ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் எனும் நிறுவனத்தின் தலைவர், அந்நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுடன் ஒவ்வொரு வாரமும் வாராந்திர சந்திப்பிற்கான கூட்டத்தை நடத்தி அதில் தம்முடையபணியாளர்கள் கூறும் குறைகளை உடனுக்குடன் தீர்வுசெய்து வந்தார்.
அவ்வாறான ஒரு வாராந்திர சந்திப்பு கூட்டத்தில் பணியாளர் ஒருவர் பிரச்சினை ஒன்றினை கொண்டுவந்தார். அதாவது பணியாளர்கள் பயன்படுத்திவருகின்ற கழிப்பறைகளின் தரமும் சுகாதாரமும் மிகவும் மோசமாக இருக்கின்றது என்றும் . அதேசமயம், தலைமை நிர்வாகிகள் பயன்படுத்திடும் கழிப்பறைகளில் தூய்மையும் சுகாதாரமும் எப்போதும் மிகச் சிறந்தவையாக உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.
அதனைதொடர்ந்து" அதை சரிசெய்ய எவ்வளவு காலஅவகாசம் தேவைப்படும்?" என தலைவர் தனது உயர் நிர்வாகிகளிடம் வினவினார். "அதை சரிசெய்ய குறைந்த பட்சம் ஒரு மாதம் ஆகும்." என அதற்கான பொறுப்பான நிருவாகி பதில் கூறினார். உடன் தலைவர் "நான் அதை ஓரிரு நாளில் செய்வேன், அதற்காக ஒரு தச்சு பணியாளரை மட்டும் என்னிடம் அனுப்பிவையுங்கள்" என்றார்.
அடுத்த நாள், ஒரு தச்சுப்பணியாளர் தலைவரிடம் வந்தபோது, உடன் அந்த தச்சுப்பணியாளரிடம் கழிப்பறையின் முகப்பில் அதனை சுட்டிகாட்டிடும் பெயர் பலகைகளை மட்டும் இடம்மாற்றி வைத்திடுமாறு கட்டளையிட்டார் . அதாவது பணியாளர்கள் பயன்படுத்தி கொள்ளும் கழிப்பறையின் முகப்பில் சுட்டி காட்டிடும் பெயர் பலகையை "நிர்வாகிகள் கழிவறை " என்றும் நிர்வாகிகள் பயன்படுத்தி கொள்ளும் கழிப்பறையின் முகப்பில் சுட்டிகாட்டிடும் பெயர் பலகையை "தொழிலாளர்கள் கழிவறை" என்றும் மாற்றி வைத்திடுமாறு கட்டளையிட்டார் அதன்படி அவ்விரு பெயர்பலகைகளும் இடம் மாற்றி வைக்கப்பட்டன .
என்ன ஆச்சரியம் பெயர்பலகைகள் இடம் மாறியபின்னர் இரண்டு கழிப்பறைகளின் தரமும் அடுத்த ஓரிரு நாட்களில் சமமான அளவில் மிகவும் சுத்தமாகமாகவும் சுகாதாரமாகவும் மாறிவிட்டன அதன் பின்னர் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறே பெயர்பலகைகளை மட்டும் இடம் மாற்றி வைத்திடுமாறு தலைவர் அறிவுறுத்தினார்.
அதன்பிறகு நடைபெற்ற வாராந்திர கூட்டத்தில் அந்த பிரச்சினை குறித்துஎந்தவொரு பணியாளரும் எழப்பவேயில்லை. நிறுவனத்தின் தலைவராக இருப்பது என்பது அந்நிறுவனத்தின் நிருவாகியாக இருப்பதை விட மிக உயர்ந்தநிலையானதாகும் இருந்தபோதிலும் பொதுவாக எந்தவொரு தொழில் நிறுவனத்தின்தலைமை பதவியில் இருப்பவர்களும் தங்களின் கட்டுபாட்டின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் கூறும் குறைகளை பொறுமையாக காது கொடுத்து கேட்டு அவ்வாறான குறைகளுக்கான மிகச்சரியான தீர்வுகளை அதிக காலஅவகாசம் எடுத்து கொள்ளாமல் உடனுக்குடன் செயற்படுத்தி பணியாளர்கள் திருப்தியடையுமாறு செய்திடவேண்டும் அவ்வாறான சிக்கலை அடையாளம் காண விமர்சன சிந்தனை தேவையாகும் . ஆனால் அதற்கான தீர்வுகளுக்கு மட்டும் மிகவும் ஆக்கபூர்வமான சிந்தனை தேவையாகும் என்ற செய்தியை மனதில் கொள்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக