திங்கள், 30 மார்ச், 2015

நாம் ஒருவருக்கு செய்திடும் உதவி பின்னாளில் நமக்கு தானாகவே வந்து உதவிடும்


இங்கிலாந்தின் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஒரு கிராமத்தின் விவசாயி ஒருவர் தன்னுடைய நிலைத்தில் விவசாய பணிசெய்து கொண்டிருந்தார் .அந்நிலையில் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூக்குரலிட்டு சிறுவன் ஒருவன் கதறும் சத்தம் கேட்டவுடன் அவர் தன்னுடைய பணியை அப்படியே விட்டுவிட்டு ஓடிசென்று பார்த்தபோது சிறுவன் ஒருவன் நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த சகதியில் தவறிவிழுந்து வெளியிலெழுந்தவரமுடியாமல் உயிருக்கு போராடிகொண்டிருப்பதை கண்டார்

.உடன் கயிற்றின் ஒருமுனையை தான்பிடித்துகொண்டு மறுமுனையை அச்சிறுவன் பிடித்து கொள்வதற்காக வீசிஎறிந்து பிடித்துகொள்ளுமாறு செய்தார் தொடர்ந்து மரஏணி ஒன்றினை அச்சிறுவன் அருகில் செல்லுமாறு வைத்து அதில் அச்சிறுவனை ஏறிகொண்டும் கயிற்றை மற்றொருகையால் பிடித்துகொண்டும் வருமாறு செய்து ஒருவழியாக அச்சிறுவனை கரையேற்றி காப்பாற்றி பத்திரமாக ஊர்போய்சேருமாறு செய்தபின் தன்னுடைய விவசாய பணியை தெடர்ந்து செய்யஆரம்பித்தார்

. மறுநாள் விலையுயர்ந்த குதிரைவண்டியில் ஒருவர் அந்த விவசாயியின் வீட்டிற்கு வந்தார் அவர் அந்த விவசாயியிடம் தன்னுடைய மகனுடைய உயிரை காப்பாற்றியதற்காக தக்க பரிசுபொருளை பெற்றுகொள்ளுமாறு வேண்டி வழங்கியபோது அவ்விவசாயியானவர் அந்த பரிசு பொருளை வாங்க மறுத்ததுடன் ஒரு உயிரை காப்பது தன்னுடைய கடமை என்றும் அதற்காக தான் பரிசுபொருள் எதுவும் வாங்க விரும்பவில்லை என மறுத்து கூறினார்

அந்நிலையில் அவ்விவசாயியின் மகன் வீட்டிற்குள் நுழைவதை கண்டவிருந்தாளி காப்பாற்றபட்ட தன்னுடைய மகனின் வயதே அவனும் இருப்பதால் தன்னுடைய மகனுடன் சேர்ந்து அவனுக்கும் தான் கல்வி கற்க வேண்டிய உதவிசெய்வதாக கூறியதை தொடர்ந்து அவ்விவசாயியின் மகனும் நல்ல தரமானகல்வி நிறுவனத்தின் கல்வி பயின்று பெரிய மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞானியாக வளர்ந்தார்

பின்னாளில் காப்பாற்றபட்ட சிறுவன் வளர்ந்து பெரியமனிதனாக ஆனார் அப்போது ஒருநாள் நிமோனியா காய்ச்சலினால் அவர் துயருற்றபோது அதே விவசாயியின் மகனான விஞ்ஞானி கண்டுபிடித்த பென்சிலின் மருந்து அவருடைய உயிரை காப்பாற்றியது

அந்தமனிதன் சிறிய வயதில் இருந்தபோது தந்தையும் வளர்ந்து பெரியவனாக உயர்ந்தபோது அவ்விவசாயியின் மகனும் அவருடைய உயிரை காப்பாற்றினர்

இவ்வாறு காப்பாற்றபட்ட சிறுவன்தான் சர்.வின்ஸ்டன் சர்ச்சில் காப்பாற்றிய விஞ்ஞானிதான் பெஞ்சமின் பிராங்களின்

நாம் ஒருவருக்கு செய்திடும் உதவி பின்னாளில் நமக்கு தானாகவே வந்து உதவிடும் என்பதே இயற்கையின் நியதியாகும்.

ஞாயிறு, 29 மார்ச், 2015

நாம் என்னவாக இருக்கின்றோமோ அவ்வாறே இந்த சமூக மக்களும இருப்பார்கள் என்பதே உண்மை நிலையாகும்


நகரத்தின் சாலைஒரத்தில்மரநிழலில் ஒருவயதான மனிதன் உட்கார்ந்து கொண்டிருந்தார் அந்த நேரத்தில் கிராமத்தில் இருந்து ஒருவன் அந்த நகரத்தை நோக்கி கால்நடையாக வந்து கொண்டிருந்தான்

அந்த வழிபோக்கன் அந்த பெரியவரை அனுகி “ஐயா இந்தநகரின் மக்கள் நல்லவர்களா கெட்டவர்களா எவ்வாறு இருப்பார்கள்” என அவரிடம் வினவியபோது

“தம்பி நீவருகின்றாயே அந்த ஊரின் மக்கள் எவ்வாறானவர் என கூறு நான் உன்னுடைய கேள்விக்கு பின்னர் பதில் கூறுகின்றேன்” என பதில் கேள்வி கேட்டார்

உடன் அந்த மனிதன் “நான் இருந்து வாழ்ந்து ஊர் மிகவும் மோசம் அனைவரும் கெட்டவர்கள் யாரையும் கெடுதல் செய்து கொண்டே இருப்பார்கள்” என பதிலிறுத்தான்

உடன் அந்த பெரியவரும் “இந்த நகர மக்களும் அவ்வாறானவர்களே அவர்களுடன் முந்தைய நிலையை தொடர்ந்து கடைபிடித்து வாழலாம் போய்வா” என விடைகெடுத்தார்.

சிறிதூரம் சென்ற அவ்வழிபோக்கன் திரும்பவும் அந்த வயதானவரிடம்மீண்டும் வந்து “ஐயா நான் வாழ்ந்து வளர்ந்த என்னுடைய ஊர் மக்கள் மிகவும் நல்லவர்கள் மழையில்லை என்ற ஒரே காரணத்தினாலேயே நான் இந்த நகரத்திற்கு வருகின்றேன் அதனால் சரியாக சொல்லூங்கள் ஐயா இந்த நகரமக்கள் எவ்வாறானவர்கள்” என மீண்டும் வினவியபோது

“தம்பி இந்த நகரத்து மக்களும் மிக நல்லவர்கள்தான் வல்லவர்கள்தான் வந்தவர்கள் அனைவரையும் வரவேற்று அரவணைத்து வாழவைக்கும் தயாள குணம் கொண்டவர்கள்தான் அதனால் அவர்களுடன் நல்லுறவை வளர்த்து மகிழ்ச்சியாக வாழமுடியும் சென்றுவா” என விடைகொடுத்தார்

ஏன் அந்த பெரியவர் நகரத்தின் மக்களை முதலில் கெட்டவர்கள் என்றும் பின்னர் நல்லவர்கள் என்றும் மாற்றிமாற்றி கூறினார்

நாம் என்னவாக இருக்கின்றோமோ அவ்வாறே இந்த சமூக மக்களும இருப்பார்கள் என்பதே உண்மை நிலையாகும்

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

நூறாவது தங்ககாசிற்கான பேராசையின் பாதிப்பு


அரசன் ஒருவன் தன்னுடையஆளுகையின் கீழ் உள்ள நகரை சூற்றி பார்த்து வரும்போது தன்னிடம் பணிபுரிந்துவருகின்ற பணியாளர் ஒருவர் தன்னுடைய வீட்டில் பாட்டு ஒன்றினை பாடிக்கொண்டு மிகமகிழ்ச்சியோடு இருப்பதை கண்டார் .

உடன் அவ்வர சன் அந்த பணியாளரை அழைத்து உன்னால் எவ்வாறு மிகமகிழ்வோடு இருக்கமுடிகின்றது என வினவியபோது அந்த பணியாளர் என தங்குவதற்கு இந்த கூரைவீடுஉள்ளது உண்பதற்கான உணவை நீங்கள் வழங்கும் சம்பளம் போதுமானதாக உள்ளது அதனைதவிர வேறு கவலை எதுவுமில்லை அதனால் நான் மிக மகிழ்வாக இருக்கின்றேன் என க்கூறியதை தொடர்ந்து நகர்வலம் முடித்து அரண்மனைக்கு திரும்பியபின் அந்த அரசன் தன்னுடைய அமைச்சரை அழைத்து அமைச்சரே இவ்வளவு பெரிய அரண்மனையில் வாழும் நான் மகிழ்ச்சியாக இருக்கமுடியவில்லை ஆனால் என்னிடம் பணிபுரியும் சாதாரண பணியாளர் ஒருவர் மிக மகிழ்ச்சியோடு இருக்கமுடிகின்றதே என்ன காரணம் என வினவினார்

அது வேறொன்றுமில்லை ஐயா அந்த பணியாளர் 99ஆம் சங்கத்தில் உறுப்பினராக சேரவில்லை அதனால் அந்த பணியாளர் மிகமகிழ்வோடு உள்ளார் . அது என்ன 99ஆம் சங்கம் சிறிது விளக்கமாக கூறுங்களேன் என வினவியபோது அது வேறொன்றுமில்லை ஐயா இன்று இரவு அந்த பணியாளரினுடைய வீட்டு வாயிலின் முன்பு நம்முடைய அரண்மனை கஜானாவிலிருந்து 99 தங்ககாசுகளை பைக்குள் எடுத்துசென்று வைத்திட அனுமதியுங்கள் என கோரி அரசனிடம் அனுமதிபெற்று 99 தங்ககாசுகளை பைக்குள் எடுத்துசென்று வைத்துவந்தார்

விடியற்காலை அந்த பணியாளர் விழித்து எழுந்து பார்த்தபோது பைநிறைய தங்ககாசுகள் இருப்பதை பார்த்து மிகமகிழ்வோடு வீட்டினுள் எடுத்துசென்று எண்ணிக்கை யிடும்போது 99 தங்ககாசுகள் மட்டும் இருந்தன அடடா இன்னும் ஒரு தங்ககாசு எங்கே போயிருக்கும் என மிக மனவருத்ததுடன் விடக்கூடாது அந்த நூறாவது தங்ககாசினை மிக்கடுமையாக உழைத்து சம்பாதிக்கவேண்டும் என முடிவுசெய்து அன்றிலிருந்து ஓய்வுநேரம் கூட எதிர்பார்க்காமல் அல்லும்பகலும் பாடுபட ஆரம்பித்ததால் தினமும் இரவில் மகிழ்ச்சியோடு ஆடிபாடும் நிலையை அந்த பணியாளர் கைவிட்டிட்டார்.

ஆம் நம்முடைய வாழ்வில் பேராசை என்பது எட்டிபார்க்காதவரை நாமனைவரும் மிகமகிழ்வோடு வாழ்ந்துவருவோம் நண்பர்களே இந்த பேராசை நம்முடைய மனதில் இடம்பிடித்த மறுநொடியிலிருந்த நம்முடைய மகிழ்ச்சியான வாழ்வு மறைந்து தூக்கம் கெட்டு உடல்நிலை மோசமாக ஆனாலும் நாம் பேராசையின் பிடியிலிருந்துவிடுபடாமல் அன்றாட பணிகளை மிகமோசமானதாக ஆக்கிவிடுகின்றோம்

சனி, 31 ஜனவரி, 2015

பணிபுரிபவர் ஒருவரின் சுயமதிப்பீடு


கிராமபுற இளைஞன் ஒருவன் பொதுதொலைபேசியில் ஒருரூபாய் நாணயத்தை இட்டு யாரோஒருவருடைய தொலைபேசி எண்ஒன்றை தெடர்புகொண்டான். இதனை அருகிலிருந்த கடைமுதலாளி ஒருவர் பார்த்து கொண்டிருந்தார். உடன் முயற்சி செய்த தொடர்பு அந்த இளைஞனுக்கு கிடைத்தது அதனால் அந்த இளைஞன் “வணக்கம்! அம்மா! நான் ஒரு தோட்ட தொழிலாளி பேசுகின்றேன். உங்களுடைய தோட்டத்தில் புல்லும் புதரும் தாறுமாறாக இருப்பதாக அறிகின்றேன். அதனை நான் சரிசெய்துகொடுக்கின்றன். அந்த பணியை நான் செய்வதற்கு அனுமதியுங்கள் அம்மா!”என்று கூறினான்.

உடன் எதிர் தரப்பிலிருந்து அந்த அம்மா, “ரொம்ப நன்றி! தம்பி! ஆனால், அந்த பணியை செய்வதற்கு ஏற்கனவே வேறொரு தோட்டக்காரனை ஏற்பாடு செய்துவிட்டேன். அதனால் பிறகு பார்க்கலாமே!” என பதில் அளித்தார்.

அதனை தொடர்ந்த இந்த இளைஞனும் “ஆயினும் அம்மா அந்த தோட்டக்காரனுக்கு நீங்கள் வழங்குவதில் பாதி தொகையை மட்டும் எனக்கு வழங்கினால் போதும் அந்த பணியை நான் முடித்துகொடுப்பேன்” எனமீண்டும் கோரியபோது, “மிகவும் நன்றி! தம்பி! இருந்தாலும் நான் அந்த பணிக்காக வேறொரு தோட்டக்காரனை ஏற்பாடு செய்துவிட்டேன். அதனால் இப்போது வாய்ப்பு எதுவும் இல்லை!” என பதில்அளித்தார்.

இருந்தபோதிலும் விடாது இளைஞன் “அம்மா! நான்உங்கள் தோட்டத்தை மிக அழகாக உருமாற்றி பார்ப்பவர்கள் கவரும்வண்ணம் மெருகூட்டிடுவேன்!” என அதிக தொந்திரவு செய்ததை தொடர்ந்து, எதிர்தரப்பில் அந்த அம்மா “பரவாயில்லை தம்பி! நான் அமர்த்தியுள்ள தோட்டக்காரன் நீசொல்வதை விட மிகபிரமாதமாக தோட்டத்தை மெருகூட்டிடும் பணிசெய்து கொண்டிருப்பதால் உனக்கு தற்போது அந்த பணியை வழங்கஇயலாது. அடுத்தமுறைபார்ப்போம். இப்போது என்னை என்னுடைய மற்ற பணிகளைசெய்யவிடு!” என தொலைபேசி இணைப்பை துண்டித்தார்.

இவை அனைத்தையும் பார்வையிட்டுகொண்டிருந்த அருகிலிருந்த கடைமுதலாளியானவர் “தம்பி! இங்கு என்னுடைய கடைக்கு வாருங்கள் தம்பி! உன்னால் செய்யகூடிய பணியை நான் தருகின்றேன். நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளத்தையும் தருகின்றேன்!” என கோரினார்.

அதனை தொடர்ந்த அந்த இளைஞன் “நன்றி! ஐயா! நான் பேசிய பணியை அந்த அம்மாவின் தோட்டத்தில் தற்போது நான்தான் செய்கின்றேன் அதனால் என்னுடை.ய பணியின் தன்மையையும் திறனையும் பற்றி ‘அந்த அம்மா என்ன எண்ணுகின்றார்கள்’ என தெரிந்துகொள்ளவே இந்த தொலைபேசி உரையாடல் செய்தேன். வணக்கம்! நான் வருகின்றேன் ஐயா!” என பதிலிறுத்து சென்றான்.

செவ்வாய், 30 டிசம்பர், 2014

தற்போது வாழும் மக்கள் நம்மைவிட நாம் பயன்படுத்தும்விலையுயர்ந்த உடைக்கும் , விலையுயர்ந்த வாகணங்களுக்கும் தான் மதிப்பை வழங்குகின்றனரே அன்றி அதனை பயன்படுத்தும் மக்களுக்கு அன்று


நல்ல புகழ்வாய்ந்த கவிஞர் ஒருவர் இருந்தார் அவருடைய சிறந்த கருத்துகளடங்கிய உரையினாலும் அறிவுரைகளினாலும் அவருடைய புகழ் நாடெங்கும் பரவியிருந்தது.ஆயினும் அவர் மிக எளிமையாக வாழ்ந்துவந்தார்.

அவர்வாழ்ந்துவந்த ஊருக்கு அருகிலிருந்த நகரத்தில் ஒரு பெரும் பணக்காரர் தன்னுடைய மகனுக்கு நடத்தவிருந்த திருமண விழாவிற்கு இந்த கவிஞரை கண்டிப்பாக வந்து மணமக்களை வாழ்த்தும்படி கோரி அழைப்பிதழை நேரில் வந்து வழங்கிசென்றார்

குறிப்பிட்ட நாளன்று அந்த திருமணவிழாவிற்கு மிக சாதாரணமான எளிமையான உடையணிந்த அந்த கவிஞரும் அந்த பணக்காரரின் மகனுடைய திருமண விழாவிற்கு சென்றார் விழா மண்டபத்தின் நுழைவுவாயிலை அடைந்தபோது பளபளவென மின்னும் விலையுயர்ந்த பட்டாடைகளையும் காலணிகளையும் அணிந்த பல பணக்காரர்கள் மகிழ்வுந்து வண்டிகளில் தங்களின் மணைவிமார்களுடன் வந்து இறங்கியதை தொடர்ந்து அந்த பணக்காரரும் ஓடிஓடி சென்று அவர்களை வரவேற்றார்

ஆனால் நீண்டநேரம் நுழைவுவாயிலில் நின்றுகொண்டிருந்த இந்த எளிமையான கவிஞனை என்னவென கூட விசாரிக்காமலும் வரவேற்பு செய்யாமலும் இருந்ததை கண்ணுற்ற அந்த கவிஞர் உடன் வேகமாக அருகில் அதேதெருவில் இருந்த வாடகை துணிகள் வழங்கும் கடைக்கு சென்று விலையுயர்ந்த பட்டாடையையும் காலணிகளையும் வாடகைக்கு பெற்று அணிந்து அதே பணக்காரர் வீட்டு திருமணவிழா மண்டபத்திற்கு வந்தார்

அப்போது அந்த பணக்காரர் வாருங்கள் வாருங்கள் கவிஞர் அவர்களே என முகமலர்ந்து வரவேற்றார்

அதோடுமட்டுமல்லாது அனைவரும் விருந்து உண்ணும் நேரம் வந்ததால் கவிஞரையும் நேராக விருந்து நடைபெறும் கூடத்திற்கு அழைத்து சென்று அமரவைத்து பணியாளர்களை அழைத்து கவிஞருக்கு மிக உயர்ந்த உணவுவகைகளை பரிமாறசெய்து மற்ற விருந்தாளிகளை உபசரிக்க வேறுபக்கம் சென்று திரும்பவும் அந்த கவிஞர் உணவருந்தும் இடத்திற்கு வந்து பார்த்தபோது அந்த கவிஞர் அவருடைய இலையில் பரிமாறபட்ட விலைமிகுந்த உணவுவகைகளை பட்டாடையிலும் துணிகளிலும் எடுத்து தேய்த்து கொண்டிருந்தார்

அதனை கண்ட அந்த பணக்காரர் என்ன கவிஞரே விலையுயர்ந்த பட்டாடைகளை இவ்வாறு வீணாக்குகின்றீர் என வினவியபோது ஐயா நான் இந்த திருமண விழாவிற்கு எளிமையான என்னுடைய சொந்த உடையில் வந்து நீண்டநேரம் காத்திருந்தபோது நீங்கள் என்னை கண்டுகொள்ளவே யில்லை ஆனால் நல்ல விலையுயர்ந்த இந்த பட்டாடைகளை அணிந்த வந்தபோதுமட்டும் மிக விமரிசையாக வரவேற்பு செய்து என்னை இந்த விருந்துநடைபெறும்கூடம் வரைவந்து விருந்தினை பரிமாற செய்தீர்கள்

அதனால் நீங்கள் நான் அணிந்த பட்டாடைக்குதானே மரியாதைசெய்தீர்கள் விருந்துணவை பரிமாறினீர்கள் அதனால்தான் இந்த விருந்து எனக்கன்று நான் அணிந்திருக்கின்ற இந்த பட்டாடைக்கு என்பதால் இந்த விலையுயர்ந்த பட்டாடையை இந்த விருந்துணவை உண்ணும்படி செய்கின்றேன் என கூறினார்

ஆம் தற்போது நம்மோட வாழும் மக்கள் கூட நம்மைவிட நாம் பயன்படுத்தும்விலையுயர்ந்த உடைக்கும் விலையுயர்ந்த வாகணங்களுக்கும் தான் மதிப்பை வழங்குகின்றனரே அன்றி அதனை பயன்படுத்தும் மக்களுக்கு அன்று என அறிந்துகொள்க

எதிர்கொள்ளும் எந்த பிரச்சினைக்கும் சிக்கல் இல்லாத எளிய தீர்வை கண்டு செயல்படுத்தி பயன்பெறுக


ஆவின் நிறுவனத்தில் பால்கோவாஉற்பத்தி செய்திடும் பகுதியில் உற்பத்தி செய்த பால்கோவாவை சிறிய பெட்டியில் வைத்து கட்டும் பிரிவு ஒன்று இருந்தது அவ்விடத்தில் நூறு பெட்டிக்கு ஒன்று என்றவாறு அவ்வப்போது பால்கோவாவை பெட்டியில் வைத்து கட்டபடாமல் இடையிடையே காலியான பெட்டிகளும் வெளியில் வந்துகொண்டிருந்தன.

இதனை அறிந்த ஆவின் நிறுவனத்தின் மேலாண்இயக்குநர் தனக்கு கீழ் பணிபுரியும் உற்பத்தி மேலாளரையும் பால்கோவாவை பெட்டியில் வைத்து கட்டபடும்பிரிவு மேற்பார்வையாளரையும் பணியாளர்களையும் அழைத்து கண்டிப்பாக இவ்வாறானநிகழ்வு ஏற்பட்டால் சம்பந்தபட்ட அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரித்தார்.

அதன்பின் இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்வு செய்வது என்று தலைமை அலுவலர்களின் கூட்டத்தில் ஆய்வுசெய்தபோது உற்பத்தி பொறியாளர் அந்தஇடத்தில் எக்ஸ்-ரே கருவி ஒன்றை அமைத்து பெட்டிகளில் ஏதேனும் காலியாக சென்றுகொண்டிருந்தால் அதனை கண்டுபிடித்திடவும் அதனடிப்படையில் அந்த காலிபெட்டியில் மட்டும் மீண்டும் பால்கோவாவை வைத்து கட்டி அனுப்பிடுமாறு செய்தால் இந்த பிரச்சினை தீர்வுசெய்யபட்டுவிடும் என கூறியதை ஏற்று அந்த தலைமை அலுவலர்கள் கூட்டத்தில் அதனையே செயல்படுத்துவது என ஒருமனதாக முடிவுசெய்தனர்.

அதனைதொடர்ந்து அந்ததீர்வை நடைமுறைபடுத்தினர் இந்நிலையில் அந்நிறுவனத்தில் உற்பத்தி கணக்கருக்கு இந்த செய்தி கிடைத்தவுடன் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டார் பிறகு அங்கு இந்த எக்ஸ்ரே கருவிக்கு பதிலாக ஒரு காற்றாடி ஒன்றை அமைக்கும்படி கூறி அந்த காற்றாடியின் சுழற்சியினால் ஏற்படும் வேகமான காற்றோட்டத்தின்மூலம் காலியான பெட்டி மட்டும் அந்த காற்றில் பறந்து செல்லுமாறும் அதன்பின்னர் அந்த காலியான பெட்டிகளைசேகரித்து மீண்டும் பால்கோவாவை நிரப்பும் படியும் செய்யபட்டது

இதனால் விலை அதிகமான எக்ஸ்ரே கருவிக்கு பதிலாக விலைகுறைந்த காற்றாடியாலேயே அந்த பணியை செய்யமுடிந்ததை கண்ணுற்ற மேலாண்மை இயக்குநர் உற்பத்தி கணக்கரின் இந்த பிரச்சினைக்கான எளிய தீர்வை பாரட்டினார்

ஆம் நாமும் எதிர்கொள்ளும் எந்த பிரச்சினைக்கும் சிக்கல் இல்லாத எளிய தீர்வை கண்டு செயல்படுத்தி பயன்பெறுவோம்

சனி, 27 டிசம்பர், 2014

அவரவர்களுடைய நிலையில் இருந்தால் என்ன நிகழ்வு நடைபெறும் என அறிந்து நம்முடைய பிள்ளைகளை எப்போதும் அன்புடன் நடத்துவதுதான் நம்முடைய அடிப்படை கடமையாகும்


சிலகாலங்களுக்கு முன்ப என்னுடைய நண்பர் பொருளாதார சிக்கலில் மாட்டிகொண்டு மிக அல்லலுற்றிருந்தார் அவ்வாறான சமயத்தில் ஒருநாள் அவருடைய நான்குவயது மகள் அவர்களுடைய வீட்டிலிருந்த மதிப்பு மிக்க பொருள் ஒன்றினை வீனாக்கிவிட்டதை தொடர்ந்து அந்நண்பருக்கு மிக அதிக கோபாமாகி ஒவ்வொரு ரூபாய்க்கும் அல்லாடிகொண்டிருக்கின்ற இந்த நிலையில் இவ்வாறு மதிப்புமிக்க பொருள் விணாக்கபட்டுவிட்டதே என அவருடைய மகளை மிககடுமையாக தீட்டி தீர்த்தார்

அதன்பிறகு சிலநாட்கள் கழித்து அவர்களுடைய பொருளாதார சிக்கலும் தீர்ந்த நிலையில் அவருடைய நான்குவயது மகள் அவருக்கு ஒரு பரிசு பெட்டியை வழங்கி அப்பா இந்த அன்பு பரிசு உங்களுக்காகத்தான் பெற்றுக்கொள்ளுங்கள் என அளித்தபோது அவருக்கு முன்னர் கடுமையாக தங்களுடைய மகளை திட்டிய செயலால் மிக தருமசங்கடமான நிலையாகவிட்டது

அந்த பரிசுபெட்டியை பிரித்து பார்த்தபோது அதுவெறுகாலியான பெட்டியாக இருந்ததை பார்த்து முன்புபோலவே கோபம் அதிகமாகி யாருக்கும் பரிசுபெட்டி அளிக்கும்போது அதனுள் ஏதாவது பொருட்களை வைத்துதானே வழங்கவேண்டும் என கடுமையாக மீண்டும் திட்ட ஆரம்பித்தார்

அவர் திட்டி முடியும்வரை அமைதியாக இருந்த அவருடைய மகள் அப்பா இந்த பரிசு பெட்டியில் என்னுடைய அன்புமுத்தங்கள் மட்டுமே என்னால் வைக்க முடிந்தது இதை உங்களுக்காகவே வைத்துள்ளேன் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியதும்

அவருக்கு மிக அதிக தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டது மகளே பிஞ்சுஉள்ளம் கொண்ட உன்னை நான் கோபமாக திட்டிவிட்டேனே அவ்வாறு நான் திட்டினாலும் நீ உன்னுடைய அன்பு முத்தங்களை வழங்கியுள்ளாயே என வருத்தபட்டு அவருடைய மகளை பராட்டியதோடுஇல்லாமல் தன்னை மன்னிக்கும்படி கோரினார்

அந்த நிகழ்விலிருந்து அந்நண்பர் அவருடைய மகள் அன்புமுத்தங்களுடன் அளித்த அந்த காலியான பரிசு பெட்டியை எப்போதும் அவருடைய படுக்கை அறையில் வைத்திருந்தார்

ஆம் நாம் அனைவருமே நம்மைபோன்றே நம்முடைய பிள்ளைகளும் இருப்பார்கள் என நம்முடைய கோபத்தை அவர்கள்மீது திருப்பிவிடுகின்றோம் அவ்வாறில்லாமல் அவர்களுடைய நிலையில் இருந்தால் என்ன நிகழ்வு நடைபெறும் என அறிந்து நம்முடைய பிள்ளைகளை எப்போதும் அன்புடன் நடத்துவதுதான் நம்முடைய அடிப்படை கடமையாகும்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...