வியாழன், 30 ஏப்ரல், 2020

புதிய தலைமை செயல்இயக்குநரை தேர்வுசெய்தல்


வெற்றிகரமாக செயல்படும் ஒரு நிறுவனத்தின் தலைமை செயல்இயக்குநர் வயதாகிவிட்டதால் தனக்கு பின்னர் அந்நிறுவனத்தை தொடர்ந்து வெற்றிபாதையில் கொண்டுசெல்வதற்கான புதிய தலை மை செயல்இயக்குநரை தனக்கு கீழ் பணிபுரியும் செயல்திறனுடைய இளைஞர் களிலிருந்த ஒருவரை தேர்வு செய்யவிரும்பினார் அதற்காக புதிய வித்தியாசமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார் அதாவது தனக்கு கீழ் பணிபுரியும் துடிப்புள்ள இளைஞர்கள் அனைவரையும் ஒரு கூட்டரங்கில் ஒன்று சேர்த்து அவர்களிடம் "இளைஞர்களே உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு மரத்திற்கான விதை யும் அதனை முளைக்கவைத்து வளரச்செய்வதற்கான மண் தொட்டியும் வழங்கப்படும் நீங்கள் அனைவரும் இவ்விரண்டினையும் கொண்டு சென்று தத்தமது வீடுகளில் மண்தொட்டியை வைத்து அதில்அந்த மரக்கன்றின் விதையை ஊன்றி தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்திடவேண்டும் ஒருவருடம் கழித்து அனைவரும் அவரவர்களுக்கு வழங்கிய மண்தொட்டியை அதில் வளர்ந்துள்ள மரச்செடிகளுடன் இதே கூட்டரங்கிற்கு எடுத்துகொண்டுவந்து சேரவேண்டும் அப்போது நான் அவைகளை பார்வையிட்டு அதனடிப்படையில் உங்களுள் ஒருவரை எனக்கு அடுத்த இந்த நிறுவனத்தின் செயல்இயக்குநராக தெரிவுசெய்து நியமனம் செய்தபின் நான் பணிஓய்வு பெற்றவிடுவேன் சென்றுவாருங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்" என வாழ்த்தி அனுப்பிவைத்தார் அவர்களுள் அன்பு எனும் இளைஞனும் மிகவும் ஆர்வமாக தன்னுடைய வீட்டிற்கு சென்று தன்னுடைய துனைவியாரிடம் விவரங்களை கூறி இருவரும் ஆர்வமாக அந்த விதையை அந்த பூந்தொட்டியில் போதுமான எருக்களை இட்டு தண்ணீர் ஊற்றி சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து பராமரிப்பு செய்துவந்தனர் அந்த இளைஞனுடன் பணிபுரிந்த மற்ற நண்பர்களும் விதையானது முளைத்துவந்ததையும் செடியாக வளர்ந்து வருவதையும் பற்றி தினந்தோறும் தேநீர் இடைவேளையின்போது விவாதித்து வந்தனர் ஆனால் அன்பு என்பவரின் வீட்டின் மண்தொட்டியில் மட்டும் மரக்கன்று எதுவும் முளைக்கவும் இல்லை செடியாக வளரவும் இல்லை ஆயினும் தினமும் அந்த மண்தொட்டிக்கு தண்ணீர் ஊற்றுவது வேறு புல்பூண்டுகள் எதுவும் முளைக்காமல் பார்த்து கொள்வது சூரிய ஒளி படும்படி மிகச்சரியாக அந்த மண்தொட்டி உள்ளதாவெனதினமும் சோம்பலில்லாமல் பார்த்து பராமரித்து வந்தார் ஆறுமாதமானது அனைத்து அலுவலக நண்பர்களும் தத்தமது மரக்கன்றுகல் மண்தொட்டிகளில்பெரிய செடிகளாக வளர்ந்து விட்டதாக அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர் ஆனால் அ ன்புஎன்பவரின்மண்தொட்டியில் மட்டும் விதை முளைக்காமலேயே இருந்துவந்தது அதனால் அதுபற்றி நண்பர்கள் யாரிடமும் தகவல் எதுவும் தெரிவிக்காமல் மிகவும் மனவருத்ததுடன் ஆனால் தினமும் பார்வையிடுதல் தினசரி பராமரிப்பு பணிகளைசெய்தல் ஆகியன தவறாமல் மிகவும்பொறுப்புணர்வுடன் செய்துவந்தார் ஒருவருடம்முடிந்து அனைவரும் குறிப்பிட்டநாளில் அதே கூட்டரங்கிற்கு தாம் வளர்த்துவந்த மரச்செடிகளுடனான மண்தொட்டிகளுடன் வந்துசேர்ந்தனர் ஆனால் அன்பு எனும் இளைஞன் காலியான மரச்செடி ஏதும் முளைக்காத மண்தொட்டியை கூட்டரங்கிற்கு எடுத்துவந்தபோது அனைவரும் அன்புஎனும் இளைஞனையும் அவருடைய காலியான மண்தொட்டியையும் பார்த்து கிண்டலும் கேலியுமாகபேசி எள்ளிநகையாடினர் அதனால் அ ன்பு எனும் இளைஞன் மிக அதிக மனவருத்ததுடன் கூட்டரங்கில் கடைசி வரைசையில் தன்னுடைய காலியான மண்தொட்டியுடன் நின்று கொண்டிருந்தார் இந்நிலையில் நிறுவனத்தலைவர் கூட்டரங்கிற்கு வந்துசேர்ந்தார் "நண்பர்களே! இன்று உங்களுள் ஒருவரைஎனக்கு பதிலான செயல்இயக்குநராக நியமனம் செய்யவிருக்கின்றேன் அனைவரும் தயாராக இருக்கின்றீர்களா? நான் பார்வையிடவரலாமா ?"என அனுமதி கோரினார் .அனைவரும் கோரஸாக "வாருங்கள் ஐயா !"என அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கூச்சலிட்டனர் ஆனால் அ ன்புஎன்பவர்மட்டும் மிகவும் அமைதியாக இன்றோடு நம்முடைய கதை முடிந்தது நம்மை நம்முடைய பணியிலிருந்து வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள் என பயந்து கொண்டு கடைசி வரிசையில் யாருடைய பார்வையும் தன்மீது படாதவாறு நின்றுகொண்டிருந்தார் அந்த நிறுவனத்தலைவர் அருகிலிருந்த தன்னுடைய நேர்முகஉதவியாளரை அழைத்து கூட்டரங்கில் கடைசியாக பதுங்கி நின்றுகொண்டிருந்த அன்பு என்பவரை மரச்செடிஎதுவும்முளைக்காத அவருடைய காலியான மண்தொட்டியுடன் மேடைக்கு வருமாறு கேட்டுகொண்டார் அன்பு என்பவரும் தன்னுடைய மண்தொட்டியில் மரச்செடி முளையாததால் பயந்து கொண்டு கடைசியில் நின்றிருந்தை கண்டுபிடித்து நம்மை மட்டும் மேடைக்கு அழைக்கின்றாரே என்ன செய்யப்போகின்றாரோ என மனதிற்குள் மிகுந்தபயத்துடன் ஆனால் தனக்கிட்ட கட்டளையை தான் சரியாக பின்பற்றி வந்துள்ளேன் என்ன ஆனாலும் பார்த்து கொள்ளலாம் என மேடைக்கு வந்துசேர்ந்தார் உடன் அந்த நிறுவனத்தின் செயல்இயக்குநர் "வாருங்கள் அன்பு அவர்களே ! இந்த நிறுவனத்தின் வருங்கால் செயல்இயக்குநரே வாருங்கள் எனக்கு அருகில் உள்ள இந்த இருக்கையில் அமருங்கள் அப்படியே புதிய செயல்இயக்கநர் என்ற பதவியையும் ஏற்றுகொள்ளுங்கள் !"என வரவேற்புஉரையை அறிவிப்பு செய்ததும் இதுவரையில் அன்பு எனும் இளைஞனை கிண்டலும் கேலியும் செய்த அனைவரும் மிகவும் ஆச்சரியத்துடன் எவ்வாறு அன்புஎன்பவர் புதிய செயல்இயக்குநராக தேர்வுசெய்யப்பட்டார் என மிகவும் அமைதியாக அமர்ந்துவிட்டனர் "நண்பர்களே! நான் கடந்த ஆண்டு உங்கள் அனைவருக்கும் இதேநாளில் இதே கூட்டரங்கில் நன்கு வ ருத்தெடுக்கப்பட்ட முளைக்காத விதைகளைத்தான் அனைவருக்கும் மண்தொட்டியுடன் கொடுத்தேன் மற்ற அனைவரும் அந்த முளைக்காதவிதைக்கு பதிலாக அவரவர் விருப்பபடியான வேறு மரச்செடிகளின் விதையை அந்த மண்தொட்டியில் ஊன்றி மரச்செடியாக கொண்டுவந்துள்ளீர்கள் ஆனால் இந்த இளைஞன் அன்புஎன்பவர் மட்டும் நான் கொடுத்த முளைக்காத விதையை நன்றாக பராமரித்து அப்படியே அந்த விதையை நான் கொடுத்த நிலையில் என்னிடம் கொண்டுவந்து ஒப்படைத்துள்ளார் அதனால் இவர்தான் எனக்கு பின்னர் நான் இதுவரை இந்த நிறுவனத்தினை வெற்றிபாதையில் கொண்டுவந்தவாறு காப்பாற்றி மீண்டும் நான் விரும்பியபோது என்னிடம் திரும்ப ஒப்படைப்பார் அதனால் அவரையே நான் எனக்கு பின்னரான இந்த நிறுவனத்தின் செயல்இயக்குநராக தெரிவுசெய்தேன்" என அன்பு எனும் இளைஞனை தான் தெரிவுசெய்தஉண்மையை போட்டுடைத்தார் .

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...