இதுவரையில் ஒரு சிறுதொழில்நிறுவனமானது தான் உற்பத்தி செய்திடும் பொருளை கொண்டு ஈட்டிடும் விற்பனைவருமானமானது ஆண்டு ஒன்றிற்கு ரூ.1.5கோடிக்கு மிகாமல் இருந்தால் இந்த சரக்கு சேவைவரியின் கீழான கலவைதிட்டத்தினை(Composition Scheme) தெரிவுசெய்து கொண்டு பல்வேறு வரிவிகிதங்களுக்கு பதிலாக அவைகளுள் ஏதேனும் ஒருவரிவிகிதத்தை மட்டும் அனைத்திற்குபின்பற்றி வரிசெலுத்தினால் போதும் அவ்வாறே வரிசெலுத்தியதற்கான அறிக்கை அரசிற்கு காலாண்டிற்கு ஒருமுறை சமர்ப்பித்தால் போதும் என்ற வசதி பொருட்களின் உற்பத்திசெய்பவர்களுக்கு மட்டும்இருந்துவந்தது.ஆயினும் சேவை வழங்குபவர்கள் இந்த மத்திய சரக்கு சேவைவரியின் கீழான கலவை திட்டத்தினை தெரிவுசெய்யமுடியாத நிலையிலிருந்துவந்தனர்
தற்போது 01.04.2019 முதல் பொருட்களின் உற்பத்திமட்டுமல்லாது பல்வேறு சேவைகளை வழங்கிடும் சேவையளர்களும் விருப்பபட்டால் இந்த சரக்கு சேவை-வரியின் கீழான கலவைதிட்டத்தை தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்ளலாம் சரக்கு சேவைவரியின் கீழான கலவைதிட்டம் என்றால் என்ன? என்ற கேள்வியும் அதுபற்றி விரிவாக விளக்கமளித்தால் மட்டுமே அது பயனுள்ளதாக இருக்குமா இல்லையா-வென முடிவுசெய்து தெரிவுசெய்யமுடியும் என்ற சந்தேகமும் இங்கு கண்டிப்பாக நம்மனைவரின் மனதிலும் எழும் நிற்க சிறுதொழில் நிறுவனங்களில் நுகர்வோர்களுக்கான பொருட்களைஉற்பத்தி செய்பவர் , அந்த பொருட்களை கட்டுகளாக கட்டுபவர் , அந்த கட்டுகளை நுகர்வோருக்கு கொண்டு செல்வோர் என்றவாறு ஒரே வருமானவரிகணக்குஎண்ணின்கீழ் பணிகளை தனித்தனியாக செய்திடுவர் அதேபோன்றே கணினிமென்பொருள் உருவாக்குபவர், அதனை பயனாளரின் கணினியில் நிறுவுகைசெய்பவர் , பின்னர் அந்த பயன்பாட்டில் ஆண்டுமுழுவதும் சிக்கல் எழுந்தால் சரிசெய்து பராமரிப்பவர் என ஒரே வருமானவரி கணக்குஎண்ணின்கீழ் பணிகளை தனித்தனியாக செய்திடுவர் அதனை தொடர்ந்து அந்தந்தபணிகளுக்கென தனித்தனி வரிவிகிதங்களில் சரக்கு சேவைவரியாக அரசிற்கு செலுத்தவேண்டியுள்ளது இதனால் அதிக காலவிரையமும் பொருட்செலவுகளும் ஏற்படுகின்றன ஒரு சிறுதொழில்நிறுவனமானது தாம் வழங்கிடும் சேவைகளினால் ஈட்டப்படும் விற்பனைவருமானம்ஆண்டு ஒன்றிற்கு ரூ.20 இலட்சத்திற்குமிகாமல் இருந்தால் இந்த சரக்கு சேவைவரியின் கீழான கலவைதிட்டத்தினை தெரிவுசெய்து கொண்டு பல்வேறு வரிவிகிதங்களுக்குபதிலாக ஒரேயொருவிகிதத்தை மட்டும் அனைத்திற்கும் பின்பற்றி வரிசெலுத்தினால் போதும் (இந்நிலையில் ஆண்டு ஒட்டுமொத்த விற்பனை வருமானம் என்பது மாநிலங்களுக்குள்ளான விற்பனை , விரிவிலக்கு விற்பனை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி வருமானம், reverse charge வசதி பெற்றவை நீங்கலாக கணக்கிடவேண்டும்) அவ்வாறே வரிசெலுத்தியதற்கான அறிக்கை அரசிற்குகாலாண்டிற்கு ஒருமுறை சமர்ப்பித்தால் போதும் என்ற வசதி 01/04/2019முதல் அனுமதிக்கப்படுகின்றது .ஆயினும்மத்திய சரக்கு சேவைவரிசட்டம் பிரிவு 10(1) a. 10(1) b. ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருசில நிபந்தனையின்கீழ் இந்த வசதி அனுமதிக்கப்படுகின்றது உதாரணமாக சசேவரியின் கீழ் பதிவுபெறாத நபரின் விற்பனைவருமானமானது நிதியாண்டில்15ஜீலை அன்று ரூ.20.இலட்சத்திற்கு-மேல் உயரும்போது கண்டிப்பாக சசேவ கீழ் பதிவுசெய்துகொள்ளவேண்டும் அதனை தொடர்ந்து அவர்விருப்பபட்டால் ஆண்டு ஒன்றிற்கு விற்பனைவருமானம் ரூ.50 இலட்சம்வரை சேவைவரியின் கீழான கலவைதிட்ட வசதியை தெரிவுசெய்து கொள்ளலாம் அதாவது பதிவுசெய்திடும்15ஜீலை அன்று ஆண்டு விற்பணைவருமானம் ரூ.20.இலட்சமாக இருந்து சரக்கு சேவைவரியின் கீழான கலவைதிட்ட வசதியை தெரிவுசெய்து கொண்டு பயன்படுத்தி வரும்போது மிகுதி நிதியாண்டையும் சேர்த்து ஆண்டின் ஒட்டுமொத்த விற்பனைவருமானம் ரூ.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும் ஆயினும் அதேஆண்டின் பிப்ரவரி 20 இல் மிகுதி ரூ.30.(50-20) வரையிலும் வருமானமும் அதன்பிறகு மிகுதிநிதியாண்டின் மார்ச்சு 31வரை ரூ 50 இலட்சத்தினை தாண்டி உயரும்போது இந்த வசதியைபெற முடியாது என்றசெய்தியை மனதில் கொள்க .
ஒட்டுமொத்தமாக ஒரு நிதியாண்டிற்கு சேவைகளினால் ஈட்டப்படும் ஆண்டு வருமானமானது ரூ.50 இலட்சத்திற்கு மிகாமல்இருக்கவேண்டும் மேலும் பெட்ரோல் டீசல் போன்ற சசேவகீழ் கொண்டுவரப்படாத பொருட்களை வழங்கிடும் பணியை மேற்கொள்ளகூடாது அதுமட்டுமல்லாது ஒரே மாநிலத்திற்குள் மட்டும் சேவைகளை வழங்குபவர்கள் அதனோடு இந்த வசதியைபெறமுடியாது நிரந்தர இந்திய குடியுரிமைபெறாதவர்களும் இந்திய குடியுரிமையே பெறாதவர்களும் இந்த வசதியை பெறமுடியாது மிகமுக்கியமாக ஐஸ்கிரீம், பான் மசாலா, புகையிலை பொருட்கள் போன்றவைகளை கையாளுபவர் இந்த வசதியை பெறமுடியாது கூடுதலாக ஒரே வருமானவரி கணக்கு எண்ணின்கீழ் வெவ்வேறு பணிகளை செய்திடுபவர் ITC எனும் முந்தைய சசேவரிசெலுத்தியதை கழித்து கொள்ளமுடியாது இவைமட்டுமல்லாது மின்வணிகம் செய்பவர் இந்த வசதியை பெறமுடியாது
இந்த வசதியின் படி சேவை வழங்குவதற்காக தனித்தனியாக விற்பனை பட்டியல் தயார்செய்வதற்கு பதிலாக சேவையை வழங்கியதற்கான பட்டியலை மட்டும் தயார்செய்து வழங்கினால் போதும் மேலும் அந்த பட்டியில் ‘taxable person paying tax in terms of notification No. 2/2019-Central Tax (Rate) dated 07.03.2019, not eligible to collect tax on supplies’. என்ற வரியை கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் பொதுவாக இந்த வசதியை தெரிவுசெய்திடும் சேவை வழங்குபவர் தான் வழங்கிடும் சேவைகளுக்கு 6% மட்டும் வரிசெலுத்தினால் போதும் உணவுவிடுதி தங்கும்விடுதி ஆகிய சேவைகளை வழங்கிடும் சேவையாளர் 5% இந்த திட்டத்தின்கீழ் வரிசெலுத்தினால் போதும் இதற்கான அறிக்கை சமர்ப்பிப்பதற்காக படிவம் எண்GST CMP- 01 அல்லது GST CMP- 02. ஆகியவற்றை பயன்படுத்திடவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக