ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

இந்தியமக்கள் திருந்தும் நாள் எந்தநாளோ?


நண்பர் ஒருவர் இந்தியாவின் பிரபலமான நகரத்திலுள்ள உணவகத்திற்கு சென்றார் அவ்வுணவகத்தில் அனைவரும் சத்தமாக பேசிக்கொண்டும் சாப்பிடும் உணவுகளை கீழே சிந்திகொண்டும் சிறிதளவு மட்டும் சாப்பிட்டுவிட்டு மிகுதியை அப்படியே வீணாக தட்டில் வைத்து வீணாக்கிவிட்டு எழுந்து கொண்டும் இருந்தார்கள்

ஒருவரிடம் "ஐயா! உங்களுடைய தட்டில் சாப்பிடாமல் மிகுதி இவ்வளவு உணவை வீணாக வைத்திடுகின்றிர்களே! சரியா?" என கேள்வி கேட்டவுடன் "அந்த உணவிற்குதான் நான் பணம் கொடுத்துவிட்டேன் அதனால் அதனை நான் முழுவதும் சாப்பிட்டு காலியாக்குவதும் மிகுதி வீணாக வைத்துவிட்டு எழுவதும் என்னுடைய விருப்பம்" என சண்டையிட துவங்கிவிட்டார்.

இதே நிகழ்வு ஜெர்மனி நாட்டில் எவ்வாறு கையாளபடுகின்றது தெரியுமா அவ்வாறு வீணாக்குபவர்களை உடன் காவல் அதிகாரி வந்து "அந்த பொருட்களுக்கு நாம் பணம் கொடுத்தாலும் அதனை வீணாக்காமலிருந்தால் வேறுயாருக்காவது தேவைப்படுபவர்களுக்கு பயன்படுமல்லவா உணவில்லாமல் பட்டிணியால் வாடுபவர்கள் எத்தனை கோடிபேர்கள் அவர்களுக்கு இந்த வீணாக்கிய உணவு பயன்படுமல்லவா" என விவரம் கூறி தண்டத்தொகையை வசூலித்து செல்வார்கள்

ஆனால் இந்தியாவில் இதுபோன்று எண்ணற்ற வளங்களை வீணாக்குவதிலேயே அனைவரும் குறியாக இருக்கின்றனர் கேள்விகேட்டால் அதற்கான தொகையைதான் வழங்கிவிட்டோமே என வாதிடுவார்கள் இந்தியமக்கள் திருந்தும் நாள் எந்தநாளோ?

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற

கருத்துகள் இல்லை: