திருத்தப்பட்ட நிறுமங்களின் சட்டம் 2018 இன்படி இந்த திருத்தப்பட்ட நிறுமங்களின் சட்டம் 2018 நடைமுறைக்கு வந்தபின்னர் பங்கு மூலதனத்தொகையுடன் பதிவு செய்யப்படும் அனைத்து நிறுமங்களும் தங்களுடைய முதன்முதலான வியாபார நடவடிக்கையை அல்லது நிறுவனங்களின் எந்தவொரு கடன்வாங்கிடும் நடவடிக்கையை செயல்படுத்திடுவதற்கு முன் தனியாக வியாபார நடவடிக்கைகளை துவங்குவதற்கான சான்றிதழ் (CERTIFICATE OF COMMENCEMENT OF BUSINESS )ஒன்றினை நிறுமங்களின் பதிவாளரிடமிருந்து கண்டிப்பாக பெற்றிட-வேண்டும் இந்ததிருத்தப்பட்ட நிறுமங்களின் சட்டம் 2018 ஆனது நவம்பர்2 ,2018 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது இந்த தேதிக்கு பிறகு பதிவுசெய்யப்படும் எந்தவொரு நிறுமமும் தனக்கென வியாபாரநடவடிக்கைகளை துவங்குவதற்கான சான்றிதழை கண்டிப்பாக பெற்றிட-வேண்டும்.இந்த நடைமுறையானது நிறுமங்களின் சட்டம் 1956 இல் செயல்-படுத்தப்பட்டு வந்தது ஆனால் நிறுமங்களின் சட்டம் 2013 இல் நடைமுறைபடுத்தப்-படவில்லை ஆயினும் தற்போது திருத்தப்பட்ட நிறுமங்களின் சட்டம் 2018 இன்படி இந்த செயல் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின் விதிகள் பின்வருமாறு
திருத்தப்பட்ட நிறுமங்களின் சட்டம் 2018பிரிவு 10A. வணிக நடவடிக்கைகளை துவங்குவது
(1)ஒரு நிறுமமானது இந்த திருத்தப்பட்ட நிறுமங்களின் சட்டம் 2018 நடைமுறைக்கு வந்தபின்னர் பதிவுசெய்யப்பட்டு முதன்முதலான வியாபார நடவடிக்கையை அல்லது நிறுவனங்களின் எந்தவொரு கடன்வாங்கிடும் நடவடிக்கையை பின்வரும் நிபந்தனையை பூர்த்தி செய்யாமல் செயல்படுத்திடமுடியாது
அ. நிறுமம் பதிவுசெய்யப்பட்ட 180 நாட்களுக்குள் அந்நிறுமத்தில் இயக்குநர் ஒருவர் நிறுமத்தின் Memorandumof Association(MOA)எனும் முதன்மை ஆவணத்தில் குறிப்பிடப்-பட்டுள்ள முதலீட்டாளர்கள் அனைவரும் தாங்கள் ஏற்றுகொண்டவாறு பங்கு-மூலதனத் தொகையை செலுத்திவிட்டதாக அறிவிப்பு ஒன்றினை படிவம்எண் INC 20A ஐ நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பிக்கவேண்டும் இந்த படிவத்தில் நிறுமச்செயலர் அல்லது பட்டய கணக்காளர் அல்லது அடக்கவிலை கணக்காளர் ஆகியோர்களில் ஒருவரிடம் சான்று பெறவேண்டும்.
ஆ.நிறுமங்களின் பதிவாளரிடம் அந்நிறுமத்திற்கான பதிவு அலுவலக சரிபார்ப்பு சான்றிதழை நிறுமங்களின் சட்டம்2013 பிரிவு 12(2) இன்படி நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பிக்கவேண்டும்
(2) இந்த சட்டப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனையை பூர்த்தி செய்யத்தவறினால் அந்நிறுமமானது ரூ.50ஆயிரம் அபராததொகையை செலுத்தநேரிடும் மேலும் நிபந்தனையை பூர்த்தி செய்யத்தவறிய ஒவ்வொரு நாளிற்கும் நாளொன்றிற்கு ரூபாய் ஆயிரம் வீதம் அதிகபட்சம் ரூ.ஒருஇலட்சம் வரை அபராத தொகையாக இவ்வாறு தவறிய அந்நிறுமத்தின் அலுவலர்கள் செலுத்தநேரிடும்
(3) இந்த சட்டத்தின் பிரிவு (1)அ. இன்படி நிறுமமானது பதிவுசெய்யப்பட்ட 180 நாட்களுக்குள் படிவம்எண் INC 20A இன் வாயிலாகஅறிவிப்பினை நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பிக்க தவறினால் நிறுமங்களின் பதிவாளர் அந்த நிறுமமானது எந்தவொரு வியாபார நடவடிக்கையையும் துவங்கிடவில்லை அல்லது எந்தவொரு செயலையும் செய்திடவில்லை எனபோதுமான கால அவகாசத்துடன் அவர் இதேசட்டம்பிரிவு (2) இற்கு பாதகமில்லாமல் அடுத்தகட்ட நடவடிக்கையாக நிறுமங்களின் சட்டம் 2013 அத்தியாயம் XVIII இன்கீழ் பராமரிக்கப்படும் நிறுமங்களின் பதிவேட்டிலிருந்து இந்த நிறுமத்தின் பெயரை நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை செயல்படுத்த துவங்கிடுவார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக