சனி, 12 செப்டம்பர், 2020
முதன்மை அமைச்சருக்கான தேர்வு
முன்னொருகாலத்தில் ஒருநாட்டில் ஒருஅரசனின் கீழ் பணிபுரிந்த முதன்மை அமைச்சர் இறந்துவிட்டார் அதனால் அவருக்கு பதிலாக அமைச்சரவையில் இருந்த நான்கு அமைச்சர்களில் மிகவும் சிறப்பாக செயல்படும் ஒருவரை முதன்மை அமைச்சராக நியமனம் செய்வதற்காக அவ்வரசன் விரும்பினார்.அதற்காக அவ்வரசன் அந்நான்கு அமைச்சருக்கும் ஒருதேர்வு நடத்தி அதில் ஒருவரை முதன்மை அமைச்சராக தெரிவுசெய்திட விரும்பினார். அதனால் மறுநாள் அதிகாலையில் அந்நால்வரையும் தன்னுடைய அவைக்கு அழைத்து "அமைச்சர்களே! நான் நம்முடைய அரண்மனையில் புதியதாக ஒரு விலங்குகளின் காட்சி சாலை அமைத்திட விரும்புகின்றேன். நீங்கள் நம்முடையநாட்டை சுற்றியுள்ள காட்டிற்குள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைவீதம் நான்கு திசையிலும் சென்று இன்று மாலைக்குள் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எண்ணிக்கையில் வெவ்வேறு விலங்குகளின் கன்றுகளை அல்லது குட்டிகளை கொண்டுவரவேண்டும்" என கேட்டுகொண்டார் .அதனை தொடர்ந்து " அவ்வாறே செய்கின்றோம் அரசே ! " என அந்த நான்கு அமைச்சர்களும் அரசனின் உத்திரவிற்கு கீழ்படிந்து அவ்வரசனின் கோரிக்கையை நிறைவேற்றிடும் பொருட்டு அரசனிடம் விடைபெற்று தங்களுடைய பணியை செய்திட அந்த நாட்டை சுற்றியுள்ள காட்டின் வெவ்வேறு நான்கு திசைகளிலும் இருந்த காடுகளுக்குள் சென்றனர். அன்று மாலை ஒரு அமைச்சர் இரண்டு சிங்க குட்டிகள் ,இரண்டுகரடி குட்டிகள் ,இரண்டு யானை கன்றுகளை ஆகியவற்றை கொண்டுவந்தார் .
இரண்டாவது அமைச்சர் இரண்டு மான்கன்றுகள் ,இரண்டு நரிகுட்டிகள் ஆகியவற்றை கொண்டுவந்தார்
மூன்றாவது அமைச்சர் இரண்டு முயல்குட்டிகளை மட்டுமே கொண்டுவந்தார்
நான்காவது அமைச்சரோ ஒன்றுமே இல்லாமல் வெறும் கையுடன்வந்து நின்றார் .மற்ற மூன்று அமைச்சர்களும் இன்று நான்காவது அமைச்சர்அரசனின் கோபத்திற்கு ஆளாக போகின்றார் அதற்கான தண்டனையும் திட்டும் அவருக்குக கிடைக்கப்போகின்றது இப்போது அதனை வேடிக்கை பார்த்திடலாம் என மிக ஆவலுடன் காத்திருந்தனர் உடன் அரசன் அந்த நான்காவது அமைச்சரை பார்த்து "அமைச்சரே! ஏன் நீங்கள் மட்டும் வெறும் கையுடன் திரும்பி வந்திருக்கின்றீர்! காட்டில் எந்த விலங்கின் குட்டிகளும் அல்லது கன்றுகளும் கிடைக்கவில்லையா?” என வினவினார்.
" அரசே! காட்டில் வாழும் விலங்குகளின் குட்டிகளும் அல்லது கன்றுகளும் தத்தமது தாயை விட்டு தனியாக எதுவும் வாழவில்லை. அவை அனைத்தும் தங்களுடைய தாய் விலங்குகளுடனே வாழ்கின்றன.அவைகளை அவற்றின் தாய் விலங்குகளிடமிருந்து பிரித்து கொண்டுவருவதற்கு என்னுடைய மனம் ஒப்பவில்லை. அதனால் என்னால் காட்டில் வாழும் விலங்குகளின் குட்டிகளையும் அல்லது கன்றுகளையும் பிரித்து கொண்டு வரஇயலவில்லை ."எனஅவ்வரசனின் உத்திரவை தன்னால் செயல்டுத்த முடியாத நிலையை எடுத்து கூறினார்.
நான்கு அமைச்சர்களில் நான்காவது அமைச்சர் மட்டுமே உன்மையான மனிததன்மையுடன் நடந்து கொண்டார். அதனால், அவரால் மட்டுமே மிகச்சரியாக எந்தவொரு பிரச்சினைக்கும் மனிததன்மையுடன் தீர்வு காணதனக்கு மிகச்சரியான ஆலோசனைகூறமுடியும் என முடிவுசெய்து அந்த நான்காவது அமைச்சரை தன்னுடையஅரசவையின் முதன்மை அமைச்சராக நியமனம் செய்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக