சனி, 30 அக்டோபர், 2021

எப்போதும் நல்ல மனிதர்களின் நிறுவனத்தில் இருந்திடுக.

 


நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு மனிதன் தன்னுடைய குடும்பத்துடன் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். அவருக்கு மிகவயதாகிவிட்டது, அவருடைய கடைசி நேரம் நெருங்கியபோது, அவர் தனது மகனை அழைத்து, "மகனே, நான் என் வாழ்நாள் முழுவதையும் உலகிற்கு என்னுடைய அனுபவத்தை கற்பித்தேன். தற்போது, என் கடைசி தருணங்களில் நான் உனக்கு முக்கியமான ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்." னக்கூறினார். இதைக் கேட்ட மகன் தன் தந்தை கூறுவதை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். அவனுடைய தந்தை தொடர்ந்து, "ஆனால் அதற்கு முன் கரியும் சந்தனத்தையும் என்னிடம் கொண்டு வா" என்றார். மகன் இதை மிகவும் விசித்திரமாக உணர்ந்தான் ஆனால் அது அவனது தந்தையின் கட்டளை என்பதால், கரி, சந்தனம் ஆகியவற்றினை கொண்டு வர தங்களுடைய வீட்டு சமையலறைக்குச் சென்ற அடுப்பில் எரிந்து அனைந்த பெரிய கரியை எடுத்து தன்னுடைய கையில் வைத்து கொண்டான் பின்னர் தனது வீட்டுத் தோட்டத்திற்குச் சென்றான், அங்கு ஒரு சிறிய சந்தன மரம் இருந்தது. ஒரு கையில் நிலக்கரியை வைத்திருந்ததால், மற்றொரு கையால் சந்தன மரத்தை உடைத்து மற்றொரு கையல் எடுத்து கொண்டு. இரண்டம் உடன் கிடைத்துவிட்டதால தனது தந்தையிடம் திரும்பிவந்தான. அவ்விரண்டையும் தன்னுடைய மகனின் கைகளில் பார்த்த அவனுடைய தந்தையானவர், தன்னுடைய மகனின கைகளிலிருந்து இரண்டு பொருட்களையும் அங்கேயே கீழே தரையில் வைத்துவிடும்படி கேட்டுகொண்டார். உடன் அவருடைய மகனும் தன்னுடைய தந்தை கோியவாறுஅவ்விரண்டு பொருட்களையும் தரையில் வைத்துவிட்டான், பிறகு தன்னுடைய கைகளைக் கழுவ கிளம்பப் போனான். இதைப் பார்த்த அவது தந்தை தன்னுடைய மகன் இரண்டு கைகளையும் கழுவ செல்வதைத் தடுத்து, " மகனே அப்புறம் உன்னுடைய கைகளை கழுவலாம் , முதலில் உன்னுடைய கைகளை என்னிடம் காட்டு" என்றார். மகன் தன் கைகளைக் தந்தையிடம் நீட்டினான், உடன் தந்தை தன் மகனின் கைகளைக் கைகளல் பிடித்துக்கொண்டார், பிறகு தன்னுடைய மகன் கரி வைத்திருந்த கையைகாண்பித்து, "மகனே, பார் .நீ கரியை வைத்திருந்ததால் இந்தக் கை கருப்பு நிறமாக மாறிவிட்டது. நீ அதை தூக்கி எறிந்த பிறகும், ன்னுடைய கையில் கருப்புநிறம் மறையாமல் இருந்து வருகின்றது. இது போன்றதுதான் தவறான நபர்களின் நட்பாகும். அவர்களுடன் தொடர்பில்இருப்பது துன்பததையும் கெட்டபெயரையும் அளிக்கும், அவர்களுடைய தொடர்பினை விட்டபிறகும் வாழ்நாள் முழுவதும் கெட்ட பெயரை எதிர்கொள்ள நேரிடும்.".என விரிவாக விளக்கமளித்தார் தொடர்ந்து அவர் சந்தனத்தை வைத்திருந்த மற்றொரு கையைப் பார்த்து, “மறுபுறம் நல்ல மனிதர்களின் கூட்டு இந்த சந்தன துண்டினை கையில் வைத்திருந்ததை போன்றது. அவர்களுடன் நட்புடன்ருநதால், நிறைய அறிவைப் பெறுவாய், அதன்பிறகு அவர்களுடைய தொடர்பு இல்லாதபோதும் பிறகும், அவர்களின் நல்ல எண்ணங்களின் துனை எப்போதும் வாழ்நாள் முழுவதும் உன்னுடன் இருக்கும். எனவே, எப்போதும் நல்ல மனிதர்களின் கூட்டுறவில் இருந்திடு". என அறிவுரை கூறினார்

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வாழ்க்கையின் யதார்த்தத்தை உணருமாறு செய்திடுக

 


நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு கிராமத்தில் ஒரு புகழ்பெற்ற வணிகர் வசித்து வந்தார், திருமணமான பல வருடங்களுக்குப் பிறகுதான் அவருக்கு ஒரு மகனிறந்தான். அதனால் அவருடைய மகன் வீட்டிலுள்ள அனைவராலும் செல்லமாக வளர்ந்துவந்தான். அதாவது அவருடைய மகனின் ஒவ்வொரு விருப்பமும் அவரது பெற்றோர்களாலும் மற்ற குடும்ப உறுப்பினர்களாலும் உடனுக்குடன் நிறைவேற்றப் பட்டது. அவருடைய மகன் ஒரு இளைஞனாக வளர்ந்துவிட்டபிறகும், அவருடைய மகனுடைய வாழ்க்கையில் எதற்கும் பற்றாக்குறை என்பதே இல்லை, எனவே வாழ்க்கையைப் பற்றிய அவருடைய மகனின் பார்வை மிகவும் வித்தியாசமானதாக இருந்துவந்தது, அதே நேரத்தில் அவரது தந்தை கடின உழைப்பால் தனது தொழிலை மேம்படுத்தி நிருவகித்துவந்தார். தன்னுடைய மகனின் செயல்பாடுகளிலிருந்து கடின உழைப்பின் முக்கியத்துவம் தன்னுடைய மகனுக்கு தெரியாது என்பது அந்த வணிகருக்கு தெளிவாகத் தெரியவந்தது. மேலும் ணிகர் தன் மகனைத் தன்னுடன் சேர்ந்து பழகி அவ்வியாபார பணியை கற்றுகொளளுமாறு பலமுறை கூறியபிறகும், அவருடைய மகன் ியாபாரத்தில் தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து செயல்படாமல் இருந்துவந்தான். ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, தன்னுடைய மகனுக்கு தனது கடின உழைப்பின் முக்கியத்துவத்தை கற்பித்திடவேண்டும் என்று முடிவு செய்தார். வ்வாறு செய்வது கடினமானதாக இருந்தாலும் செயற்படுததிடுவது என தீர்மாணித்து . ஒரு நாள் அவ்வணிகர் தனது மகனம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரம் ஒன்றாக இருக்கும்போது தன்னுடைய மகனிடம் மிகக்கோபமான குரலில், "நான் உன்னிடம் பலமுறை கோரியும் நீ என்னுடன் நம்முடைய வியாபாரத்திற்கு பங்களிப்பு செய்யவில்லை, அதனால் இனிமேல் நீ பணம் கொடுத்தால் மட்டுமே இந்த வீட்டில் நீ சாப்பிடுவதற்காக உனக்கு உணவு வழங்கப்படும்" என்றார். வணிகரின் இந்த முடிவை குடும்ப உறுப்பினர்கள்யாரும் விரும்பவில்லை. வணிகர் தனது ஒரே மகனிம் மிகவும் கண்டிப்பாக இருப்பதற்காக வருத்தப்பட்டர், . முதல் நாள் வணிகரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் வணிகருக்கு தெரியாமல் அவருடைய மகனிடம் அன்றைய உணவிற்கான பணம் கொடுத்தர் அவருடைய மகனும் அந்த பணத்தை தன்னுடைய தந்தையிடம் தனக்கு அன்றைய உணவு பெறுவதற்காக கொடுத்தார் அவருடைய வீட்டின் பின்புறம் ஒரு கிணறு இருந்தது. அதில் தன்னுடைய மகன் அன்றைய உணவிற்காக கொடுப்பதற்காக கொண்டுவந்த பணத்தை அந்த கிற்றில் வீசிஎறியும்படி கூறினார். உடன் அந்த வணிகரின் மகனும் தன்னுடையதந்தை கூறியவாறு அந்த பணத்தை தயக்கமின்றி கிற்றில் மகிழ்ச்சியுடன் வீசிஎறிந்துவிட்டு தனது தந்தையுடன் அன்றைய உணவை சாப்பிட்டான் .சில நாட்கள் சென்றன. அவ்வணிகர் தனது குடும்ப உறுப்பினர்கள் தன்னுடைய மகனுக்கு தனக்கு தெரியாமல் உதவிவருவதை புரிந்து கொண்டார். எனவே அவர் தனது குடும்ப உறுப்பினர் அனைவரிடம் தனக்கு தெரியாமல் உணவிற்கான பணத்தினை கண்டிப்பாக கொடுக்கக்கூடாது என தன்னிடம் உறுதியளிக்குமாறு கோரியதை தொடர்ந்து . குடும்ப உறுப்பினர்களும் ணிகரின் மகனுக்கு உதவ மாட்டோம் என்று உறுதியளித்தர் அதன்பின்னர் அவ்வணிகரின் மகன் அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் அன்றைய உணவிற்காக பணத்தினை கொடுத்து உதவிடுமாறு கோரியபோது யாரும் உதவிக்கு வரவில்லை அனைவரும் வியாபாரியின் மகனுக்கு பணம் கொடுக்க மறுத்தனர். அவ்ணிகக்கு கிராமத்தில் நல்ல பெயர் இருந்தது, அவருடைய மகனப் பற்றி அனைவருக்கும் தெரியும். எனவே, ணிகரின் மகன்தனது தந்தையின் நண்பர் ஒருவரிடம் சென்று பணம் கேட்டார். அந்த நண்பரும் உடன்பணம் கொடுத்தார். அந்தப் பணத்தை தனது தந்தையிடம் அன்றைய உணவிற்காக கொடுத்தார், எப்போதும்போல அந்த பணத்தை அவர்களுடைய வீட்டின் கிணற்றில் வீசிஎறியும்படி கூறினார். அவருடைய மகனும் தயங்காமல் அந்த பணத்தை கிணற்றில் வீசி எறிந்தான், ணிகர் தன்னுடைய மகனுக்கு தன்னுடைய நண்பர்கள் பணம் கொடுத்து உதவியதை அறிந்ததும், அவர் தனது நண்பர்கள் அனைவரிடமும் தனது மகனுக்கு இலவசமாக பணம் எதுவும்கொடுக்க வேண்டாம் என்று கேட்டுகொண்டார். அவர்கள் உதவ விரும்பினால், தன்னுடைய மகனை எதாவது வேலை செய்யுமாறு கூறி அந்த பணிமுடிந்தபின்னர் அதற்காக பணம் கொடுக்கலாம் என கோரினார். அடுத்த நாள் அந்த விணிரின் மகனுக்கு அவருடைய நண்பர்கள் யாரும் பணம் கொடுக்கவில்லை. அரை நாள் கழிந்தது. யாராவது அன்றைய உணவிற்கு பணம் கொடுக்கமாட்டார்களாவென ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஒவ்வொரு நபராக சந்திக்க சென்று கொண்டிருந்தான். கிராமத்தில் ஒரு முதியவர் இதைப் பார்த்து தன்னிடம் அழைத்து, ‘என்ன நடந்தது?’ என்று கேட்டார். வணிகரின் மகன், "இன்றைய சாப்பாட்டிற்கு எனக்கு பணம் வேண்டும்" என்றான். முதியவர் , "நான் பணம் கொடுக்க முடியும் ஆனால் அதற்காக நீ எனக்கு ஒரு வேலை செய்ய வேண்டும்." என்று கூறியைத தொடர்ந்து வேறு வழியில்லாமல் ணிகரின் மகன் ஒப்புக்கொண்டான். ன்றைய பொழுத சாயும் வரை ணிகரின் மகன் கடுமையாக உழைத்தான். பணி முடிந்ததும், முதியவர் அவ்வணிகரின் மகனிடம் பணம் கொடுத்தார். அன்று நாள் முழுவதும் வேலை செய்ததால் மாலை மிகவும் சோர்வாக தனது தந்தையிடம் சென்று அன்றைய உணவிற்கான பணம் கொடுத்து உணவு கேட்டார். எப்போதும்போல அவனுடைய தந்தை அந்த பணத்தை கிணற்றில் வீசிஎறியும்படி கட்டளையிட்டார், ஆனால் இந்த முறை அவருடைய மகன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை, "அப்பா, நான் இந்த பணத்தை கடினமாக உழைத்து சம்பாதித்தேன், அதை கிணற்றில் வீசிறியும்படி கட்டளை இடுகின்றீர்கள் இன்று அவ்வாறு என்னால் செய்யமுடியாது . ” மறுத்துக் கூறினான் உடன் ணிகர் தன்னுடைய மகன் இன்று கடின உழைப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டான் எனஅறிந்து கொண்டார் வணிகர் தனது மகனைத் தழுவி, "மகனே கடின உழைப்பின் முக்கியத்துவத்தை நீ அறிந்து கொள்ளவேண்டும் என்றே உணக்கு தினமும் பணம் கொடுத்தால் மட்டும் உணவு அளிக்கப்படும் எனக்கூறியிருந்தேன் .நீ இனிமேல் என்னுடைய வியாபாரத்தினை கவணித்து கொள்" எனக்கூறி தனது வியாபாரத்தை ஒப்படைத்தார்

ணிகரிடம் போதுமான பணம் இருந்தது, அவருடைய வருங்கால சந்ததியினர் எந்த கடின உழைப்பும் செய்யாமல் அந்தப் பணத்தில் வாழ்ந்திருக்க முடியும். ஆனால் இவ்வாறு அவ்வணிகர் தனது மகனுக்கு கடின உழைப்பின் முக்கியத்துவத்தை கற்பிக்கவில்லை என்றால், ஒருநாள் அவருடைய வியாபாரத்தின் பணம் முழுவதும் காலியாகி நடுத்தெருவில் நிற்க வேண்டிய சூழல் உருவாகும் என சிந்தித்து இவ்வாறு செயல்படுத்தினார் அதேபோன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வாழ்க்கையின் யதார்த்தத்தை அறிந்து கொள்ள வைப்பது பெற்றோர்களின் பொறுப்பாகும்.

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

மூன்று உதைகளின்விதி

 


ஒரு வழக்கறிஞர் இருந்தார். வார விடுமுறைகளில் அவர் பொழுதுபோக்காக மீன்பிடித்தல், வேட்டையாடுதல் ஆகிய பணிகளை செய்வதற்கு விரும்புவார். ஒரு ஞாயிறு வாரவிடுமுறையின்போது அவர் தனது வழக்கமான பொழுது போக்கு பணிகளான மீன்பிடித்தல், வேட்டையாடுதல் ஆகிய பணிகளில் செலவிட முடிவு செய்தார். வேட்டையாடுதல் பணியெனில் நீண்ட தூரம் நடந்து காட்டிற்கு சென்றால்தான் அதனைசெய்திடமுடியும் என்பதால காட்டை அடைவதற்கு முன்ப அருகில் இருந்த ஏரியில் மீன்பிடித்தல் பணியை செய்திட முடிவு செய்தார். அன்று , அந்த ஏரியில் அவரால் ஒரு மீனைக் கூட பிடிக்க முடிய வில்லை. இன்றைய பொழதுபோக்கபணியில் ஒன்றும் கிடைக்க வில்லையே சரி வீட்டிற்கு திரும்பி சென்றிடுவோம் எனஅவர் வீடு திரும்ப முடிவு செய்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது முயல் ஒன்று அருகில நடமாடுவதைக் கண்டார் உடன் முதல் பொழுதுபோக்குபணியானவேட்டையாடுதலை செயல்படுத்த முடிவு செய்து அவர் முயலை சுட்டார் உடன் .சுடப்பட்ட முயலானது அருகிலிருந்த ஒரு தோட்டத்திற்க்குள் வேலியை தாண்டிகுதித்து ஓடிவிழுந்தது. தனை தொடர்ந்து அவ்ழக்கறிஞர் அந்த தோட்டத்திலும் அதைச் சுற்றிலும் யாராவது இருக்கின்றார்களா என விரைவாகப் பார்த்தார், யாரும் இல்லாததைக் கண்டார். அதனால் அவர் தோட்டத்திற்குள் வேலியை தாண்டி குதித்து, முயலை கையிலெடுத்து கொண்டு திரும்பவும் வேலியைத் தாண்டத் துவங்கியபோது, தோட்ட உரிமையாளர் அவரை தடுத்துவிட்டார் . உடன் வழக்கறிஞர் தான் முயலை சுட்டுவீழ்த்தியதால் அது தனக்குதான் உரியது எனக் கூறினார் தோட்ட உரிமையாளர் ந்த முயல் தன்னுடைய தோட்டத்தில் வளர்ந்தது தற்போது தன்னுடைய தோட்டத்தல் வீழ்ந்து கிடந்ததால் தனக்குதான் உரியது எனக் கூறினார் என்றவாறான வாதபிரதிவாதங்களுடன் தோட்ட உரிமையாளரும் வழக்கறிஞரும் அந்த முயல் தங்களுக்குமட்டுமே உரிமையானது எனக்கூறி வாதிட்டனர்.
வழக்கறிஞர் தோட்ட உரிமையாளரிடம். “ தோ பார்!, நான் ஒரு வழக்கறிஞர்! இது குறித்து உங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து என்னால்உங்களுக்கு கடுமையான தண்டனையை வாங்கி கொடுக்க முடியும்!”, என கோபமாக கூறினார்
தோட்ட உரிமையாளர் வழக்கறிஞருக்கு மிகச்சரியான பாடம் கற்பிக்க முடிவு செய்தார். தனால், "சரி ஐயா!. நான் ங்களை மூன்று முறை உதைப்பேன். தொடர்ந்து நீங்கள் என்னை மூன்று முறை உதைத்திடவேண்டும் இவ்வாறு நாம் இருவரும் ஒருவருக்கொருவர் மற்றவரை உதைப்பதற்கான உடல் திறன் உள்ளவரை யாராவது ஒருவர் என்னால் முடியாது எனநீங்கள் அல்லது நான் கைவிடக் கோரும் வரை மீண்டும் மீண்டும்இந்த உதைப்பதை தொடரலாம்! என்னால் முடியாது எனக்கூறுபவர் தோல்வியடைந்தவராவார் , வெற்றி மற்றவர் முயலுக்கு சொந்தக்காரர்!” எனக்கூறினார் .தோட்ட உரிமையாளரைவிட பெரிய உடல்வாகும் வலிமையாகவும் தான் இருப்பதால் இந்த போட்டியில் தன்னால் வெல்லமுடியும் என்ற நம்பிக்கை வழக்கறிஞருக்கு இருந்தது! அதனால் இந்த மூன்று உதைகளின் விதிக்கு ஒப்புக்கொண்டார்,
யார் முதலில் உதைக்க வேண்டும் என்ற பிரச்சினை எழுந்தபோது ஒரு நாணயத்தினை சுண்டி பூவா தலையா ஆகிய இரண்டில் ஒன்றினை கொண்டு பின்பற்றலாம் என முடிவுசெய்து அதன்படி தோட்ட உரிமையாளர் முதலில் உதைக்குமாறு முடிவானதால் அவர் வழக்கறிஞரை உதைக்க முடிவு செய்தார்! தொடர்ந்து தோட்ட உரிமையாளர் வழக்கறிஞரின் வயிறு, கால்கள் , முகம் ஆகிய பகுதிகளில் மூன்று உதைகளை கொடுத்தார்! அவ்வாறான மூன்று உதைகளால் ஏற்பட்ட உடல் வலியால் கதறினார், தன்னால் பதிலுக்கு தோட்ட உரிமையாளரை உதைக்க முடியாது நான் தோற்றுவிட்டேன் என வழக்கறிஞர் கதறி அழுதார் இருந்தபோதிலும் , தோட்ட உரிமையாளர், “நான் இந்த மூன்று உதைகளின் போட்டியை கைவிடுகிறேன்! நீங்களே வெற்றி பெற்றதாக நான் ஏற்றுக் கொள்கின்றேன் வேட்டையாடிய முயல் உங்களுடையது. இப்போது, முயலை நீங்கள் எடுத்து செல்லலாம் !” ன அனுமதித்தார்.
அறநெறி: யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள், திறமை உடல்வலுவின் மீது அதிக நம்பிக்கை கொள்ளாதீர்கள். எதிர்பாராத இடத்தில் ஒரு பெரிய அடி ம்மை வீழ்த்தலாம்.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...