முன்பெல்லாம் தற்போது போன்று குழாய் வழியாக பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்கப்படுவதில்லை . பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய கிராமத்தில் உள்ள பொதுக் கிணற்றில் வாளி கயிறு ஆகியவற்றைஎடுத்துவந்து தத்தமது தேவைக்கேற்ப தண்ணீரை கினற்றிலிருந்து இறைத்து பாத்திரங்களில் வீட்டிற்கு எடுத்துசெல்வது வழக்கமாகும் ஒருநாள் அவ்வூரில் இருந்த நான்கு பெண்கள் அவ்வாறு பொதுக் கிணற்றில் தண்ணீர் இறைத்து பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பிக் கொண்டிருக்கும் போதே ஒருவருக்கொருவர் தங்களுக்குள் விவாதிக்க ஆரம்பித்தனர்.
அவ்வாறான விவாதத்தின்போது அந்நான்கு பெண்களும் தங்களுடைய மகன்களின் குணநலன்களைப் பற்றிவிவாதிக்க ஆரம்பித்தார்கள்.
முதல் பெண்மணி, "என் மகன் புல்லாங்குழல் வாசிக்கிறான். அவன் தன்னுடைய புல்லாங்குழலின் இசையைக் கேட்பவர்கள் மயங்கும் அளவுக்கு நன்றாக வாசிக்கிறான். இவ்வளவு திறமையான மகனைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்." என்றார்
இரண்டாவது பெண், "என் மகன் சிறந்த மல்யுத்த வீரன். இந்த கிராமத்தில் மட்டுமல்ல, தொலைதூர கிராமங்களிலும் பிரபலமானவன். ஒவ்வொரு குடும்பத்திலும் அவ்வாறு ஒரு மகன் கிடைப்பது மிகவும்நல்லது." என்றார்
அப்போது மூன்றாவது பெண் , "என் மகன் மிகபுத்திசாலி இந்த கிராமத்தில் அவனை விட வேறுயாரும் புத்திசாலியே இல்லை. ஏராளமானவர்கள் தங்களுடைய பிரச்சனைகளை அவனிடம் கூறி அதற்கான தீர்வினையும் , அவனுடைய ஆலோசனையையும் பெற்று மனமகிழ்ச்சியுடன் செல்கிறார்கள், நான் அத்தகைய மகனைப் பெற்றதற்கு மிகவும மிகழ்ச்சியடைகிறேன்." என்றார்
நான்காவது பெண் இம்மூவரின் பேச்சையும் கேட்டாள் ஆனால் அவள் எதுவும் பேசவில்லை.
இதைப் பார்த்த மற்ற மூன்று பெண்களும் அவளிடம், "நீயும் உன்னுடைய மகனை பற்றி ஏதாவது கூறேன்.. உன்னுடைய மகனின் திறன் என்ன? எங்களிடம் சொல்லேன்." என விடாப்பிடியாக வற்புறுத்தினார்கள்
நான்காவது பெண், "நான் என்ன சொல்ல முடியும். என் மகனுக்கு உங்கள் மகன்களைப் போன்ற எந்த குணங்களும் இல்லை." எனக்கூறினார் அந்த நான்காவது பெண் தன்னுடைய மகனை பற்றி அவ்வாறு சொல்வதைக் கேட்டு, மூன்று பெண்களும் தங்கள் மகன்களைப் பற்றி மிகவும்பெருமிதம் கொண்டனர்.
அவ்வாறு பேசிக் கொண்டே அனைவரும் தங்களுடைய பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பினர். அவர்கள் தங்கள் வீட்டிற்குச் செல்ல தத்தமது பாத்திரங்களைத் தூக்கி இடுப்பில் வைக்கத் தொடங்கினர்.
அதே நேரத்தில், முதல் பெண்ணின் மகன் அந்தவழியாக புல்லாங்குழல் ஊதிக்கொண்டு சென்று கொண்டிருந்தான். அதனால் அவனது தாயால் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தினை தூக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதைக் கண்டான். இருந்தாலும் தன்னுடைய தாய்க்கு உதவி செய்யாமல் தொடர்ந்த புல்லாங்குழல் ஊதிக்கொண்டு சென்று கொண்டே யிருந்தான்
இரண்டாவது பெண் மகன் தூரத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். இரண்டாவது பெண் கிணற்றிலிருந்து பத்திரத்தை தூக்கியவுடன், அவள் கால் நழுவி கினற்றிற்குள் விழுப்போனால் அதனால். நேராக நிற்பதற்கு தடுமாறினாள். அவளுடைய மகன் இதைப் பார்த்தான், ஆனால் தன்னுடைய தாயினை காப்பதற்கா கதாயின் அருகில் வரவில்லை, ஆயினும் அவனுடைய பயிற்சியைத் தொடர்ந்தான்.
அப்போது, மூன்றாவது பெண் மகனும் வீட்டில் இருந்து வெளியே வந்தான். அவனைப் பார்த்த அவனுடைய தாய், "மகனே! நான் பாத்திரத்தை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் இந்தக் கயிற்றை மட்டும் எடுத்து என்னுடைய தோளில் போட்டுவிடு " என்றாள். ஆனால் அவளுடைய மகன் அவளது கோரிக்கைக்கு பதில் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டான்.
அப்போது நான்காவது பெண்ணின் மகனும் அந்த இடத்தை கடந்து சென்று கொண்டிருந்தான். அம்மாவின் இடுப்பில் ஒரு பாத்திரமும் தலையில் ஒரு பாத்திரமும் மற்றொருகையில் வாளியும் கயிறும் இருப்பதைப் பார்த்தவன் தன்னுடைய தாயின் அருகில் சென்று அவள் தலையில் இருந்த பாத்திரத்தினை எடுத்து தன் தலையில் வைத்துக்கொண்டு அம்மாவுடன் சேர்ந்த நடக்க ஆரம்பித்தான்.
கிணற்றுக்கு அருகில் அமர்ந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த ஒரு மூதாட்டி, “இங்கே உங்கள் நாள்வரில் நல்ல இரக்கமனமுள்ள மகன் மட்டுமே சிறந்தவனாக நான் பார்க்கிறேன்.. தன்னுடைய தாய் இடர்படும் நேரத்தில் தன்னுடைய தாய்க்காக சேவை செய்யும் மகனை விட சிறந்த மகன் யார் இருக்க முடியும். .." என்றார்
சனி, 29 ஏப்ரல், 2023
.நான்கு பெண்களும் அவர்களின் மகன்களின் குணங்களும்.
ஞாயிறு, 23 ஏப்ரல், 2023
கஞ்சன் -வெள்ளிக் கிண்ணம் - பொருளின் மதிப்பு!
முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் மிகவும் கஞ்சனத்துடன் கூடிய முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எந்த பொருட்களைப் பயன்படுத்துவதிலும் மிகவும் கஞ்சத்தனமாக இருந்துவந்தார்.
அவர் மிகவும் விலையுயர்ந்த வெள்ளித்தட்டு ஒன்றினை வைத்திருந்தார், அது அவருடைய மிகவும் மதிப்புமிக்க உடைமையாக இருந்தது. அதனால் அதனை தன்னுடைய வீட்டிலுள்ள மிகவலுவான பெட்டிஒன்றில் வைத்து பூட்டி மிக பத்திரமாக பாதுகாப்பது அவருடைய வழக்கமான பணியாகும். சரியான சந்தர்ப்பம் வந்தால் மட்டுமே அந்த வெள்ளித்தட்டினை எடுத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.
ஒரு நாள் அவருடைய வீட்டிற்கு துறவி ஒருவர்வந்தார்.
தன்னுடைய வீட்டிற்கு வந்த துறவிக்கு உணவு பரிமாறும் போது ஏன் தன்னுடைய வீட்டிலுள்ள வெள்ளித்தட்டில் உணவு பரிமாறக்கூடாது என ஒரு கணம் அந்த முதியவர் நினைத்தார்.
ஆனால் அடுத்த நொடியே , "வெள்ளித்தட்டு மிகவும் மதிப்பு வாய்ந்தது. கிராமம் கிராமமாக அலைந்து திரியும் ஒரு ஏழை துறவிக்கு இதை நான் ஏன் பயன்படுத்த வேண்டும்.! நம் நாட்டு அரசர் என் வீட்டிற்கு வந்தால், அவருக்கு இந்த வெள்ளி தட்டில் உணவு பரிமாறலாம். ." என உடன் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டார்
அதனால் அன்று ஏழைத்துறவிக்கு உணவுபரிமாறுவதற்காக முதியவர் அந்தவெள்ளித்தட்டினை வெளியே எடுக்கவே யில்லை.
சில நாட்களுக்குப் பிறகு, அந்த நாட்டு அமைச்சர் அவரது வீட்டிற்கு வந்தார். அமைச்சருக்கு உணவு பரிமாறும்போதும் முதியவர் அந்த வெள்ளிதட்டினை எடுத்து உணவு பரிமாறலம் என நினைத்தார், ஆனால் அடுத்த நிமிடமே, "அவர் நம் நாட்டு மன்னரின் அவையில் இவர் ஒரு சாதாரண அமைச்சர்தானே இவருக்கு வெள்ளித்தட்டில் உணவு பரிமாறுவது சரியாகுமா! நம் நாட்டு அரசர் என் வீட்டிற்கு வந்தால், அவருக்கு இந்த வெள்ளி தட்டில் உணவு பரிமாறலாம். ." என தன் எண்ணத்தினை மாற்றிக்கொண்டார்
உண்மையில் சில நாட்களுக்குப் பிறகு, அந்த நாட்டு அரசனே அந்த முதியவரின் வீட்டிற்கு வந்தார், ஆனால் அதற்கு சற்று முன்புதான் அந்த அரசன் அண்டைநாட்டு அரசனுடன் போரிட்டு அதில் தோல்வியுற்றதால் தன்னுடைய நாட்டில் சிலபகுதிகளை இழந்திருந்தார்.
அம்முதியவர் தன்னுடைய நாட்டு அரசனு்ககு உணவு பரிமாறும் போது, இப்போது அந்த வெள்ளித்தட்டில் நம்முடைய நாட்டு அரசனுக்கு உணவினை பரிமாறலாமே என்று நினைத்தார், உடன், "! ஆனால் நம்முடைய நாட்டு அரசன் அருகிலுள்ள நாட்டு அரசனுடன் போரிட்டு அந்த போரில் தோல்வியுற்ற நம்முடைய நாட்டில் சில பகுதிகளை பறிகொடுத்துவிட்டார் போரில் வெற்றிபெறுகின்ற அரசன் மட்டுமே அந்த வெள்ளித்தட்டில் சாப்பிட வேண்டும். எனவே அதை வெளியே எடுக்கக்கூடாது"என தன்னுடைய எண்ணத்தினை உடன் மாற்றிக்கொண்டார்
இதனால் அவரது வெள்ளி தட்டுமட்டும் இதுவரையில் பயன்படுத்தப் படாமலேயே இருந்துவந்தது. ஒரு நாள் அம்முதியவரும் இறந்து போனார்.
அவர் இறந்த பிறகு, அவரது மகன் வெள்ளித்தட்டினை பாதுகாப்பாக வைத்து பூட்டி வைத்திருந்த அந்த பெட்டியை பெட்டியைத் திறந்து பார்த்தான் அதிக நாள் பயன்படுத்தாமல் இருந்ததால் அந்த வெள்ளித்தட்டு ஒரே கருப்பாகமங்கி பார்க்கவே சகிக்காமல் இருந்தது.
அதனால் அந்த வெள்ளித்தட்டினை தன் மனைவியிடம் காட்டி, "இதை என்ன செய்யலாம் எதற்காக பயன்படுத்தலாம்?" என வினவியபோது
அவன் மனைவி கிண்ணத்தைப் பார்த்து, “எவ்வளவு அழுக்காக இருக்கின்றது.. அதனால், நம் வீட்டு நாய்க்கு உணவளிக்க பயன்படுத்தலாம்” என்றாள்.அன்று முதல் அந்த வெள்ளித்தட்டில் அவ்வீட்டின் செல்ல நாய் சாப்பிட ஆரம்பித்தது.
அம்முதியவர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு தகுதிவாய்ந்த நபருக்கு உணவு பரிமாற பூட்டிவைத்திருந்த வெள்ளித்தட்டுஅந்த நோக்கத்திற்காக ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை, இறுதியில் அதன் மதிப்பை இழந்து சாதாரண வழக்கமான பொருளாகிவிட்டது
ஞாயிறு, 16 ஏப்ரல், 2023
யார் பெரிய முட்டாள்?
முன்னொரு காலத்தில், ஒரு கிராமத்தில், ஒருவர் வாழ்ந்து வந்தார்.
தினமும் விடியற்காலையிலேயே எழுவது அவரது வாடிக்கையான செயலாகும்
அதனை தொடர்ந்து காலைக்கடன்களை முடித்தபிறகு அவர் தனது மளிகை பொருட்களின் விற்பணை செய்திடும் கடைக்குச் சென்று மதிய உணவு நேரம் வரை மட்டும் விற்பணைபணி செய்தபின் தனது கடையை மூடிடுவார். அதன்பிறகு மாலைமுதல் இரவு தூங்கபோகும் நேரம் வரையில் இயலாதவர்களுக்கும் ஏழைகளுக்கும் சேவை செய்து, தொண்டு செய்து வருவார்
அவரது இத்தகைய நடத்தையால் மக்கள் ஆச்சரியமடைந்தனர் அவரை பைத்தியக்காரன் என்றும் நினைத்தார்கள்.
அவர் நாள்முழுவதும் தனது மளிகை பொருட்களின் கடையை திறந்து வைத்திருந்தால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் அதனைவிடுத்த காலையில் மட்டுமே திறந்து மாலையில் மூடிவிடுகின்ற ஒரு முட்டாள் என்று மக்கள் அவரை விமர்சிப்பார்கள். . அதுமட்டுமல்லாமல், அவர் அவ்வாறு சம்பாதிக்கின்ற பணம் முழுவதையும் இயலாதவர்களுக்கும் ஏழைகளுக்கும் தொண்டு செய்வதில் செலவிட்டிடுவார்
அதே கிராமத்தில் ஒரு பணக்காரர் இருந்தார்.
ஒரு நாள், பணக்காரர் மளிகைகடைக்காரரைச் சந்தித்து, அவரிடம் ஒரு தொப்பியைக் கொடுத்தார், "இந்த தொப்பி மிகப்பெரிய முட்டாளுக்கானது. எனவே, உங்களை விட பெரிய முட்டாளை என்னால் கண்டுபிடிக்க முடியாததால், இந்த தொப்பியை உங்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். இருப்பினும் நீங்கள் . உங்களை விட பெரிய முட்டாள் யாரையாவது பார்த்தால், நீங்கள் இந்த தொப்பியை அவ்வாறான முட்டாளுக்கு கொடுக்கலாம்." எனக்கூறினார்
மளிகைகடைக்காரர் பதில் எதுவும் பேசாமல் பணக்காரர் தன்னிடம் கொடுத்த அந்த தொப்பியை வாங்கி வைத்துக் கொண்டார்.
சில வருடங்களுக்குப் பிறகு, பணக்காரர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகஇருப்பதை கேள்விப்பட்டார். எனவே அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
பணக்காரர் தன்னிடம் நலம் விசாரிக்க வந்த மளிகைகடைக்காரரிடம், "தம்பி, என் முடிவு நெருங்கிவிட்டது, நான் இந்த உலகத்தை விட்டுகிளம்புகிறேன்." எனக்கூறினார்
உடன் மளிகைகடைகாரர், "ஐயா நீங்கள் பயனம் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்வதற்காக யாராவது இருக்கின்றார்களா அதனோடு உங்களுடைய பயனத்தின போது உங்களுடைய மனைவி, மகன், பணம், கார், பங்களா போன்றவை.. உங்களுடன் கொண்டு போகமுடியுமா?" என்று கேட்டார்.
அதற்கு பணக்காரர், "தம்பி . என்னுடைய இறுதி பயனத்தின் போது யார் வருவார்கள்? என்னுடன் யாரும் வரப் போவதில்லை. நான் தனியாகத்தான் போக வேண்டும். என்னுடைய குடும்பம், செல்வம், அரண்மனை... எல்லாமே இங்கேயே இருக்கும்.. யாரும் துனையாக இருக்கப் போவதில்லை. என்னைத்த் தவிர." எனக்கூறினார்
இந்த சொற்களை கேட்ட மளிகை கடைக்கார் அங்கிருந்த எழுந்து தன் வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் கழித்து திரும்பினார்.
இதையெல்லாம் பார்த்து ஆச்சரியப்பட்ட பணக்காரர், "என்ன நடந்தது? எங்கு சென்று வருகின்றாய் தம்பி?" என பணக்காரர் வினவியபோது ஏற்கனவே பணக்காரர் தன்னிடம் கொடுத்த அந்த தொப்பியை பணக்காரரிடமே திருப்பி கொடுத்தவாறு, "ஐயா நீங்கள் கொடுத்த இந்த தொப்பியை எடுக்க சென்றேன், இந்தாருங்கள் நீங்களேவைத்துக்கொள்ளுங்கள் " என்றார் மளிகைகடைக்காரர். உடன் பணக்காரர் "இந்த தொப்பியை ஏன் என்னிடம் கொடுக்கிறாய்?"எனவினவியபோது
அதற்கு மளிகைகடைகாரர், "இந்த தொப்பியை நீங்கள் கொடுத்த போது, என்னை விட முட்டாள்தனமாக நான் கருதும் ஒருவருக்கு இதை கொடுக்க வேண்டும் என்று சொன்னீர்கள். இன்று நான் அந்த மனிதனைக் கண்டுபிடித்தேன்.
நீங்கள்தான் என்னை விட முட்டாள். ஏனெனில்
நீங்கள் இதுவரையில் சம்பாதித்த சொத்து, வீடு ஆகிய எதுவுமே உங்களுடன் கொண்டு போகமுடியாது என தெரிந்ததும், உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த பேராசையில் ஈடுபட்டு, உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியான பிறகும், மேலும் அதிக பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டி மேலும் மேலும் பணம் ஈட்டுவதிலேயே உங்கள் வாழ்நாள் முழுவதும் கழித்து விட்டீர்கள், ஆயினும் இதுவரையில் நீங்கள் ஏழைகளுக்கு சேவை எதுவும் செய்யவில்லை, அவரகளுக்கு தேவையான உதவி எதையும் செய்யவில்லை. . இப்போது புரிகிறதா யார் பெரிய முட்டாள் என்று". என நீண்ட விளக்கமளித்தார் மளிகைகடைகாரர்.
திங்கள், 10 ஏப்ரல், 2023
ஆடு எண் 3 காணவில்லை -
ஐந்தாம் வகுப்பில் பயிலும் இரண்டு குறும்புக்காரக் குழந்தைகள் அருகிலுள்ள பள்ளிக்கு ஒன்றாகப் சேர்ந்து நடந்து சென்று படித்துவந்தனர்.
அவ்வாறு அவ்விருவரும் பள்ளிசென்றுகொண்டிருந்தபோது ஒரு நாள், முதலாமவன் தன்னுடைய நன்பனிடம், "அண்ணா, எனக்கு ஒரு ஆலோசனை தோன்றுகின்றது.. அதன் படி செயல்பட்டால் நாமிருவரும் நாளைய வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டியதில்லை." எனக்கூறினான்
உடன் இரண்டாமவன் மிகவும் ஆர்வமாக, "நாமிருவரும் நாளைய வகுப்புகளில் கலந்து கொள்ள தேவையில்லாத அந்த ஆலோசனை எதுவென சொல்லுங்க..தம்பி ?" எனக்கேட்டான்
அதனைதொடர்ந்து முதலாமவன் பள்ளிக்கு அருகிலுள்ள காலியான நிலத்தினை நோக்கி, "அங்கே பார், மூன்று ஆடுகள் மேய்கின்றன.." என்றான்.
இரண்டாமவன், "அவைகள் வழக்கமாக புற்களையும் செடிகொடிகளையும் மேய்கின்றன அதனால் என்ன?" என வினவினான்
தொடர்ந்து முதலாமவன், “இன்று மாலை பள்ளி முடிந்தால் எல்லாரும் அவரவர்களின் வீடுகளுக்கு திரும்பி செல்வார்கள் ஆனால் நாமும் நம்முடைய வீடுகளுக்கு திரும்பி செல்வதற்கு முன் இந்த மூன்று ஆடுகளையும் பிடித்து பள்ளிவளாகத்தில் விட்டிடுவோம்.அப்புறம் பார் நாளை அனைவரும் காணாமல் போன ஆடுகளை தேடிக்கொண்டிருப்பார்கள் அதனால் நாம் நாளை பள்ளி திறக்கும்போது பள்ளிக்குள் வந்தாலும் வகுப்பறைகளுக்கு செல்லவேண்டியதில்லை " எனக்கூறினான்
அதற்கு இரண்டாமவன், "அதெப்படி இவ்வளவு பெரிய ஆடுகளை கண்டுபிடிப்பது ஒன்றும் கடினமான காரியம் இல்லையே.. மூன்று ஆடுகள்தான் உள்ளன,பள்ளி திறந்தவுடன் எளிதாக அம்மூன்றையும் சிறிது நேரத்தில் கண்டுபிடித்திடுவார்கள், பிறகு நாம் படிக்கநம்முடைய வகுப்புகளுக்குத் திரும்ப வேண்டியதுதான்.." என பதிலளித்தான்.
உடன் முதலாமவன் சிரித்துக்கொண்டே, "அவர்களால் அவ்வளவு சுலபமாக கண்டுபிடிக்க முடியாது, நான் என்ன செய்கின்றேன் பார்.." என்றான்.
அதன் பிறகு, அன்றைய வகுப்பு முடியும் வரை நண்பர்கள் இருவரும் காத்திருந்தனர். பள்ளியை விட்டு அனைவரும் சென்ற பிறகு,அவ்விருவரும் அந்த மூன்று ஆடுகளையும் பிடித்து பள்ளிக்குள் கொண்டு வந்தனர்.
ஆடுகளை பள்ளிவளாகத்திற்கு உள்ளே கொண்டு வந்த பிறகு, முதலாமவன், "இப்போது, இந்த ஆடுகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு எண்ணை எழுதப் போகின்றேன்" எனக்கூறியவாறு அவ்வாடுகளுக்கு எண்களை எழுதத் தொடங்கினான்.
முதலாவது ஆட்டிற்கு - எண் 1 எனவும்
இரண்டாவது ஆட்டிற்கு - எண் 2 எனவும்
மூன்றாவது ஆட்டிற்கு - எண் 4 எனவும் எண்களை எழுதினான்
உடன் இரண்டாமவன் "என்ன இது? உனக்கு கணக்கு தெரியாதா ஏன் மூன்றாவது ஆட்டிற்கு 4 என எழுதினாய்?", என ஆச்சரியத்துடன் கேட்டான்.
அதனை தொடர்ந்து முதலாமவன்"இது தான் என்னுடய ஆலோசனை.. நாளைக்குப் பார்.. எல்லாரும் ஒரு நாள் முழுக்க மூன்றாம் எண்ணுள்ள ஆடு மட்டும் எங்கே கானோம் என அந்த ஆட்டைமட்டும் தேடித் தேடிக் கொண்டே இருப்பார்கள், ஆனால் அந்த ஆடு எண் 3 மட்டும் கிடைக்காது அதனால் நாமும் நம்முடைய வகுப்புகளுக்குள் செல்ல வேண்டியதில்லை.." என்று சிரித்துக் கொண்டே கூறினான் .
அடுத்த நாள், நண்பர்கள் இருவரும் பள்ளிக்கு வந்தனர். அப்போது பள்ளி முழுவதும் அவரவர்களின் வகுப்புகளுக்குள் செல்லாமல் அங்கும் இங்கும் திரிந்து கொண்டும் விவாதம் செய்து கொண்டுமிருந்தனர் அதனோடு. எல்லோரும் காணாமல் போன ஆடு எண் மூன்றை தேட ஆரம்பித் திருந்தார்கள், அதாவது அந்த பள்ளி வளாகத்திற்குள்ளே வந்த நான்கு ஆடுகளுள் மூன்று ஆடுகளைமட்டும் கண்டுபிடிக்க முடிந்தது.
ஆனால், ஆடு எண் 3-ஐக் கண்டுபிடிக்க முடியாததால், அந்தப் பள்ளியின் மாணவர்களும் ஆசிரியர்களும் ஆடு எண் 3-ஐத் தேடிக்கொண்டேயிருந்தனர்.
அந்த ஆடு எண் 3ஐக் கண்டுபிடிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டாலும் அந்த ஆடு எண் 3 ஐ மட்டும் அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை....! அதனால் அந்த ஆடு எண் 3 ஆனது நம்முடைய பள்ளி வளாகத்திற்குள் காணாமல் போய்விட்டதே என எல்லாரும் வருத்தப்பட்டார்கள் ஆனால் அந்த குறும்புக்கார சிறுவர்கள் இருவரும் அன்றை வகுப்புகளுக்கு செல்லாமல் இதைபோன்ற எப்போதும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்றவாறு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர் ஒரு ஆட்டைக் கண்ணுக்குத் தெரியாமல் தங்கள் புத்திசாலித்தனத்தால் காணாமல்ஆக்கிவிட்டார்கள்.
இந்தக் கதையைப் படித்த பிறகு நமக்கு அது முட்டாள்தனமாகத் தோன்றலாம் ஆனால் அதில் மறைந்திருக்கும் செய்தியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எப்பொழுதும் நாம்எதைபற்றியாவது கவலைப்படுவது அவசியமா?
நம் வாழ்வில் நமக்கு கிடைத்தவை நம் வாழ்க்கையை முழுமையாக்க போதுமானதாக இருந்தாலும்.
சில நேரங்களில் நாமனைவரும் உண்மையில் சாத்தியம் இல்லாத காணாமல் போன அந்த ஆடு எண் 3 போன்று.. சில விஷயங்களைத் தேடிக் கொண்டே இருப்போம். அதனால் இல்லாததை மறந்து இருப்பதை கொண்டு மகிழ்வாய் வாழ்வோம்
ஞாயிறு, 2 ஏப்ரல், 2023
இரண்டு தண்ணீர் தாகமுள்ள பயணிகளும் கிணறும்
முன்னொரு காலத்தில் ஒருகிராமத்தில் ஒருகுருவும் ஒரு சீடனும் வாழ்ந்துவந்தனர்.சிலநாட்கள் கழித்து, அந்த குருவிடம் இன்னொரு சீடனும் சேர்ந்தான் புதியதாக சேர்ந்த இரண்டாது சீடன் முதல் சீடனை விட குறைந்த காலத்திலேயே அதிகம் கற்றுக்கொண்டான். அதனால் முதல் சீடண் அதைக் கவனித்து தான் குருவிடமிருந்து புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்தான்
அதனால் ஒரு நாள் முதல் சீடன் தன் குருவிடம் சென்று, "இரண்டாவது சீடன் வருவதற்கு முன்பிருந்தே உங்களிடம் கலைகளை கற்று வருகிறேன், ஆனால் நீங்கள் என்னை புறக்கணித்து இரண்டாவது சீடனுக்கு மட்டும என்னைவிட கூடுதலாக அனைத்தையும அதிகம் கற்றுக் கொடுக்கின்றீர்கள். ஏன்? அவ்வாறு செய்கின்றீர்கள்" எனவினவினான
அந்த குரு சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, "முதலில் நான் ஒரு கதையைகூறுகின்றேன் அதைக் கேள். அதன்பிறகு நீயே முடிவுசெய்திடுவாய்." எனமுதல் சீடனிடம் கூறினார்.
முதல் சீடனும் தன்னுடைய குருவானவர் கூறப்போகும் கதையே கேட்க தயாகராக இருந்தான். குரு கதை சொல்லத் தொடங்கினார், "ஒருமுறை ஒரு பயணி பெருவழியில் வெகுதூரத்திலிருந்த நகரத்தினை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அந்த பயனிக்கு தண்ணிர் தாகம் எடுத்தது, அவரிடம் கைவசம் தற்போது போன்று தண்ணீர் குப்பிஇல்லை, அதனால் அந்த பெருவழிக்கு அருகில் தண்ணீர் கிடைக்கும என சுற்றிலும் பார்த்துகொண்டே தன்னுடைய பயனத்தை தொடர்ந்தார், அந்த பெருவழியில் சிறிது தூரம் நடந்தபோது, பாதைக்கு அருகில் ஒரு கிணற்றைக் கண்டார். அந்த கிணற்றில் தண்ணீர் இருப்பதைக் கண்டார் ஆனால் கிணற்றிலிருந்து நீரை மேலே கொண்டுவந்த தன்னுடைய தாகத்தை தனிப்பதற்கான கருவிகளான வாளியும் கயிறு இல்லை, அதனால், அவர் தண்ணீர் எதுவும் குடிக்காமல் அவ்விடத்தினை விட்டு அகன்று பெருவழியில் தன்னுடைய பயனத்தை தொடர்ந்தார்.
சிறிது நேரத்தில் அந்த கிணற்றுக்கு அதே பெருவழியில் பயனித்த வேறு ஒரு பயணி வந்தார். அதே கிணற்றைப் பார்த்தார், தண்ணீர் இருப்பதைக் கண்டார். ஆயினும் முன்புபோலவேகிணற்றிலிருந்து நீரை மேலே கொண்டுவந்த தன்னுடைய தாகத்தை தனிப்பதற்கான கருவிகளான வாளியும் கயிறு இல்லாததை கண்டார் ஆனால் இரண்டாவது பயனியானவர் அந்த கிணற்றிற்க அருகில் மேலும் தீவிரமாக சுற்றிப் பார்க்க ஆரம்பித்தார், உடன் ஒரு வாளியை கண்டார். அதன் பின்னர் அவர் மேலும் தீவிரமாக கயிறுஇருக்கின்றதாவெனத் தேடத் தொடங்கினார், எந்த கயிற்றையும் காணவில்லை, ஆனால் அந்த கிணற்றிற்கு அருகில் உயரமாக புற்கள் வளர்ந்திருப்பதை கண்டார் அதனால் கிணற்றிற்கு அருகில் உயரமாக வளர்ந்திருந்த புல்லை கைகளால் பிடுங்கி அவைகளை உருட்டி கயிற்றை உருவாக்கத் தொடங்கினார். சிறிது நேரத்தில் நீண்ட கயிறு தயாராகிவிட்டது அவர் அந்த நீண்ட கயிற்றினை அருகிலிருந்த வாளியுடன் இணைத்து அந்தக் கயிற்றின் உதவியால், கிணற்றிலிருந்து தண்ணீரை மேலே கொண்டுவந்து தன்னுடைய தாகத்தைத் தணித்துக்கொண்டு அதே பெருவழியில் தன்னுடைய பயனத்தினை தொடர்ந்தார்." என குருவானவர் தன்னுடைய சீடனிடம் கதையை கூறிமுடித்தபின்னர், "எந்தப் பயணிக்கு அதிக தாகம் இருந்தது என்று கூறுங்கள்?" எனமுதல் சீடனிடம் வினவினார் உடனடியாக முதல் சீடன் , "இரண்டாவது பயனி." என பதிலளித்தார்
குரு சிரித்துக்கொண்டே, "ஆம்.இரண்டாவது பயணி தாகத்தைத் தணிக்க கடினமாக உழைத்ததால் அவருக்கு தாகம் அதிகமாக இருந்தது என க்கூறலாம்."
அதேபோன்று இரண்டாவது சீடனுக்குதான அறிவு தாகம் அதிகமாகும், அதை நிறைவேற்ற அவன் கடினமாக உழைக்கிறான். அதனால் அவன் விரைவில் அனைத்து கலைகளையும் கற்றுக்கொள்கின்றான் என விளக்கமும் அளித்தார் குரு
முதல் சீடன், அன்று முதல் அவன் கடினமாக உழைத்து அதிக கலைகளை கற்றுக்கொள்ள ஆரம்பித்தான்.
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...