுத்துவதால் பல்வறு நன்மைகள்கிடைக்கின்றன அவை பின்வருமாறு
1.நீடித்த உணவுப்பொருட்களின் பாதுகாப்பு , இந்த நடைமுறையில் உணவுப்பொருட்களை நீண்டகாலத்திற்கு சேமித்து வைத்திருக்கும்போது வழக்கமான நடைமுறையில் சேமித்து வைத்திடும்போது வீணாகி அழிந்து கெட்டுபோவதைபோன்றில்லாமல் நல்லநிலையில் நீண்டநாட்கள் இருக்கஉதவுகின்றது நெகிழ்வான கட்டுதலில் பெரும்பாலும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள், ஈரப்பதம் ஆகியவற்றிலிருந்து உணவுப் பொருட்களை மிகப்பாதுகாப்பாகவும், புத்தம்புதியாதாகவும் வைத்திருப்பதற்கான வழியை வழங்குகின்றது. எனவே, நெகிழ்வான கட்டுதல் செய்திடும் நிறுவனங்கள் உணவு பொருட்களை நீண்டநாட்கள் கெடாமல் வைத்திட இதன்வாயிலாக உறுதிப்படுத்துகின்றன.
2 மிகச் செலவுகுறைந்தது இதனை நடைமுறைபடுத்திட அதிக செலவிடத்தேவயில்லை அதாவது பெரிய நிறுவனங்கள் மட்டுமே இதனை நடைமுறைபடுத்தமுடியும் என்றில்லாமல் சிறுதொழில்நிறுவனங்கள் கூட இதனைநடைமுறைபடுத்தி கட்டுதல் செலவினை குறைத்திடலாம் இவ்வாறு கட்டுதலுக்கு குறைந்தஅளவு பொருட்களும் எடைகுறைந்த வாறும் நம்முடைய உணவுப்பொருட்களின் உற்பத்தி தேவைக்கு ஏற்பவும் கட்டுதல் செய்துகொள்ளலாம்
3. பயனாளர் விரும்பியவாறு கட்டுதல்பல்வேறு வகைகளாலான உணப்பொருட்களின் தோற்றம் அளவிற்கு ஏற்ப வாடிக்கையாளர் விரும்பியவண்ணம் வரத்தக தேவைக்கேற்ப கட்டுகளின் அளவை தோற்றத்தை வடிவமைத்து அளவிடுதல் செய்து பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் கட்டுதலை உருவாக்கிகொள்ளமுடியும்
4சுற்றுச்சூழலின் நண்பன் தற்போதைய நடைமுறையில் கட்டும்பொருட்களால் அதிக கழிவுகள் உருவாகி பெரியஅளவ சுற்றுசூழல் பிரச்சினை பெரும் அச்சுறுத்தலாக உயர்ந்துவருகின்றது அதனை தவிர்த்து இந்த புதிய நெகிழ்வு கட்டுதல் முறையானது விரைவான மறுசுழற்சி வழிமுறையினால் சுற்றுசூழலின் இனிய நண்பனாக விளங்குகின்றது
போக்குவரத்தின்போது ஏற்படும் சேதத்தினை தவிர்க்கின்ற மறுசுழற்சியாக பயன்படும் இந்த நெகிழ்வான கட்டுதல் (Flexible Packaging) எனும்வசதியை பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக