புதன், 27 மே, 2020

நிறுவனங்களின் விவகாரங்கள் துறையின்இணக்க கண்காணிப்பு அமைப்பு


நிறுவனச் சட்டம் 2013 இன்கீழ் இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் விவகாரங்கள் துறையின்இணக்க கண்காணிப்பு அமைப்பு ( Ministry of Corporate Affairs Compliance Monitoring System (MCACMS)) எனும் இணையதள பொறிமுறையின் வாயிலாக நேரடியாக கண்காணிப்பு செய்திடமுடியும் , இந்த தளமானது செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிறுவன விவகாரங்கள் துறைகூறுகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்றதவறிய அல்லது இணக்க முறையினை பின்பற்றாத எந்தவொரு நிறுவனத்தையும் தானியங்கியாக கண்டு பிடித்து அவ்வாறு இணக்கமற்ற நிறுவனங்களுக்கு / இயக்குநர்களுக்கு டிஜிட்டல் முறையில் அதற்கான-காரணம் கோரும் அறிவிப்புகளை தானாகவே அனுப்பிவைத்திடும். அதனை தொடர்ந்து இதுபோன்ற தவறிய நிறுவனங்கள் / இயக்குநர்கள் இந்த MCACMS இணையதளவாயிலில் இந்த காரணம் கோரும் அறிவிப்பிற்கான தக்க பதிலை உடனுக்குடன் சமர்ப்பிக்க வேண்டும். இந்தியாவில் பதிவுசெய்யப்பட்டு செயல்படும் எந்தவொரு நிறுவனத்திலும் ஏதேனுமொரு பெரிய மோசடி நடந்தபின்னர் அவ்வாறான மேசடியை கண்டறியப்படாதவை அல்லது அவ்வாறு கண்டறியப்பட்டும் இணக்கமாக செயல்படாத வை அல்லது இணக்க மாக செயல்படுவதற்காக தாமதத்திடுபவை என்பனபோன்ற ஏராளமான வழக்குகள் தீர்வுசெய்யப்படாமல் மலைபோன்று குவிந்து கொண்டேவருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் இவைகளை தீர்வுசெய்வதற்காக பலவேறு வழிகாட்டி அமைப்புகள் அல்லது பாரம்பரிய ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையிலான வழிமுறை மூலம் இணங்காதவைகளை கண்காணித்து அதற்கு தக்கநடவடிக்கைகளை எடுப்பது என்பது மிகவும் கடினமான சூழ்நிலையாக இருந்துவருகின்றது, தற்போது அவ்வாறாக ஏறத்தாழ 14 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்வு செய்யப் படாமல் நிலுவையாக உள்ளன. எனவே, இணக்கமற்றதைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவின்( A.I) அடிப்படையிலான உலகளாவிய இணக்க கண்காணிப்பு அமைப்பினை செயல்படுத்திடுவதற்கான மிகச்சரியான நேரம் இதுவேயாகும், எந்தவொரு இணக்கசெயலையும்மிகச் சரியான நேரத்தில் நிறைவேற்றத் தவறிய பின்னர், அவ்வாறு தவறிய நிறுவனம் / இயக்குனர் அல்லது நிறுவனத்தின் செயலாளர் ஆகியோர்களுக்கு புதிய இந்த எம்.சி.ஏ.சி.எம்.எஸ் எனும் தளமானது உடனுடக்குடன் மின்னஞ்சல் வழியாக காரணம் கோரிடும் அறிவிப்பை ஒன்றினை தானாகவே அனுப்பிவைத்திடும். இந்த காரணம் கோரும் அறிவிப்பானது F.No. D/RC000/000/2019/00/11-11 என்பது போன்றதொரு CMS மேற்குறிப்பு எண்ணைக் கொண்டிருக்கும். . அவ்வாறான காரணம் கோரும் அறிவிப்பில் ; நிறுவனசட்டம்2013 இன்படி எந்த பிரிவின் கீழ் இந்த காரணம் கோரும் அறிவிப்பு வழங்கப்படுகின்றது; , இந்த காரணம் கோரும் அறிவிப்பிற்கான பதிலைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு. ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும், இந்த காரணம் கோரும் அறிவிப்பானது இணக்கத்தன்மையில்லாத நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு அல்லது முதன்மை நிருவாக பணியாளர்களுக்கு(Key Managerial Person(KMP))அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு இந்த அறிவிப்பின் அடிப்படையில் நிறுவனங்கள் சட்டம் 2013 இன் விதிமுறைகளை பின்பற்றாததற்காக அந்நிறுவனத்தின் ஒவ்வொரு அலுவலருக்கும் இந்தஅறிவிப்பு வழங்கப்பட்டதாகக் கருதப்படும். இவ்வாறு காரண கோரும் அறிவிப்பு பெற்ற நிறுவனத்தின் இயக்குனர் ஒரு வர்அவ்வாறான அறிவிப்பு ஒன்றினை பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் அதற்கான தக்கபதிலை சமர்ப்பித்திட வேண்டும்.MCACMS தளம் வழங்கிய காரண கோரும் அறிவிப்பிற்கான பதில் தயார்செய்து சமர்ப்பிதற்கான படிமுறைகள் பின்வருமாறு: 1. முதலில் MCACMS இணையதளபக்கத்தில் நேரடியாக உள்நுழைவுசெய்திடுக; 2. தொடர்ந்து Reply to Show Cause Notice எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக ; 3. பின்னர் விரியும் திரையில் நமக்கு கிடைத்த காரணம் கோரும் CMS அறிவிப்பிற்கான எண்ணை உள்ளீடுசெய்திடுக; 4. அதன்பின்னர் நம்முடைய பதில் செயல்பாட்டிற்கான OTP ஐ உருவாக்குக; (இது பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு மட்டும் அனுப்பப்படும்) 5.அவ்வாறு பெறப்பட்ட OTP ஐ இந்த MCACMS தளத்தில் உள்ளீடுசெய்திடுக; 6. அதனை தொடர்ந்து இந்த காரணம் கோரும் அறிவிப்பிற்காக500 சொற்களுக்கு மிகாமல் பதிலை உள்ளீடு செய்து சமர்ப்பித்திடுக. அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் பதிலானது 500 க்கும் மேற்பட்ட சொற்களில் இருந்தால், அதை நிறுவனத்தின் பெயருடையகடித தலைப்புதாளில் அச்சிட்டு, இயக்குநர் / நிறுவன செயலாளரால் கையொப்பமிடப்பட்டு, மின்னஞ்சலினுடைய இணைப்பாக சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது; 7. இவ்வாறான காரணம் கோரும் அறிவிப்பிற்கு உடனடியாக பதிலை சமர்ப்பித்திடவேண்டும். அவ்வாறு காரணம் கோரும் அறிவிப்பிறக்கு பதி்லைச் சமர்ப்பிக்கத் தவறினால், இது குறித்து தொடர்புடைய நிறுவனமானது பதில் கூறுவதற்கு தகுந்த காரணம் எதுவும்இல்லை என்று கருதப்பட்டு அடுத்த கட்டநடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். அதாவது இதன் விளைவாக, நிறுவனங்களின் சட்டம் 2013 இன் விதிமுறைகளை மீறியதற்காக, நிறுவனத்தின் பதிவாளர் (ROC) அந்நிறுவனத்தின் மீது தண்டனை நடவடிக்கைகளை எடுத்திடுவார். எம்.சி.ஏ-சி.எம்.எஸ் தளமானது தற்போதுகாரணம் கோரிடும் அறிவிப்பினை நிறுவனங்களின் சட்டம், 2013 இன் பிரிவு 96 மற்றும் 204 இன் ஆகிய இரண்டின்கீழ் இணங்காததற்காக மட்டும் வழங்கப்பட்டு வருகின்றது. காலப்போக்கில், நிறுவனங்கள் சட்டம், 2013 இன் அனைத்து பிரிவுகளும் இந்த எம்சிஏ-சிஎம்எஸ் இன் கீழ் கொஂண்டுவரப்படுவதைக் காணலாம்;

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...