ஞாயிறு, 24 மே, 2020

ஏர்டாஸ்கர்( Airtasker) எனும் சேவைகளுக்கான சந்தை ஒரு அறிமுகம்


ஏர்டாஸ்கர்என்பது எந்தவொரு நபரும் தமக்கு தேவையான தம்முடைய பகுதியில் கிடைக்கின்ற உள்ளூர் சேவைகளை/பணிகளைக் கண்டுபிடித்து பயன்படுத்தி கொள்வதற்கும், அவ்வாறான பணிகளை/சேவைகளைச் செய்பவர்கள் தாம் ஆற்றும் பணிகளுக்கு/சேவைகளுக்கு போதுமான பணத்தினை சம்பாதிப்பதற்கும் உதவுகின்ற ஒரு இணையதள சந்தையாகும் ஏர்டாஸ்கரானது பணிகளை வெளியாட்களை கொண்டு செய்துகொள்வதற்கும், உள்ளூரில் பணிகளை ஆற்றுபவர்களை தேடிக்கண்டுபிடிப்பதற்கும், தொலைதூரத்திலிருந்து இவ்வாறான பணிகளை செய்வதற்கும் அல்லது பணம் சம்பாதிக்க நெகிழ்வான நம்பகமான முழுமையாக பணிகளைசெய்வதற்கானஒரு சமூகஇணையதள சந்தையாகும். இந்த ஏர்டாஸ்கரானது நடைமுறையில் வருவதற்கு முன்பு, திறமையும் பணிசெய்ய நேரமும் கிடைக்கக்கூடியவர்கள் தங்களுடைய உள்ளூர் சமூகத்தில் உள்ள மற்றவர்களை அடையாளம் காண எளிதான வழி எதுவும் இதுவரையில் இல்லாமலிருந்து வந்தது, பாரம்பரியமாக வகைப்படுத்தப்பட்ட விளம்பரம் , நேரடி அஞ்சல்களைத் தவிர புதிய வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிப்பதற்காக சுயதொழில் செய்பவர்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் தொழில் வல்லுநர்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட விருப்பங்களாக இருந்துவந்தன. ஏர்டாஸ்கரில், பணியை செய்பவர்கள் தாங்கள் செய்திடும் எந்தவொரு பணியையும் செய்யதயாராக இருப்பதாகவும் அதற்காக எதிர்பார்க்கப்படும் கட்டணத்தையும் குறிப்பிட்டு பதிவுசெய்து கொள்ளலாம் அவ்வாறே ஒரு பணியை விரும்புவோர்தங்களுக்கு குறிப்பிட்டபணியை செய்துதருமாறும் தங்களுக்காக செய்திடும் பணிக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த தாம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்ட சலுகைகளைதாம் வழங்கவிருப்பதாகவும் குறிப்பிடலாம். பின்னர் அவர்களின் அனைத்து சலுகைகளையும் மதிப்பாய்வு செய்து, வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தேவையான ஒரு நபரைத் இந்த டாஸ்கரில் தேர்ந்தெடுக்கமுடியும் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு ஒருவருக்கொருவர் கிடைக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பணியைச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளவும் முடியும் மறுபுறம், ஒரு டாஸ்கர் அவர்கள் விரும்பும் போதெல்லாம் வேலை வாய்ப்புகளை தேடி இணைய உலாவரலாம் அவர்கள் ஆர்வமுள்ள ஒரு பணியைக் காணும்போது, அதுகுறித்து கேள்விகளைக் கேட்கலாம், சந்தேககங்களை தெளிவுபடுத்திகொள்ளலாம் சலுகைகளை வழங்கலாம். அதனை தொடர்ந்து பணிசெய்யதுவங்கி அந்த பணி முடிந்ததும், டாஸ்கருக்கு அதற்கான பணம் கிடைக்கும். வீடுகளை சுத்தம் செய்தல், தோட்டம்பராமரித்தல், விநியோக சேவைகள், பிளம்பிங் சேவைகள், தளவாடங்களை ஒருங்கிணைத்தல், மொழிபெயர்ப்பு சேவைகள், இணையதள அபிவிருத்தி, நகல் எழுதுதல், செல்லப்பிராணி வளர்ப்பு, குழந்தைகள் காப்பகம், உணவு விநியோகம் ஆகியவை நாம் வாழும் சமூகத்திற்கு வழங்கக்கூடிய ஒருசில பிரபலமான சேவைகள்ஆகும் எந்தவொரு பணியையும் முடிக்க தேவையான திறன்களானவை நாம் செய்யும் பணியை முழுமையாக சார்ந்துள்ளது. சில பணிகளுக்கு நிபுணத்துவ திறன்கள் தேவையில்லை மறுதலையாக, குறிப்பிட்ட பணிக்கு சான்றளிக்கப்பட்ட மெக்கானிக் அல்லது எலக்ட்ரீஷியன் என்பனபோன்ற தொழில் நுட்ப பணிகளுக்கு அவ்வாறான, பணிகளை முடிக்க அந்தந்த திறன்களை நாம் கொண்டிருக்க வேண்டும் இந்த ஏர்டாஸ்கரை பயன்படுத்திகொள்வதற்கானஆலோசனை குறிப்புகள்: நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை சரிபார்க்க உதவும் பேட்ஜ்கள் மூலம் நம்முடைய கணக்கை சரிபார்த்து உறுதிசெய்க இந்த இணையதளமேடையை உள்ளூர் சமூகம் போல நடத்துக சட்டவிரோத அல்லது மோசடி நடத்தையில் ஈடுபட வேண்டாம்அவ்வாறு சட்ட விதிகளை மீறுவோர்களும் மோசடி நடத்தையில் ஈடுபடுவோர்களும் தளத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் உயர் நட்சத்திர மதிப்பீடு , நிறைவு வீதத்தை பராமரிக்க முயற்சி செய்க, ஏனெனில் அவை பணியின் தரத்தையும் பணியாளர்களின் நம்பகத்தன்மைக்கும் ஆன சுட்டிகாட்டிகளாக விளங்குகின்றன மேலும் விவரங்களுக்கு https://www.airtasker.com/எனும் இணையதள பக்கத்திற்கு சென்றறிந்து கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...