வெள்ளி, 1 மே, 2020

திருத்தப்பட்ட நிறுமங்களின் சட்டம் 2018


திருத்தப்பட்ட நிறுமங்களின் சட்டம் 2018 இன்படி இந்த திருத்தப்பட்ட நிறுமங்களின் சட்டம் 2018 நடைமுறைக்கு வந்தபின்னர் பங்கு மூலதனத்தொகையுடன் பதிவு செய்யப்படும் அனைத்து நிறுமங்களும் தங்களுடைய முதன்முதலான வியாபார நடவடிக்கையை அல்லது நிறுவனங்களின் எந்தவொரு கடன்வாங்கிடும் நடவடிக்கையை செயல்படுத்திடுவதற்கு முன் தனியாக வியாபார நடவடிக்கைகளை துவங்குவதற்கான சான்றிதழ் (CERTIFICATE OF COMMENCEMENT OF BUSINESS )ஒன்றினை நிறுமங்களின் பதிவாளரிடமிருந்து கண்டிப்பாக பெற்றிட-வேண்டும் இந்ததிருத்தப்பட்ட நிறுமங்களின் சட்டம் 2018 ஆனது நவம்பர்2 ,2018 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது இந்த தேதிக்கு பிறகு பதிவுசெய்யப்படும் எந்தவொரு நிறுமமும் தனக்கென வியாபாரநடவடிக்கைகளை துவங்குவதற்கான சான்றிதழை கண்டிப்பாக பெற்றிட-வேண்டும்.இந்த நடைமுறையானது நிறுமங்களின் சட்டம் 1956 இல் செயல்-படுத்தப்பட்டு வந்தது ஆனால் நிறுமங்களின் சட்டம் 2013 இல் நடைமுறைபடுத்தப்-படவில்லை ஆயினும் தற்போது திருத்தப்பட்ட நிறுமங்களின் சட்டம் 2018 இன்படி இந்த செயல் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின் விதிகள் பின்வருமாறு திருத்தப்பட்ட நிறுமங்களின் சட்டம் 2018பிரிவு 10A. வணிக நடவடிக்கைகளை துவங்குவது (1)ஒரு நிறுமமானது இந்த திருத்தப்பட்ட நிறுமங்களின் சட்டம் 2018 நடைமுறைக்கு வந்தபின்னர் பதிவுசெய்யப்பட்டு முதன்முதலான வியாபார நடவடிக்கையை அல்லது நிறுவனங்களின் எந்தவொரு கடன்வாங்கிடும் நடவடிக்கையை பின்வரும் நிபந்தனையை பூர்த்தி செய்யாமல் செயல்படுத்திடமுடியாது அ. நிறுமம் பதிவுசெய்யப்பட்ட 180 நாட்களுக்குள் அந்நிறுமத்தில் இயக்குநர் ஒருவர் நிறுமத்தின் Memorandumof Association(MOA)எனும் முதன்மை ஆவணத்தில் குறிப்பிடப்-பட்டுள்ள முதலீட்டாளர்கள் அனைவரும் தாங்கள் ஏற்றுகொண்டவாறு பங்கு-மூலதனத் தொகையை செலுத்திவிட்டதாக அறிவிப்பு ஒன்றினை படிவம்எண் INC 20A ஐ நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பிக்கவேண்டும் இந்த படிவத்தில் நிறுமச்செயலர் அல்லது பட்டய கணக்காளர் அல்லது அடக்கவிலை கணக்காளர் ஆகியோர்களில் ஒருவரிடம் சான்று பெறவேண்டும். ஆ.நிறுமங்களின் பதிவாளரிடம் அந்நிறுமத்திற்கான பதிவு அலுவலக சரிபார்ப்பு சான்றிதழை நிறுமங்களின் சட்டம்2013 பிரிவு 12(2) இன்படி நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பிக்கவேண்டும் (2) இந்த சட்டப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனையை பூர்த்தி செய்யத்தவறினால் அந்நிறுமமானது ரூ.50ஆயிரம் அபராததொகையை செலுத்தநேரிடும் மேலும் நிபந்தனையை பூர்த்தி செய்யத்தவறிய ஒவ்வொரு நாளிற்கும் நாளொன்றிற்கு ரூபாய் ஆயிரம் வீதம் அதிகபட்சம் ரூ.ஒருஇலட்சம் வரை அபராத தொகையாக இவ்வாறு தவறிய அந்நிறுமத்தின் அலுவலர்கள் செலுத்தநேரிடும் (3) இந்த சட்டத்தின் பிரிவு (1)அ. இன்படி நிறுமமானது பதிவுசெய்யப்பட்ட 180 நாட்களுக்குள் படிவம்எண் INC 20A இன் வாயிலாகஅறிவிப்பினை நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பிக்க தவறினால் நிறுமங்களின் பதிவாளர் அந்த நிறுமமானது எந்தவொரு வியாபார நடவடிக்கையையும் துவங்கிடவில்லை அல்லது எந்தவொரு செயலையும் செய்திடவில்லை எனபோதுமான கால அவகாசத்துடன் அவர் இதேசட்டம்பிரிவு (2) இற்கு பாதகமில்லாமல் அடுத்தகட்ட நடவடிக்கையாக நிறுமங்களின் சட்டம் 2013 அத்தியாயம் XVIII இன்கீழ் பராமரிக்கப்படும் நிறுமங்களின் பதிவேட்டிலிருந்து இந்த நிறுமத்தின் பெயரை நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை செயல்படுத்த துவங்கிடுவார்

வியாழன், 30 ஏப்ரல், 2020

புதிய தலைமை செயல்இயக்குநரை தேர்வுசெய்தல்


வெற்றிகரமாக செயல்படும் ஒரு நிறுவனத்தின் தலைமை செயல்இயக்குநர் வயதாகிவிட்டதால் தனக்கு பின்னர் அந்நிறுவனத்தை தொடர்ந்து வெற்றிபாதையில் கொண்டுசெல்வதற்கான புதிய தலை மை செயல்இயக்குநரை தனக்கு கீழ் பணிபுரியும் செயல்திறனுடைய இளைஞர் களிலிருந்த ஒருவரை தேர்வு செய்யவிரும்பினார் அதற்காக புதிய வித்தியாசமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார் அதாவது தனக்கு கீழ் பணிபுரியும் துடிப்புள்ள இளைஞர்கள் அனைவரையும் ஒரு கூட்டரங்கில் ஒன்று சேர்த்து அவர்களிடம் "இளைஞர்களே உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு மரத்திற்கான விதை யும் அதனை முளைக்கவைத்து வளரச்செய்வதற்கான மண் தொட்டியும் வழங்கப்படும் நீங்கள் அனைவரும் இவ்விரண்டினையும் கொண்டு சென்று தத்தமது வீடுகளில் மண்தொட்டியை வைத்து அதில்அந்த மரக்கன்றின் விதையை ஊன்றி தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்திடவேண்டும் ஒருவருடம் கழித்து அனைவரும் அவரவர்களுக்கு வழங்கிய மண்தொட்டியை அதில் வளர்ந்துள்ள மரச்செடிகளுடன் இதே கூட்டரங்கிற்கு எடுத்துகொண்டுவந்து சேரவேண்டும் அப்போது நான் அவைகளை பார்வையிட்டு அதனடிப்படையில் உங்களுள் ஒருவரை எனக்கு அடுத்த இந்த நிறுவனத்தின் செயல்இயக்குநராக தெரிவுசெய்து நியமனம் செய்தபின் நான் பணிஓய்வு பெற்றவிடுவேன் சென்றுவாருங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்" என வாழ்த்தி அனுப்பிவைத்தார் அவர்களுள் அன்பு எனும் இளைஞனும் மிகவும் ஆர்வமாக தன்னுடைய வீட்டிற்கு சென்று தன்னுடைய துனைவியாரிடம் விவரங்களை கூறி இருவரும் ஆர்வமாக அந்த விதையை அந்த பூந்தொட்டியில் போதுமான எருக்களை இட்டு தண்ணீர் ஊற்றி சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து பராமரிப்பு செய்துவந்தனர் அந்த இளைஞனுடன் பணிபுரிந்த மற்ற நண்பர்களும் விதையானது முளைத்துவந்ததையும் செடியாக வளர்ந்து வருவதையும் பற்றி தினந்தோறும் தேநீர் இடைவேளையின்போது விவாதித்து வந்தனர் ஆனால் அன்பு என்பவரின் வீட்டின் மண்தொட்டியில் மட்டும் மரக்கன்று எதுவும் முளைக்கவும் இல்லை செடியாக வளரவும் இல்லை ஆயினும் தினமும் அந்த மண்தொட்டிக்கு தண்ணீர் ஊற்றுவது வேறு புல்பூண்டுகள் எதுவும் முளைக்காமல் பார்த்து கொள்வது சூரிய ஒளி படும்படி மிகச்சரியாக அந்த மண்தொட்டி உள்ளதாவெனதினமும் சோம்பலில்லாமல் பார்த்து பராமரித்து வந்தார் ஆறுமாதமானது அனைத்து அலுவலக நண்பர்களும் தத்தமது மரக்கன்றுகல் மண்தொட்டிகளில்பெரிய செடிகளாக வளர்ந்து விட்டதாக அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர் ஆனால் அ ன்புஎன்பவரின்மண்தொட்டியில் மட்டும் விதை முளைக்காமலேயே இருந்துவந்தது அதனால் அதுபற்றி நண்பர்கள் யாரிடமும் தகவல் எதுவும் தெரிவிக்காமல் மிகவும் மனவருத்ததுடன் ஆனால் தினமும் பார்வையிடுதல் தினசரி பராமரிப்பு பணிகளைசெய்தல் ஆகியன தவறாமல் மிகவும்பொறுப்புணர்வுடன் செய்துவந்தார் ஒருவருடம்முடிந்து அனைவரும் குறிப்பிட்டநாளில் அதே கூட்டரங்கிற்கு தாம் வளர்த்துவந்த மரச்செடிகளுடனான மண்தொட்டிகளுடன் வந்துசேர்ந்தனர் ஆனால் அன்பு எனும் இளைஞன் காலியான மரச்செடி ஏதும் முளைக்காத மண்தொட்டியை கூட்டரங்கிற்கு எடுத்துவந்தபோது அனைவரும் அன்புஎனும் இளைஞனையும் அவருடைய காலியான மண்தொட்டியையும் பார்த்து கிண்டலும் கேலியுமாகபேசி எள்ளிநகையாடினர் அதனால் அ ன்பு எனும் இளைஞன் மிக அதிக மனவருத்ததுடன் கூட்டரங்கில் கடைசி வரைசையில் தன்னுடைய காலியான மண்தொட்டியுடன் நின்று கொண்டிருந்தார் இந்நிலையில் நிறுவனத்தலைவர் கூட்டரங்கிற்கு வந்துசேர்ந்தார் "நண்பர்களே! இன்று உங்களுள் ஒருவரைஎனக்கு பதிலான செயல்இயக்குநராக நியமனம் செய்யவிருக்கின்றேன் அனைவரும் தயாராக இருக்கின்றீர்களா? நான் பார்வையிடவரலாமா ?"என அனுமதி கோரினார் .அனைவரும் கோரஸாக "வாருங்கள் ஐயா !"என அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கூச்சலிட்டனர் ஆனால் அ ன்புஎன்பவர்மட்டும் மிகவும் அமைதியாக இன்றோடு நம்முடைய கதை முடிந்தது நம்மை நம்முடைய பணியிலிருந்து வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள் என பயந்து கொண்டு கடைசி வரிசையில் யாருடைய பார்வையும் தன்மீது படாதவாறு நின்றுகொண்டிருந்தார் அந்த நிறுவனத்தலைவர் அருகிலிருந்த தன்னுடைய நேர்முகஉதவியாளரை அழைத்து கூட்டரங்கில் கடைசியாக பதுங்கி நின்றுகொண்டிருந்த அன்பு என்பவரை மரச்செடிஎதுவும்முளைக்காத அவருடைய காலியான மண்தொட்டியுடன் மேடைக்கு வருமாறு கேட்டுகொண்டார் அன்பு என்பவரும் தன்னுடைய மண்தொட்டியில் மரச்செடி முளையாததால் பயந்து கொண்டு கடைசியில் நின்றிருந்தை கண்டுபிடித்து நம்மை மட்டும் மேடைக்கு அழைக்கின்றாரே என்ன செய்யப்போகின்றாரோ என மனதிற்குள் மிகுந்தபயத்துடன் ஆனால் தனக்கிட்ட கட்டளையை தான் சரியாக பின்பற்றி வந்துள்ளேன் என்ன ஆனாலும் பார்த்து கொள்ளலாம் என மேடைக்கு வந்துசேர்ந்தார் உடன் அந்த நிறுவனத்தின் செயல்இயக்குநர் "வாருங்கள் அன்பு அவர்களே ! இந்த நிறுவனத்தின் வருங்கால் செயல்இயக்குநரே வாருங்கள் எனக்கு அருகில் உள்ள இந்த இருக்கையில் அமருங்கள் அப்படியே புதிய செயல்இயக்கநர் என்ற பதவியையும் ஏற்றுகொள்ளுங்கள் !"என வரவேற்புஉரையை அறிவிப்பு செய்ததும் இதுவரையில் அன்பு எனும் இளைஞனை கிண்டலும் கேலியும் செய்த அனைவரும் மிகவும் ஆச்சரியத்துடன் எவ்வாறு அன்புஎன்பவர் புதிய செயல்இயக்குநராக தேர்வுசெய்யப்பட்டார் என மிகவும் அமைதியாக அமர்ந்துவிட்டனர் "நண்பர்களே! நான் கடந்த ஆண்டு உங்கள் அனைவருக்கும் இதேநாளில் இதே கூட்டரங்கில் நன்கு வ ருத்தெடுக்கப்பட்ட முளைக்காத விதைகளைத்தான் அனைவருக்கும் மண்தொட்டியுடன் கொடுத்தேன் மற்ற அனைவரும் அந்த முளைக்காதவிதைக்கு பதிலாக அவரவர் விருப்பபடியான வேறு மரச்செடிகளின் விதையை அந்த மண்தொட்டியில் ஊன்றி மரச்செடியாக கொண்டுவந்துள்ளீர்கள் ஆனால் இந்த இளைஞன் அன்புஎன்பவர் மட்டும் நான் கொடுத்த முளைக்காத விதையை நன்றாக பராமரித்து அப்படியே அந்த விதையை நான் கொடுத்த நிலையில் என்னிடம் கொண்டுவந்து ஒப்படைத்துள்ளார் அதனால் இவர்தான் எனக்கு பின்னர் நான் இதுவரை இந்த நிறுவனத்தினை வெற்றிபாதையில் கொண்டுவந்தவாறு காப்பாற்றி மீண்டும் நான் விரும்பியபோது என்னிடம் திரும்ப ஒப்படைப்பார் அதனால் அவரையே நான் எனக்கு பின்னரான இந்த நிறுவனத்தின் செயல்இயக்குநராக தெரிவுசெய்தேன்" என அன்பு எனும் இளைஞனை தான் தெரிவுசெய்தஉண்மையை போட்டுடைத்தார் .

புதன், 29 ஏப்ரல், 2020

சேவையாளர்களுக்கும் சரக்கு சேவைவரியின் கீழான கலவைதிட்டம்


இதுவரையில் ஒரு சிறுதொழில்நிறுவனமானது தான் உற்பத்தி செய்திடும் பொருளை கொண்டு ஈட்டிடும் விற்பனைவருமானமானது ஆண்டு ஒன்றிற்கு ரூ.1.5கோடிக்கு மிகாமல் இருந்தால் இந்த சரக்கு சேவைவரியின் கீழான கலவைதிட்டத்தினை(Composition Scheme) தெரிவுசெய்து கொண்டு பல்வேறு வரிவிகிதங்களுக்கு பதிலாக அவைகளுள் ஏதேனும் ஒருவரிவிகிதத்தை மட்டும் அனைத்திற்குபின்பற்றி வரிசெலுத்தினால் போதும் அவ்வாறே வரிசெலுத்தியதற்கான அறிக்கை அரசிற்கு காலாண்டிற்கு ஒருமுறை சமர்ப்பித்தால் போதும் என்ற வசதி பொருட்களின் உற்பத்திசெய்பவர்களுக்கு மட்டும்இருந்துவந்தது.ஆயினும் சேவை வழங்குபவர்கள் இந்த மத்திய சரக்கு சேவைவரியின் கீழான கலவை திட்டத்தினை தெரிவுசெய்யமுடியாத நிலையிலிருந்துவந்தனர் தற்போது 01.04.2019 முதல் பொருட்களின் உற்பத்திமட்டுமல்லாது பல்வேறு சேவைகளை வழங்கிடும் சேவையளர்களும் விருப்பபட்டால் இந்த சரக்கு சேவை-வரியின் கீழான கலவைதிட்டத்தை தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்ளலாம் சரக்கு சேவைவரியின் கீழான கலவைதிட்டம் என்றால் என்ன? என்ற கேள்வியும் அதுபற்றி விரிவாக விளக்கமளித்தால் மட்டுமே அது பயனுள்ளதாக இருக்குமா இல்லையா-வென முடிவுசெய்து தெரிவுசெய்யமுடியும் என்ற சந்தேகமும் இங்கு கண்டிப்பாக நம்மனைவரின் மனதிலும் எழும் நிற்க சிறுதொழில் நிறுவனங்களில் நுகர்வோர்களுக்கான பொருட்களைஉற்பத்தி செய்பவர் , அந்த பொருட்களை கட்டுகளாக கட்டுபவர் , அந்த கட்டுகளை நுகர்வோருக்கு கொண்டு செல்வோர் என்றவாறு ஒரே வருமானவரிகணக்குஎண்ணின்கீழ் பணிகளை தனித்தனியாக செய்திடுவர் அதேபோன்றே கணினிமென்பொருள் உருவாக்குபவர், அதனை பயனாளரின் கணினியில் நிறுவுகைசெய்பவர் , பின்னர் அந்த பயன்பாட்டில் ஆண்டுமுழுவதும் சிக்கல் எழுந்தால் சரிசெய்து பராமரிப்பவர் என ஒரே வருமானவரி கணக்குஎண்ணின்கீழ் பணிகளை தனித்தனியாக செய்திடுவர் அதனை தொடர்ந்து அந்தந்தபணிகளுக்கென தனித்தனி வரிவிகிதங்களில் சரக்கு சேவைவரியாக அரசிற்கு செலுத்தவேண்டியுள்ளது இதனால் அதிக காலவிரையமும் பொருட்செலவுகளும் ஏற்படுகின்றன ஒரு சிறுதொழில்நிறுவனமானது தாம் வழங்கிடும் சேவைகளினால் ஈட்டப்படும் விற்பனைவருமானம்ஆண்டு ஒன்றிற்கு ரூ.20 இலட்சத்திற்குமிகாமல் இருந்தால் இந்த சரக்கு சேவைவரியின் கீழான கலவைதிட்டத்தினை தெரிவுசெய்து கொண்டு பல்வேறு வரிவிகிதங்களுக்குபதிலாக ஒரேயொருவிகிதத்தை மட்டும் அனைத்திற்கும் பின்பற்றி வரிசெலுத்தினால் போதும் (இந்நிலையில் ஆண்டு ஒட்டுமொத்த விற்பனை வருமானம் என்பது மாநிலங்களுக்குள்ளான விற்பனை , விரிவிலக்கு விற்பனை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி வருமானம், reverse charge வசதி பெற்றவை நீங்கலாக கணக்கிடவேண்டும்) அவ்வாறே வரிசெலுத்தியதற்கான அறிக்கை அரசிற்குகாலாண்டிற்கு ஒருமுறை சமர்ப்பித்தால் போதும் என்ற வசதி 01/04/2019முதல் அனுமதிக்கப்படுகின்றது .ஆயினும்மத்திய சரக்கு சேவைவரிசட்டம் பிரிவு 10(1) a. 10(1) b. ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருசில நிபந்தனையின்கீழ் இந்த வசதி அனுமதிக்கப்படுகின்றது உதாரணமாக சசேவரியின் கீழ் பதிவுபெறாத நபரின் விற்பனைவருமானமானது நிதியாண்டில்15ஜீலை அன்று ரூ.20.இலட்சத்திற்கு-மேல் உயரும்போது கண்டிப்பாக சசேவ கீழ் பதிவுசெய்துகொள்ளவேண்டும் அதனை தொடர்ந்து அவர்விருப்பபட்டால் ஆண்டு ஒன்றிற்கு விற்பனைவருமானம் ரூ.50 இலட்சம்வரை சேவைவரியின் கீழான கலவைதிட்ட வசதியை தெரிவுசெய்து கொள்ளலாம் அதாவது பதிவுசெய்திடும்15ஜீலை அன்று ஆண்டு விற்பணைவருமானம் ரூ.20.இலட்சமாக இருந்து சரக்கு சேவைவரியின் கீழான கலவைதிட்ட வசதியை தெரிவுசெய்து கொண்டு பயன்படுத்தி வரும்போது மிகுதி நிதியாண்டையும் சேர்த்து ஆண்டின் ஒட்டுமொத்த விற்பனைவருமானம் ரூ.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும் ஆயினும் அதேஆண்டின் பிப்ரவரி 20 இல் மிகுதி ரூ.30.(50-20) வரையிலும் வருமானமும் அதன்பிறகு மிகுதிநிதியாண்டின் மார்ச்சு 31வரை ரூ 50 இலட்சத்தினை தாண்டி உயரும்போது இந்த வசதியைபெற முடியாது என்றசெய்தியை மனதில் கொள்க . ஒட்டுமொத்தமாக ஒரு நிதியாண்டிற்கு சேவைகளினால் ஈட்டப்படும் ஆண்டு வருமானமானது ரூ.50 இலட்சத்திற்கு மிகாமல்இருக்கவேண்டும் மேலும் பெட்ரோல் டீசல் போன்ற சசேவகீழ் கொண்டுவரப்படாத பொருட்களை வழங்கிடும் பணியை மேற்கொள்ளகூடாது அதுமட்டுமல்லாது ஒரே மாநிலத்திற்குள் மட்டும் சேவைகளை வழங்குபவர்கள் அதனோடு இந்த வசதியைபெறமுடியாது நிரந்தர இந்திய குடியுரிமைபெறாதவர்களும் இந்திய குடியுரிமையே பெறாதவர்களும் இந்த வசதியை பெறமுடியாது மிகமுக்கியமாக ஐஸ்கிரீம், பான் மசாலா, புகையிலை பொருட்கள் போன்றவைகளை கையாளுபவர் இந்த வசதியை பெறமுடியாது கூடுதலாக ஒரே வருமானவரி கணக்கு எண்ணின்கீழ் வெவ்வேறு பணிகளை செய்திடுபவர் ITC எனும் முந்தைய சசேவரிசெலுத்தியதை கழித்து கொள்ளமுடியாது இவைமட்டுமல்லாது மின்வணிகம் செய்பவர் இந்த வசதியை பெறமுடியாது இந்த வசதியின் படி சேவை வழங்குவதற்காக தனித்தனியாக விற்பனை பட்டியல் தயார்செய்வதற்கு பதிலாக சேவையை வழங்கியதற்கான பட்டியலை மட்டும் தயார்செய்து வழங்கினால் போதும் மேலும் அந்த பட்டியில் ‘taxable person paying tax in terms of notification No. 2/2019-Central Tax (Rate) dated 07.03.2019, not eligible to collect tax on supplies’. என்ற வரியை கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் பொதுவாக இந்த வசதியை தெரிவுசெய்திடும் சேவை வழங்குபவர் தான் வழங்கிடும் சேவைகளுக்கு 6% மட்டும் வரிசெலுத்தினால் போதும் உணவுவிடுதி தங்கும்விடுதி ஆகிய சேவைகளை வழங்கிடும் சேவையாளர் 5% இந்த திட்டத்தின்கீழ் வரிசெலுத்தினால் போதும் இதற்கான அறிக்கை சமர்ப்பிப்பதற்காக படிவம் எண்GST CMP- 01 அல்லது GST CMP- 02. ஆகியவற்றை பயன்படுத்திடவேண்டும்

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

LLP எனும் கூட்டாண்மை நிறுவனங்களும் உற்பத்தி துறையில்ஈடுபடமுடியும்


இந்தியாவில் LLP என சுருக்கமாக அழைக்கப்பெறும் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை எனும் கருத்தமைவு 2008 ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம்2008 (Limited Liability Partnership Act, 2008 )இன் வாயிலாக அறிமுகபடுத்தப்பட்டது. இதில் கூட்டாண்மையின் நெகிழ்வுதன்மையும் நிறுமங்களின் வரையறுக்கப்பட்டபொறுப்பும் ஒருங்கிணைந்து கிடைக்கின்றது. அதனைதொடர்ந்து தனியார் நிறுமங்கள் பங்குசந்தையில் பட்டியலிடப்படாத நிறுமங்கள் போன்றவை தங்களுக்குள் ஒன்றிணைந்து LLP எனும் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுவனங்கள் ஏராளமாக உருவாக்கிகொண்டன. ஆனால் இந்தியாவில் இவ்வாறான LLP நிறுவனங்களானவை உற்பத்தி தொழிலகம் தவிர்த்த மிகுதி 12,000வகையான வியாபார பணிகளில் அல்லது சேவைகளில் மட்டுமே ஈடுபடுவதற்காக இதுவரை அனுமதிக்கப்பட்டுவந்தது. அதாவது இந்தLLP நிறுவனங்கள் உற்பத்தி துறையில் மட்டும் ஈடுபடமுடியாது எனும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வந்தது இந்நிலையில் நிறுமச் செயலர்களின் மாமன்றமானது உலகமுழுவதும் ஒரேகுடையின் கீழ் என்ற கருத்தமைவை நோக்கி அனைத்து வியாபாரநடவடிக்கைகளும் முன்னோக்கி சென்று கொண்டிருக்கும்போது LLP நிறுவனங்களை உற்பத்தி துறையிலும் அனுமதித்திடவேண்டும் என நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இதுவரையில் இருந்துவந்த உற்பத்தி தொழிலகத்தை துவங்கி செயல்படுத்தகூடாது என்ற கட்டுப்பாடு தற்போது தகர்க்கப்பட்டு ஏப்ரல்17,2019 முதல்LLP நிறுவனங்களும் உற்பத்திதொழிலகம் அதனுடைய துனைதொழிலகம் ஆகிய பணிகளை செயற்படுத்திடுவதற்காக பதிவுசெய்து கொள்ளலாம் எனும் அனுமதியை வழங்கியுள்ளது என்ற இனிய புதிய செய்தியை தெரிந்து கொள்க.

திங்கள், 27 ஏப்ரல், 2020

வரிவரவு , வரிசெலுத்து-வதற்கான மாதவாரியான அட்டவணையாக காணும் புதிய செயலியொன்று அறிமுகம்


பொதுவாக சசேவரி செலுத்துவதற்கான வரிபொறுப்பிற்கானGSTR-1எனும் படிவம் அவ்வாறே வெளிநாட்டிற்கு ஏற்றுமதிசெய்திடும்போதும் வரியேயில்லாது அனுப்பிடும்போதும் வழக்கமான பொருளை அல்லது சேவையை பெறும்போதும் நம்முடைய கணக்கில் சசேவரி செலுத்திய வரிவரவுக்கான GSTR3B எனும் படிவம் , ஒரு வியாபாரநிறுவனத்திலிருந்து மற்றொரு வியாபார நிறுவனத்திற்கு B2B (business to business) என்றவாறு விற்பணை பட்டிவாயிலாக பொருட்களை அல்லது சேவைகளை பரிமாறிக் கொள்ளும்போது அதற்காக செலுத்த போகும் வரிவரவை (input tax credit (ITC))குறிப்பிடுவதற்கான GSTR2A எனும் படிவம் என்றவாறு சசேவரி செலுத்துவது, சசேவரி உள்ளீட்டு வரிவரவு, செலுத்தப்போகும் உள்ளீட்டு வரிவரவு ஆகிய படிவங்களை தனித்தனியாக நாம் ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு காலாண்டிற்கும் இந்த சசேவஇணையதளத்தில் இதுவரையில் நாம் சமர்ப்பித்திடுவோம் . பொருளை அல்லது சேவையை பெறுபவரும் வழங்குபவரும் இந்த படிவங்களை அவ்வாறு தனித்தனியாக சமர்ப்பித்திடும்போது அவைகளை ஒன்றுகொன்று ஒப்பீடு செய்து சரிபார்ப்பது என்பது மிகச்சிரமமானபணியாகும் அவ்வாறான சிரமத்தை தவிர்த்து எளிதாக்கும் பொருட்டு GSTஇன் இணையதள பக்கத்தில் இவைகளை ஒருங்கிணைத்து நாம் கோரும் வரிவரவு வரிசெலுத்து-வதற்கான விவரங்களைமாதவாரியாக ஒரேயொரு அட்டவணையாக காண்பதற்கான புதிய செயலியொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த அட்டவணையின் வாயிலாக இப்படிவங்களில் ஏதேனும் வித்தியாசம் உள்ளதாவென ஒப்பிட்டு பார்த்து சரிசெய்து கொள்ளமுடியும் பொதுவாக வழக்கமான சசேவரி செலுத்துபவர் உள்ளீட்டுவரிவரவை GSTR3B எனும் படிவத்திலும் அவ்வாறு செலுத்தபோகும் உள்ளீட்டுவரிவரவை GSTR2A எனும் படிவத்திலும் பதிவுசெய்து மேலேற்றம் செய்திடுவார்கள் அதனை தொடர்ந்து அவைகளை நாம் பதிவேற்றம் செய்திடும் GSTR-1எனும் படிவத்தில் உள்ளீடு செய்யப்பட்டவிவரங்களுடன் ஒப்பிட்டு பார்த்து எவ்வளவு உள்ளீட்டுவரிவரவை கணக்கில் கொள்ளமுடியும் என்ற அட்டவ ணையானது இந்த புதிய செயலியின் வாயிலாக கிடைக்கின்றது. இந்த விவரங்களை பின்வரும் நாட்களில் சரிபார்த்து கொள்ளலாம் என விரும்பிடும்போது இந்த அட்டவணையை எக்செல் தாளாக பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும் இந்த வசதியானது GSTஇன் இணையதளபக்கத்தில்இதனுடைய Returnsஎனும் முகப்பு பக்கத்தில் Comparison of liability declared and ITC claimedஎன்பதன்கீழ் நாம் பயன்படுத்தி கொள்ள தயாராக உள்ளது என்ற செய்தியை மனதில் கொண்டு செயல்படுத்தி பயன்பெறுக .

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

DIR3-KYCஎனும் படிவத்தை சமர்ப்பிக்கவில்லையெனில் ஏற்படும் விளவுகள்


MCA என சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியஅரசின் நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகமானது(Ministry of Corporate Affairs) நிறுமங்களின் இயக்குநர்களின் நியனமும் தகுதியும் நான்காவது திருத்தம்விதிகள்2018 எனும் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது இதன்படி நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகத்தின்(MCA)இணையதள பக்கத்தில் பதிவுசெய்து DINஎனும் இயக்குநரின் பதிவுஎண் பெற்ற ஒவ்வொரு இயக்குநரும் DIR3KYCஎனும் படிவத்தை இந்த MCA இன் இணையபக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு 31இற்குள் சமர்ப்பித்திடவேண்டும் அதற்கு பிறகு எனில் ரூ.5000/- அபாரதத்துடன் இந்த படிவத்தை சமர்ப்பித்திடவேண்டும்.இவ்வாறு DIR3KYCஎனும் படிவத்தை இந்த MCA இன் இணையபக்கத்தில் சமர்ப்பிக்க வில்லை யெனில் குறிப்பிட்ட இயக்குநராக பதவிசெய்தவருக்கு ஒதுக்கப்பட்டDINஎனும் இயக்குநரின் பதிவுஎண் செயல்படாமல் நிறுத்தம் செய்யப்பட்டு விடும் அதனை தொடர்ந்து அந்தஇயக்குநர்வேறு எந்தவொரு நிறுமத்திலும் இயக்குநராக செயல்பட முடியாது. மேலும் நிறுமங்களுக்கான AOC-4, MGT-7 என்பன போன்ற பல்வேறு படிவங்களை MCA இன் இணையபக்கத்தில் பதிவேற்றம் செய்திடும்போது செயல்படாத இயக்குநரின் DINஎனும் இயக்குநரின் பதிவுஎண்ணை குறிப்பிடவே முடியாது. அதைவிட MCA இன் இணையபக்கத்தில் பல்வேறு படிவங்களை பதிவேற்றம் செய்திடும்போது செயல்படாத இயக்குநரின்DSC எனும் இரும கையொப்பத்தினை பயன்படுத்தி கொள்ளவே முடியாது. அதுமட்டுமல்லாது இவ்வாறு சமர்ப்பித்திடும் படிவங்களுடன் இணத்திடவேண்டிய பல்வேறு ஆவணங்களிலும் DINஎனும் இயக்குநரின் பதிவுஎண் செயல்படாத இயக்குநரின் கையொப்பமும் அவருடைய DINஎனும் இயக்குநரின் பதிவுஎண்ணும் செல்லாது ஆகிய செய்திகளை மனதில் கொண்டு பதிவு பெற்ற ஒவ்வொரு இயக்கு-நருக்குமானDIR3KYCஎனும் படிவத்தை இந்த MCA இன் இணையபக்கத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சமர்ப்பித்திடுக என பரிந்துரைக்கப் படுகின்றது .

சனி, 25 ஏப்ரல், 2020

Bagisto எனும் ஒரே மின்வணிககடை பலவிற்பணையாளர் ஒருஅறிமுகம்


Bagisto என்பது நம்முடைய ஒற்றையான மின்வணிக கடையை முழுமையான சந்தையாக மாற்றிடுகின்றது அதன்வாயிலாக நம்முடைய மின்வணிக கடைக்குள் பல்வேறு விற்பணையாளர்களும் தங்களுடைய வெவ்வேறு வகையான பொருட்-களை விற்பணைசெய்திடும் ஒரு சந்தைபோன்ற வசதியை இது வழங்குகின்றது. மேலும் நம்முடைய மின்வணிககடைக்கு வந்துசேரும் அனைத்து வாடிக்கையாளர்-களுக்கும் கொள்முதல் செய்திடுவதற்கான ஏராளமான வாய்ப்புகளை வெவ்வேறு வகையில் பல்வேறு விற்பணை யாளர்களிடமிருந்து பெறுகின்றவாறான வசதியை ஏற்பாடு செய்கின்றது. மேலும் ஒரே பொருளானது பல்வேறு விற்பனையாளர்-களால் வெவ்வேறு விலைகளில் விற்பணை செய்யப்படுவதால் வாடிக்கையாளர் ஒருவர் அவைகளின் விலைகளை ஒப்பிட்டுபார்த்து தான் விரும்பியவாறான பொருட்களை சரியான விலையில் கொள்முதல் செய்திடும் முடிவை எடுத்திடுமாறு ஊக்கவிக்கின்றது. ஒவ்வொரு விற்பணையாளரிடமும் கைவசமுள்ள பொருட்களின் அளவை அவ்வப்போது கணக்கிட்டு தேவைக்கேற்ப பொருட்களின் அளவை உயர்த்தி கொள்ளவும் நம்முடைய மின்வணிககடையில் எந்தபொருளும் இல்லையென்ற நிலையே நிகழாமல் பராமரித்திடவும் இது உதவுகின்றது. மேலும் விற்பணையாளர்களிடமிருந்து நமக்கு சேரவேண்டிய கழிவுத்தொகையை மிகச்-சரியாக கணக்கிட்டு வசூலித்திடவும் உதவுகின்றது. ஒருசில விற்பணையாளர்களின் புதிய பொருட்களை கொண்டுவந்து விற்பணைசெய்வதற்கான அனுமதியை தானாகவே வழங்கிடுமாறு செய்கின்றது ஒவ்வொரு விற்பணையாளரும் என்னென்ன பொருட்களை விற்கின்றனர் என இது பட்டியலிடுவதால் இதில் வாடிக்கையாளர் தமக்கு தேவையான பொருட்களை மிகச்சரியான விற்பணையாளரிடமிருந்து பெறுவதற்கும் விலைகளையும் பொருளின் தரத்தையும் ஒப்பீடுசெய்வதற்கும் ஆன வசதியை வழங்கின்றது. இந்த Bagisto எனும் பலவிற்பணையாளர் சந்தையானது தேடுவதற்கு எளிய இணைய முகவரியின் செயலை கொண்டிருப்பதால் விற்பணையாளர்கள் தங்களுடைய தன்விவர பக்கங்களின் விவரங்களையும் உற்பத்தி பொருட்களின் விவரங்களையும் அதற்கான இணைய முகவரிகளையும் தேவையானபோது மாற்றி கொள்வதற்காக இது அனுமதிக்கின்றது கூகுள் போன்ற தேடிபொறிக்கு எளிதில் புரிந்து கொள்ளுமாறு இதனுடைய விதிஅமைந்துள்ளது. இதில் நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களை கவர்ந்திடுமாறு அல்லது விற்பணையாளர்களை ஊக்கு வித்திடுமாறு கூடுதலான வசதிவாய்ப்புகளை கூடுதலிணைப்பாக இதில் சேர்த்துகொள்ளமுடியும் என்ற செய்தியையும் மனதில் கொள்க.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...