ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

நாம் அனைவரும் நம்முடைய சமூகத்தில் உள்ளமற்றநபர்களுடன் நல்லுறவுடன் பழகுதல் செய்தால் அவ்வாறான நல்லுறவு நம்முடைய ஆபத்துகாலத்தில் நமக்கு பேருதவியாக இருக்கும்


தொழிலாளி ஒருவர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார் அந்த தொழிலாளியானவர் உடன்பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமல்லாது சமூகத்தில் வாழும்அனைத்து நபர்களுடனும் மிகநெருக்கமான உறவினர்போன்று பழகிவந்தார்

ஒருநாள் பணிநேரம்முடிந்து அனைவரும் தத்தமது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர் இந்த தொழிலாளியும் அவ்வாறே தன்னுடைய அன்றைய இறுதி பணியை முடித்து வெளியே கிளம்ப ஆயத்தம் செய்து கொண்டிருக்கும்போது அந்த தொழிலாளி பணிபுரிந்துகொண்டிருந்த இடத்திற்கான வாயில் கதவு தானாகவேமூடிகொண்டது

அதனால் பயமுற்ற அந்த தொழிலாளியானவர் வாயில் கதவினை தட்டியும்வெளியிலிருக்கும் மற்றவர்களின் பெயரை அழைத்தும் அங்கு வெளியில் யாரும்இல்லாததால் மூடிய கதவை திறக்கவில்லை அவ்வளவுதான் இன்று இரவு முழுவதும் இந்த தொழிலகத்திற்குள்ளேயே இருந்து இறக்கவேண்டியதுதான் என பலமணிநேரம் போராடியும் யாருடைய கவணத்தையும் ஈர்த்து வாயில் கதவினை திறக்கமுடியவில்லையேயென சோர்வுற்று அமர்ந்துவிட்டார்

இரண்டுமணிநேரம் கழித்தபின்னர் அந்த தொழிலகத்தின் பாதுகாவலர் ஒருவர் வந்து அவர் இருந்த பகுதியின் கதவினை திறந்தார் அப்போதுதான் அவருக்கு உயிர்வந்தார் போன்று மகிழ்ச்சியுற்ற தொழிலகத்தை விட்டு வெளியேறினார் அப்போது அந்த பாதுகாவலரிடம் "நான் இவ்வளவுநேரம் தொண்டைவரள கத்தியும், கதவினை தட்டிபார்த்தும் திறக்காத வாயில் கதவினை நீங்கள் மட்டும் இவ்வளவுநேரம் கழித்து வந்து கதவினை திறந்து என்னை எவ்வாறு காத்திடமுடிந்தது" என வினவியபோது

"ஐயா! நீ்ங்கள் எப்போதும் பணிக்கு உள்வருகை செய்திடும்போதும் பணிமுடிந்து வெளியே செல்லும் போதும் மற்றவர்களிடம் நெருக்கமாக பழகுவதை போன்று என்னிடமும் பணிக்கு செல்கின்றேன் என்றும் பணிமுடிந்து திரும்பும்போது நாளை பார்க்கலாம் என்று கூறிவிட்டுதான் செல்வீர்கள் இன்று அவ்வாறு பணிக்கு உள்நுழைவு செய்திடும்போது என்னிடம் பணிக்கு செல்கின்றேன் என கூறினீர்கள் ஆனால் பணிமுடிந்து திரும்பும்போது நாளை பார்க்கலாம் என்று கூறுவதை காணவில்லை அதனால் ஏதோ நடந்துவிட்டது என எண்ணி ஒவ்வொரு பகுதியாக திறந்து பார்வையிட்டுவந்து கடைசியாக உங்களை இங்கு பார்த்தேன்" என பதிலிறுத்ததைதொடர்ந்து

" நன்றி பாதுகாவலரே மிகச்சரியான நேரத்தில் வந்த என்னுடைய உயிரை காத்தீர்" என பாதுகாவலருக்கும நன்றி செலுத்தினார்

அதுபோன்றே நாம் அனைவரும் நம்முடைய சமூகத்தில் உள்ளமற்றநபர்களுடன் நல்லுறவுடன் பழகுதல் செய்தால் அவ்வாறான நல்லுறவானது நம்முடைய ஆபத்துகாலத்தில் நமக்கு பேருதவியாக இருக்கும் என்பது திண்ணம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...