வெள்ளி, 24 ஏப்ரல், 2020

MSMEஆக பதிவுசெய்வதற்கான வழிமுறைகளும் அதனால் கிடைக்கும் பயன்களும்


மீச்சிறு ,சிறு ,நடுத்தர தொழிலகங்களை(Micro,Small,Medium Enterprises) சுருக்கமாக MSME என அழைக்கப்படும். பொதுவாக இந்த தொழிலகங்களை செயல்படுத்திடு-வதற்கான இயந்திரங்களுக்கும் கருவிகளுக்கும் தேவையான தொகையை முதலீடு செய்வதன் அடிப்படையில் இவைகள் எந்தெந்தவகையென வரையறுக்கப்-படுகின்றது.அதாவது, மீச்சிறு தொழிலகம் எனில் இயந்திரங்களுக்கு இந்தியரூபாய் 25 இலட்சம் வரையிலும் கருவிகளுக்கு இந்தியரூபாய் 10 இலட்சம் வரையிலும் முதலீட்டு வரையறை கொண்டிருக்கவேண்டும். சிறுதொழிலகம் எனில் இயந்திரங்களுக்கு இந்தியரூபாய் 25 இலட்சம் முதல் 5 கோடி வரையிலும் கருவிகளுக்கு இந்தியரூபாய் 10 இலட்சம் முதல் 2கோடிவரையிலும் முதலீட்டு வரையறை கொண்டிருக்கவேண்டும். நடுத்தர தொழிலகம் எனில் இயந்திரங்களுக்கு இந்தியரூபாய் 5 கோடி முதல் 10 கோடி வரையிலும் கருவிகளுக்கு இந்தியரூபாய் 2 கோடி முதல் 5கோடி வரையிலும் முதலீட்டு வரையறை கொண்டிருக்கவேண்டும். இந்தியாவில் உற்பத்தி அல்லது சேவை நிறுவனமாக தொழில் துவங்கிடும் எந்தவொரு நிறுவனத்தின் முதலீட்டு தொகையும் மேற்கண்ட வரையறைக்குள் உள்ளவாறு பதிவு செய்து கொண்டால் பின்வரும் பல்வேறுபயன்கள் அந்நிறுவனத்திற்கு கிடைக்கின்றன. MSME ஆக பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் தமக்கு தேவையான கடன்தொகையை வணிக வங்கிகளில் கோரும்போது அதற்காகவென தனியாக வங்கிஉத்திரவாதம் எதுவும் வழங்கத் தேவையில்லை MSME பதிவுஎண் மட்டுமே போதுமானதாகும். MSME ஆக பதிவுசெய்யப்பட்ட தொழிலகங்கள் பயன்படுத்திடும் மின்சாரத்திற்கு குறிப்பிட்ட அளவுவரை மின்கட்டணத்தினை செலுத்தாமல் அதற்கு- மேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் MSME ஆக பதிவுசெய்யப்பட்ட தொழிலகங்கள் தங்களுக்கான patent, Trademark ஆகியவற்றை பதிவுசெய்திடும்போது அதற்கான பதிவு கட்டணத்தில் 50 % மட்டும் செலுத்தினால் போதும். MSME ஆக பதிவுசெய்யப்பட்ட தொழிலகங்கள் தங்களுடைய தொழிலை விரிவு- படுத்திகொள்ளவும் மேம்படுத்திகொள்ளவும் ஏராளமான தொழில் வளர்ச்சி சலுகை (subsidy) வழங்கப்படுகின்றது MSME ஆக பதிவுசெய்யப்பட்ட தொழிலகங்கள் துவங்கி குறிப்பிட்ட காலம் வரை பல்வேறு நேர்முக, மறைமுகவரிகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகின்றது. MSME ஆக பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை அல்லது சேவைகளை குறிப்பிட்ட செந்தரத்துடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திடும்-போது முழுமையான ஏற்றுமதி வரிவிலக்கு கிடைக்கின்றது. MSME ஆக பதிவுசெய்யப்பட்ட தொழிலகங்களின் புத்தாக்கங்ளுக்கும் புதுவடிவமைப்புகளுக்கும் 75 % முதல் 80 % வரை அரசின் கடனுதவி வழங்கப்படுகின்றது , MSMEதொழிலகங்களை பெண்களின் பதிவுசெய்து துவங்கிடும்போதுமேலும் பல்வேறு புதிய சலுகைகள் வழங்கப்படுகின்றன . நடப்பிலுள்ள தொழிலகங்கள் MSMEஆக பதிவுசெய்து தங்களுடைய தொழிலை பழைய தொழில்நுட்பத்திலிருந்து புதிய தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தி கொள்ளும்போது பல்வேறு முதலீட்டு சலுகைகள் வழங்கப்படுகின்றன தனிநபர் நிறுமம் ,வரையறுக்கப்பட்ட நிறுமம் ,கூட்டுகுடும்ப தனியார் வரையறுக்கப் பட்டநிறுமம் ,கூட்டாண்மை நிறுமம் ஆகியகட்டமைப்பில் உள்ள தொழிலகத்தினை ஒரு MSME பதிவுசெய்துகொள்ளமுடியும் இவ்வாறானMSME பதிவுசெய்துகொள்வதற்காக பின்வரும் வழிமுறைகளை பின்பற்றிடுக முதலில் இதற்காக https://legaldocs.co.in/msme-registration எனும் இணைய பக்கத்திற்கு செல்க. உடன் திரையில் விரியும் படிவத்தில் பதிவுசெய்ய விரும்புவோரின் பெயர் ,ஆதார் எண், தொழிலகத்தின் பெயர், முகவரி, வருமானவரி பதிவுஎண், செல்லிடத்து பேசிஎண், வங்கி கணக்குஎண் என்பனபோன்ற தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளீடுசெய்து பூர்த்தி செய்திடுக.இவைகளை இணைய இணைப்பில்லாமலும் பூர்த்திசெய்து மேலேற்றம் செய்திடலாம். மேலும் சொந்த கட்டிடம் எனில் வீட்டுவரி செலுத்திய ஆவணம், வாடகை கட்டிடம் எனில் கட்டிட சொந்தகாரருடன் ஏற்படுத்தி கொண்ட ஒப்பந்த நகலுடன் அங்கு தொழிலகத்தை துவங்குவதற்கு அந்த கட்டிடசொந்தகாரரின் ஆட்சேபனை யில்லையெனும் கடிதம் ,கூட்டாண்மைநிறுவனமாக பதிவுசெய்யப்பட்டதெனில் அதற்கான சான்றாவணம் ,நிறுமமாக பதிவுசெய்யப்பட்டதெனில் அதற்கான ஆவணம், இயக்குநர்களின் குழுக்கூட்டத்தீர்மானம் போன்ற தேவையான அனைத்துஆவணங்களையும் இதனுடன் இணைப்பதற்காக தயார்செய்துகொள்க. இவையனைத்தையும் பதிவேற்றம் செய்து சமர்ப்பித்திடுக உடன் அனைத்தும் சரியாக இருந்தால் அன்றே நமக்கென தனியாக MSMEபதிவுஎண் ஒன்று ஒதுக்கீடுசெய்யப்பட்டு வழங்கப்படும். அன்றிலிருந்து நம்முடைய பணியை துவங்கிடலாம் MSME ஆக பதிவு-செய்வதற்கான பதிவுகட்டணம் எதுவும் செலுத்ததேவையில்லைஎன்ற செய்தியையும் மனதில் கொள்க. .

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...