வியாழன், 17 செப்டம்பர், 2020
தற்போது சசேவ(GST) இணையதள வாயிலில் ஒருங்கிணைந்த பற்று / கடன் குறிப்பானது இயலுமை செய்யப் பட்டுள்ளது
சசேவ சட்டம், 2017 இன் 34 வது பிரிவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்புடைய வரி விலைப்பட்டியல்களுக்கு எதிராக ஒரு கடன் குறிப்பு வெளியிடப்படலாம் என்ற சசேவ (திருத்தம்) சட்டம், 2018 மூலம் திருத்தம் செய்யப்பட்டு, பிப்ரவரி 1, 2019 முதல் நடைமுறைபடுத்தப்பட்டது . இந்தத் திருத்தத்திற்கு முன்பு, கடன் குறிப்பு / பற்றுகுறிப்பு ஒரு குறிப்பிட்ட வரிவிலைப்பட்டியலுக்கு எதிராக மட்டுமே வழங்க முடியும், மேலும் சசேவஇணையதளவாயிலின் GSTR1 இல் உள்ள பற்று / கடன் குறிப்பைப் பற்றி ஏதேனும் புகாரளிக்கும் போது அத்தகைய வரி விலைப்பட்டியலைக் குறிப்பிடுவது கட்டாயமாகும்.
மேற்கண்ட திருத்தம் 2019 பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வந்த போதிலும், சசேவ இணையதளவாயிலில் கடனை/ பற்றை குறித்து ஏதேனும் புகாரளிப்பதற்காகவே இந்த புதிய வசதியை சசேவ வழங்கியுள்ளது. எனவே, GSTR1 இல் பற்று / கடன் குறிப்பை பற்றிப் புகாரளிக்கும் போது அசல் வரிவிலைப்பட்டியல் / விலைப்பட்டியல் குறித்து எந்த குறிப்பும் கொடுக்க தேவையில்லை. எடுத்துக்காட்டாக, X ltd எனும்நிறுவனம் ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை Y ltd எனும்நிறுவனத்திற்கு 25 விலைப்பட்டியல்களை வழங்கியிருந்தாலும், இப்போது X ltd எனும்நிறுவனம் விலை வேறுபாடு காரணமாக 2020 நவம்பர் மாதத்தில் கடன்குறிப்பினை கொடுக்க வேண்டும் என்றால் X ltd எனும் நிறுவனம் ஒரு கடன்குறிப்பை உருவாக்கிவழங்க முடியும். முந்தைய அசல் விலைப்பட்டியலான 25 வரி விலைப்பட்டியலை பற்றிய குறிப்பை சசேவ கேட்காது. பற்றுகுறிப்பிற்கும் இதே நிலைதான் பின்பற்றப்படும். தாமதமாக இருந்தாலும் வரி செலுத்துவோருக்கு இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமாகும். எவ்வாறாயினும், தள்ளுபடிகள் அடங்கிய தள்ளுபடி கணக்கில் கடன் குறிப்பு இருக்கும் இடத்தில் அசல் விலைப்பட்டியலுக்கான குறிப்பை வரி செலுத்துவோர் ஒரு பதிவாக பராமரிக்க வேண்டும், ஏனெனில் இது பிரிவு 15 இன் கீழ் சட்டப்பூர்வ தேவையாகும். இதனை மீண்டும் வலியுறுத்த, பிரிவு 15 இன் உரை (3) (ஆ) இங்கே வழங்கப்படுகிறது- "வழங்கல் செயல்படுத்தப்பட்ட பின்னர், அத்தகைய தள்ளுபடி அத்தகைய விநியோக நேரத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டு, குறிப்பாக தொடர்புடைய விலைப்பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளது; மற்றும் ... .... "இல்லையெனில், வரி செலுத்துவோர் எதிர்கால தணிக்கை மற்றும் சரிபார்ப்பு நோக்கங்களுக்கான விலைப்பட்டியல்களைக் குறிக்கும் வகையில் பற்று / கடன் குறிப்புகளின் முழுமையான காப்பு கணக்கீடுகளை வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக