செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

பெயர்நீக்கம் செய்யப்பட்ட இயக்குநர்கள் நிறுவனங்களுக்கான என Condonation of Delay Scheme 2018 வாய்ப்பினை பயன்படுத்தி கொள்க


MCA எனும் நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகமானது கடந்த செப்டம்பர் 2017 அன்றைய நிலவரப்படி ஏறத்தாழ 3,09,614 நிறுமங்களின் இயக்குநர்கள் அவர்களுடைய நிறுமங்கள் கடந்த 2013-14 , 2014-15, 2015-16 ஆகிய மூன்றாண்டுகளாக தொடர்ந்து நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 164(2) ,167(1)(a)களின் படி ஆண்டறிக்கைகளை நிறுமங்களின் அமைச்சக இணையதளத்திற்குள் பதிவேற்றம் செய்ய தவறியதால் தகுதிநீக்கம் செய்துள்ளது மேலும் இந்த நிறுவனங்களின் செயல்பாட்டினையும் நிறுமங்களின் சட்டம் 248(5) இன் படி June 30, 2017 வாய்ப்பளித்தும் தவறியதால் நிறுத்தம்செய்துள்ளது அதனை தொடர்ந்து இவர்கள் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு வேறு எந்த நிறுவனத்திலும் இயக்குநர்களாக பதவி வகிக்கமுடியாது என தடைவிதித்துள்ளது அதனால் நிறுமங்களின் அமைச்சகத்திற்கு இந்த ஒருமுறை மட்டும் எங்களை மன்னித்து எங்களுடைய இந்த ஆண்டுகளுக்கான அறிக்கையை பதிவேற்றம் செய்திட அனுமதிக்குமாறு இந்த நிறுவனங்கள் கோரியதை தொடர்ந்து நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 403, 459 and 460களின் படி ஒருமுறை மட்டுமான வாய்ப்பினை வருகின்ற 31.03 2018 இற்குள் தங்களுடைய ஆண்டறிக்கைகளை பதிவேற்றம் செய்துவிட்டால் இந்த நிறுவனங்களின் இயக்குநர்களின் தகுதிநீக்க தடையை விலக்கி கொள்வதாக சுற்றறிக்கை எண் 16/2017, Condonation of Delay Scheme, 2018 (COD Scheme) நாள் 29.12.2017 என்ற திட்டத்தின்படி அறிவித்துள்ளது இந்த திட்டமானது 1.1.2018 முதல் 31.03.2018 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது இந்த திட்டத்தின்படி MCA21 இணைய தளத்தில் இவ்வாறான நிறுவனங்கள் சமர்ப்பிக்காத Form 20B அல்லது Form MGT-7 , Form 21Aஅல்லது Form MGT-7, Form 23AC, 23ACA, 23AC-XBRL, 23ACA-XBRL, AOC-4, AOC-4(CFS), AOC (XBRL) , AOC-4(non-XBRL , Form 66 , Form 238/ADT-1 ஆகிய படிவங்களுடனும் ரூபாய் முப்பதாயிரம் கட்டணத்துடன் 31.03.2018 சமர்ப்பிக்கவேண்டும் . இந்த இயக்குநர்களுக்கு வழங்கப்பட்ட DINஎண்களும் தற்காலிகமாக இந்த மூன்று மாதத்திற்கு மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது ஆகவே கடந்த 2013-14 , 2014-15, 2015-16 ஆகிய மூன்றாண்டுகளில் தங்களுடைய ஆண்டறிக்கைகளை நிறுமங்களின் அமைச்சக த்தின் MCA21 எனும் இணையதளத்திற்குள் பதிவேற்றபடாமல் தவறிய நிறுவனங்கள் இந்த அருமையான வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுடை நிறுவனத்தின் பெயர் நீக்கத்தையும் தங்களுடைய நிறுவன இயக்குநர்களின் தகுதி இழப்பையும் தவிர்த்து கொள்ளுமாறு கோரப்படுகின்றார்கள் மேலும் விவரங்களுக்கு MCA21 எனும் இணைய தளத்திற்கு சென்ற விவரங்களை அறிந்து கொள்க அல்லது அருகிலுள்ள நிறுமச்செயலர்களை அனுகி தங்களுக்கான தடையை நீக்கிகொள்க என பரிந்துரைக்கபடுகின்றது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...