ஒரு நாள்இரவில் ஒரு தச்சரின் மரப்பட்டறைக்குள் பாம்பு ஒன்று நுழைந்தது. அப்போது இரவுநேரமானதால் அந்த மரப்பட்டறையானது இருள்சூழ்ந்து இருந்தது. அந்த பாம்பு மரப்பட்டறைக்குள் ஊர்ந்து நகர்ந்தசென்றுகொண்டிருந்த போது ஏதோ ஒன்று அதன் மீது உராய்ந்ததால் அந்த பாம்பின் உடலில் லேசான காயம் ஏற்பட்டது. அந்த காயத்தினால் ஏற்பட்ட உடல் வலியால் ஆத்திரமடைந்த பாம்பு தனது தலையை தூக்கி படம் எடுத்து ஆடியவாாறு சீறிக்கொண்டு தன்னுடைய உடலில் உராய்ந்து காயம் ஏற்படுத்திய பொருளை கடிக்க முயன்றது . இந்த முயற்சியில் அந்த பாம்பின் வாயிலும் முகத்திலும் மேலும் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் தனக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல், எதிரி தன்னைத் தாக்க முயல்கின்றார் எனதவறாக நினைத்து கொண்டு, அந்த பாம்பானது அதிக கோபத்துடன் கடுமையாக சீறிக்கொண்டு தன்னுடைய முழு பலத்துடன் தன்னுடைய எதிரியை மூச்சுத் திணறச் செய்வது போன்று தன்னுடைய நீண்ட உடலால் அதைச் சுற்றி வளைக்க முடிவு செய்து அவ்வாறே செய்தது. ஆனால் மறுநாள் காலையில், அந்த தச்சர் தனது மரப்பட்டறைக்குள் நுழைந்தபோது, கூர்மையான மரம் அறுக்கும் வாளில் பாம்பு ஒன்று சுற்றப்பட்டு இறந்து கிடந்ததைக் கண்டார்.
கற்றல் சில நேரங்களில், நாம் கோபத்தில் எந்தவொரு செயலிற்கும் பதில் செயல்செய்திடுமாறு நடந்து கொள்கிறோம், அதாவது நம்மை காயப்படுத்து பவர்களை தீங்கிழைப்ப வர்களை பதிலுக்கு பதில் காயப்படுத்த நினைக்கிறோம், ஆனால் அதன்மூலம் நம்மை அறியாமல் நமக்கு நாமே காயப்படுத்திக் கொள்கிறோம். எனவே, அவ்வாறான சூழல்களில் அத்தகைய நபர்களையும் சூழ்நிலையையும் புறக்கணிப்பது நல்லது, ஏனென்றால் அவர்களுக்கு எதிர்வினையாற்றுவதாக எண்ணிக்கொண்டு நாம் நமக்கான மீளமுடியாத பேரழிவுகளையும் விளைவுகளையும் ஏற்படுத்தும் சூழலில் மாட்டிகொள்கின்றோம்
சனி, 31 டிசம்பர், 2022
பாம்பும் மரம் அறுக்கும் வாளும் - கோபத்தினால் ஏற்படும் விளைவுகள்
சனி, 24 டிசம்பர், 2022
கொல்லனும் இரும்பு சங்கிலியும்
முன்புஒருகாலத்தில், ரோம் நகரில் ஒரு கொல்லன் வாழ்ந்துவந்தார், அவர் தனது ஒப்பற்ற திறமைகளால் உலகம் முழுவதும் பிரபலமானார். அவர் தன்னுடைய உலைகளத்துடன்கூடிய பட்டறையில் எந்தவொரு பொருள் செய்தாலும், அதை யாராலும் உடைக்க முடியாத தாக இருந்தது. எனவே, அந்த கொல்லனின் பட்டறையில் செய்யப்பட்ட பொருட்கள் உலகம் முழுவதும் மதிக்கப்பட்டு, தொலைதூர சந்தையில்கூட விற்கப்பட்டன. ஒரு முறை, எதிரியால் ரோம்நகரின்மீது தாக்குதல் செய்யப்பட்டு அந்த போரில் தோற்றது. அதனால் ரோமில் இருந்த பல முக்கிய நபர்கள் பிடிபட்டனர். மொத்தத்தில் ரோமில் புகழ்பெற்ற முப்பது நபர்கள் பிடிபட்டனர், அவர்களில் அந்த கொல்லனும் ஒருநபர்ஆவார். அவர்கள்அனைவரும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப் பட்டு அருகிலிருந்த மலையின்உச்சியிலிருந்து கீழே தரைக்கு உருட்டி விடுவதற்கு மலையின் உச்சிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் அனைவரும் மலையின் உச்சிக்கு கொண்டுவந்தபோது, அந்த சங்கிலியால் கட்டப்பட்டவர்களில் இருபத்திஒன்பது பேர்களும் தங்களுடைய உயிர் உடன்போகப்போகின்றது என அழுது கொண்டிருந்தனர், அழாத ஒரே நபர் அந்த கொல்லன் மட்டுமேயாகும். அதனால் அவர்களில் ஒருவர் கொல்லனிடம், “நீமட்டும்எப்படி அமைதியாக இருக்கிறாய்? விரைவில் இங்கிருந்து நம்மை கீழே மரம் அடர்ந்து வளர்ந்துள்ள காட்டிற்குள் உருட்டிவிடப் போகின்றனர், இந்த மலையடியிலுள்ள காட்டில் வாழும் வன விலங்குகளால் நம்முடைய உடல்கடித்து தின்னப்படும்.“ என கூறியதற்குக் கொல்லன் , “கவலைப்படாதே நண்பா, நான் ஒரு கொல்லன், என் வாழ்நாள் முழுவதும் நான் ஏராளமான சங்கிலிகளையும் கைவிலங்குகளையும் உருவாக்கி யிருக்கிறேன். அதனால் அவற்றைத் எவ்வாறு திறப்பது என எனக்குத் தெரியும், நீங்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். நாம் உருட்டிவிடப்பட்டவுடன், நான் முதலில் என்னை பினைத்த சங்கிலியை அவிழ்த்து விடுவேன், பின்னர் நான் உங்கள் அனைவரின் சங்கிலியையும் அவிழ்க்க உதவுவேன், பயப்பட வேண்டாம்.“ எனக்கூறினார். அதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் தைரியம் அடைந்து நம்பிக்கையுடன் இருந்தனர் .அதன்பிறகு அவர்கள் அனைவரும் மலையின் உச்சியிலிருந்து உருட்டிவிடப்பட்டனர். அதனைதொடர்ந்த அவர்களஎல்லாரும் கடுமையாக முயற்சி செய்து மெதுவாக நகர்ந்து ஊர்ந்து எப்படியோ கொல்லனின் அருகில் வந்தசேர்ந்தனர். அவர்கள் அனைவரும் கொல்லனின் அருகில்வந்து சேர்ந்ததபோது, அங்கு கொல்லனும் தாங்கள் முன்பு அழுதுகொண்டிருந்ததேபோன்றே தனியாக அழுதுகொண்டிருப் பதைக் கண்டனர். அவர்களில் ஒருவர் , ""ஏன் என்ன செய்தி? நீங்கள் எங்களுக்கு எல்லாம் தைரியமும் நம்பிக்கையும் அளித்தீர்கள் அதனால் நாங்கள் அனைவரும் நிம்மதியாக இருந்தோம் ஆனால் இப்போது நீங்கள் மட்டும் ஏன் அழுகின்றீர்கள்? , இப்போது என்ன நடந்தது?" என வினவியபோது கொல்லன், "நான் , ஏன் அழுகிறேன் என்றால் நான் இப்போது நம்மை பினைத்த இந்த சங்கிலிகளை உன்னிப்பாகப் பார்த்தபோது, அவற்றில் எனது முத்திரை இருப்பைதப் பார்த்தேன், இந்த சங்கிலிகள் நான் செய்தவை.. வேறுயாராவது செய்திருந்தால், அவ்வாறான சங்கிலிகளை என்னால் உடைத்திருக்கமுடியும், ஆனால் நான் செய்த இந்த சங்கிலியை என்னால் கூட உடைக்க முடியாது. இப்போது, இங்கிருந்து நாம் தப்பிப்பது சாத்தியமில்லை. காட்டு விலங்குகளால் நாமனைவரும சாவது உறுதி" எனக்கூறினார்
சனி, 17 டிசம்பர், 2022
மற்றவர்களை ஏமாற்றிடும் இனிப்புக் கடை உரிமையாளரின் புகார்!!
ஒரு இனிப்புக் கடைக்காரர் தன்னுடைய கடைக்கு தேவையான வெண்ணெயை ஒரு விவசாயியிடம் வாங்குவது வழக்கமாகும்,அவ்வாறுஒரு நாள் அந்த விவசாயியிடம் ஒரு கிலோ வெண்ணெய் வாங்கியபோது அந்தஇனிப்புக் கடைக்காரர், “ விவசாயி கொடுத்துவருகின்ற வெண்ணெயின் எடையை ஒருநாள்கூட சரிபார்த்ததே இல்லை, அதனால் இன்று சரிபார்த்திடுவோம் ” என நினைத்தார். எனவே அவர் அளவுகோலின் ஒரு பக்கத்தில் வெண்ணெயையும் மறுபுறம் 1 கிலோ எடைக்கல்லையும் வைத்து சரிபார்த்தபோது அன்று வாங்கிய வெண்ணெயானது 1கிலோவிற்கும் குறைவாக இருப்பதைக் கண்டார். அதனால் அந்த இனிப்புக்கடைகாரர் அதிக கோபமடைந்து அந்த நகரத்தின் நகரமன்றத் தலைவரிடம் சென்று அந்தவிவசாயி தன்னை ஏமாற்றியது குறித்து புகார் கூறினார்.அதனை தொடர்ந்து அந்த நகரமன்றத்தலைவர் இனிப்புக்கடைக்காரர் விவசாயி ஆகிய இருவரையும் நேரடி விசாரணைக்கு அழைத்தார்.அந்த விசாரணையின்போது "நீங்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கும் குறைவான வெண்ணெய் கொடுத்து இனிப்பு கடைக்காரரை ஏமாற்றுவது சரியா" என நகரமன்றத் தலைவர் வினவினார். அதற்கு விவசாயி, "ஆனால்.. இது 1 கிலோ வெண்ணெய்தான் ஐயா" என்றார். உடன் கோபமடைந்த நகரமன்றத் தலைவர், "ஆனால் இனிப்புக் கடைக்காரர் அதனை சரிபார்த்தபோது, அதன் எடை 1 கிலோவிற்கும் குறை வாகவே இருக்கின்றதே." என மேலும் வினவினார். அதனால் அந்த விவசாயி அதிக குழப்பத்துடன், "ஐயா, பொருட்களை எடையிட்டு கணக்கிடு வதற்கென தனியாக என்னிடம் எடைகற்கள் எதுவும் இல்லை ஐயா." என பதில் கூறினார் ,அதனை தொடர்ந்து நகரமன்றத் தலைவர் "அவ்வாறாயின் நீங்கள் விற்பனை செய்திடும் வெண்ணெயை எவ்வாறு எடையிட்டு கொடுத்து வருகின்றீர்கள்? அதனை1 கிலோ என்று எவ்வாறுச் சொல்வது?" என மீண்டும் வினவியதற்கு அவ்விவசாயி, "ஐயா, இன்று நான் அவரிடமிருந்து 1 கிலோ இனிப்பு வாங்கினேன். அந்த இனிப்புப் பொட்டலத்தை எடுத்து வெண்ணெயை எடையிடுவதற்கு தராசின் மறுபக்கத்தில் வைத்து எடையிட்டு கொடுத்தேன். இதேபோன்று நான் வாரத்திற்கு ஒருமுறை இவரிடம் ஒரு கிலோ இனிப்பு வாங்குவேன் அதனை அந்த வாரமுழுவதிற்கும் வைத்துகொண்டு வெண்ணெயை எடையிட்டு வழங்குவது வழக்கமாகும் " என பதில் கூறினார் இந்த பதிலைக் கேட்டு இனிப்புக்கடைக்காரர் திகைத்துப் போனார், இப்போது தனது ஏமாற்றும் பணி அம்பலமாகிவிட்டதால் வெட்கமடைந்தார்.
கற்றல். இந்த இனிப்பு விற்பவரைப் போல நமக்கும் வாழ்க்கையில் நாம் கொடுப்பதுதான் கிடைக்கும். நாம் மற்றவர்களுக்கு என்ன கொடுக்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும், ஏனென்றால் வாழ்க்கையில் நாம் விதைப்பதையே நாம் அறுவடை செய்திடுவோம் ...
ஞாயிறு, 11 டிசம்பர், 2022
யாரோஒருவர்முதுகில் கேலிசெய்திடும்தாளை ஒட்டுவது
கல்லூரியில் பயிலும் மாணவர்களில் ஒரு மாணவன் ஒருமுறை தங்களுடைய வகுப்பில் பயிலும், மற்றொரு மாணவனை குறும்பு செய்து விளையாட நினைத்தான். அதற்காக அம்மாணவன் எழுதும் ஒரு தாளினை எடுத்து அதில் - நான் ஒரு முட்டாள் - என எழுதிய, பின்னர் அந்த தாளினை தான் குறும்பு செய்து விளையாட விரும்பும் வகுப்பு தோழரின் முதுகில் ஒட்டினார், அந்த தாள் அம்மாணவரின் முதுகில் ஒட்டப்பட்டதால் அதுகுறித்து அந்த மாணவனுக்கு எதுவும் தெரியாது அதனால் அம்மாணவன் அதனை கவனிக்காமல்.தன்னுடைய பணியை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் மாணவனின் முதுகில்- நான் ஒரு முட்டாள் - எனும் தாள் ஒட்டப்பட்டதைப் பார்த்த மற்றொரு மாணவனிடம் அந்த தாளை ஒட்டிய மாணவன், இந்த மாணவனை கேலி செய்வதற்காகத்தான் நான் இதை ஒட்டினே் இது குறி்த்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதனை தொடர்ந்து அந்தநாள் முழுவதும் கல்லூரியில் மாணவர்கள் அனைவரும் அந்த கல்லூரி மாணவரின் முதுகில் ஒட்டுப்பட்டிருந்த - நான் ஒரு முட்டாள் - என ஒட்டப்பட்ட தாளினை பார்த்து அந்த மாணவனின் முதுகுக்கு பின் கிண்டலும் கேலியும் செய்துசிரித்து கொண்டிருந்தனர். அன்றைய நாளின் கடைசி நேர வகுப்பிற்கு கணித விரிவுரையாளர் வந்துசேர்ந்தார், கணித விரிவுரையாளர் வந்தவுடன் முந்தையநாளில் நடத்தப்பட்ட கணித பாடத்திற்கான கணக்கு ஒன்றினை சுவரிலிருந்த கரும்பலகையில் எழுதி இந்த கணக்கினை யாரால் தீர்வுசெய்ய முடியும் என அந்த வகுப்பு மாணவர்களை பார்த்து கேட்டுக் கொண்டார். அந்த கணக்கு மிகக்கடினமாக இருந்ததால், அவ்வகுப்பில் இருந்த கல்லூரி மாணவர்களுள் முதுகில் - நான் ஒரு முட்டாள்- எனும் தாள் ஒட்டப்பட்ட மாணவனை தவிர வேறுஎந்த மாணவரும் அந்த கணக்கினை தீர்வுசெய்திட முடியும் என தங்களுடைய கைகளை உயர்த்தவில்லை. விரிவுரையாளர் அந்த மாணவரை மட்டும் அழைத்து கரும்பலகையில் அந்தகணக்கிற்கான வழிமுறையை எழுதி தீர்வுசெய்து விடை காணுமாறு அழைத்தார். உடன் அம்மாணவன் அந்த கணக்கிற்கான தீர்வுகாண கரும்பலகையை முன்னோக்கிச் சென்றுபோது, அந்த மாணவனது முதுகுக்குப் பின்னால் அனைத்து மாணவர்களும் கிண்டலும் கேலியும் செய்து சிரித்து கொண்டிருந்தனர். அதை அந்த வகுப்பு விரிவுரையாளர் கவனித்தார். வகுப்பு மாணவர்களின் கிண்டலும் கேலிக்கும் மத்தியில், அம்மாணவர் அந்தகணக்கிற்கான வழிமுறையை கரும்பலகையில் மிகஎளிதாக எழுதி தீர்வுசெய்துவிட்டு திரும்பிச் செல்லவிருந்தார். அப்போது விரிவுரையாளர் அவரைத் தடுத்துநிறுத்தி அவரைப் பாராட்டி முதுகில் தட்டிகொடுத்த பின் அம்மாணவரின் முதுகில் ஒட்டியிருந்த- நான் ஒரு முட்டாள்- எனும் தாளினையும் பிய்த்து அகற்றினார். தொடர்ந்த விரிவுரையாளர் அந்த தாளினை அந்த கல்லூரி மாணவரிடம் கொடுத்து - இந்த தாள் உங்கள் முதுகில் ஒட்டியிருந்தது. - நான் ஒரு முட்டாள்- என தன்னுடைய முதுகில் ஒட்டியிருந்த தாளினை கண்டு அந்தக் கல்லூரி மாணவர் மிகவும் வெட்கப்பட்டார். பின்னர் விரிவுரையாளர் மற்ற வகுப்பு மாணவர்களை அழைத்து, “மாணவர்களே இன்று உங்களுக்கு மிக முக்கியமான கருத்து ஒன்றினை கூறவிழைகிறேன்... இந்த தாளை பற்றி இம்மாணவருக்கு விவரம் தெரிந்திருந்தால் இந்த கணக்கினை தீர்வுசெய்திட இவர் முன்வந்திருக்க மாட்டார்.அல்லவா அதே போன்று உங்கள் வாழ்நாள் முழுவதும், உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க, மற்றவர்கள் உங்கள் முதுகிற்கு பின்னால் பல்வேறு மோசமான செய்திகளை பரப்பிடுவார்கள். வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், மக்கள் உங்களுக்குக் கொடுக்கும் இந்த பட்டப்பெயர்களைப் புறக்கணித்து, நீங்கள் கற்றுக்கொள்வதற்கும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், உங்களை மேம்படுத்திகொள்வதற்கும் கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திகொள்ளுங்கள்." என அறிவுரை கூறினார்
என்ன வாசகரே மற்றவர்கள் புறங்கூறுவதை புறக்கணித்து உங்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பினை பயன்படுத்தி கொள்வீர்களா
ஞாயிறு, 4 டிசம்பர், 2022
பெண்ணின் கோபமும் அதற்கான மருத்துவமும்
கற்றல். கோபத்தால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரே வழி கோபமாக இருக்கும் போது அமைதியாக இருப்பதுதான்.
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...