புதன், 20 மே, 2020

நிறுவனங்களின் சட்டம் 2013 இன்கீழ் பதிவுசெய்யப்பட்ட சிறிய நிறுவனங்களுக்கு கிடைக்கும் ஒரு சில நன்மைகளும் விதிவிலக்குகளும்


எந்தவொரு நிறுவனத்திலும் உள்ள பங்குதாரர் ஒவ்வொருவரும் தம்முடைய நிறுவனத்தினை சிறிய நிறுவனமாக மாற்றியமைப்பதால் தம்முடைய நிறுவனத்திற்கு ஒரு சில நன்மைகளும், விதிவிலக்குகளும் கிடைக்கும் என்ற செய்தியை நினைவில் கொண்டு தம்முடைய நிறுவனத்தினை சிறிய நிறுவனமாக மாற்றியமைத்திடலாமா எனயோசித்து அதன்படிசெயல்படுத்த முயற்சித்திடுக. நிறுவனங்களின் சட்டம் 2013 பிரிவு 2 (85)இன்படி சிறு நிறுவனம் என்றால் பொது நிறுவனங்கள் தவிர அ. செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தொகையானது ஐம்பது லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்ககூடாது ஆ.இந்நிறுவனத்தின் வருடாந்திர விற்பணை வருவாயானது *** [உடனடி முந்தைய நிதியாண்டிற்கான இலாப நட்டக் கணக்கின் படி] ரூபாய்இரண்டு கோடி க்கு மேல் இருக்ககூடாது ஆகிய இருநிபந்தனைகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே அது ஒரு சிறு நிறுவனம் ஆகும் இந்நிலையில் அவ்வாறான நிபந்தனைக்களுக்கு உட்பட்டவை அனைத்தும் சிறுநிறுவனங்களா என்ற கேள்வி நம்முடைய மனதில் எழும் நிற்க ஆயினும் மேற்கண்ட மேற்கண்ட இரு நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தாலும்.அ.முதன்மை நிறுவனம் அல்லது துனைநிறுவனம் .ஆ. நிறுவனங்களின் சட்டம் 2013 பிரிவு 2 (8)இன்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனம்.இ.சிறப்பு சட்டத்தின் படி நிறுவுகைசெய்யப்பட்ட நிறுவனம் அல்லது அமைப்பு ஆகியவை சிறிய நிறுவனங்களின் வகைக்கு உட்பட்டவை அல்ல இதனை எளிய மொழியில் கூற வேண்டுமெனில் எந்தவொரு தனியார் நிறுவனமும் அ. ஒரு தனியார் நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தொகை ரூபாய்50/- இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் .மேலும் ஆ. அந்நிறுவனத்தின் வருடாந்திர விற்பணை வருவாயானது ரூபாய் 2/- கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆகிய இரு நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் போது, அந்நிறுவனம் சிறிய நிறுவனம்என்ற வகையின் கீழ் உள்ளடங்கும் எனக்கொள்க இதன்அடிப்படையில் குறிப்பிட்ட ஆண்டில் ஒரு நிறுவனம் சிறுநிறுவனமாக மாற்றம் செய்யப்பட்டபின்னர் தொடர்ந்து வரும் அடுத்த ஆண்டுகளில் ஏதேனு-மொரு காரணத்தால் மேலே கண்ட இருநிபந்தனைகளான செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் அல்லது வருடாந்திர விற்பணைவருமானம் குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் உயரும்போது அந்நிறுவனமானது சிறிய நிறுவனத்தின் வகையின் கீழ் வராது, மேலும் சிறிய நிறுவனத்தின் கீழ் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் / விதிவிலக்குகளையும் அந்நிறுவனம் கைவிட வேண்டும். நிறுவனங்களின் சட்டம் 2013 இன்கீழ்சிறிய நிறுவனங்களுக்கு கிடைக்கும் பொதுவான நன்மைகள் / விதிவிலக்குகள் பின்வருமாறு அ.இயக்குநர்களின் குழுக்கூட்டம் நடத்துதல் : - சிறிய நிறுவனங்களுக்கு பரந்த அளவிலான வியாபார வணிகசெயல்பாடுகள் எதுவும் இல்லை என்பதால் அவ்வாறான சிறிய நிறுவனங்கள் நிறுவனங்களின் சட்டம் 2013 இன்படி ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு இயக்குநர்களின் குழுக்கூட்டம் வீதம் ஆண்டு ஒன்றிற்கு மொத்தம் நான்கு இயக்குநர்களின் குழுக்கூட்டங்களை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்ற நிபந்தனையை பின்பற்றத்தேவையில்லை, அதற்கு பதிலாக சிறிய நிறுவனங்கள் ஒரு ஆண்டில் இரண்டு இயக்குநர்களின் குழுக்-கூட்டங்களை மட்டுமே நடத்தினால் போதும், அதாவது ஆண்டின் ஒவ்வொரு ஆறுமாத்திற்கு ஒரு இயக்குநர்களின் குழுக்கூட்டமும் இரண்டு கூட்டங்களுக்கு இடையில் குறைந்தபட்சம் தொண்ணூறு நாட்கள் இடைவெளியிலும் கூட்டப்படவேண்டும். ஆ.தணிக்கையாளர்நியமனம்செய்தல்: - தனிநபர் தணிக்கையாளர்களெனில் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அல்லது கூட்டாண்மை நிறுவன தணிக்கையாளர்களெனில் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயமாக ஒரு நிறுவனத்தின் தணிக்கையாளர்களை சுழற்சி முறையில் நியமனம் செய்திடவேண்டும் என நிறுவனச்சட்டம் 2013 இன் பிரிவு 139 (2) இல் குறிப்பிடப் பட்டுள்ள நிபந்தனையைசிறிய நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை, இ. இயக்குநர்களின் குழுக்கூட்டத்தின் அறிக்கையில் விதிவிலக்குகள்: - நிறுவனங்களின் (கணக்குகள்) விதிகள், 2014 , விதி -8 இன்படி இயக்குநர்களின் குழுக்கூட்டத்தின் அறிக்கையில் உள்ளடக்கங்களாக சேர்க்கப்பட வேண்டிய இனங்கள் அல்லது விவரங்கள் என்பவை சிறிய நிறுவனத்திற்கு பொருந்தாது. ஈ.நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் கையொப்பமிடுதல்: - சிறிய நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் நிறுவனத்தின் செயலாளர் மட்டுமே கையெழுத்திட முடியும், அல்லது நிறுவன செயலாளர் இல்லாத நிலையில், நிறுவனத்தின் ஏதேனுமொரு இயக்குநர் கையெழுத்திடலாம். உ.நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்படும் ஆண்டறிக்கையில் குறிப்பிடவேண்டிய ஊதிய விவரங்கள்: - நிறுவனங்களின் சட்டம், 2013 பிரிவு 92 இன் படி, நிறுவனங்களில் பணிபுரியும் இயக்குநர்கள் , முக்கிய நிருவாக பணியாளர்கள் (Key Managerial Person(KMP))ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆண்டிலும் வழங்கப்பட்ட ஊதியம் குறித்த விவரங்களை கண்டிப்பாக தனித்தனியே குறிப்பிட வேண்டும், ஆனால் சிறிய நிறுவனங்களெனில் அதற்கு பதிலாக “இயக்குநர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த ஊதியம்” என்றுமட்டும் குறிப்பட்டால் போதுமானதாகும் ஊ. நிறுவனங்களின் ரொக்கஓட்ட அறிக்கை: - ஒரு சிறிய நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டிய அதன் நிதி அறிக்கையின் ஒரு பகுதியாக ரொக்கஓட்ட அறிக்கையையும்(CASH FLOW STATMENTS) சேர்த்து சமர்பிக்கத் தேவையில்லை. எ.தணிக்கை அறிக்கையில் விலக்குகள்: - அக நிதிக் கட்டுப்பாடுகள் குறித்த நிதி அறிக்கைகள், தணிக்கை கட்டுப்பாடுகளின் இயக்க செயல்திறன் ஆகியவற்றை பற்றிய விவரங்களை சிறிய நிறுவனங்கள்தணிக்கை அறிக்கையில் குறிப்பிடத் தேவையில்லை. ஏ.நிறுவனங்கள் சட்டம், 2013 . பிரிவு 446 பி இன் கீழ் சிறு நிறுவனங்களுக்கான அபராதத்தொகை: - சிறிய நிறுவனங்கள் நிறுவனங்களின் சட்டம், 2013 பிரிவு 92 (5), பிரிவு 117 (2) அல்லது பிரிவு 137 (3) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை பின்பற்றத் தவறினால், அத்தகைய சிறிய நிறுவனமும் அந்நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலரும் அத்தகைய நிறுவனத்தின் இயல்புநிலை அபராதத்திற்கு பொறுப்பாவார்கள், ஆனால் அத்தகைய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதத்தில் பாதிக்கு மேல் அபாரததொகை இருக்கக்கூடாது.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...