வியாழன், 16 ஏப்ரல், 2020

தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமங்களில் நிருவாக இயக்குநரையும் முழுநேர இயக்குநரையும் நியமித்தல்


நிறுமங்களின் சட்டம்2013இல் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமங்களில் நிருவாக இயக்குநரைஅல்லது முழுநேரஇயக்குரை கண்டிப்பாக நியமனம் செய்யவேண்டும் என்றோ அல்லது நியமனமே செய்ய வேண்டாம் என தடுக்கவோ தவிர்க்கவோ இல்லை ஆயினும் எந்தவொரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமமும் திறனுடன் செயலாற்றுவதற்காக அந்நிறுமத்தில் நிருவாக இயக்குநரைஅல்லது முழுநேரஇயக்குரை நியமித்து கொள்வது நல்லது என பரிந்துரைக்கப்படுகின்றது. நிறுமங்களின் சட்டம்2013 பிரிவு 2 (54) இன்படிநிருவாக இயக்குநர் என்பவர் நிறுமத்தின் நிறும அமைப்பு விதிமுறைகளின்படி(Articles of Association) அல்லது அந்த நிறுமத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி அல்லது நிறுமத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அல்லது இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி நிறுமத்தினை திறம்பட நடத்தி செல்வதற்கான அந்நிறுமத்தின் அனைத்து அதிகாரங்களையும் கைகொண்டு செயல்படும் நிருவாக இயக்குநர் அல்லது வேறுஏதேனும் பெயரில் செயல்படும் நபராவார் நிறுமங்களின் சட்டம்2013 பிரிவு 2 (94) இன்படி முழுநேர இயக்குநர் என்பவர் அந்நிறுமத்தின் முழுநேரமும் பணிபுரியும் இயக்குநராவார் .வேறு வார்த்தைகளில் கூறுவதெனில், ஒரு நிறுவனத்தின் விவகாரங்களை கவணித்து கொள்வதில் தனது முழுநேரத்தையும் கவணத்தையும் செலவழித்து பணிபுரியும் இயக்குநரே முழுநேரஇயக்குநராவார். ஏற்கனவே ஒரு நிறுமத்தின் இயக்குநராக இருக்கும் நபர் மட்டுமே அந்நிறுமத்தில் நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ நியமிக்கமுடியும்.அதனால் ஒருநபர் எந்தவொரு நிறுமத்திலும் நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ செயல்பட வேண்டுமெனில் முதலில் அந்த நபர் அந்நிறுமத்தில் இயக்குநராக இருக்கவேண்டும் என்பது முன்நிபந்தனையாகும் அதனால் தற்போது ஏதேனும் ஒருநபரை ஒருநிறுமத்தில் கூடுதல் இயக்குநராக இயக்குநர்களின் குழுவில் நியமனம் செய்தால் அந்த கூடுதல் இயக்குநராக பதவிவகிப்பவர் தானாகவே அந்நிறுமத்தின் நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ நியமனம் செய்வதற்கு தகுதியுடையவர் ஆகின்றார் ஆயினும் அந்த கூடுதல் இயக்குநர் பதவியானது அடுத்த பொதுப்பேரவை கூட்டம் நடைபெறும்வரை மட்டுமே நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ பதவி வகிக்கமுடியும் அந்த பொதுப்பேரவை கூட்டத்தில் அந்த கூடுதல் இயக்குநரை மறுநியமனம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் தானாகவே அக்கூடுதல் இயக்குநர் தொடர்ந்து அந்நிறுமத்தின் நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ பதவி வகிக்க இயலும் . பொதுவாக எந்தவொரு நிறுமத்திலும் நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ நியமனம் செய்பவருக்கு குறைந்தபட்சம் 21 வயதும் அதிகபட்சம் 70 வயதும் இருக்கவேண்டும் 70 வயதிற்கு மேல் எனில் அந்நிறுமத்தின் பொதுப்பேரவைகூட்டத்தில் சிறப்புத்தீர்மானம் நிறைவேற்றி பொதுப்பேரவையில் உறுப்பினர்கள் அத்தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்திடவேண்டும் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ நியமனம் செய்திடமுடியும் மேலும் காலநீ்ட்டிப்பு வேண்டுமெனில் மற்றொரு 5 ஆண்டிற்கு மறுநியமனம் செய்து கொள்ளலாம் ஆயினும் இயக்குநரின் பதவிகாலம் ஒரு ஆண்டிற்குள் இருக்கும்போது நிருவாக இயக்குநராகவோ அல்லது முழுநேர இயக்குநராகவோ நியமனம் செய்திடமுடியாது இந்நிலையில் நிருவாக இயக்குநர் ,முழுநேர இயக்குநர் ஆகிய இருபதவிகளையும் வகிப்பவர்கள் நிறுமத்தின் நிருவாகத்தை திறம்பட நடத்துபவர்கள்தான் எனில் இவ்விருவர்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் யாவை என்ற கேள்வி நம்முடைய மனதில் இயல்பாக எழும் .நிற்க. நிருவாக இயக்குநரை 5 ஆண்டுகளுக்கு மட்டுமே ஒவ்வொருமுறையும் நியமனம் செய்திடமுடியும் முழுநேர இயக்குநர் அவருடைய வாழ்நாள் முழுவதற்குமாக நியமனம் செய்திடலாம் தனிநபர் ஒருவர் நிருவாக இயக்குநராக இரண்டு நிறுமங்களில் மட்டுமே பணிபுரியமுடியும் ஆனால் முழுநேர இயக்குநர் ஒரேயொரு நிறுமத்தில் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்படுவார் நிறுமங்களின் சட்டம்2013இன்படி நிருவாக இயக்குநரை அல்லது முழுநேர இயக்குநரை நியமனம் செய்திடுவதற்கான வழிமுறைகள் நிறுமத்தின் அமைப்புவிதிமுறைகளில் இவ்வாறு நிருவாக இயக்குநரை அல்லது முழுநேர இயக்குநரை நியமனம் செய்திடுவதற்காக குறிப்பிடப்பட்டு ஒப்புதல் பெறப் பட்டிருக்கவேண்டும் அவ்வாறு இல்லையெனில் அவ்விதிமுறைகளில் திருத்தம் செய்வதன் வாயிலாக நியமனம் செய்வதற்கான விதிமுறைகளை சேர்த்திடவேண்டும் அதற்காக இயக்குநர்களின் குழுக்கூட்டத்தை கூட்டி அதில் நிருவாக இயக்குநரை அல்லது முழுநேர இயக்குநரை நியமனம் செய்வதற்கான விதிமுறைகளை உருவாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெறவேண்டும் மேலும் நியமனம் செய்திடும் நிருவாக இயக்குநருடன் அல்லது முழுநேர இயக்குநருடன் இந்நியமனம் தொடர்பான நிபந்தனைகள் விதிமுறைகள் ஆகியவற்றுடன் தனியாக ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்தி கொள்ளவேண்டும் படிவம் எண்DIR- 12இல் நிருவாக இயக்குநரை பற்றியஅல்லது முழுநேர இயக்குநரை பற்றிய விவரங்களை முழுவதுமாக பூர்த்திசெய்தபின் , இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் இதற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கான படிவம் எண் MGT-14 இல் மேலும் தேவையான விவரங்களை பூர்த்தி செய்துகொண்டு இவ்வாறு நியமனம் செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் நிறுமங்களின் விவகார அமைச்சகத்தின் (MCA)கீழ்செயல்படும் நிறுமங்களின் பதிவாளரிடம் இவ்விரு படிவங்களையும் சமர்ப்பித்திடவேண்டும் புதியதாக நியமனம் செய்வது மட்டுமல்லாமல் மறுநியமனம் செய்வது நியமன நிபந்தனைகளை அல்லது விதிமுறைகளில் மாறுதல்கள் செய்து கொண்டாலும் அதையும் படிவம் எண்DIR- 12 படிவம் எண் MGT-14 ஆகியவற்றின் வாயிலாக நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பித்திடவேண்டும் எந்தவொரு நிறுமத்திலும் சாதாரன இயக்குநர் பதவியை வகிப்பவர் எனில் அவ்வியக்குநர் தன்னுடைய பதவி விலகலை எழுத்துமூலமாக தம்முடைய நிறுமத்தின் இயக்குநர் குழுவிடம் அளித்துவிட்டால் போதுமானதாகும் ஆயினும் நிருவாக இயக்கநர் அல்லது முழுநேர இயக்குநர் எனில் பதவிவிலகல் கடிதம் அளித்து அந்த கடித்தத்தினை இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் ஏற்றுகொண்டால்மட்டுமே பதவிவிலகமுடியும் அதுவரையில் அவர் தன்னுடைய பதவியில் தொடர்ந்து இருக்கவேண்டும் தனியார்வரையறுக்கப்பட்ட நிறுமத்தில் நிருவாக இயக்குநரை அல்லது முழுநேர இயக்குநரை நியமனம் செய்வது தொடர்பாக பொதுப்பேரவைகூட்டத்தில் ஒப்பதல் பெறத்தேவையில்லை அவ்வாறே அவர்களுக்கான ஊதியம் தொடர்பான நிறுமங்களின் சட்டவிதிகள் பொருந்தாது மின்னனு படிவம்எண் MR-1 சமர்ப்பிக்கவும் தேவையில்லை

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...