சனி, 30 ஏப்ரல், 2022

விவசாயியின்பழத்தோட்டம் திருடன் மன்னிப்பு கோருதல்


 விவசாயி ஒருவர் தங்களுடைய வீட்டைச் சுற்றி பெரிய பழத்தோட்டம் வைத்திருந்தார். அவர் தனது பழத்தோட்டத்தில் பல்வேறு வகையான பழ மரங்களை நட்டு வளர்த்துவந்தார், அவற்றை ஆண்டு முழுவதும் விடாமுயற்சியுடன் நன்கு  கவணித்துபராமரித்து வந்தார். அவர் அந்த தோட்டத்தில்கு பழுத்த பழங்களை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொண்டும், மிகுதியை அருகிலுள்ள சந்தையில்  எடுத்து சென்று விற்பனை செய்தும்வந்தார்

ஒரு நாள், அவ்விவசாயி தோட்டத்தில் தங்களுடைய மகனுடன் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தபோது,  வேறொரு நபர் அந்த தோட்டத்தின்பழமரத்தில் ஒருகிளையில் அமர்ந்து பழங்களைப் பறித்து தின்றுகொண்டுஇருப்பவதைக் கண்டார்.

அதனைப் பார்த்த அவர் கோபமடைந்து, ‘யார் நீ? பழத்தோட்டத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அடுத்தநபரின் தோட்டத்து பழங்களைத் திருடுவது உனக்கு வெட்கமாக இல்லையா?” என வினவினார் 

பழமரத்தின் கிளையில் அமர்ந்திருந்த அந்த நபர் அவருடைய கேள்விக்கு பதில்கூறாமல் தொடர்ந்து பழங்களைப் பறித்து தின்றுக் கொண்டே இருந்தான்

அதனால் அவ்விவசாயி அதிக கோபமடைந்து, "இந்த மரங்களை நான் நட்டுதண்ணீர் பாய்ச்சி ஆண்டு முழுவதும் கவணித்துபராமரித்து வருகிறேன், இந்த பழத்தோட்டத்தில் என் அனுமதியின்றி பழங்களை எடுக்க உனக்கு உரிமை இல்லை. உடனே கீழே இறங்கி தோட்டத்தை விட்டு சென்றுவிடு” என கத்தினார் 

மரத்தில் அமர்ந்திருந்த அந்தநபர், “நான் ஏன் கீழே இறங்க வேண்டும்? இது இயற்கையான தோட்டம், நாமனைவரும் இயற்கையாக வந்தவர்கள், அதனால் இந்த மரத்திலிருந்து பழங்களை பறிதது தின்பதற்கு  எனக்கு முழு உரிமை உண்டு.  இடையில் நீ ஒன்றும் குறுக்கிடவேண்டாம்.” என பதில் கூறினான்

இதைக் கேட்ட விவசாயி, தங்களுடைய  மகனை அழைத்து உடனே வீட்டிற்குள் சென்றுஒரு நீண்டதடியை எடுத்துக்கொண்டு வரும்படி கோரினார். மகன் தடியுடன் திரும்பி வந்ததும், அவ்விவசாயிஆனவர் அந்த    தடியால் அந்த நபரை அடிக்க ஆரம்பித்தார்

அடிபலமாக விழ ஆரம்பித்ததும் அந்தநபர் வலி தாங்க முடியாமல் , “என்னை ஏன் அடிக்கிறாய்? அவ்வாறு செய்ய உனக்கு உரிமை இல்லை” .என கத்தி கூக்குரலிட ஆரம்பித்தான் விவசாயி எதுவும் செவிசாய்க்கவில்லை, தொடர்ந்து அந்நபரைத்தடியால் அடித்துகொண்டேயிருந்தார்.

அந்த நபர் , “ நீதிக்கும் நேர்மைக்கும் நீங்கள் பயப்படமாட்டீர்களா? நீங்கள் ஒரு அப்பாவியை அடிக்கின்றீர்கள், என தெரியவில்லையா இதற்காக நீங்கள் கண்டிப்பாக  தண்டிக்கப் படுவீர்கள்.” என அடியின் வலி பொறுக்கமுடியாமல்மீண்டும் கத்தினான்

விவசாயி சிரித்துக் கொண்டே, ‘நான் ஏன் பயப்பட வேண்டும்? என் கையில் இருக்கும் இந்த தடிஇயற்கைக்கு  சொந்தமானது. நானும் இயற்கையாக உருவானவன், அதனால் நான் யாருக்காகவும் எதற்காகவும் பயப்படத் தேவையில்லை,  இடையில் நீ ஒன்றும் பேச வேண்டாம்.”எனக்கூறியவாறு அந்த அந்த நபரை தொடர்ந்து தடியால் அடித்து கொண்டேயிருந்தார்

இதைக் கேட்ட அந்த நபர் தன் தவறை உணர்ந்து உடன்  மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து, “ ஐயா என்னை அடிக்காதீர்கள். உங்கள் தோட்டத்திலிருந்து பழங்களைத் திருடியதற்காக என்னை மன்னியுங்கள். இது உங்களுடைய தோட்டம், நீங்கள் ஆண்டு முழுவதும் உழைத்து இந்த பழமரங்களை பராமரிக்கின்றீர்கள் என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன், எனவே பழங்களைப் பறிக்க நான் உங்கள் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். நான் கூறியது தவறு. இனிமேல் இதை செய்ய மாட்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்." என மன்னிப்பு கோரினான் 

அதற்கு விவசாயி, “நீ உன்னுடைய தவறை உணர்ந்ததால், நான் அடிக்காமல் விட்டுவிடுகின்றேன், ஆனால் இயற்கையின் பெயரைச் சொல்லி மற்றவர்களை முட்டாளாக்க முயற்சிக்காதே உடனே இந்த இடத்தை விட்டு ஓடிவிடு மீண்டும் இவ்வாறான தவறினை செய்யாதே"  என அந்த அந்த நபரை எச்சரித்து அனுப்பினார்.


சனி, 23 ஏப்ரல், 2022

ஒருஅரசனும் இரண்டு கிளிகளும்


ஒருமுறை அரசன் ஒருவன் குதிரையின் மீது ஏறிதனியே காட்டுக் சென்று கொண்டிருந்தார். அவர் ஒரு குடிசையைக் கடந்து சென்றபோது, அங்கு கூண்டில் ஒரு கிளி இருப்பதைக் கண்டார்.அரசன் அந்த வழியே செல்வதைக் கண்டதும் அந்த கூண்டுக்கிளி “ஓடு...ஓடு பிடி.. பிடி உடனே அவனை பிடித்து அவனுடைய... குதிரையைப் பிடுங்கு... அவனிடமிருக்கும்  பணத்தை பிடுங்கு” என்று கூவியது.
தான் கொள்ளைக்காரர்களின் குடியிருப்பு பகுதிக்குள் வந்திருப்பதை அவ்வரசன் புரிந்து கொண்டார். அதனால் அவ்வரசன் தன் குதிரையை முழு வேகத்தில் ஓடச் செய்தான்.
அந்த கிளியின் பேச்சினை கேட்டு கொள்ளைக்காரர்கள் அந்த அரசனை பின்தொடர்ந்தனர், ஆனால் அரசனின் குதிரை மிக வேகமாக ஓடியது, அதனால் அந்த அரசனை கொள்ளைக்காரர்களால் சுற்றிவளைத்து பிடிக்கமுடியவில்லை அதற்குமேலும் அரசனை துரத்துவதை விட திரும்பி செல்வதே மேல்என பின்தொடர்வதை கைவிட்டுவிட்டனர்
 அதனை தொடர்ந்து அடுத்த குடியிருப்புபகுதிக்குள்  செல்லும் போது அம்மன்னன் மற்றொரு கிளி ஒரு கூண்டிற்குள்  குடிசை ஒன்றில் இருப்பதைக் கண்டார்்.
இந்த இரண்டாவது கிளியானது அந்த அரசனைப் பார்த்ததும்  “வணக்கம் வாருங்கள் ஐயா.. விருந்தினர் வந்துவிட்டார்கள்...அவர் குடிப்பதற்கு  தண்ணீர் கொண்டு வாருங்கள் அமர்ந்து ஓய்வெடுங்கள் ஐயா விருந்தினர் சாப்பிடுவதற்கு உணவுப்பொருட்களை கொண்டுவாருங்கள் ஐயா உங்களுடைய வயிறாற உணவு உண்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்து செல்லுங்கள்” என முகமன்கூறி வரவேற்றது .
அந்த நேரத்தில் தான், கிராமத்தின் விவசாயி ஒருவரின் வீட்டிற்கு வந்ததை அந்த அரசன் அறிந்துகொண்டார் உடன் தன்னுடைய குடிசைக்கு  மன்னர் வந்திருப்பதை  உணர்ந்த அந்த விவசாயி உடனே வெளியே வந்து அரசனை வரவேற்றார்
அரசன், அவ்விவசாயியின் விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டான். பின்னர், அவரிடம் , முன்பு நடந்த அனைத்தையும் கூறி, “ஐயா! ஒரே இனத்தைச் சேர்ந்த பறவைகளின் இயல்பில் ஏன் இவ்வளவு வேறுபாடு?” என சந்தேகம் எழுப்பினார்
அந்த விவசாயிபதில் எதுவும் கூறுமுன், அவருடைய கிளியானது , “அரசே.. நாங்கள் இருவரும் ஒரே பெற்றோரின் பிள்ளைகள்தான் ஆனால் சிறு வயதிலேயே இருவரும் பிரிந்துவிட்டோம். அந்தகிளி ஒரு கொள்ளைக்காரனிடம் வளர்க்கப்பட்டது, நான் ஒரு வவிவசாயியால் இங்கு வளர்க்கப்பட்டேன்.
அந்த கிளியானது நாள் முழுவதும், கொள்ளையர்களின் வன்முறை யுடன் கூடிய சொற்களைக் கேட்டு கேட்டு அவ்வாறு மாறிவிட்டது , நான் இந்த கிராமத்தின் விவசாயியின் விவசாயம்சார்ந்த விவதங்களையும் விருந்தினர்களின் உபசரிப்புகளையும் கேட்டு பழகிவருகிறேன். அதனால்தான் நாங்கள் இருவரும் வெவ்வேறாமாக வளர்ந்துவருகின்றோம்.” என விளக்கமளித்தது
கற்றல்: எந்தவொரு குழந்தையும் வளரும்போது, பெற்றோர், சுற்றியுள்ளஉறவினர்கள், நண்பர்கள் அந்த குழந்தையினுடைய வாழ்க்கையில்அதிக செல்வாக்கு செலுத்துகின்றனர். அதனால்தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் நல்ல பழக்கவழக்கங்களை  புகுத்துவதில் நன்கு கவனம் செலுத்த வேண்டும் . குழந்தைகளை கெட்ட சகவாசத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும். என கோரப்படுகின்றது

சனி, 16 ஏப்ரல், 2022

மிகவும் சக்திவாய்ந்த நபர் யார்?

 

 ஒரு நகரத்தில்,  ஏழை தையல்காரர் ஒருவர் தனது ஒரே மகனுடன் தங்களுடைய சிறிய வீட்டில் வசித்து வந்தார். தன் மகன் நன்றாகப் படித்து நல்ல பணியில் சேர வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது.

எனவே, அவர்களின் தற்போதைய நிலைமை எப்படி இருந்தாலும், தங்களுடைய மகனுக்கு சிறந்த கல்வியைப் பெற அவர் முடிவு செய்தார். மகனின் கல்விக்காக தந்தை அல்லும் பகலும் அயராது உழைத்து பணம் சம்பாதித்தார். அவரது மகனும் நன்கு கவனத்துடன் படித்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, தந்தையின் கனவு நனவாகியது, அவரது மகன் அருகிலுள்ள நகரத்தின் பெரிய நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒரு நாள், தந்தை தனது மகனின் அலுவலகத்திற்குச் செல்ல முடிவு செய்தார். தந்தை தனது மகனை அலுவலகத்தில் காண வந்தபோது, அவரது மகன்  மிகப்பெரிய  நிறுவனத்தின் நிருவாக அலுவலகத்தில்  மிக ஆடம்பரமான நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சிஅடைந்தார். அவருடைய மகன் தன் தந்தையைப் பார்த்தவுடனேயே மிகவும் மகிழ்ச்சியடைந்து நாற்காலியில் இருந்து எழுந்து அவரை வரவேற்றான்

தந்தை சிரித்துக்கொண்டே மகனை நாற்காலியில் உட்கார வைத்து, மகனின் பின்னால் நின்று, மகனின் தோளில் கைகளை வைத்து கொண்டு, “மகனே, இப்போது யார் மிகவும் சக்திவாய்ந்த மனிதராக உணர்கின்றாய்?" என வினவினார்

அதற்கு அவருடை மகன் , "அப்பா, நான்தான் மிகவும் சக்திவாய்ந்த நபராக உணர்கிறேன்." என பதிலளித்தான்

உடன் தங்களுடைய மகன் தன்னை மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று கூறுவான் என எதிர்பார்த்திருந்தார், ஆனால் மகனின் பதிலால் மிகவும் ஏமாற்றமடைந்த அவர், "சரிதான் மகனே" என்று பதிலளித்தார். தங்களுடைய மகனின் அலுவலகத்தை சுற்றி பார்ததுவிட்டு தங்களுடைய வீட்டிற்கு திரும்பி செல்வதற்காக அந்த அலுவலகத்தில் இருந்து வெளியேறவிருந்தார்

ஆனால் புறப்படுவதற்கு முன், அந்த தந்தை  தங்களுடைய மகனிடம் , "மகனே நீ இன்னும் சக்திவாய்ந்த நபர் என்று நினைக்கின்றாய்?" என அதே கேள்வியைக் கேட்டார்

அதற்கு மகன், "இல்லை, தந்தையே, தற்போது யாரேனும் மிகவும் சக்தி வாய்ந்தவர் யார் என வினவினால், அதற்கு நீங்கள்தான் என நான் பதில்கூறுவேன்" என்று பதிலளித்தார்.அதனைதொடர்ந்து அவரது தந்தை “ஆனால்சற்றுமுன் நீ கூறினாயே, நீதான் மிகவும் சக்தி வாய்ந்தவன் என்று ” என மீண்டும் சந்தேகம் எழுப்பினார்

அதனை தொடர்ந்து மகன் சிரித்துக்கொண்டே , "ஆம், அப்பா அப்போது நான் கூறினேன், ஏனெனில் அந்த நேரத்தில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபரின் கைகள் என் தோள்களில் இருந்தன, எனவே அந்த நேரத்தில் நான் மிகவும் சக்திவாய்ந்தவனாக உணர்ந்தேன்."  என பதில் கூறினார் இதைக் கேட்ட தந்தை கண்களில் நீர் பெருக, மகனைக் கட்டி்அணைத்துக் கொண்டார்

 கற்றல்: நம் பெற்றோரின் அன்பும்அறவணைப்புமே நம்மை இந்த உலகின் மிக சக்திவாய்ந்த நபராக மாற்றும்.


சனி, 9 ஏப்ரல், 2022

இரு சகோதரர்களின் கதை

 ஒரு சிறிய கிராமத்தில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான தந்தையும் அவரோடு அவருடைய இரண்டுமகன்களும்  வாழ்ந்து வந்தனர். அந்த குடிகார தந்தைதினமும் அதிகமாக குடித்துவிட்டு தங்களுடைய இரு மகன்களையும் அடித்து உதைத்து கொடுமை படுத்திகொண்டேஇருப்பார். அந்த குடிகார தந்தையுடைய இருமகன்களும் இவ்வாறே வளர்ந்தது வந்தனர்  ஆனால் அவ்விருவரில் பெரியவன் தன்னுடைய தந்தையைப் போலவே ஒரு குடிகாரனாக மாறிவிட்டான், இளையவன் வெற்றிகரமான ஒரு தொழிலதிபரானாக உயர்ந்தான், அதே குடிகார  தந்தையுடன் வாழ்ந்த இருவரில் , ஒருவன் வாழ்க்கையில்  வெற்றி பெற்று இவ்வளவு பெரிய தொழிலதிபராகவும், மற்றொருவன் தந்தையை போலவே குடிகாரனாகவும் எவ்வாறு மாறி வளரமுடியும் என்ற சந்தேகம் அந்த கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரி்ன் மனதிலும் எழுந்தது.

அதனால், ஒரு நாள் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் சகோதரர்கள் இருவரிடமும் இதனை குறித்து பேச நினைத்தனர். முதலில் அவர்கள் மூத்த சகோதரனிடம் சென்றனர். ஆனால்  அவன் தன்னுடைய தந்தையை போன்று வழக்கம் போல் அதிகமாக குடித்துவிட்டு தரையில் படுத்திருப்பதை கண்டு அருவறுப்பு அடைந்தனர்.

அவர்களில் சிலர் அந்த பெரியசகோதரனை  எழுப்பி நாற்காலியில் உட்கார உதவினார்கள், அவன் சற்று நிதானமானபோது, “ஏன் இவ்வாறு குடித்து வாழ்க்கையை வீணாக்கி கொள்கிறாய்?” என வினவினார்கள்.

உடன் அநந்த மூத்த சகோதன், "எங்களுடைைய தந்தை ஒரு குடிகாரர். அவர் தினமும் மிக அதிகமாக குடித்துவிட்டு  எங்கள் இருவரையும் அத்துக்கொண்டேயிருப்பார்.இவ்வளவு காலம் தொடர்ந்து அவரோடு வாழ்ந்துவந்ததால் நானும் என் தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவரைப் போலவே ஆனேன்”, என பதிலளித்தார்.

பின்னர் அவர்கள் இளைய சகோதரனை சந்தித்து அவரிடம், "நீங்கள் ஒரு மரியாதைக்குரிய தொழிலதிபர்,என எல்லோரும் உங்களைப் போற்றுகிறார்கள், உங்களுக்கு எவ்வாறு மிகப்பெரிய தொழிலதிபர் ஆகவேண்டும் எனும் உத்வேகம் கிடை்ததது?" என சந்தேகம் எழுப்பினார் 

உடன் இளைய சகோதரன், "என் தந்தைதான்" என பதிலளித்தார். எல்லோரும்மிகவும் ஆச்சரியமாக, “அது எவ்வாறு?” என மீண்டும் சந்தோகம் எழுப்பினார்கள்.

அதற்கு அவர், “எனது தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர், குடிபோதையில் எங்களை தினமும் அடி்ததுகொண்டேஇருப்பார்.  இவ்வாறான நிகழ்வை தினமும்  பார்த்துக் கொண்டிருந்தேன், அப்போதுதான் நான் அவரைப் போல இருக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். கண்ணியமாக இருக்க வேண்டும், மதிக்கப்பட வேண்டும்  வெற்றி பெற வேண்டும். என முடிவுசெய்தேன் அதனால்தான் நான்கடுமையாக உழைத்து  சிறந்த தொழில் அதிபராக முன்னேறினேன்." என பதிலளித்தார்


கற்றல்: நாம் என்னவாக இருக்கிறோம் என்பது நமது சிந்தனையைப் பொறுத்தது. நமது நேர்மறையான நல்ல சிந்தனையே நம்மை நல்ல மனிதனாக மாற்றுகிறது.

சனி, 2 ஏப்ரல், 2022

அரசனின் கேள்வியும் அறிஞரின் சுவாரசியமான பதிலும்

 
 ஒரு நாள் அரசன் ஒருவன் தனது நாட்டிற்கு அறிஞர் ஒருவர் வருகை தருவதை பற்றி அறிந்தார். அம்மன்னன், அந்த அறிஞரை சந்திக்க மிகவும் ஆர்வமாக இருந்தார் அதனால் அவ்வறிஞரை தன்னுடைய அரசவைக்கு வருமாறு அழைத்தார், அவ்வறிஞர் அவ்வரசனின் அவைக்கு வந்தபோது,  அவரிடம், “நீங்கள் மிகப்பெரிய அறிஞர் என நான் மிக மகி்ழ்ச்சியடைகின்றேன் என் மனதில் கேள்வி  ஒன்று எழுந்துள்ளது அதற்கான பதிலை தங்களிடம் அறிந்து கொள்ளவிரும்புகின்றேன் ஆனால் எனது கேள்விக்கு தங்களால் பதிலளிக்க முடியாவிட்டால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.” எனக்கூறினார்
உடன் அவ்வறிஞரும் “ அரசே தாராளமாக கேளுங்கள் அதற்கான பதிலை நான் கண்டிப்பாக கூறுகின்றேன்” என சிரித்துக் கொண்டே சம்மதித்தார் .அதன்பின்னர் அவ்வரசன், ‘மனித உடலின் சிறந்த உறுப்பு எது? அதனை உங்களால் கொண்டு வர முடியுமா?” என வினவினார்
அதனை தொடர்ந்து அவ்வறிஞர் சிறிது நேரம் வெளியே சென்று, இறந்த மனிதனின் நாக்குடன் திரும்பி வந்து, "இதோ, இதுதான் மனித உடலின் சிறந்த உறுப்பு" என்று மன்னரிடம் காட்டினார்.இப்போது, அந்த மன்னன், ‘மனித உடலின் மிக மோசமான உறுப்பு எது?" என மீண்டும் மற்றொரு வினா எழுப்பினார்
அதனை தொடர்ந்து அவ்வறிஞர்  மீண்டும் சிறிது நேரம் வெளியே சென்று இறந்த மனிதனின் நாக்குடன் திரும்பி வந்து அந்த அரசரிடம் காட்டி, "இதோ மனித உடலின் மிக மோசமான உறுப்பு" என காண்பித்தார்.
அந்த அரசன் தன்னுடைய இரண்டாவது கேள்விக்கும் அவ்வறிஞர்  மனிதனுடைய அதே நாக்கை மீண்டும் கொண்டுவந்து காண்பிப்பதைக் கண்ட மன்னன், "என்னுடைய இரண்டு வெவ்வேறான கேள்விக்கும்  மனிதனின் ஒரே உறுப்பினை ஏன் கொண்டு வந்து காண்பிக்கின்றீர்? அது எவ்வாறு மனித உடலின் சிறந்த உறுப்பாகவும் மோசமான உறுப்பாகவும் இருக்க முடியும்?"  என மிகப்பெரும் சந்தேகத்தினை எழுப்பினார்
உடன் அவ்வறிஞர், "அரசே, நாமனைவரும் இந்த நாவின் உதவியால் பேசுகிறோம், நாம்  நல்லதையும்இந்த நாவினால்தான் பேசுகின்றோம் அவ்வாறே  கெட்டதையும் இந்த நாவினால்தான் பேசுகின்றோம் அதாவது நல்லது கெட்டது ஆகிய இரண்டையும் நம்முடைய ஒரே நாவினால்தான் பேசுகிறோம், அதனால்தான் நாம் வாழும் இந்த சமுதாயத்தில் எல்லா பிரச்சினையும் உருவாகி கெட்டது நடக்கின்றது   அல்லது அந்த பிரச்சினைக்கான தீர்வு உருவாகி நல்லதும் நடக்கின்றது." என விவரம் கூறினார். இந்தவிவரத்தை கேட்டு மன்னன் மிகமகிழ்ச்சியடைந்து அந்த அந்த அறிஞருக்கு வெகுமதி அளித்தார்.
கற்றல்: ஒருவர் எப்போதும் பொறுப்புடன் பேச வேண்டும்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...