புதிய சரக்கு சேவை வரி2017 இன் அறிமுகமானது மறைமுக வரிவிதிப்பில்ஒரு சிறந்த சீர்திருத்த நடவடிக்கையாகும் இதன்படி உள்ளீட்டு வரிவரவில் இணக்க மானநடைமுறைகளை எளிமையாகவும் வெளிப்படையாகவும் வைத்திருக்க அரசாங்கம் எப்போதும் விரும்புகின்றது. மேலும்'விலைப்பட்டியலில்-விலைப்பட்டியலை பொருத்துதல்' என்ற தனித்துவமான கருத்தை அதன் மறைமுக வரி உலகில் அறிமுகப்படுத்த அரசாங்கம் முயன்று வருகின்றது . . இந்நிலையில் அரசாங்கத்தின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளில் ஆங்காங்கே ஒருசில தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதால், இந்த கனவினை நடைமுறையில் செயலாக்கும் பணியில் ஒருசில சுணக்கங்கள் உருவாகியுள்ளன. இருந்தபோதிலும் அரசாங்கமானது தனது பார்வையை சரியான செயல்பாட்டுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது அதன்படி . அக்டோபர் 2019 முதல் இந்த சசேவ2017இன்கீழ் 'புதிய அறிக்கை சமர்ப்பிக்கும் முறையை' கொண்டு வந்துள்ளது.இதற்காக ஏற்கனவே இருந்து வருகின்ற பழைய நடைமுறைகளை மேம்படுத்தி புதிய படிவங்களாக கடந்த மார்ச்சு 2019 அரசினுடைய ஜிஎஸ்டி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தொடர்ந்து கடந்த ஆகஸ்2019 மாதத்தில் இதனை இணைய இணைப்பு இல்லாதபோதும் செயல்படுத்தி பயன்படுத்திடும் வகையில் எளிமை-படுத்தியும் உள்ளது இதன் வாயிலாக அரசின் கொள்கைகளை அடைவதில் அரசாங்கத்தின் உறுதியைக் தெரிந்துகொள்ளமுடியும். தற்போது முன்மொழியப்பட்ட இந்த புதிய அறிக்கை சமர்ப்பிக்கும் முறையானது வரி செலுத்துவோரை இரண்டு வகைகளாக வகைப்படுத்துகின்றது:
அ.ஆண்டு ஒன்றிற்கு விற்பணைவருமானம் ரூபாய் .ஐந்து கோடிக்குக் குறைவாக வருவாய் கொண்ட வரி செலுத்துவோர் (மொத்த வரி செலுத்துவோரில் இந்த வகையில் 93 சதவீதமாக உள்ளனர்) - மாதாந்திர அல்லது காலாண்டு வருவாய் அறிக்கை சமர்ப்பிப்பதற்கான விருப்பம் தெரிவித்தல்
ஆ.ஆண்டு ஒன்றிற்கு விற்பணைவருமானம் ரூபாய் .ஐந்து கோடிக்குக் அதிகமாக வருவாய் கொண்ட வரி செலுத்துவோர் - மாதாந்திர வருவாய் அறிக்கை சமர்ப்பிப்பதற்கான விருப்பம் தெரிவித்தல்
இந்த புதிய அமைவானது Upload-Lock-Pay(ULP)எனும்கருத்தமைவில் அதாவது பொருட்களுக்கான பட்டியலை நிகழ்வு நேரத்திலேயே பதிவேற்றம் செய்தலும் ஏற்றுகொள்ளுதலும் எனும் வசதியை இந்த புதிய நடைமுறையில் செயல்படுத்த படவிருக்கின்றது
இது பொருட்களை வழங்குபவர்களின் ஆவணங்களை சமர்ப்பிப்பதில் பொருட்களை பெறுபவரின் உள்ளீட்டு வரிவரவை (ITC) யும், காணாமல் போன ஆவணங்களில் தற்காலிக வரிவரவுவைப்பதற்கான நெகிழ்வுத்தன்மையையும் முற்றிலும் இணைக்கின்றது. . இவை மட்டுமல்லாது இந்த புதியமுறையில் கிடைக்கும் வேறுசில முக்கியமான பயன்கள் பின்வருமாறு
அ.கொள்முதல் செய்திடும் பொருட்களை வழங்குபவர்களின் பன்முகத்தன்மையைப் பொறுத்து படிவத்தை காலாண்டு அறிக்கை கோப்புக்கான விருப்பங்களான (இயல்பான, சஹாஜ், சுகம்)ஒன்றினை தெரிவுசெய்தல்
ஆ உள்ளீட்டு வரிவரவான( ITC)ஆறு இலக்க HSN அறிக்கையின் தயார்நிலைஇணைப்பிற்கும் பெறுபவருக்கும் பொருட்களை வழங்குபவர் சமர்ப்பிக்கும் ஆறிக்கையை காணும் நிலை
இ. உள்ளீட்டு வரிவுகளை( ITC) உள்ளீட்டு பொருட்கள், உள்ளீட்டு சேவைகள் , மூலதனப் பொருட்களாகப் பிரித்தல்
ஈ.தனித்தனியான திருத்தப் படிவங்கள்
உ. வரிவருவாய் ஒன்றுமில்லை எனும் அறிக்கையை சமர்ப்பிபவர்களுக்கான NIL return எனும் குறுஞ்செய்தி (SMS) கிடைத்திடசெய்தல் இதன்வாயிலாக புதிய அறிக்கை சமர்ப்பிக்கும் அமைவினை செயல்படுத்தப் படுவது ஜிஎஸ்டி2017இன் கீழ் இணக்கங்களின் முழுமையான மறுசீரமைப்பைக் குறிக்கின்றது எனத் தெளிவாகத் தெரிகின்றது. மேலும் வரி செலுத்துவோரைப் பொறுத்தவரை, பழையதிலிருந்து புதிய முறைக்குமாறிடும்போது ஒரு மென்மையான மாற்றத்தைத் சரியாக திட்டமிட்டு வரிவருமானம் ஒன்றும் இல்லாதபோது இடையில் நிறுத்திவிட்டு பின்னர் வரிவருவாய் வரும் போது தொடர்ந்து சமர்ப்பிப்பதைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியமாகும்
ஊ. ஒவ்வொரு விலைப்பட்டியலுடன் ஒரு -விலைப்பட்டியலை பொருத்துவதின்' தாக்கம் - எடுத்துக்காட்டாக, ITC எனும் உள்ளீட்டு வரிவரவை பயன்படுத்தி கொள்ளும்போது எந்த ஆவணங்களுக்கான பொருள்பட்டியலை வழங்குநர் பதிவேற்றம் செய்யவில்லை.என சுலபமாக தெரிந்து கொள்ளமுடியும்
எ. புதிய படிவங்களுடன் சீரமைப்பில் தரவை உருவாக்க ERP ஒருங்கிணைப்பு வசதி - எடுத்துக்காட்டாக, ஆறு இலக்க HSN சேவை உள்ளீட்டுவரிவரவுகளை தனியாக பிரித்தல்
ஏ.இணக்க பணியாளர்களின் மாதாந்திர பொறுப்பு அறிதல் - எடுத்துக்காட்டாக, தானாக உருவாகும் ஆவணங்களில் நடவடிக்கை எடுப்பதற்கும், வழங்குபவர்களைப் பின்தொடர்வதற்கும் ANX-2 உடன் கொள்முதல் பதிவேட்டை பொருத்துவதற்கான பொறுப்பு யாருடைது என தெரிந்து கொள்ளுதல்.
ஐ. இடைநிலை வழக்குகளின் தீர்வு வழங்குநர் தவறவிட்டுவிட்டார், ஆனால் பெறுநர் GSTR-3B யில் தொடர்புடைய ITC யைக் கோருகின்றார் எனில் இதன் வாயிலாக புதிய அறிக்கை சமர்ப்பிக்கும் படிவங்களில் கணக்கிடப்படும். விவரங்களை அறிந்து கொள்ளலாம்
அக்டோபர் 2019முதல் தற்போது நடைமுறையில் வரவிருக்கும் GST PMT 08 என்பதற்கு பதிலாக ஜனவரி 2020 மாதிரி பயன்பாடாக GST PMT 08 என்பதையும் புதிய GSTR 3B எனும் படிவத்தையும் பின்பற்றலாம் அதற்கு பிறகு GSTR 3B எனும் படிவத்தை மட்டுமேசமர்ப்பிக்கவேண்டும் பெரிய நிறுவனங்கள் புதிய GST – RET – 01 என்பதுடன் இணையஇணைப்பில்லாது பயன்படுத்தி கொள்ளப்படும் GST ANX-1,GST ANX-2 ஆகிய இரு கூடுதல் இணைப்பு படிவங்களையும் சமர்ப்பிக்கலாம்
மேலும்உள்ளூர் கொள்முதல் சிறிய நிறுவனங்கள் B2Bவழங்குபவர்கள் Sahaj என்பைதயும் B2B , B2C ஆகிய இருவகைகளிலும் வழங்குபவர்கள் Sugam எனும் எளிய காலாண்டு அறிக்கைகளை பின்பற்றலாம் உள்ளீட்டு வரவினை பதிவிறக்கம் செய்து இணையஇணைப்பில்லாது போதுகூட ஆகஸ்டு 2019 மாதத்திலிருந்து சரியாக இருக்கின்றதாவென சரிபார்த்து கொள்ளலாம் பெரிய நிறுவனங்கள் அக்டோபர் 2019 GSTR-1 இற்கு பதிலான GST ANX-1 பதிவேற்றம் செய்வதை கண்டிப்பாக பின்பற்றிடவேண்டும் சிறிய நிறுவனங்கள் தங்களுடைய முதன்முதலான காலாண்டு அறிக்கையை ஜனவரி 2020இருந்து பயன்படுத்தி கொள்ளவேண்டும் அதுவரை பழைய மாதாந்திர நடைமுறையை பின்பற்றலாம் அல்லது புதிய காலாண்டு நடைமுறையையும் பின்பற்றலாம் ஆயினும் GST ANX-2 எனும் படிவத்தை சரிபார்ப்பதற்காக பார்வையிட மட்டும் வைத்துகொள்ளலாம் ஆனால் செயல்படுத்திடமுடியாது பெரிய நிறுவனங்கள் அக்டோபர் 2019 நவம்பர் 2019 ஆகிய இருமாதங்களுக்கு மட்டும் GSTR-3B பயன்படுத்தி கொள்ளலாம் ஆனால் டிசம்பர் 2019 அறிக்கையை புதிய GST RET-01 படிவத்தில் ஜனவரி 2020 இல் சமர்ப்பிக்கவேண்டும்
சிறிய நிறுவனங்கள் GSTR-3B படிவத்தை நிறுத்தம் செய்து GST PMT-08 படிவத்தை அக்டோபர் 2019 இலிருந்து பின்பற்றலாம் இவர்கள் அக்டோர்2019 டிசமபர்2019 காலாண்டுகளுக்குரிய அறிக்கைகளை GST RET-01 எனும் படிவத்தில் ஜனவரி 2020இல் சமர்ப்பிக்கலாம். ஜனவரி 2020. இலிருந்து தற்போது பயன்பாட்டிலுள்ள GSTR-3B படிவத்தினை பயன்படுத்தி கொள்ளமுடியாது புதிய GST RET-01எனும் படிவத்தைமட்டுமே பின்பற்றிடவேண்டும் ஆயினும் இவ்வாறு புதிய படிவத்திற்கு மாறிடும்போது பழையமுறையில் வரிவரவு ஏதேனும் வரவேண்டியிருந்தால் அதற்காக அரசாங்கம தணியாக உத்தரவினை பிறப்பிக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக