1. சசேவ(GST )யின் கீழ் வரி விலக்கு: மத்திய சரக்கு மற்றும் சேவை வரி( CGST)ச் சட்டம், 2017 இன் பிரிவு 2 (47) இன் படி, “வரிவிலக்குடன் வழங்குதல்” என்பது வரி விகிதம் எதுவும் இல்லாமல் முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டு எந்தவொரு பொருளை அல்லது சேவையை வழங்குவதாகும். இதே சட்டத்தின் பிரிவு 11 இன் கீழ் வரி, அல்லது ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST )ச் சட்டத்தின் 6 வது பிரிவின் கீழ், வரி விதிக்கப்படாத விநியோகத்தையும் உள்ளடக்கியதாகும். இவ்வாறு வரிவிலக்குடன் வழங்குதல் ஆனது
அ. சசேவ சட்டத்தின் கீழ் வரி விதிக்கப்படக்கூடியது, ஆனால் வரிஇல்லாததை( Nil rate) சார்ந்தது.
ஆ. சசேவ சட்டத்தின் கீழ் வரி விதிக்கப்படக்கூடியது, ஆனால் மத்திய சசேவ சட்டத்தின் 11 வது பிரிவின் கீழ் அல்லது ஒருங்கிணைந்த சசேவ சட்டத்தின் 6 வது பிரிவின் கீழ் அரசாங்கத்தின் அறிவிப்பு மூலம் வரிவிலக்கு அளிக்கப்பட்டது.
இ. சசேவ சட்டத்தின் கீழ்வரி விதிக்கப்படாமல் வழங்குதல்
ஆகிய மூன்று பிரிவுகளை உள்ளடக்கியதாகும்:
மேலும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், 2017 இன் பிரிவு 2 (78) இன் படி, “வரி விதிக்கப்படாத வழங்குதல்” என்பது பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குதலுக்கு இந்தச் சட்டத்தின் கீழ் அல்லது ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் வரி விதிக்கப்படாததை குறிக்கின்றது. அதாவது வரி விதிக்கப்படாத வழங்குதல் என்பது CGST சட்டத்தின் பிரிவு 7 இன் படி வரிவிதிக்கப்படாத பொருட்களின் அல்லது சேவைகளின் அல்லது அவ்விரண்டின் வழங்குதல் ஆகும் ஆயினும் இவை CGST அல்லது IGST சட்டத்தின் கீழ் வரி விதிக்கப்படாததாகும். பின்வரும் பரிமாற்றங்கள் வரி விதிக்கப்படாத விநியோகத்தின் கீழ் வருகின்றன:
i. மனித நுகர்வுக்கான ஆல்கஹால் மதுபானம், ii. பெட்ரோலிய கச்சாஎண்ணெய், iii. அதிவேக டீசல், iv. மோட்டார் ஸ்பிரிட் (பொதுவாக பெட்ரோல் என அழைக்கப்படுகிறது), vஇயற்கை எரிவாயு, vi. விமான விசையாழி எரிபொருள்
2. ஜிஎஸ்டியின் கீழ் வரிஇல்லாத வழங்குதல்: இது குறித்து இந்த சட்டத்தில் எங்கும் வரையறுக்கப் படவில்லை. எவ்வாறாயினும், இது வரிவிதிப்புக்கு உட்பட்ட ஒரு விநியோகத்தை உள்ளடக்கியதாகும், அதாவது இந்த சட்டத்தின் கீழ் வரி விதிக்கப்படக்கூடியது, ஆனால் வரிஇல்லாததாக அனுமதிக்கப் படுகின்றது
CGST சட்டத்தின் 11 வது பிரிவு அல்லது IGST சட்டத்தின் 6 வது பிரிவின் கீழ் அரசானது தன்னுடைய அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் வாயிலக வரிவிலக்கு அறிவிப்பை வெளியிட்டு “வரிவிலக்குடன் வழங்குதல்(Exempt Supply)” என்பதன் கீழ் கொண்டு வரும் , ஆனால் அது இல்லாமல் அதே அறிவிப்பை வரிஇல்லாதது என அறிவிப்பு செய்தால் அவ்வரிவிலக்கு அறிவிப்பானது , பின்னர் அது “வரிஇல்லாத வழங்குதல்(Nil Rated Supply)” என்பதன் கீழ் வரும்
3. சசேவஇன் கீழ் பூஜ்ஜியவரியில் வழங்குதல்: ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், 2017 இன் பிரிவு 2 (23) இன் படி, “பூஜ்ஜியவரியில் வழங்குதல்” என்பது இதே சட்டம் பிரிவு 16 இல் ஒதுக்கப்பட்ட பொருளைக் கொண்டிருக்கும்.
ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம், 2017 இன் பிரிவு 16 இன் படி, “பூஜ்ஜிய வரி வழங்குதல்” என்பது பின்வரும் பொருட்கள் அல்லது சேவைகளில் ஏதேனும் ஒன்று அல்லது இவ்விரண்டையும் குறிக்கின்றது, அதாவது: - (அ) பொருட்கள் அல்லது சேவைகளின் ஏற்றுமதி (ஆ) ஒரு சிறப்பு பொருளாதார மண்டல மேம்பாட்டாளர் அல்லது ஒரு சிறப்பு பொருளாதார மண்டல அலகுக்கு பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குதல்.
மேலே உள்ள பரிவர்த்தனைகள் மட்டுமே பூஜ்ஜிய வரி விநியோகத்தின் கீழ் இருக்கும்.
4. ஜிஎஸ்டி அல்லாத வெளிப்புற வழங்குதல்: இது குறித்தும் இந்த சட்டத்தில் எங்கும் வரையறுக்கப் படவில்லை. ஜிஎஸ்டி அல்லாத வெளிப்புற வழங்குதல் பற்றி ஒரு பெரிய குழப்பமே உள்ளது.
இது வரை, மேலே உள்ள அனைத்து வகைகளும், அதாவது வரிவிலக்குடன் வழங்குதல், வரிஇல்லாது வழங்குதல் , பூஜ்ஜியவரியில் வழங்குதல் ஆகியவை CGST சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் வழங்குதல் வரம்பிற்கு உட்பட்டுள்ளன, ஆயினும் அத்தகைய வெளிப்புற வழங்குதலுக்கு வரி விதிக்கப்படுகிறதா இல்லையா. என தெளிவாக்கப்படவில்லை
, ஆயினும் சசேவ அல்லாத வெளிப்புற வழங்குதல் என்பது CGST சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் வரிவிலக்கு அளிக்கப்பட்ட அல்லது இதன் வரம்புக்குட்படாத பரிமாற்றங்கள் ஆகும், அதாவது இத்தகைய பரிமாற்றங்கள் சசேவ சட்டத்தின்படி வழங்குதல் அன்று, அதாவது “வழங்குதலே இல்லை”. எனப்பொருள்படுவதாகும்
மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், 2017 இன் பிரிவு 7 (2) இன் படி, பின்வரும் பரிமாற்றங்கள் பொருட்கள் வழங்குதலாக அல்லது சேவை வழங்குதலாக என கருதப்படாது: i. அட்டவணை III இல் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் அல்லது பரிமாற்றங்கள்; அல்லது ii. கவுன்சிலின் பரிந்துரைகள் தொடர்பாக அரசாங்கத்தால் அறிவிக்கப்படக்கூடிய, மத்திய அரசு, ஒரு மாநில அரசு அல்லது உள்ளூர் நிருவாகம் ஆகியவற்றில் ஈடுபடும் எந்தவொரு அலுவலர்களாலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அல்லது பரிமாற்றங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக