பொதுவாக சிறுவியாபார நிறுவனங்கள் தங்களுடைய அன்றாட பணிகளை முடிப்பதற்கே சிரமமப்படும்போது தம்முடைய வியாபாரத்தின் வெற்றிக்கான வளர்ச்சிபாதையில் கொண்டுசெல்வதற்காக புதியவழிமுறைகளை செயல்படுத்திடுவதை பற்றி சிந்திக்கவேமுடியாத சூழலில்இவைகளை அறவே தவிர்த்திடுவார்கள் அவ்வாறானவர்கள் இவ்வாறான சூழலில்கூட பின்வரும் படிமுறைகளை பின்பற்றி தங்களுடைய வியாபாரத்தை வெற்றிகரமாக வளர்ச்சிபாதைக்கு கொண்டுசெல்லமுடியும்
படிமுறை.1. நம்முடைய நிறுவனத்தில் உற்பத்தியாகும் பொருளைபற்றிஅல்லது வழங்கிடும் சேவையை பற்றி கானொளி காட்சிகளை மிகச்சரியாக போதுமானஅளவு தயார்செய்து அதனை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூதாய பல்லூடக வலைபின்னலில் வெளியிடச்செய்திடுக அதனோடுகூடவே நம்முடைய நிறுவனத்தைபற்றியும் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடிஎழும் சந்தேகங்களையும் அதை தீர்வுசெய்வதற்கான வழிமுறைகளைபற்றியும் அதற்கான பதிலும் FAQ வாயிலாக தயார்செய்து அதனையும் வெளியிடச்செய்திடுக அதைவிட உள்ளூர் நிகழ்வுகளில் நம்முடைய நிறுவனமும் LinkedInமூலம் பங்கெடுத்து கொள்ளுமாறு செயல்படச்செய்திடுக மிக முக்கிய மாக ஒருசிலசிறப்பு அறிவிப்புகளை சமூதாயபல்லூடக வலைபின்னலின் வாயிலாக அவ்வப்போது வெளியிடச்செய்திடுக
படிமுறை.2. நம்முடைய நிறுவனத்திற்கென தனியாக இணையதளபக்கத்தை உருவாக்கி பராமரித்திடுக தொடர்ந்து மேலே படிமுறை1.இல் கூறியவாறு சமூதாயபல்லூடக வலைபின்னலில் கானொளி காட்சிகளாக வெளியீடு செய்தவைகளை நம்முடைய இணையதளபக்கங்களிலும் வெளிடச்செய்திடுக மிகமுக்கியமாக நிறுவனத்தைபற்றியும் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடிஎழும் சந்தேகங்களையும் அதை தீர்வுசெய்வதற்கான வழிமுறைகளைபற்றியும் அதற்கான பதிலும் FAQ வாயிலாக தயார்செய்து வெளியிடசெய்திடுக
படிமுறை.3. மேலேகூறிய கானொளி காட்சிகளை பொழுதுபோக்குபோன்றோ வழக்கமான பத்தோடு பதினொன்று என்றவாறோ பார்வையாளர் தாண்டிசென்றிடாமல் call-to-action (CTA) எனும் அடுத்த செயலிற்கு அதாவது மேலும்நம்முடைய நிறுவனத்தைபற்றிய விவரங்களை முழுவதுமாக அறிந் தெரிந்து கொள்வதற்காகவென தனியாக மின்புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படித்தறியுமாறு கொண்டுசெல்க இந்நிலையில் உடனடியாக நம்முடைய உற்பத்தி பொருளை அல்லது சேவையை வாங்கிடுமாறு பார்வையாளர்களிடம் வலியுறுத்தி தொந்திரவுசெய்து அவர்களை வெறுப்படையச் செய்திடக்கூடாது அதற்கு பதிலாக எவ்வாறான வழிமுறையில் இவற்றை எளிதாக கொள்முதல் செய்திடமுடியும் என்ற விவர கானொளி காட்சியை மட்டும் CTA எனும் செயலில் கொண்டுவருவது நன்று
படிமுறை.4. அடுத்து என்னதான் இணையதளபக்கத்தை பராமரித்தாலும் பொதுமக்கள் அனைவரும் நம்முடைய இணையபக்கத்தை பார்வையிட வருவார்கள் என்ற உத்திரவாதம்எதுவும் அளிக்கமுடியாது அதனால்அதற்கான தீர்வாக பொதுமக்கள் கைகளில் வைத்துள்ள அனைத்துவகையான செல்லிடத்து பேசிகளிலும் மேலேகூறிய கானொளி காட்சிகளை தகவல்களை காணமுடியுமாறு செய்திடுக மிகமுக்கியமாக இவையனைத்தும் சமூதாய பல்லூடகங்களின் வாயிலாக பொதுமக்களின் கைபேசி களிலும் அல்லது திறன்பேசிகளிலும் சென்றடையுமாறு செய்திடுக
படிமுறை.5. இறுதியாக மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுடனும் நடப்பிலுள்ள வாடிக்கையாளர்களுடனும் நேரடியான கேள்விபதில் ,குழுவிவாதம் ஆகியவற்றின் வாயிலாக தொடர்பு இருந்து கொண்டே இருக்குமாறு பார்த்து கொள்க .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக