வியாழன், 28 பிப்ரவரி, 2013

நல்ல மன அமைதி பெறுவதற்காக செய்யக்கூடாத செயல்கள்


பொதுவாக நம் அனைவருக்கும் நல்ல மன அமைதி வேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புகின்றோம். ஆனால் நாம் கடுமையாக முயற்சி செய்யாமல் நம்மால் அதனை அடையமுடியாது அதனால் இந்த மன அமைதியை நாம் பெறவேண்டும் என நம்முடைய பையில் உள்ள பணத்தை செலவழித்து அல்லது வேறுவகையில் உந்துதல் கொடுத்து கொள்முதல் செய்ய முடியாது

இயல்புநிலையில் மனஅமைதியான நிலையை அடைவதற்காக நம்முடைய மனதை சமநிலைப்படுத்தி இதனை சீரான மற்றும் சமநிலையில் இருக்குமாறு செய்ய வேண்டும். இவ்வாறான நம்முடைய மனதை சமநிலை படுத்துவதற்காக நாம் தினமும் பின்பற்றி செய்ய வேண்டிய செயல்கள் எவையெவை செய்யக்கூடாதவை எவையெவை என உள்ளன பின்வரும் மூன்றும் நாம் செய்யக்கூடாதவை ஆகும்

1.விமர்சித்தல் இது நம்மிடம் இருக்கும் மிகவும் இயற்கையான திறமைகளில் ஒன்றாகும். பொதுவாக நம்முடைய மனமானது தவறு அல்லது பிழை எங்கே ஏற்படுகின்றது என கண்டுபிடிப்பதில் அதிக ஆர்வமாக உள்ளது பல்வேறு சமயங்களில் எந்தவொரு செயலிலும் சிக்கல் எதுவும் இல்லாதபோதும் சிக்கல் இருப்பதாக அடையாளம் காணும் விசித்திரமான சாமர்த்தியம் நமக்கு உண்டு அதேநேரத்தில் நம்முடைய நாவானது மற்றவர்களிடம் அந்த பிரச்சினைகளை பற்றிய செய்தியை புகுத்திட முடியும் என்ற நமது மேன்மையை தெரியப்படுத்த ஆர்வமாக உள்ளது நாம் மற்றவர்களை பற்றிய இவ்வாறாக விமர்சித்தல் செய்யும்போது நம்மையறியாமலேயே நமக்கெதிரான கருத்தை உருவாக்கிடவும் நம்முடைய எதிரியையும் எளிதாக உருவாக்குகின்றோம் இதனால் தேவையற்ற விதண்டாவாதமும் அடுத்தவர்களின் தவறை நிருபிப்பதற்காக முயற்சியையும் செய்கின்றோம் இதன்மூலம் நம்முடைய மனமானது சமநிலை அடைவதற்கான வழியை தடுத்து நிறுத்தும் மேகம்போன்ற போர்வையை போர்த்திவிடுகின்றது

2.புகார்அளித்தல் இது அதற்கடுத்த மிக அதிக பாதிப்பு ஏற்படுத்திடும் நாம் செய்யக்கூடாத செயலாகும் பெரும்பாலும் மேல்மட்ட நிலையிலி ருப்பவர்களிடம் விமர்சித்தலும் மற்றவர்களை கண்டனம் தெரிவித்தலும் இந்த புகார் அளித்தல் எனும் செயலாகும் பொதுவாக இயல்புநிலையில் ஆக்கப்பூர்வ மானதும் தீர்வு செய்யக்கூடியதும் திருத்திடும் உள்நோக்கத்துடனும் இது வருகின்றது ஆனால் இதனை தொடர்ந்து நாம் செய்து வந்தால் அல்லது நாம் அதனை விடுவிக்கவில்லை என்றால் நாம் போலியாக ஒரு வெற்றிக்கோட்டை அடைந்ததாக நமக்கு மனதிருப்தியை அடையச்செய்து ஒரு பெரிய எதிர்மறை நீர்ச்சுழியை நமக்கு உருவாக்குகிறது. நம்மனமானது ஆனந்தத்தை அனுபவிக்கும் நிலையில் நம்மை தடுக்கிறது நம் மனதில் சினமூட்டுதல் செய்கின்றது நாம் கஷ்டப்படும் நிலைக்கு நம்முடைய உணர்வுகளை எடுத்து செல்கின்றது .

3.ஒப்பிடுதல் பொதுவாக இந்த பிழையான செயலிலிருந்து நம்மால் தப்பிக்க முடியாத நிலை உள்ளது காற்றில் பரவும்நச்சுநிரல் போன்று இது உள்ளது எப்போதும் நாம் நம்முடைய செயலுடன் நம்மை சுற்றியுள்ள மற்றவர்களின் பணவசதி, நண்பர்கள் ,பணி, அவர்களின் செயலை ஒப்பிட்டு கொண்டே உள்ளது மற்றவர்களின் தாழ்நிலையும் நம்முடைய நல்ல நிலையும் ஒப்பிடும் அந்தவொரு சிறுதுளி நேரத்திற்கு மட்டும் நம்முடைய மனதிற்கு மகிழ்ச்சியை இந்த செயல் அளிக்கின்றது ஆனால் நம்மைவிட நல்ல நிலையில் இருப்பவர்களை பார்த்து இதே போன்று ஒப்பிடும்போது நமக்கு தூக்கமே இல்லாத நிலையை வரவழைக்கின்றது இவ்வாறான ஒப்பீடு மட்டுமே நம்முடைய வாழ்வின் முடிவன்று .நம்மை மீட்க முடியாத துன்பத்தி ற்கு கொண்டு செல்லும் இது நம்முடைய மனதிற்கு மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கவல்லதொரு வழிதவிர வேறொன்றுமில்லை

இந்த மூன்று செயல்களை கடும்முயற்சி செய்து தவிர்த்து நம்மை அழிவு பாதையிலிருந்து காத்து கொள்க இதனை தவிர்ப்பது நல்ல யோசனை என நமக்கு அவ்வப்போது நீனைவூட்டுதல் அளித்திடும் சிறந்த நன்பர்களை கைக்கொள்க அதன்பின் காலப்போக்கில் நாம் முழுமையாக அவற்றை தவிர்த்திடும்போது நம்முடைய மனதில் அமைதியானது நாம் மிகவும் விரும்பப்பட்ட நிலையில் அமைதியை நோக்கி நம்முடைய மனமானது செல்லும் என்பது திண்ணம்

வியாழன், 21 பிப்ரவரி, 2013

நாம் ஒரு சிறந்த வியாபார செய்தி தொடர்பாளராக வளர்வதற்கான உதவிகுறிப்புகள்


வியாபார உலகில் செய்தி தொடர்பு என்பது மிகமுக்கியமான கலையாகும் அதாவது பணிபுரியும் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் அவர்கள் நன்கு புரிந்துகொள்ளும் வண்ணம் நம்முடைய தொழிலை பற்றிய செய்தியை விளக்கி கூறுவதே ஒரு சிறந்த வியாபார செய்தி தொடர்பு கலையாகும் அதனால் நாம் ஒரு சிறந்த வியாபார செய்தி தொடர்பாளராக வளர்வதற்காக பின்வரும் உதவிகுறிப்புகளை பின்பற்றிடுக

1 நம்மில் பெரும்பாலானோர் மற்றவர்கள் கூறவிரும்பும் செய்தியை நன்றாக கவனித்து கொண்டுள்ளதாக தவறாக முடிவுசெய்து கொண்டு நம்முன் இருப்பவர் என்ன கூறவருகின்றார் என காதுகொடுத்து கேட்கதவறிவிடுகின்றோம் அதனால் அடுத்து இன்ன செய்திதான் அவர் கூறப்போகினறார் என தவறான யூகத்தில் பேச்சாளர் அவருடைய உரையை முடிப்பதற்குமுன்பு நாம் தவறாக கணித்ததை முந்திரி கொட்டை போன்று இடைமறித்து பேசுவதால் எதிரில் பேசுபவர் என்ன செய்தியை கூறவந்தார் என நாம் சரியாக தெரிந்துகொள்ளாமல் கவனத்தை சிதறவிட்டுவிடுகின்றோம் எனவே மற்றவர்கள் கூறும் செய்தியை முதலில் கவணமாகவும் முழுமையாகவும் கேட்கவும் அதன்பின் நம்முடைய யூகத்தை முடிவுசெய்யலாம்

2 நம் எதிரில் உள்ள பேசுபவர் கூறும் செய்தியுடன் அவருடைய உடலசைவுகளையும் கூர்ந்து கவணிக்கவும் அதன்மூலம் அவர் என்னசெய்தியை கூறவருகின்றார் என மிகச்சரியாக அறிந்துகொள்ளமுடியும்

3 செய்திதொடர்பானது தொலைபேசி ,கடிதம், மின்னஞ்சல், கைபேசியில் குறுஞ்செய்தி , சமூக ஊடகங்கள் என பல்வேறுவகைகளில் நம்முடைய செய்தியை மற்றவர்களுக்கு அனுப்பி வைக்கலாம் ஆனால் பெறுபவர் எந்தவகையில் இந்த செய்தியை பெறவிரும்புகின்றார் என தெரிந்து கொண்டபின் அந்த வகையில் நாம் கூறவிரும்பும் செய்தியை பெறுபவருக்கு அனுப்பி வைத்திடுக

4 நேரடி தகவல் தொடர்பு எனில் கேட்பவர் அல்லது பெறுபவரின் முகபாவணையை வைத்து அதற்கேற்ப உடனடியாக நம்முடைய தகவல்தொடர்பின் தொனியை மாற்றிகொள்ளமுடியும் ஆனால் மின்னஞ்சல் மூலமாகவும் சமூக ஊடகங்களின் மூலமாகவும் தொடர்புகொள்ளும்போது நம்முடைய தகவல் தொடர்பின் தொனியை தீர்மானிப்பது சிறிது கடினமாக செயலாக இருக்கும் அதனால் நாம் கூறும் தகவலை கேட்பவர் அல்லது பெறுபவர் எவ்வாறு விரும்புகின்றார் என சரியாக கணித்து அதற்கேற்ப நம்முடைய செய்தி தொடர்பின் தொனியை தீர்மானித்திடுக

5 நாம் கூறும் செய்தியும் சகஊழியர்களின் பணியோடு தொடர்புடையதாகவும் அவர்கலுடைய பணியை சுலபமானதாக செய்யுமாறும் இருக்குமாறு பார்த்து கொள்க. அதாவது அவர்கள் செய்யும் பணிக்கும் நாம கூறும் தகவலுக்கும் சம்பந்தமில்லாதவாறும் அவர்களுடைய பணியை செய்வதற்காக கடிணமாக இருக்குமாறும் இருந்திடக்கூடாது அதனால் செய்தியை பெறுபவர் நாம் அவ்விடத்தை விட்டு அகன்றபின் நம்முதுகிற்கு பின்னால் நம்மைபற்றி திட்டுமாறு இருக்கவேண்டாம் மின்னஞ்சல்கள், கூட்டங்கள், தொலைபேசி அழைப்புகள் போன்றவை மிகஎளிதாகவும் திறன்மிக்கதாகவும் சகஊழியர்களுடைய பணியோடு தொடர்புடையதாகவும் பணியை சுலபமானதாக செய்யுமாறும் இருக்குமாறு பார்த்து கொள்க.

6 நாம் என்னதான் முழுவதுமாக சரிபார்த்தாலும் நமக்கும் தெரியாமல் நாம் வெளியுடம் செய்தியில் ஏதனும் பிழைகள் எழவாய்ப்புகள் உள்ளன அதனால் நம்முடைய செய்தியை வெளியிடுமுன்பு வேறுயாரையாவது மேலும் ஒருமுறை நம்முடைய செய்தியை சரிபார்த்து பிழையை திருத்திய பின் எழுத்துபிழையும் இலக்கணபிழையும் இல்லாமல் பார்த்து வெளியிடுக

7 மற்றவர்கள் ஆற்றும் பணியை எப்போதும் குறைகூறிகொண்டே இருப்பதைவிட அந்த பணியை எவ்வாறு செய்தால் இன்னும் மேம்பட்டதாக இருக்கும் என்ற உறுதிப்படுத்தம் ஆக்கபூர்வமான ஆலோசனையை கூறுவதாக இருக்கவேண்டும்

8 சகஊழியர் நாம் கூறும் செய்தியை சரியாக புரிந்துகொண்டாரா எனத்தெரிந்துகொள்ள அதே செய்தியை அவர் நம்மிடம் மீண்டும் கூறுமாறு செய்து அதனை நாம் கேள்வியுறும்போது நாம் என்ன புரிந்துகொள்ள விழைந்தோமோ அந்த செய்தியை அவர் தெரிநதுகொண்டார் என உறுதி படுத்தி கொள்க

9 நம்மைபற்றிய நல்ல நம்பிக்கையை சகஊழியர்களுக்கு ஏற்படுவதற்காக முதலில் சகஊழியர்களின் குடும்பத்தாருடைய சுகதுக்கங்களை பற்றிய விவரங்களை மிக அக்கறையுடன் விசாரித்து அறிந்து கொள்ளும்போது மட்டுமே நம்மைபற்றிய நல்ல நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டு பணிபுரியும் தொழிலை பற்றிய செய்தியை நாம் கூறும்போது அதனை கேட்டு அதனை பின்பற்றிடுவார்

10 எப்போதும் தகவல்தொடர்பை நம்முடைய அனுபவத்தை கொண்டு மேம்படுத்திகொண்டே இருந்தால் மட்டுமே மிகச்சிறந்த தகவல் தொடர்பு திறனானது வளர்ந்து கொணடே இருக்கும் என்பது திண்ணம்

புதன், 20 பிப்ரவரி, 2013

நம்மை பற்றிய நல்ல நம்பிக்கையை மற்றவர்களிடம் எவ்வாறு வளர்த்து கொள்வது?


1.நம்மை சார்ந்திருப்பவர்களின் நீண்டகால, குறுகியகால எதிர் பார்ப்புகளை பூர்த்தி செய்து அவர்களின் தேவையை நிறைவு செய்திடும் பொறுப்பு எப்போதும் நம்மிடம் இருக்குமாறு பார்த்து கொள்க

2. இயற்கையானது நமக்கு இரண்டு கண்கள் உலக நிகழ்வுகளை காணவும் இரண்டு காதுகள் செய்துகளை கேட்கவும் ஒரே ஒரு வாய் சிறிதளவு மட்டும் அதாவது கொஞ்சமாக பேசவும் அனுமதித்துள்ளது அதனை மதித்து அதிகஅளவிற்கு செய்திகளை காதுகளால் கேட்டும் அதிக காட்சிகளை கண்களால் கண்டும் அதன் மூலம் சுற்றுபுறத்தை நம்மிடம் கவணித்தல் செயல் அதிகமாக இருக்குமாறு பார்த்து கொள்க ஆனால் பேசுவதை மட்டும் கொஞ்சமாக வைத்து கொள்க

3.எப்போது உண்மையாக இருக்க பழகு உண்மையாக செயல்படு பொதுவாக மற்றவர்களிடம் நம்மை பற்றிய நல்ல அபிப்பிராயத்தை உருவாக்குவதற்கு மிக நீண்ட நாட்களாகும் ஆனால் நம்மை பற்றிய தவறான எண்ணம் ஒருசிலநொடிகளில் கண்ணாடி பாத்திரம் உடைவதை போன்று உருவாகிவிடும் என்ற செய்தியை மனதில் கொள்க

4.வாக்குறுதியளித்து ஏற்றுகொண்ட செயலை அவ்வாறே முடிப்பதற்காக கூடுதலாக என்ன செலவானாலும் அதனை நிறைவேற்றி முடித்திட முயற்சி செய்க

5.சொல்வதை போன்று செயல்படுக அதாவது நம்முடைய சொல்லும் செயலும் ஒன்று போல் இருந்திடுமாறு பார்த்து கொள்க

6. தவறு ஏதேனு நம்மால் நிகழ்ந்துவிட்டால் அதனை மறைத்திடாமல் உடன் அத்தவற்றிற்கான வருத்தத்தை உரியவருக்கு தெரியபடுத்துக.

7. அவ்வாறே நமக்கு தேவையானபோது உதவிசெய்தவரகளுக்கு உடனுக்குடன் நன்றி தெரிவித்திடுக

புதன், 13 பிப்ரவரி, 2013

எந்தவொரு செயலையும் குழுவாக செய்யும் குழுமனப்பான்மை நமக்கு வரவேண்டும்


ஒரு ஓட்டபந்தய மைதானத்தில் எட்டு சிறுவர்கள் ஓடுவதற்கு தயாராக இருந்தனர்

நடுவரும் * Ready! * Steady! * Bang!!!என க்கூறி பொம்மை துப்பாக்கியால் சுட்டவுடன் அந்த எட்டு சிறார்களும் தங்களுக்கு ஒதுக்கபட்ட ஓடுதளதடத்தில் சிட்டாக பறந்தனர்

சிறிதுதூரம் ஓடியவுடன் அவர்களுள் ஒருசிறுமி ஓடுபாதையில் இருந்த ஏதோவொரு பொருளால் கால்தடுக்கி கீழேவிழந்து அய்யோ அம்மா என வலியால் துடித்து அழ ஆரம்பித்தாள்

மிகுதி எழுவரும் இந்த அழுகுரலை கேட்டவுடன் ஓட்டபந்தய போட்டியில் ஓடுவதை அப்படியே நிறுத்தி மிகவிரைவாக அனைவரும் திரும்பி ஒடிவந்து கூட்டாக கீழேவிழுந்த சிறுமியை அலுங்காமல் குலங்காமல் சேர்ந்து தூக்கி கொண்டு பழையபடி தொடர்ந்து ஓடி தாம் தூக்கிவந்த சிறுமியை வெற்றிக்கோட்டில் கைநீட்டி வைத்துவிட்டு அனைவரும் பின்தங்கி நின்றனர்

உடன் நடுவரும் இந்த செயலை கண்ணுற்று தயங்கி மயங்கி பின்னர் தெளிவுபெற்று அந்த கீழேவிழுந்த சிறுமியே முதலில் வந்ததாக அறிவித்தார்

பார்வையாளர்கள் இதனை கண்ணுற்றதும் அதிக ஆச்சியரியம் அடைந்தனர்

இவர்கள் நமக்கு உணர்த்திய கருத்து யாது என ஆய்ந்தால் எந்தவொரு செயலையும் குழுவாக செய்யும் குழுமனப்பான்மை நமக்கு வரவேண்டும் மனிதாபிமானம் அனைவருக்கும் இருக்கவேண்டும் எந்தவொருவாய்ப்பும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதேயாகும்

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

ஊழியர்களின் உற்பத்திதிறனை உயர்த்திடும் வழிமுறைகள்


மேலாளர் ஒருவர் பின்வரும் வழிவகைகளை பின்பற்றி தம்கீழ் பணிபுரியும் ஊழியர்களின் உற்பத்திதிறனை உயர்த்தமுடியும்

1 ஊழியர்கள் அனைவரையும் எப்போதும் எதிர்மறையாக சந்தேக கண்ணோடு பார்ப்பது அதாவது எந்தசெயலையும் அவர்கள் தவறாவே முடிப்பார்கள் அவரவர்களுக்கு ஒதுக்கபட்ட பணியை சரியாக செய்து முடிக்கமாட்டார்கள் என தவறான கண்ணோட்டத்துடன் ஊழியர்களை அனுகுவதால் மிகச்சரியாக தம்முடைய கடமையை செய்யும் பணியாளர்களும் மணமுடைந்து தம்முடைய பணியை செய்யாமல் விட்டுவிடும் நிலை ஏற்படும் அதனை தவிர்க்க தம்கீழ் பணிபுரியம் பணியாளர்கள் அனைவரும் மிகச்சரியாக பணிபுரிவார்கள் என நேர்மறையாக நோக்கி அவர்களின் பணித்திறனை அங்கீகரிப்பது

2 தம்கீழ்பணிபுரியும் பணியாளர்களை நேர்மறையாக அனுகுவதுமட்டுமல்லாமல் அவர்களின் பணியை பணித்திறனை நன்றாக முடித்திருக்கின்றீர்கள் இன்னும் சிறிது முயற்சிசெய்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என தட்டிகொடுத்து அவர்கள் செய்த பணியை மேலும் சிறப்பாக செய்வதற்காக ஊக்கபடுத்துவது

3 தம்கீழ்பணிபுரியம் பணியாளர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கபட்ட பணியை அதுதொடர்பான விவரங்களையும் அதனை செய்யும்போது ஏற்படும் தடங்கல்கள் அதனை வெற்றிகொண்ட வழிமுறை முந்தையோர் பெற்ற பணிஅனுபவங்கள் ஆகியவற்றை கவணித்து தத்தமது பணியை சிறப்பாக செய்யவேறுஎன்னவகையான முயற்சி தேவையென தானாகவே கவணித்து அறிந்துகொள்ளும் திறனை வளர்த்திடவேண்டும்

4 எந்தவொரு செயலிலும் பணியாளர்கள்அனைவரையும் பங்கேற்று செயல்படுமாறு ஒரு குழுமனப்பான்மையை உருவாக்கிடவேண்டும் அதாவது ஊர்மக்கள் அனைவரும் கூடி தேரின் வடத்தை பிடி்தது இழுத்தால் மட்டுமே தம்முடைய ஊரின் கோயிலினுடைய தேரை நகர்த்தி செல்ல முடியும் என்ற குழுமனப்பாண்மையை கொண்டுவரவேண்டும்

5 அதுமட்டுமல்லாது தம்கீழ்பணிபுரியும் பணியாளர்கள் அவரவர்களின் பணியை சிறப்பாக முடித்தவுடன் அதனை ஏற்று பாராட்டும் வகையிலும் ஊக்கபடுத்தும் வகையிலும் அவர்களுக்கு அவ்வப்போது தக்கபாராட்டுதல்களையும் தேவைபபட்டால் மிகைஊதியம், பரிசுபொருட்கள், ஊக்கத்தொகை போன்றவற்றை பணியாளர்களுக்கு வழங்க தயங்ககூடாது இதனால் மற்ற ஊழியர்களும் சிறப்பாக பணிபுரிவதற்கான ஊக்கமும் உத்வேகமும் ஏற்படும்

திங்கள், 11 பிப்ரவரி, 2013

மற்றவர்களின் செயலை நம்பாமல் நாமும் அந்த செயலை சரியாக செய்திடாமல் காலத்தையும் இதர வளங்களையும் வீணடித்து வருகின்றோம்


ஆமைகளின் குடும்பம் ஒன்று விடுமுறையின்போது பொழுது போக்காக இனிய சுற்றலா செல்ல விரும்பியது அவ்வாறான சுற்றலாவில் தம் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான சிற்றுண்டி ,உணவுவகைகள் ,தின்பண்டங்கள் ஆகியவைகளை தயார்செய்து பொட்டலங்களாக கட்டி கூடவே எடுத்து சென்றது

சுற்றலா தளத்திற்கு சென்றடைந்தபின் குடும்ப உறுப்பினர்களின் பசியாற உண்பதற்காக கையோடு எடுத்து சென்ற உணவு பொட்டலங்களை பிரிக்கலாம் என முனையும் போதுதான் உப்பு கையோடு எடுத்துவர மறந்து போனது தெரியவந்தது

அடடா உப்பில்லா பண்டம் குப்பையிலே எனும் பழமொழிக்கு ஏற்ப உப்பில்லாமல் தாம் எடுத்து சென்ற உணவுவகைகளை சாப்பிட முடியாது என்பதால் அக்குடும்ப உறுப்பினர்களில் யார் விரைவாக தங்களுடைய வீட்டிற்கு சென்று தாங்கள் அனைவரும் சாப்பிடுவதற்கான உப்பினை எடுத்துவருவது என நீண்டநெடிய கலந்துரையாடளுக்கு பின்னர் ஒரு இளவயது ஆமையை அனுப்புவது என இறுதியாக முடிவிற்கு வந்தன.

அவ்வாறே அவ்விளவயது ஆமையும் தான் திரும்பும்வரை அவ்வுணவு பொட்டலங்களை பிரிக்ககூடாது என்றும் அவ்விளவயது ஆமையானது தங்களுடைய வீட்டிற்கு சென்று உப்பினை எடுத்து திரும்பி வந்த பின்னரே உணவு பொட்டலங்களை பிரிக்க வேண்டும் என்றும் கூறிய நிபந்தனையை உறுபினர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட பின்னரே அவ்விளவயது ஆமை உப்பினை எடுத்துவருவதற்கு ஒத்துகொண்டது

பின்னர் உப்பினை எடுத்துவருவதற்கு தங்களுடைய வீட்டிற்கு அவ்விளவயது ஆமை சென்றது மிகநீண்டநேரம் ஆகியும் உப்பினை எடுத்துகொண்டு அந்த இளம் வயது ஆமை திரும்பிவரக்காணோம்

இதற்கு மேல் பொறுத்திருந்தால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பசியும் அடங்காது அதனால் உப்பில்லையென்றாலும் பரவாயில்லை பசிக்கு ருசி எதுவும் பார்க்கத்தேவையில்லை கையில் இருப்பதை உண்ணலாம் என முடிவுசெய்து உணவுபொட்டலங்களை பிரிக்க ஆரம்பித்தன

உடன் அருகில் புதர்மறைவில் பதுங்கியிருந்த அந்த இளம் வயது ஆமையானது திடீரென வெளியில் வந்து பார்த்தீர்களா நான் திரும்பி வந்து சேராமலேயே இதுபோன்று உணவுபொட்டலங்களை பிரிப்பீர்கள் என அப்போதே எனக்கு சந்தேகம் அதனால் நீங்கள் என்ன செய்யபோகின்றீர்கள் என அறிந்து கொள்வதற்காக உப்பினை எடுத்துவருவதற்கு வீட்டிற்கு செல்லாமேலேயே இந்த புதருக்குள் மறைந்திருந்து கண்கானித்து வந்தேன் என்னுடைய சந்தேகம் சரியாகத்தான் உள்ளது என அந்த இளம் வயது ஆமையானது அதிக கலாட்டா செய்து ஆர்ப்பாட்டம் செய்தது

ஆம் இவ்வாறே நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் செயலை நம்பாமல் நாமும் அந்த செயலை சரியாக செய்திடாமல் காலத்தையும் இதர வளங்களையும் வீணடித்து வருகின்றோம் முதலில் நாம் சரியாக செய்துமற்றவர்களும் அவ்வாறே செய்யவேண்டும் என எதிர்பார்ப்பதே மிக்சசரியான நடைமுறையாகும் என மேற்கண்ட சிறு கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...