சனி, 5 செப்டம்பர், 2020

எந்தவொருசெயலையும் கண்டு மனதில்விரைவாக தவறானமுடிவெடுத்திடவேண்டாம்

 
ஒரு தந்தை தன்னுடைய  குழந்தையை அருகிலுள்ள பூங்காவில் விளையாடுவதற்காக அழைத்து சென்றார் அங்கு அவருடைய குழந்தையானது அந்த பூங்காவில் இருந்த குழந்தைகள் விளையாடும் பொருட்களில் விளையாடிக் கொண்டிருந்தது.அப்போது அந்த பூங்காவில் ஒரு ஆப்பிள் விற்பனையாளர் ஒருவர் கூடை நிறைய ஆப்பிள் பழங்களை தலையில் சுமந்து கொண்டுவிற்பணை செய்து கொண்டுவந்தார்  அதனை கண்ணுற்ற அவருடைய குழந்தை  "அப்பா !அப்பா! எனக்கு திண்பதற்கு ஆப்பிள்பழம் வாங்கி கொடு அப்பா! "என கோரியது  உடன்அந்த தந்தை தன்னுடைய சட்டைபையில் ஆப்பிள் பழம் வாங்குவதற்கு போதுமான பணம் இருக்கின்றதாவென சரிபார்த்தார் அதிக பணம் கொண்டு வரவில்லைமிகவும்  குறைவாக அதாவது இரண்டு ஆப்பிள்கள் வாங்கும் அளவிற்குமட்டும் இருந்து அதனால் . தந்தை  இரண்டு ஆப்பிள்களை மட்டும் வாங்கி தன்னுடைய குழந்தையிடம் கொடுத்தார்.
அவரது குழந்தையானது ஒவ்வொருகையிலும் ஒரு ஆப்பிள்பழம் வீதம்  இரண்டு கைகளிலும்  இரண்டு ஆப்பிள்களை வைத்துகொண்டிருந்தது. அதனை தொடர்ந்துஅந்த தந்தை தன்னுடைய குழந்தையிடம் "உன்னிடம் இரண்டு ஆப்பிள்கள் மட்டுமே உள்ளன அதனால் ஆளுக்கு ஒரு ஆப்பிளாக நாமிருவரும் பகிர்ந்து கொள்ளலாமா ?"என்று கேட்டார். இவ்வாறு தன்னுடைய தந்தைக் கேட்டதும், அவரது மகள் விரைவாக ஒரு கையிலிருந்த ஆப்பிளை கடித்தது.சரிபரவாயில்லை மற்றொரு ஆப்பிளை தான் பெற்றுகொள்ளலாம் என அந்த தந்தைவாய்திறந்து பேசுவதற்கு முன், அவருடையகுழந்தை  இரண்டாவது கையிலிருந்த ஆப்பிளையும் கடித்தது.
இவ்வாறு தன்னுடைய குழந்தை  தனக்கு பகிர்ந்து அளிக்காமல் இரண்டு ஆப்பிள்களையும் கடித்த செயலை கண்ணுற்று மிகவும் வருத்தப்பட்டார். தனது குழந்தையானது கைவசம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து வாழவேண்டும் என வளர்ப்பதில்  தவறிவிட்டோமா  என்று மிகவும் மனவருத்தப்பட்டார். அவரது மனம்  தன்னுடைய குழந்தையை எவ்வாறு திருத்தி வளர்ப்பது என ஆழ்ந்து சிந்திப்பதில் தொலைந்து போனது, ஒருவேளை பகிர்ந்து அளிப்பதைப் பற்றி புரிந்து கொள்ள அவரது குழந்தை இன்னும் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றது போலும் எனஎண்ணி அவரது முகத்தில் இருந்து  புன்னகை மறைந்துவிட்டது.
திடீரென்று அவரது குழந்தை தன்னுடைய ஒரு கையிலிருந்த  ஆப்பிளைதன்னுடைய தந்தையிடம் கொடுத்து, “அப்பா இது நன்றாக சுவையாக இனிமையாகஉள்ளது, இதனை நீங்கள் எடுத்து கொள்ளுங்கள் மற்றது சுவை குறைவாக உள்ளது அதனை நான் எடுத்து கொள்கின்றேன்” என்று நன்கு சுவையானதை தன்னுடைய தந்தைக்கும் சுவைகுறைந்ததை தனக்கும் பகிர்ந்து வழங்க தயாரானாள் இந்த இரண்டாவது செயலை கண்ணுற்றதும் அந்த தந்தை   வாங்கிய ஆப்பிள்களின் சுவையறிந்து அதற்கேற்றார் போன்று பகிர்ந்தளிக்கும் செயலையும்  .தன்னுடைய மகளின் தியாகத்தையும் கண்டு திகைத்து அவருடைய கண்களில் கண்ணீர் வருவதை கட்டுபடுத்தமுடியாமல் அமர்ந்துவிட்டார் மேலும் தன்னுடைய  குழந்தையைப் பற்றி இவ்வளவு விரைவாக தவறாக எண்ணிவிட்டோமே என வருத்தப்பட்டார். , ஒவ்வொரு ஆப்பிளிலிருந்தும் தனது குழந்தை ஏன் விரைவாக ஒரு கடித்தது என்பதை அறிந்து அவரது புன்னகை இப்போது திரும்பி வந்தது.
நீதி: எந்தவொரு செயலையும் கண்டு விரைவாக தவறாக முடிவெடுத்திட வேண்டாம் . செயல்களை நன்றாக புரிந்துகொள்ள எப்போதும் ஒரு குறிப்பிட்டநேரத்தை ஒதுக்கிஆய்ந்து அதன்பின்முடிவெடுத்திடுக

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...