சனி, 31 ஆகஸ்ட், 2019

பலூன்வியாபாரி


ஒரு கண்காட்சியில் ஒருவியாபாரி பலூன்களை விற்றுகொண்டிருந்தார். அந்த வியாபாரியிடம் சிவப்பு, மஞ்சள், நீலம் பச்சை உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களிலும் பலூன்கள் இருந்தன. பலூன் வியாபாரம் மெதுவாக இருக்கும்போதெல்லாம், அவர் வாயுநிரப்பப்பட்ட பலூனை காற்றில்பறக்க விடுவார், பலூன்களானவை வானத்தில் மேலேபறந்து செல்வதைக் கண்டஉடன் அந்த கண்காட்சிக்கு தத்தமது பெற்றோர்களுடன் வந்திருந்த குழந்தைகள் அனைவரும்ஓடிவந்து அந்த பலூன் வியாபாரியிடமிருந்த ஒரு பலூனையாவது வாங்கி சென்றனர். , அந்த பலூன்வியாபாரியினுடைய பலூன்களின் விற்பனை மீண்டும் உயரும். அவர் நாள் முழுவதும் இவ்வாறான செயல்முறையினை பின்பற்றி தன்னுடைய வியாபாரத்தை தொடர்ந்து கொண்டிருந்தார். இந்நிலையில், யாரோ ஒருவர் தன்னுடைய சட்டையை இழுத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து யார் இழுக்கின்றனர் எனஅவர் திரும்பிபார்த்தபோது ஒரு சிறுவனைப் கண்டார், "நீங்கள் ஒரு கருப்பு பலூனை விடுவித்தால், அதுவும்வாணத்தில் பறக்குமா?" என அந்த சிறுவன் கவலையுடன் கேட்டான் அந்த சிறுவனின் கோரிய தோரணையால் தூண்டப்பட்ட அந்தபலூன்வியாபாரி "தம்பி இந்த பலூன்கள் பறப்பதற்கு இந்த பலூன்களின் நிறம் முக்கியமன்று, அவைகளின் உள்ளே நிரப்பட்டிருக்கும்வாயு தான் காரணம்பலூன்களின்வாயு இருப்பதால் பலூன்களை மேலேபறக்கச் செய்கின்றது."என பதிலளித்தார் அந்த பலூன்களை போன்றே நம்மில் சில தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது நாடுகள் மற்றவர்களை விட ஏன் மிகவும் வெற்றிபெறுகின்றனர் என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கின்றோமா? அது ஒரு ரகசியம் அன்று. அவர்களனைவரும் மிகவும் திறம்பட செயல்படுகிறார்கள். அதாவது மிகவும் மதிப்புமிக்க சொத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதை எப்படி முன்னேற்றபாதைக்கு கொண்டுசெல்வது என அவர்கள் கற்றுக்கொண்டார்கள். அதனடிப்படையில் அந்த தனிநபரின், நிறுவனத்தின் அல்லது நாட்டின் வெற்றியானது அவர்களின் சரியான முடிவினை பொறுத்து அமைகின்றது .

சனி, 24 ஆகஸ்ட், 2019

ஒரு நிறுவனத்தின் பணியாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத்தேர்வு


நிறுவனத்தின் நிருவாகி: உன்னைபற்றி சொல்.
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர்: நீ என்பதற்கான பதில் பெயரே உன்னை என்பதாகும் ஐயா!
நிறுவனத்தின் நிருவாகி: இந்த நிறுவனத்தில் நீ என்னஎதிர்பார்க்கின்றாய்?
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர்: இந்த நிறுவனம் மாதாமாதம்எனக்கு சரியாக சம்பளம் கொடுக்குமா என்பதே என்னுடைய எதிர்பார்ப்புகள் ஐயா!
நிறுவனத்தின் நிருவாகி: முந்தைய நிறுவனத்தில் பணிபுரியும்போது உன்னுடைய சாதனை என்ன?
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர்: அங்கு மதியம் சாப்பிட்டபின்னர் பணியிடத்தில் தூங்காமல் விழித்திருப்பதுதான் என்னுடைய மிகமுக்கியமான சாதனையாகும் ஐயா!
நிறுவனத்தின் நிருவாகி: ஏன் இந்த நிறுவனத்திற்கு பணிபுரியவரவிரும்புகின்றாய்?
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர்: வேறு எந்த நிறுவனமும் என்னை நேர்முகத்தேர்விற்கு அழைக்கவில்லை அதைவிட இந்த நிறுவனம் என்னுடைய வீட்டிற்கு அருகில் உள்ளது அதனால்தான் ஐயா!
நிறுவனத்தின் நிருவாகி: ஏன் முந்தைய நிறுவனத்தின் பணியை விட்டு வெளியில் வந்துவீட்டீர்?
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர்: முன்பு நான் பணிபுரிந்த நிறுவனமானது தன்னுடைய அலுவலகத்தை வேறு எங்கோ இடம் மாற்றிகொண்டதுர் அவ்வாறுஅந்தஅலுவலகத்தினை எங்கு மாற்றினார்கள் என அதன் மாற்றப்பட்டமுகவரி பற்றி எனக்கு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை அதனால் அந்தநிறுவனத்தின் பணியை வீட்டுவிட்டேன்ஐயா!
நிறுவனத்தின் நிருவாகி: இந்த நிறுவனத்தில் மாதத்தில் இருபத்திநான்கு நாட்கள் வெளியில்பயனம் செய்யவேண்டும் அவ்வாறான பணியை செய்யமுடிமா?
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர்: ஆஹா! ஊர்சுற்றும் பணியென்றால் எனக்கு மிகவும் விருப்பமானதுதான் ஐயா! ஆனால் நான் எங்கு செல்கின்றேன் என்றுமட்டும் கேள்விகேட்ககூடாது!.

சனி, 17 ஆகஸ்ட், 2019

பெரிய கோடீஸ்வரனும் மூன்று பிச்சைகாரர்களும்


ஊரில் நல்ல இரக்ககுணமுள்ள கோடீஸ்வரன் ஒருவன் இருந்தான். மூன்று பிச்சைக்காரர்கள் அந்த கோடீஸ்வரனிடம் உதவிக்காக அணுக நினைத்தனர். முதல் பிச்சைகாரன் கோடீஸ்வரனிடம் சென்று : "ஐயா! தயவுசெய்து எனக்கு பத்து ரூபாய் மட்டும் பிச்சை கொடுங்கள் ஐயா!." என கோரினான். இந்தமுதல்பிச்சைகாரனின் கோரிய தோரணையை கண்டு அந்த கோடீஸ்வரன் மிகவும் அதிர்ச்சியடைந்தான். "என்ன! நான் உன்னிடம் கடன்பட்டிருப்பதைப் போல பத்து ரூபாய் கொடுங்கள் என என்னிடம் கோருகின்றாய்! நான் என்ன உனக்கு கடனாளியா? உனக்கு எவ்வளவு தைரியம்? ஒரு பிச்சைக்காரனுக்கு பத்து ரூபாய்தான் என்னால் கொடுக்க முடியுமா! , நான் அவ்வளவு கேவலமாக போய்விட்டேனா ! இந்தா ஐந்து ரூபாய் இதனை எடுத்துக்கொண்டு தூரஓடிபோஇங்கு திரும்பவும் வராதே!" என்று அந்த கோடீஸ்வரன் ஐந்து ரூபாயை மட்டும் கொடுத்து பிச்சைகாரனை விரட்டிஅடித்தான். அந்த முதல் பிச்சைகாரன் ஐந்து ரூபாயை மட்டும் அந்த கோடீஸ்வரனிடமிருந்து வாங்கிகொண்டு சென்றான். அடுத்தஇரண்டாவது பிச்சைக்காரன்அதே கோடீஸ்வனிரிடம் சென்று: "ஐயா! நான் கடந்த பத்து நாட்களாக உணவில்லாமல் பட்டினியாக இருக்கின்றேன் . தயவுசெய்து நான் சாப்பிடுவதற்கு ஏதாவது உதவுங்கள்ஐயா." எனக்கோரினான் அதனைதொடர்ந்து"உனக்கு எவ்வளவு வேண்டும்?" என அந்த கோடீஸ்வரன் இரண்டாவது பிச்சைகாரனிடம் கேட்டான்.அதற்கு இரண்டாவது பிச்சைகாரன்"நீங்கள் என்ன கொடுத்தாலும் போதும் ஐயா" என பதிலளித்தான். அதனைதொடர்ந்து அந்த கோடீஸ்வரன்", இந்தா நூறு ரூபாய் . குறைந்தது மூன்று நாட்களுக்கு நல்ல உணவைக்சாப்பிடுவதற்குஇது போதுமானதாகும்." என இரண்டாவது பிச்சைக்காரனுக்குஅவன் கேளாமளேயே நூறு ரூபாயைகோடீஸ்வரன் வழங்கினான் அந்தநூறுரூபாயை மட்டும் பெற்றுகொண்டு இரண்டாவது பிச்சைகாரன் அங்கிருந்து சென்றான். மூன்றாவது பிச்சைக்காரன்அதே கோடீஸ்வரனிடம் வந்து. "ஐயா, உங்களுடைய உன்னத குணங்களையும் தயாளகுணங்களையும் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அதனால், உங்களை என்னுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது நேரில் பார்க்கவேண்டும் என்ற பேராவலுடன் நான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். இதுபோன்ற தொண்டு மனப்பான்மை உடையவர்கள் நிச்சயமாக நாம் வாழும் இந்த பூமியில் காண்பது மிகவும் அரிதிலும் அரிது ஐயா" என்று கோடீஸ்வரனை மிகவும் புகழ்ந்து கூறினான்.அவ்வாறான சொற்களை பிச்சைகாரனின் வாயிலிருந்து வந்ததும் மிகவும் மகிழ்ச்சியுற்றகோடீஸ்வரன்"தயவுசெய்து இந்த நாற்காலியில் உட்காருங்கள் ஐயா" என்று கோடீஸ்வரன் மூன்றாவது பிச்சைகாரனிடம் கூறி தன்னுடைய வீட்டிலுள்ள நாற்காலியில் அமரச்செய்தான்.மேலும் "நீங்கள் மிகவும் சோர்வாகத் தோன்றுகிறீர்கள். தயவுசெய்து வயிறார இந்த உணவை சாப்பிடுங்கள்" என மூன்றாவது பிச்சைக்காரனுக்கு போதுமான உணவை கோடீஸ்வரன் வழங்கினான். மூன்றாவது பிச்சைகாரன் உணவு உண்ட பின்னர் " ஐயா நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்று இப்போது கூறுங்கள்" என மிகப்பணிவுடன் அந்த மூன்றாவது பிச்சைகாரனிடம் கோடீஸ்வரன் கோரினான். "ஐயா நான் ஒரு சிறந்த நபரைச் சந்திக்க மட்டுமே வந்தேன். ஆனால் நீங்களோ ஏற்கனவே எனக்கு வயிறார உணவைவழங்கிவிட்டீர்கள்.இதைவிட உங்களிடமிருந்து வேறு என்னஎனக்கு தேவை? அதைவிடநீங்கள் ஏற்கனவே என்னிடம் அசாதாரணஅன்பினை காட்டியுள்ளீர்கள் அதுவேபோதும் ஐயா!" எனமூன்றாவது பிச்சைகாரன்கூறியதும் மிகவும் மனம் குளி ர்ந்து" ஐயா உங்களைபோன்ற நபர்கள் நண்பர்களாக எனக்கு அருகில் எப்போதும் இருக்கவேண்டும் அதுவே என்னுடைய வாழ்க்கையின் குறிக்கோள் " என்ற வேண்டுகோளுடன் தன்னுடன் இருக்கும்படிமிகவும் கெஞ்சினான், தொடர்ந்து அந்த மூன்றாவது பிச்சைகாரனுக்காக ஒரு நல்ல வீட்டைக் கட்டிகொடுத்து அதில், அவனது வாழ்நாள் முழுவதும் வாழ்வதற்கு தேவையான பொருட்களை வழங்கி பிச்சைகாரனைகோடீஸ்வரன் நன்கு கவனித்துகொண்டான் பொதுவாக நாம் எவ்வாறு மற்றவர்களை அனுகுகின்றோமோ அதற்கேற்பவே உதவியும் மரியாதையும் கிடைக்கும் என தெரிந்து கொள்க

புதன், 14 ஆகஸ்ட், 2019

குரங்கும் மரத்தாலான ஆப்பில் பழமும்


காட்டில் குரங்கு ஒன்று வாழ்ந்துவந்தது அது பசியெடுத்தால் தேவையானஅளவு மரங்களில் காய்த்து தொங்கிய பழங்களை பசியாற பறித்து தின்றபின்னர் ஓய்வெடுத்துகொள்ளும் பின்னர் மீண்டும் பசிஎடுத்தால் மீண்டும் பசியாற தேவையான அளவு பழங்களைபறித்து தின்றபின்னர் ஓய்வெடுத்துகொள்ளும் இவ்வாறு அதனுடைய நடைமுறை வாழ்க்கையானது சென்று கொண்டிருக்கம்போது ஒருநாள்அந்த காட்டிலிருந்த குரங்கு தவறுதலாக மக்கள் குடியிருக்கும் நகரத்திற்கு வந்து சேர்ந்தது அங்கு ஒருவீட்டி்ல கண்ணைகவரும் வகையில் அழகான ஆப்பில் பழங்கள் குவியலாக இருந்ததைபார்த்ததும்பேராசையினால் அந்த குரங்கானது தன்னுடைய கைகளில்அனைத்து ஆப்பில் பழங்களையும் அள்ளி எடுத்திட முயன்று முடியாமல் முடிவில் ஒன்றை மட்டுமே எடுத்துகொண்டு காட்டிற்கு ஓடியது காட்டில் இந்த வண்ணமயமான ஆப்பிலை பார்த்த மற்ற குரங்குகள் அந்த ஆப்பில் பழத்தை அபகரித்திட துரத்திகொண்டு வந்தன உடன் இந்த குரங்கு மற்ற குரங்குகளுக்கு கிடைக்காமல் வெகுதூரத்திற்கு ஓடியது சிறிதுதூரம் சென்றபின்னர் தன்னை யாரும் பின்தொடரவில்லை என்பதை உறுதிசெய்து கொண்டு தான் கொண்டுவந்த ஆப்பில் பழத்தை கடித்து தின்னலாம் என கடிக்க முற்பட்டபோது ஐயோபாவம் அந்த ஆப்பில் பழமானது வண்ணம் பூசப்பட்டமரத்தால் செய்யப் பட்டதாகும் அதனால் அந்தகுரங்கினுடைய பற்களுக்குதான் வலி ஏற்பட்டதே தவிரஎவ்வளவு முயன்றும் பசியாற கடித்து தின்னமுடியவில்லை மீண்டும் பசிஎடுத்ததால் மீண்டும் முயன்றும் கடித்து தின்ன முடியவில்லை சரி வேறுஏதாவது பழமரங்கள் அருகில் உள்ளதாவென தேடிபார்த்தபோது அருகில் பல்வேறு பழமரங்களில் பழங்கள் காய்த்து தொங்கின அந்த மரங்களில் ஏறி அவைகளையாவது பறித்து தின்றுபசியாறலாம் என்றால் கையிலுள்ள தின்னமுடியாத ஆப்பில் பழத்தை தரையில் வைத்தால்தான் அந்த பழமரங்களில் ஏறமுடியும் என்ற நிலையில் ஆப்பில் பழத்தை கீழே வைத்திட்டால்வேறு யாராவதுதான் மரத்தில் ஏறிஇறங்குவதற்குள் எடுத்து தின்றுவிட்டால் என்ன செய்வது என பேராசையினால் அதனை தரையில் வைத்திடமுடியாமல் மரத்திலும் ஏறமுடியாமல் பசியோடு தவித்தது நேரம் ஆக பசி அதிகமாகி கொண்டேயிருந்தது அதனோடு கையில் தொடர்ந்து அந்த கடித்து தின்னமுடியாத ஆப்பில் பழத்தை வைத்து கொண்டிருப்பதால் கைகளுக்கு அதிக வலிஏற்பட்டு தரையில் அந்த ஆப்பில் பழத்தை வைக்கவும் முடியாமல் தின்னவும் முடியாமல் தவிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது இதற்குமேல் பசிதாங்கமுடியாத நிலையில் அந்த கடித்துதின்னமுடியாத ஆப்பில் பழத்தை தரையில் வைத்துவிட்டு அருகில்இருந்த மரத்தில் ஏறி தேவையானஅளவு வேறு பழங்களைபறித்து தின்று பசியாறியது இதேபோன்றே நாமும்நம்முடைய பேராசையினால் தேவையற்ற பயனற்றபல்வேறு எண்ணங்களையும் கருத்துகளையும் நம்முடைைய மனதில் வலிய சேர்த்து வைத்துகொண்டு பயன்படுத்தமுடியாமல் அல்லலுறுகின்றோம் முதலில் அவற்றை அறவே ஒதுக்கிவைத்துவிட்டு வாழ்வில் வெற்றிபெறுவதற்கு உதவிடும் ஆக்கபூர்வமான நல்ல பயனுள்ள கருத்துகளை மட்டும் மனதில் கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது

சனி, 10 ஆகஸ்ட், 2019

நேர்மையான பெண்குழந்தை


இளம்வயது தொழிலதிபர் ஒருவர்தங்களுடைய மகிழ்வுந்தில் குடும்பத்தாருடன் அடுத்து இருந்த நகரத்திற்கு சென்று வீட்டிற்கு திரும்பிவந்து கொண்டிருந்தார் அவர்களுடையவீடு இன்னும் நான்கு அல்லது ஐந்து கிலோமீட்டர் இருக்கும்போது தங்களுடையவீட்டிற்கு இந்தமாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொண்டு செல்லலாம் என ஒரு பெரிய கடையின் வாயிலில் வண்டியை நிறுத்தம் செய்து குடும்ப உறுப்பினர் அனைவரும் அந்த கடையின் உள்ளே சென்று மளிகை பொருட்களை வாங்கிகொண்டு மீண்டும் தங்களுடைய மகிழ்வுந்தில் ஏறி வீடு திரும்பினர் தங்களுடைய வீட்டில் வண்டியைவிட்டு இறங்குவதற்கு குடும்பஉறுப்பினர் அனைவரும் தயாராகும் போது அவர்களுடைய சிறிய பெண்குழந்தையானதுமளிகை பொருட்கள் வாங்கிய அந்த கடையில் சிறிய சாக்லேட் பை ஒன்றினை கையிலெடுத்துவைத்திருந்தது அதற்கான தொகைகடைக்கு வழங்கப்படவில்லை வேடிக்கை பார்த்து கொண்டே வந்த அந்த பெண்குழந்தையானதுஅப்போதுதான் ஞாபகம் வந்து அப்பா அப்பா இந்த சாக்லேட்டிற்கான ரூபாயை அந்த கடைகாரருக்கு தரவில்லையே கண்டிப்பாக அதற்கான ரூபாயை கடைக்காரருக்கு கொடுத்துவிடவேண்டும் அப்பா என கூறியது அந்த சாக்லேட்டிற்கான விலை பத்து ரூபாய் மட்டுமே இருக்கும் அதனால் அதற்காக மீண்டும் அவ்வளவு தூரம் வண்டியில் செல்வதா வேண்டாமாஎன தடுமாறி நின்றபோது வேண்டுமானால் நான் நடந்தே போய் இதற்கான பணத்தை அந்த கடைக்காரருக்கு கொடுத்துவிட்டு வந்துவிடவா அப்பா எனஅவர்களுடைய பெண்குழந்தை கூறியதும் அந்த இளம் தொழிலதிபர் தன்னுடைய பெண்குழந்தையின் நேர்மையை கண்டு மனம் நெகிழ்ந்து மகிழ்வுந்தை வீட்டு கீழிறங்காமல் அப்படியே கடைக்கு திரும்பி சென்றனர் அங்கு கடைக்கு சென்று அந்த கடைகாரரிடம் அந்த குழந்தையானது மாமா உங்களுக்கு பணம் கொடுக்காமல் தவறுதலாக இந்த சாக்லேட் பையை எடுத்து சென்றுவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் இந்தாருங்கள் அந்த சாக்லேட் பைக்கான தொகை என தன்னுடைய கையிலிருந்த பத்துரூபாயைஅந்த கடைக்காரருக்கு கொடுத்தது உடன்அந்த கடைக்காரர் அந்த பெண்குழந்தையின் நேர்மையை மெச்சி இந்தபெண்குழந்தையின் நேர்மையை அந்த கடைக்கு வந்த அனைவருக்கும் தெரியுமாறு அறிவிப்பு செய்தார் அதுமட்டுமல்லாமல் அந்த நகரத்தின் சிறந்த குழந்தையாக அந்த ஆண்டு அந்த பெண்குழந்தை தெரிவுசெய்யப்பட்டது சாக்கலேட்பைக்கான தொகை கொடுத்துவிட்டதால் அந்த இளம் தொழிலதிபர்குடும்ப உறுப்பினர்அனைவரும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வீடுசென்று சேர்ந்தனர்

சனி, 3 ஆகஸ்ட், 2019

கொத்தனாரும் மேற்பார்வையாளரும்


நகர்புறத்தில் அடுக்குமாடி கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றுகொண்டிருந்தன. அங்கு மேல் தளத்திலிருந்து அந்த அடுக்குமாடி கட்டுவதை மேற்பார்வையிடும் மேற்பார்வையாளர் உடனடியாக ஏதோவொரு முக்கியமான பணியை செய்யுமாறு கூறுவதற்காக கீழ்தளத்தில் பணி செய்து கொண்டிருக்கும் கொத்தனார் ஒருவரை பெயரிட்டுஅழைத்தார் பல்வேறு பணிகளினால்உருவாகும் ஓசையினால் அந்த கொத்தனாரும் மேற்பார்வையாளரின் அழைப்பை கவணிக்காமல் தன்னுடைய பணியை செய்துகொண்டிருந்தார் இரண்டு மூன்றுமுறை கொத்தனாரின் பெயரை மேற்பார்வையாளர் அழைத்தும் எதற்குஅழைத்தார்கள் என அந்த கொத்தனார் திரும்பிகூட பார்த்திடாமல் இருந்ததை தொடர்ந்து மேற்பார்வையாளர் தன்னுடைய பையிலிருந்து நூறுரூபாய் தாள் ஒன்றினை எடுத்து அதே கொத்தனாருக்கு அருகில் விழுமாறு விட்டெறிந்தார் இப்போது அந்த கொத்தனார் இன்று படம் பார்ப்பதற்கான செலவிற்கு ஆயிற்றுஎன அருகில்வந்து விழுந்த ரூபாய்தாளினை எடுத்து தன்னுடைய பையில் வைத்து கொண்டு தொடர்ந்து தன்னுடைய பணியை செய்து கொண்டிருந்தார் மீண்டும் மற்றொரு நூறு ரூபாய் தாளினை அந்த மேற்பார்வையாளர் கொத்தனாரை நோக்கி வீசினார் மீண்டும் ஆகா அருமை படம் பார்க்க செல்லும்போது நல்லஉணவகத்தில் இன்று நன்றாக சாப்பிட்டு செல்வதற்காயிற்று என அந்த கொத்தனார் தன்னருகில்வந்து விழுந்த ரூபாய் தாளினை எடுத்து தன்னுடைய பையில் வைத்து கொண்டு மீண்டும் தொடர்ந்து தன்னுடைய பணியை செய்து கொண்டிருந்தார் அதனால் எரிச்சலுற்ற மேற்பார்வையாளர் சிறு கல்லை எடுத்து அந்த கொத்தனாரின் தலையின்மீது படுமாறு விட்டெறிந்தார் அந்த கல்லும் மிகச்சரியாக அந்த கொத்தனாரின் தலையில் விழுந்தவுடன் சுரீர் என வலிஉருவானதை தொடர்ந்து அந்த கொத்தனார் அந்த கல்வந்த வழியை அன்னாந்து பார்த்தார் அப்போதுதான் மேற்பார்வையாளர் அவரை மேல்தளத்திற்கு வருமாறு அழைத்ததைதொடர்ந்து மேல் தளத்திற்கு சென்றார் மனிதர்களில்பெரும்பாலோனோர் இதேபோன்று நம்முடைய வாழ்க்கைபாதையில் நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகளை யார்செய்தார்என பார்த்து அவர்களுக்கு நன்றிகூற மாட்டோம் ஆனால் நமக்கு ஏதேனும் சிறியஅளவில் தீங்கு ஏற்பட்டால் உடனடியாக நாம் அதனை கவணத்தில் கொண்டு அதனை ஏற்படுத்தியவரை அடையாளம் கண்டு அவர் நம்மைவிட பலசாலியாக இருந்தால் அவர்களுடன் மேலும் நமக்கேன் வம்பு என தாண்டி சென்றிடுவோம் ஆனால் நம்மைவிட பலமற்றவர்களெனில் அவர்களைஉண்டு இல்லையென ஒரு வழி செய்தபின்னர் வேறு எந்தவொருபணியை செய்யதுவங்கிடுவோம் இதுவே மனிதனின் இயல்பான குணமாகிவிட்டது அதற்கு பதிலாக தவறுதலாக கூட இவ்வாறு ஏற்ட்டிருக்கும் என மன்னித்து செல்வதுதான் சுமுகமாக வாழ்வதற்கான வழியாகும் என செயல்படுக மேலும் நமக்கு நன்மை செய்பவரை யாரென அறிந்து அவர்களுக்கு நன்றி சொல்வது நம்மீது மதிப்பு அதிகமாக்குவதற்கு ஏதுவாகும் அதனால் நமக்கு மேலும் உதவி தயங்காமல் கிடைக்க ஏதுவாகிவிடுமல்லவா

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...