சனி, 30 மே, 2020

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 115BAA குறித்து பகுப்பாய்வு


நடைமுறையில் இருந்துவரும் வருமான வரிச்சட்டத்தில் தற்போது புதியதாக 115BAA எனும் பிரிவு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது, இந்த புதிய பிரிவின் வாயிலாக உள்நாட்டு நிறுவனங்கள் விரும்பினால் தற்போது செலுத்திடும் 25% (அல்லது 30%) என்ற வருமான வரிவிகிதத்திற்கு பதிலாக வரிவிகிதத்தினை 3% அல்லது 8% அளவிற்கு குறைத்து 22% எனும் புதிய வரி விகிதத்தில் வருமானவரி செலுத்தலாம். இந்த புதிய பிரிவு 115BAA இன்படி தாம் வருமானவரி செலுத்தவிரும்புவதாக தெரிவுசெய்த எந்தவொரு உள்நாட்டு நிறுவனமும் அதனுடைய முந்தைய ஆண்டில் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் நடப்பாண்டில் ஈட்டிய அதனுடைய மொத்த வருமானத்தில் புதிய வரிவிகிதத்தில் வருமானவரி செலுத்தமுடியும் . இதன் வாயிலாக நடப்பாண்டில் புதிய வருமான வரிவிகிதத்தில் வருமான வரியை செலுத்துவதற்கான வாய்ப்பு பல்வேறு உள்நாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கின்றது .இதன் விளைவாக அவ்வாறானநிறுவனங்களில் வரி தொடர்பான பணப்-பரிமாற்றமானது வெகுவாக குறைந்து அதனால் கிடைத்திடும் நடைமுறை மூல-தனத்தினை தத்தமதுவியாபார வளரச்சிக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாகி உள்ளது. ஏற்கனவே இதேபோன்று அறிமுகபடுத்தப்பட்ட வருமான வரிசட்டம் பிரிவு 115BAB என்பதை உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் மட்டுமே சலுகைகளை பெறமுடியும் என கட்டுப்படுத்தப் பட்டது என்பது போன்றில்லாமல், தற்போது இந்தியாவில் செயல்படும் அனைத்து உள்நாட்டு நிறுவனங்களும் இந்த புதிய பிரிவு 115BAA ஐ பயன்படுத்திகொள்ளமுடியும். ஆயினும் இந்த புதிய சலுகைகளை நடைமுறையில் பெறுவதற்கு பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்ய வேண்டும் : அ) அத்தகைய உள்நாட்டு நிறுவனங்கள் பின்வரும் கழிவுகளையும் வரி விலக்குகளையும் கோரக்கூடாது, 1) பிரிவு 10AA. இன்படி.சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள அலகுகள் தொடர்பான வரிவிலக்குகள் 2) ஆந்திரா, பீகார், தெலுங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் ஒரு சில பின்தங்கிய பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள், இயந்திரங்கள் ஆகியவற்றை நிறுவுகை செய்வதற்காக வருமான வரிச்சட்டம் பிரிவு 32 (1) (iia)இன்படி கூடுதல் தேய்மானமும் பிரிவு 32AD இன்படிமுதலீட்டு படியும் . 3) இந்தியாவில் பெட்ரோலியம் அல்லது இயற்கை எரிவாயு அல்லது இந்த இரு தொழில்களிலும் சேர்ந்து ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வருமானவரிச்சட்டம் பிரிவு 33ABA இன்படி தள மறுசீரமைப்பிற்கான வைப்புத்தொகை செய்வதன் மூலமான கழிவுகள். 4) பிரிவு 35 இன்படி அறிவியல் ஆராய்ச்சிக்கு செலவிடப்பட்ட செலவினங்களுக்கான கழிவுகள். 5) பிரிவு 35ADஇன்படி குறிப்பிட்ட வணிகத்தின் மூலதன செலவினங்களுக்கான கழிவுகள். 6) பிரிவு 35CCCஇன்படி வேளாண் விரிவாக்கத் திட்டம் அல்லது பிரிவு35CCD இன்படி திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றிற்கான செலவுகளுக்கான கழிவுகள். 7) அத்தியாயம் VI-A இன் பிரிவு 80 / JJAA இன்படி புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான விலக்குகளைத் தவிர மிகுதி பிரிவு 80 uA, 80IAB, 80IB போன்றவற்றில் குறிப்பிடப்பட்ட வருமானத்தின் உள்ளிட்ட கழிவுகள்.. ஆ) அத்தகைய இந்திய நிறுவனங்களானவை தங்களுடைய ஆண்டு வருமான வரி படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கெடுதேதிக்கு முன்னதாக வே குறைக்கப்பட்ட இந்த புதிய22% எனும் வருமானவரி விகிதத்தில் வருமான வரி செலுத்துகின்ற வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். நிறுவனமானது வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்க தவறிவிட்டாலும் அல்லது பிரிவு139 (1)இன்டி குறிப்பிடப்பட்ட தேதிக்குப் பிறகு வருமானவரி அறிக்கையை சமர்ப்பித்திருந்தாலும், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்வதற்கான விருப்பத்தினை பிரிவு 139 இன்படி (இந்த புதிய பிரிவு115BAA இன்படி [ 4])குறிப்பிடப்பட்ட தேதிக்கு முன்பே பயன்படுத்தி கொள்ளப்பட வேண்டும். இ) இவ்வாறான வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டவுடன், இந்த புதிய பிரிவு 115BAA ஐ திரும்பப் பெறுவது சாத்தியமில்லை. மேலும் வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 32 (1) (iia) இன்படிகூடுதல் தேய்மான சலுகைககளையும் பிரிவு 115JAA இன் படி குறைந்தபட்ச மாற்று வரி வரவு சலுகைகளையும் இலாபநட்டகணக்கில் கொண்டுவருவது தொடர்பான பின்வரும் ஆலோசனைகளையும் மனதில் கொண்டு தெளிவு பெறுக. 1) பிரிவு 32 (1) (iia) இன்படி கூடுதல் தேய்மானத்தின் காரணமாக ஏற்படும் இழப்பு : எண். 29/2019 நாள் 02.10.2019 அன்று வெளியிடப்பட்ட வருமான வரித் துறை சுற்றறிக்கை யின்படி , 115BAA பிரிவின் கீழ் வருமான வரி செலுத்த விரும்புவதாகத் தேர்ந்தெடுத்த உள்நாட்டு நிறுவனங்களின் இலாபநட்ட கணக்கில் கூடுதல் தேய்மானத்தின் காரணமாக ஏற்படும் இழப்பை பின்வரும் ஆண்டுகளுக்கு கொண்டு செல்லவோ அல்லது சரிசெய்து கொள்ளவோ அனுமதிக்கப்பட மாட்டாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது . பொதுவாக நிறுவனத்தின் ஏற்படும் இழப்புகளானவை , வருமானம் ஈட்டுவதற்காக அதிக படியாக செலவு செய்தல் , நிலையான சொத்துக்களின் தேய்மானத்தால் ஏற்படும் இழப்பு ஆகிய இரண்டு வகைகளாக இருக்கலாம். நிறுவனத்தின் வருமான வரி அறிக்கையி ல் தேய்மானத்தினை குறிப்பிடாவிட்டால் அந்நிறுவனத்திற்கு இலாபம் இருக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறான நிலையில், தேய்மானம் காரணமாக மட்டுமே ஏற்படுகின்ற இழப்பானது . வருமான வரிச் சட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட தேய்மானம் என குறிப்பிடப்படுகின்றது, மேலும் இது எதிர்வரும் ஆண்டுகளுக்கு கொண்டு செல்வதற்கான காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இப்போது,பிரிவு 32 (1) (ii அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள கூடுதல் தேய்மானத்திலிருந்து இத்தகைய இழப்பு ஏற்பட்டால், இந்த இழப்பை எதிர்வரும் ஆண்டுகளுக்கு கொண்டு செல்லவோ அல்லது 115BAA பிரிவைத் தேர்ந்தெடுத்த நிறுவனத்தின் வருமானத்தில் அதை சரிசெய்து கொள்ளவோ முடியாது. மேற்கண்ட விளக்கத்தை ஒரு எளிய எடுத்துக்காட்டுடன் விளக்கலாம். எடுத்துக்காட்டாக: கம்பெனி ஏபிசி லிமிடெட் கூடுதல் தேய்மானம் காரணமாக பிரிவு 32(1)(iia) இன்படி ரூ. 10,00,000. ஆக அதனுடைய நட்டம் ஏற்பட்டுள்ளது 2019-20 ஆம் ஆண்டுடன் முடிவடையும் நிதியாண்டில், இந்நிறுவனம் அதன் மொத்த வருமானத்தில் 22% எனும் குறைந்த வரிவிகிதத்தில் வருமான வரியாக செலுத்துவதற்காக இந்த புதிய பிரிவு 115BAA ஐ தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது என கொள்க . இப்போது, இந்நிறுவனம் மொத்த வருமானமாகரூ. 5,00,000 ஈட்டியுள்ளதாக கொள்க இந்த வருமானத்தில் மேற்கண்ட கூடுதல் தேய்மானத்திற்கான இழப்பு ரூ. 10,00,000 சரிசெய்து கொள்ள தகுதியற்றதாக மாறுகின்ற நிலை உருவாகும். மேற்கண்ட சட்டப்பிரிவானது, "உள்நாட்டு நிறுவனத்திற்கு 115BAA ஐத் தேர்ந்தெடுப்பதற்கான காலக்கெடு இல்லாததால், முதலில் இந்த ஆண்டு ஏற்பட்ட இழப்புரூ .10,00,000 ஐ பின்வரும் ஆண்டுகளுக்கு கொண்டு செல்வதற்கேதுவாக, வழக்கம்போன்ற சாதாரண வரிவிகிதத்தின் கீழ் வரி செலுத்துவதற்கான வருமானவரிஅறிக்கையை சமர்ப்பித்து விட்டு அதன்பின்னர் அடுத்துவரும் ஆண்டுகளிலிருந்து , பிரிவு 115BAA இன் குறைந்த வரிவிகிதத்தில் வரியை செலுத்துவதற்கு தெரிவுசெய்து கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகின்றது 2) பிரிவு 115JAA இன் கீழ் குறைந்தபட்ச மாற்று வரிவரவு: பிரிவு 115BAA ஐத் தேர்ந்தெடுக்கும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு, 115JB கணக்கிடுதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. பிரிவு 115BAA ஐத் தேர்ந்தெடுப்பதற்கு நிறுவனத்திற்கு குறைந்தபட்ச மாற்று வரி விதிமுறை பொருந்தாது என்பதால், வழக்கமான ஏற்பாட்டின் கீழ் கணக்கிடப்பட்ட அதன் இலாபத்தில் அதன் வரவுை சரிசெய்து கொள்ளமுடியாது. மேற்கண்ட சட்டவரிகளானது இந்த ஆண்டு குறைந்தபட்ச மாற்று வரிவரவை சரிசெய்து, வரவை முழுவதுமாக சரிசெய்து கொள்ளலாம் , பின்னர் அடுத்த ஆண்டு முதல் 115BAA பிரிவைத் தேர்வுசெய்துகொள்ளலாம் என்றும் பரிந்துரைக்கபடுகின்றது இந்த புதிய வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்ளுமுன் மனதில் கொள்ளவேண்டிய கூடுதலான முக்கிய தகவல்கள் : 1) 115BAA பிரிவைத் தேர்ந்தெடுக்கும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு, வருமானத்தைப் பொருட்படுத்தாமல் 10% கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். 2) மதிப்பீட்டாளரின் மொத்த வருமானத்தில் 25.168% வரிக்கு பயனுள்ள வரி விகிதம் வருகிறது. (22% * 1.1 * 1.04) 3) பிரிவு 115BAA இன் கீழ் வரி செலுத்துவதற்கான விருப்பத்தை தெரிவுசெய்த பின்னர், அதனை பின்வரும்அனைத்து கணக்கியல் ஆண்டிற்கும் பின்பற்றப்பட வேண்டும். 4) பிரிவு 115BAA இன் கீழ் வரி செலுத்த விரும்பும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு விளிம்பு நிவாரணம் பொருந்தும்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...