ஞாயிறு, 31 மே, 2015

எவரையும் தற்போதைய நிலையைவைத்து எடைபோடகூடாது


ஒருஊரில் ஒருவன் தன்னுடைய அன்றாட செலவிற்கு போதுமானஅளவிற்கு மட்டுமான நிலையில் பொருள்ஈட்டும் பணியை செய்துவந்தான் இந்நிலையில் அவ்வூரில் இருந்த மிகபணக்கார குடும்பத்தின் பெண்ணை அவன் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தபோது அந்த மணப்பெண்ணின் குடும்பத்தினர் அப்பெண்ணின் ஒருநாளைய செலவிற்கு அவனுடைய வருடமுழுவதுமான வருமானம் போதுமானதாக இல்லை அதனால் அவனுக்கு பொருத்தமான வேறொரு மணப்பெண்ணை பார்த்துகொள்ளுமாறு அறிவுறுத்தினர்

அதன்பின் அவன் மிககடினமாக முயன்று படித்து சொந்தமாக நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்திடும் நிறுவனத்தினை ஆரம்பித்து அதில் பத்துநபர்களுக்கு பணிவழங்கி நல்லதொரு தணிக்கை நிறுவனமாக நடத்திவந்தான் இந்நிலையில் ஒருநாள் அவன்முதலில் திருமணம் செய்வதற்காக விரும்பிய பெண்ணை பெரிய வியாபார கடை ஒன்றில் கண்டான் உடன் அந்த பெண் "என்னை தெரிகின்றதா ! என்னுடைய கணவர் மாதம் ஒன்றிற்கு ஒருஇலட்சம் சம்பாதிக்கின்றார் நான் இப்போதுமிக மகிழ்வோடு இருக்கின்றேன் " என கூறினாள்

அப்போது அந்த பெண்ணின் கணவன் அங்கு வந்துசேர்ந்தான் "வணக்கம்! இவள்தான என்னுடைய மனைவி " என அறிமுகபடுத்திகொண்டு தன்னுடைய மனைவியிடம் "இவர்தான் நான் பணிசெய்திடும் தணிக்கை நிறுவனத்தின் முதலாளி அதிகஅளவு நிறுவனங்களின் தணிக்கை பணியை நான் பணிசெய்யும் நிறுவனம் விரைவாக முடித்துதருவதால் ஏராளமான அளவு வருமானம் நிறுவனத்திற்கு வந்துகொண்டிருக்கின்றது .ஆயினும் ,இவர் ஆரம்பத்தில் பெண்ஒருத்தியை திருமணம் செய்துகொள்ள கோரியபோது இவருடைய அன்றைய வருமானத்தை கணக்கிட்டு மறுத்துவிட்டாள் அதனால் இப்போதும் இவர் திருமணம் செய்துகொள்ளாமலேயே உள்ளார்" என கூறியதை தொடர்ந்து அவருடைய மனைவிக்கு மிகவெட்கமாகிவிட்டது ஒன்றும் பேசாமல் பிரிந்து சென்றுவிட்டனர்

பொதுவாக எவரையும் தற்போதைய நிலையைவைத்து எடைபோடகூடாது அவருடைய திறமையையும் இதரகாரணிகளையம் வைத்து மட்டுமே அளவிடவேண்டும் என அறிந்துகொள்க

நாம் நம்முடைய மனதில் என்ன எண்ணுகின்றோமோ அவ்வாறு அவ்வாறே நம்மைசுற்றியும் உள்ள காட்சிகளும் தோன்றியமையும்


மகிழ்ச்சியான மனிதன் ஒருவன் அவ்வூரில் இருந்த கண்ணாடியாலான பெரிய மாளிகை ஒன்றை அடைந்தான் அங்கு அவன் என்ன செய்தானோ அதேபோன்று கண்ணாடியில் தெரிந்த ஆயிரகணக்கான உருவமும் செய்தது ஆஹா என்னவொரு அருமையான இடம் இதனை இவ்வளவு நாட்களாக பார்க்கமால் விட்டுவிட்டோமே இனிமேல் தினமும் இந்த மளிகையை வந்தபார்த்தபிறகுதான் நம்முடைய மற்ற பணிகளை செய்திடவேண்டும் என உறுதிமொழிஎடுத்து கொண்டு தன்னுடைய வீட்டிற்கு திரும்பினான்

அதே கண்ணாடியாலான பெரிய மாளிகைக்கு அவ்வூரில் வசித்து வந்தவாழ்வில் அடிபட்டு துயருற்ற மனிதன் வந்துசேர்ந்தான் அங்கு அவனைபோன்று ஆயிரகணக்கான உருவங்கள் துயரத்துடன் இருப்பதை கண்ணுற்றதும் அவனுடைய மனம் மேலும் வருத்தமுற்றது உடன் அந்த மாளிகையை விட்டு வெளியில் வந்தான் அப்போது அந்த மாளிகைக்கு எப்போதும் செல்வதே இல்லை என முடிவுசெய்தான்

ஆம் நாம் நம்முடைய மனதில் என்ன எண்ணுகின்றோமோ அவ்வாறு அவ்வாறே நம்மைசுற்றியும் உள்ள காட்சிகளும் தோன்றியமையும் அதனால் எப்போதும் நாம் நல்லதையே நினைத்து நல்ல மனநிலையை பராமரிப்போம்

ஞாயிறு, 24 மே, 2015

குறிப்பிட்ட காட்சியை அல்லது நிலையை மட்டும் வைத்து உடன் முடிவெடுத்துவிடாதீர்கள்


ஒருகிராமத்தில் வாழ்ந்தவந்த மனிதன் தன்னுடைய மகன்கள் நால்வருக்கும் நல்லதொரு வாழ்க்கைமுறைகளையும் மிகச்சரியாக முடிவெடுக்கும் திறனையும் கற்றுதர விரும்பினார் அதனால் முதல் மகனை அழைத்து அருகிலிருந்த காட்டிற்கு இலையுதிர் காலத்தில் சென்று பார்வையிட்டுவருமாறு கூறினார் அவ்வாறே பார்வையிட்ட முதல்மகன் “மரங்கள்முழுவதும் இலைகள் கீழே உதிர்ந்து மொட்டையாக இருக்கின்றது வெயிலிற்கு ஒதுங்ககூட நிழல் எதுவும் இல்லை பொட்டல்வெளிபோன்று இருக்கின்றது” எனவிவரித்தான்.

இரண்டாவது மகனை அதற்கடுத்த இளவேனிற்காலத்தில் அனுப்பி பார்வையிட்டு வருமாறு கூறினார், இரண்டாவது மகன் பார்வையிட்டு வந்து “அப்பா காடுகளில் உள்ள மரங்கள் அனைத்தும் துளிர்த்து இளந்துளிர்களுடன் உள்ளன என்னஅருமையான காட்சி” என விவரித்தான் அடுத்துமூன்றாவது மகனை அதற்கடுத்த பருவத்தில் அதே காட்டினை பார்வையிட்டு வருமாறு கூறியதை தொடர்ந்து மூன்றாவது மகனும் “அப்பா காடுகளில் உள்ள மரங்கள் முழுவதும் பூக்கள் பூத்து குலுங்குகின்றன தேனீக்களின் ரீங்கார சப்தம் ஒலித்துகொண்டே உள்ளன என்ன அருமையான காட்சி” என மெய்மறந்து கூறினான் அதற்கடுத்ததாக நான்காவது மகனை அதற்கடுத்த பருவத்தில் காட்டினை பார்வையிட்டுவருமாறு அனுப்பிவைத்தார் நான்காவதுமகன் “அப்பா காடுகளில் உள்ளமரங்களில் ஏராளமான பழங்கள் காய்த்து தொங்குகின்றன பறவைகளும் விலங்குகளும் அந்த பழங்களை உண்ணுவதற்கு ஓடியும் பறந்தும் செல்கின்றன காட்டிலேயே இன்னும் சிலநாட்கள் இருந்து நாமும் அந்த பழங்களை சாப்பிட்டு இருக்கலாம் என்ற அவா எனக்கு தோன்றியது” என விவரித்தான்

உடன் அம்மனிதன் தன்னுடைய அனைத்து மகன்களையும் ஒன்றாக அழைத்து பிள்ளைகளே நீங்கள் அனைவரும் இந்த காட்டினை குறிப்பிட்டபருவத்தில் மட்டும் பார்வையிட்டு உங்களுடைய கருத்தினை கூறினீர்கள் அதற்குபதிலாக அனைத்து பருவத்திலும் அதே காட்டினை பார்வையிட்டு பொதுவான ஒட்டுமொத்த கருத்தினை கூறுவதுதான் சரியான முடிவான கருத்தாகும் அவ்வாறே உங்களுடைய வாழ்விலும் குறிப்பிட்ட காட்சியை அல்லது நிலையை மட்டும் வைத்து உடன் முடிவெடுத்துவிடாதீர்கள் அதனுடைய மற்றொரு பக்கத்தையும் நன்கு பார்வையிட்டு இறுதியாக உங்களுடைய கருத்துகளை முடிவுசெய்திடுங்கள் என அறிவுரைகூறினார்

நம்முடன் சண்டையிடுமாறு வருபவரிடம் அதனை தவிர்த்து சற்று ஒரு புன்னகையுடன் அவருடன் தோழமையாக இருப்பதுநல்லது


மிகஅவசரமாக அருகிலிருந்த பெருநகரத்திற்கு செல்லவேண்டியிருந்ததால் வாடகை மகிழ்வுந்து ஒன்றை அமர்த்திஅதில் பயனம் செய்தேன். பயனம் செய்த வாடகை வண்டியானது சாலையின் இடதுபுறம் சென்றுகொண்டிருந்த்து அப்போது வேகமாக வந்தசரக்கு வண்டி யொன்று எங்களுடைய வாடகைவண்டிமீது மோதுவதை போன்று அசுரவேகத்தில் வந்துகொணடிருந்தது

உடன் வாடகை வண்டியின் ஓட்டுநர் வண்டியை மிகசாமர்த்தியமாக ஒடித்து திருப்பி யாருக்கும் பாதிப்பெதுவும் இல்லாமல் நூலிழையில் தப்பி சென்றிடுமாறு செய்தார் அப்போதுபோது எதிரில் வந்த மற்றொரு வண்டி ஓட்டுநர் “என்ன ஐயா! சாலையில் கண்மன் தெரியாமல் ஓட்டுகின்றீர்! இப்படி வளைத்து வளைத்து ஓட்டினால் ஒழுங்காக வீடுபோய்சேரமாட்டீர்!” என திட்டியபோது வாடகைவண்டி ஓட்டுனர் “அதெல்லாம் ஒன்றுமில்லை அண்ணே சற்றே கைதவறிவிட்டது பொறுத்துகொள்ளுங்கள்” என புன்னகையுடன் கூறி அமைதியாக வண்டியை ஓட்டிவந்தார்

சிறிதுநேரம் கழித்து “எதிரில் வந்த ஓட்டுனர் திட்டியபோதும், ஏன்அமைதியாக புன்னகைத்து வந்தீர் ?” என வினவியபோது “அதெல்லாம் ஒன்றுமில்லை ஐயா! உங்களை விரைவில் கொண்டு போய்ச்சேர்க்கவேண்டும். இந்நிலையில் அவருடன் மல்லுகட்டிகொண்டிருந்தால், கால விரையுமும் வீண்சண்டையும் தான் உருவாகும். அதனை தவிர்த்து சற்று ஒரு புன்னகையுடன் அவருடன் தோழமையாக வந்ததால் பிரச்சினை இல்லாமல் நம்முடைய பணியும் நடைபெறுகின்றதல்லவா? அதுதான் ஐயா!” என பதிலிறுத்தார்

ஞாயிறு, 17 மே, 2015

நோய்நொடிஇல்லாமல் நல்ல ஆரோக்கியமாக வாழுவதற்காக கடவுள் எவ்வளவு தொகைக்கான பட்டியலை கோருவார்?


ஒரு மனிதனுக்கு 70 வயது ஆகிவிட்டது இவ்வாறு வயதாகிவிட்டதால் இதுவரையில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்த அம்மனிதனுக்கு தற்போது சீறுநீரகத்தில் மிக அதிக வலி ஏற்பட்டது

அதனால் உடன் அருகிலிருந்த ஆங்கில மருத்துவரை அம்மனிதின் அனுகியபோது அவருடைய சிறுநீரகம் முழுவதும் பழுதடைந்துவிட்டதால் அவ்வாறான வலி ஏற்பட்டுள்ளது என்றும் அவ்வாறான பழுதினை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்துவிடலாம் என்றும் அவருக்கு ஆறுதல்கூறி அறுவை சிகிச்சைக்கான நாள்குறித்து அவருடைய சம்மதத்தை கோரினார்

அவர் சம்மதித்ததும் மருத்துவர் குறிப்பிட்ட நாளில் அவருக்கு வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்து அவரை பழையநிலைக்கு கொண்டுவந்தார் அதனோடுகூட அந்தமனிதனிடம் தன்னுடைய மருத்துவமனையில் செய்த அறுவைசிகிச்சைக்கும் மாத்திரைமருந்துகளுக்காகவும் பட்டியல் ஒன்றை அவரிடம் கொடுத்து உடனடியாக அந்த தொகையை செலுத்துமாறு மருத்துவர் கோரினார்

உடன் அந்த மனிதன் ஓவென்று அழத்தொடங்கினான் அதனை தொடர்ந்து மருத்துவர் அவரிடம் “என்ன ஐயா! தொகை அதிகமாக இருக்கின்றது என பயப்படுகின்றீர்களா!” என வினவியபோது,

அந்த மனிதன் “இந்த தொகைஅதிகமாகிவிட்டது என அழவில்லை, சிறிய அறுவை சிகிச்சைக்கே இவ்வளவு தொகையை பட்டியலாக மருத்துவர் கோருகின்றாரே, என்னுடைய உடலை நோய்நொடிஇல்லாமல் நல்ல ஆரோக்கியமாக இந்த எழுபது ஆண்டுகளாக வைத்து பராமரித்து என்னை காத்திடும் அந்த கடவுள் எவ்வளவு தொகைக்கான பட்டியலை என்னிடம் அளித்து எவ்வளவு தொகையை கோருவார் என எண்ணியபோது அதிகபயமாகிவிட்டது” என கூறினான்..

இரண்டுவகை மனிதர்களில் நாம் எந்தவகையை சார்ந்தவர்கள்


ஒருமனிதன் அருகிலிருந்த மற்றொரு ஊருக்கு சென்றுகொண்டிருந்தான் அவ்வாறு அவன் சென்றுகொண்டிருந்த போது நடைபாதையில் கல்ஒன்று குறுக்காக இருந்து அவனுடைய கால் பாதத்தில் தடுத்ததால் உடன் அம்மனிதன் தடுமாறி விழஇருந்தவன் சமாளித்து நின்றபின் “கொடுமை! கொடுமை! நம்முடைய அரசாங்கம் இந்த சாலையை சரியாகவே பராமரிக்கவில்லையே!” என திட்டிகொண்டு அந்த கல்லை தாண்டி சென்றான்.

அவ்வாறே அன்று முழுவதும் ஏறத்தாழ பத்து அல்லது பதினைந்து நபர்களும் அந்த கல் தடுத்ததால் தடுமாறி விழுவதும் அல்லது விழாமல் சமாளித்து நின்று அந்த கல்லை தாண்டி செல்வதுமாக இருந்தனர் மேலும் அவ்வனைவரும் அரசாங்கத்தை மட்டுமல்லாது அந்த சாலையை உருவாக்கியவனையும் பாரமரித்தவனையும் கடுமையான சொற்களால் திட்டிகொண்டே சென்றனர் ஆயினும் அவர்கள் எவரும் வேறுஎதுவும் செய்யவில்லை

இந்த நிலையில் வேறொரு நல்லமனிதன் அதே பாதை வழியாக செல்லும்போது அவனுடைய காலில் அதே கல்இடறியது உடன் அம்மனிதன் மற்றவர்களை போல அரசாங்கத்தையும் சாலையை உருவாக்கியவனையும் பாரமரித்தவனையும் கடுமையான சொற்களால் திட்டாமல் நம்மை போன்ற இந்த பாதையின் வழியாக நடந்து வருபவர்களுக்கு அந்த கல்லால் துன்பம் ஏற்படக்கூடாது என குனிந்து அந்த கல்லை மிகமுயன்று பிடுங்கி அப்புறபடுத்தினான்

அப்போது அந்த கல்லின் அடியில் ஒருதுண்டுசீட்டு இருந்தது அதனைபிரி்த்து படித்தான் அதில் “ஏ! மனிதனே! மற்றவர்களை போன்றில்லாமல் மற்றமனிதர்கள்யாரும் துன்பம் அடையாமல் இருப்பதற்காக கல்லை இந்த பாதையிலிருந்து எடுத்து அப்புற படுத்தினாயே! நீதான் இந்த நாட்டின் உண்மையான செல்வம். உன்னை போன்றவர்கள்தான் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் மிகமுக்கியமானஅடிக்கல் போன்றவர்கள் ஆவீர்கள்” என குறிப்பிடபட்டிருந்தது.

பொதுவாக ஒருசிலர் எப்போதும் பேசிகொண்டும் மற்றவர்களை திட்டிகொண்டும் இருப்பார்கள் ஆயினும் வேறுசிலர் எப்போதும் செயலைமட்டும் செய்து கொண்டு இருப்பார்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பவர்களைவிட செயலை செய்பவர்களே நாட்டின் உண்மையான செல்வமாகும்.

ஆம் இந்தஇரண்டுவகை மனிதர்களில் நாம் எந்தவகையை சார்ந்தவர்கள் என முடிவுசெய்து கொள்க.

சனி, 9 மே, 2015

எதையும் மறைப்பதை தவிர்த்தால் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கமுடியும்


ஒரு இனிய மாலைபொழுதில் இரண்டு பிள்ளைகள் தங்களுடைய வீட்டின்முன்புறம் காலியாக இருந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தனர் அவ்வாறு விளையாடியபின் சோர்வுற்றபோது அவர்கள் இருவரும் தத்தமது வீடுகளில் தங்களுக்கு அளித்த திண்பண்டங்களை தமக்குள் பங்கிட்டு தின்னலாம் என இருவரும் முடிவுசெய்து அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்தனர்

அவ்விருவரில் ஒருபிள்ளை தன்னிடமிருந்த அனைத்து பொறிவிளங்காய் உருண்டைகளையும் எடுத்து பங்கிட்டு கொடுத்தவுடன் இருவரும் அதனை தின்றுமுடித்தனர்

உடன் மற்றொருபிள்ளையானது தன்னுடைய பையிலிருந்த எள்ளுருண்டைகளில் ஒன்றைமட்டும் மறைத்து வைத்து கொண்டு மிகுதியை மட்டும் பங்கிட்டு தின்றனர் .பிறகு பொழுது சாய்ந்துவிட்டதால் இருவரும் அவரவர்களுடைய வீடுகளுக்கு சென்று இரவு உணவை அருந்திவிட்டு உறங்க சென்றனர் .

முதலில் பொறிவிளங்காய் உருண்டைகள் பங்கிட்டு வழங்கிய பிள்ளையானது நன்றாக நிம்மதியாக உறங்கஆரம்பித்தது.

ஆனால்இரண்டாவதாக எள்ளுருண்டைகளில் ஒன்றை மறைத்தைவைத்து மிகுதியை பங்கிட்டு வழங்கிய பிள்ளையானது முதல் பிள்ளையானது ஏதேனும் பொறிவிளங்காய் உருண்டைகளை தன்னைபோன்று மறைத்து வைத்திருப்பானோ என சந்தேகத்தினால் தூக்கமே வராமல் இரவு நெடுநேரம் கண்விழித்தவாறு படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துகொண்டிருந்தான்.

ஆம் நம்மில் பெரும்பாலானோர் இவ்வாறே எதையும் மற்றவர்களுக்கும் தெரியகூடாது அல்லது வழங்ககூடாது என மறைத்துவைத்துவிட்டு வாழ்வில்நிம்மதிஇல்லாமல் துன்புற்று அல்லல் உற்று பல்வேறு வியாதிகளின் பிடிகளில் சிக்கி தவிக்கின்றோம் அதனை தவிர்த்தால் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கமுடியும் என்பதே உண்மையான நிலவரமாகும்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...