சனி, 19 செப்டம்பர், 2020

பிரச்சினையை எவ்வாறு வித்தியாசமாக தீர்வுசெய்வது

 

ஒரு கிராமத்தி ல் ஒரு வயதான மனிதருக்கு மூன்று மகன்கள் இருந்தனர் அவர் தனக்கு பிறகு தகராறு எதும் இல்லாமல் தன்னுடைய சொத்துகளை தன்னுடைய மகன்கள் பாகம் பிரித்து கொள்ளுமாறு உயில் எழுதி பதிவுசெய்துவிட்டு இறந்து விட்டார் அந்த வயதான மனிதர் இறந்தவுடன் அவருடைய மகன்கள்மூவரும் தங்களுடைய தந்தையின் உயிலின்படி தங்களுக்கு சேரவேண்டியதை பிரித்து கொள்ளலாம் என முயன்றபோது அவர்களிடம் பதினேழு (17)பசுமாடுகள் இருந்தன அவற்றை மட்டும் தங்களுடைய தந்தையாரின் உயிலின்படி அம்மூவராலும் பிரித்துகொள்ள முடியவில்லை அதனால் அவ்வூரிலிருந்த அனுபவம் வாய்ந்த மனிதரிடம் தங்களுடைய தந்தையின் உயிலையும் அம்மாடுகளையும் கொண்டுசென்று தங்களுக்கு பிரித்து கொடுக்குமாறு கேட்டு கொண்டனர் அவர் அவர்களுடைய தந்தையின் உயிலை படிக்குமாறு கோரினார்.அந்த உயிலில் மொத்த பசுமாடுகளில் (1/2)பாகம் பசுமாடுகள்பெரியமகனிற்கும் (1/3) பாகம் பசுமாடுகள் இரண்டாவது மகனிற்கும் (1/9) பாகம் பசுமாடுகள் மூன்றாவது மகனிற்கும் சேரவேண்டியது என படித்தனர். உயிலை படித்து முடித்த பின்னர் அப்பெரிய மனிதர் தன்னிடம் இருந்த ஒரு பசுமாட்டினை இவர்கள் கொண்டுவந்த பதினேழு பசுமாடுகளுடன் சேர்த்து இப்போது அவர்களுடையதந்தையின் உயிலை படிக்குமாறு கோரினார் அவர்கள் தங்களுடைய தந்தையின் உயிலை படித்தபோது அதற்கேற்ப தற்போது மொத்தமுள்ள பதினெட்டு(18) பசுமாடுகளில் பாதி(1/2) ஒன்பது(18/2=9 ) பசுமாடுகளை பெரிய மகனிற்கு பிரித்து கொடுத்தார் .தொடர்ந்து (1/3) பாகம் பசுமாடுகளான ஆறு (18/3= 6) பசுமாடுகளை இரண்டாவது மகனிற்கு பிரித்து கொடுத்தார் பின்னர் இருப்பதில் (1/9) பாகம் பசுமாடுகளான இரண்டு(18/9=2 ) பசுமாடுகளை மூன்றாவது மகனிற்கு பிரித்து கொடுத்தார் ஆக மொத்தம்பதினேழு( 9 +6+2= 17) பசுமாடுகளை பிரித்து கொடுத்ததுபோக மிகுதி நின்ற தன்னுடைய ஒரு பசுமாட்டினை (18-9-6-2 =1) தான் எடுத்துகொண்டார் இவ்வாறு எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இருக்கின்றது என்ற நம்பி முயன்றால் தீர்வுசெய்திடமுடியும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...