நம்முடைய வணிகம் மேலும் வளர வேண்டுமா? ஆம் எனில் நம்முடைய நிறுவனத்திற்கு இந்த MSMEதிட்டம் கண்டிப்பாக பொருந்தும் அதாவது குறு சிறு நடுத்தர நிறுவனங்கள், தொழிலக கூட்டமைப்பு கழகங்கள் ஆகியவற்றிற்கு இந்த MSMEதிட்டமானது கண்டிப்பாக பொருந்தும் .பொதுவாக ஒவ்வொரு தொழிலதிபரும் தனது வணிகத்தை இமயமலை போன்ற பெரும் உயரத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புவார்கள் அவ்வாறு விரும்பினால் மட்டும் போதுமா நம்முடைய வணிகம் தொடர்ந்து செயல்படுவதற்கும் தொடர்ந்து வளரவும் நாம் என்ன செய்யவேண்டும் என்பதே மிகப்பெரிய சிக்கலான கேள்விக்குறியாக நம்மை பயமுறுத்துகின்றது .நம்முடைய வணிகம் தொடர்ந்து வளருவதற்கு அடிப்படையாக நம்முடைய போட்டியாளர்களின் நடவடிக்கைகளின்மீது நாம் எப்போதும் ஒரு கண்வைத்திருக்க வேண்டும் அதாவது நம்முடைய பொருளின் அல்லது சேவையின் தனித்தன்மை விற்பனைக்கு பிந்தைய சேவைகள் என்பனபோன்ற அனைத்தும் நம்முடைய போட்டியாளர்களைவிட முதன்மையாக இருக்கவேண்டும் . இதனுடன், நம்முடைய பிராண்டுகளை மிகவிரிவாக சந்தைப்படுத்திட வேண்டும் மேலும் நம்முடைய அடுத்தடுத்த திட்டங்களை பற்றியவிவரங்களை நம்முடைய வருங்கால வாடிக்கையாளர்களுக்கு நன்கு அறிந்து கொள்ளுமாறு அவ்வப்போதுஅறிவிக்கவும் தெரிவிக்கவும் வேண்டும் .நம்முடைய வியாபாரத்தின் முதன்மையான செலவுகளை கட்டுபடுத்தி மிகச்சிறந்த முறையில் சந்தைபடுத்தி விற்பனையை மேம்படுத்திட நடவடிக்கை எடுத்திடவேண்டும் உள்நாட்டில் மட்டுமல்லாது உலகமுழுவதும் இந்த சந்தைபடுத்திடும் நடவடிக்கைகளை கொண்டுசெல்லவேண்டும் அதன்வாயிலாக நம்முடைய நிறுவனத்தின் வருமானம் உயர்ந்து நம்முடைய நிறுவனம்மேலும் வளருவதற்கான சூழல் தானாகவே உருவாகிடும்.ஆயினும் இவ்வாறான செயல்களை செயற்படுத்திடுவதற்கான கட்டமைப்பு வசதி, நல்ல நிதிநிலை ஆகியவற்றை கொண்டுள்ள பெரிய நிறுவனங்கள் மட்டுமே இவற்றினை செயல்படுத்தி பயன்பெறமுடியும் . இன்றைய சூழலில் MSME எனசுருக்கமாக அழைக்கப்படும் குறுசிறநடுத்தர நிறுவனங்களும் இவ்வாறான சந்தைபடுத்துதல் செயலில் பங்கெடுத்து கொண்டு பயன்பெற்று தங்களின் வளர்ச்சியை உறுதிபடுத்தி கொள்வதற்காக இந்த சந்தைப்படுத்தலுக்கான உதவித் திட்டத்தைப் பயன்படுத்தி கொள்ளுதல் எனும் குறுசிறுநடுத்தர நிறுவனங்களின் திட்டமானது - தற்போது நடைமுறைபடுத்தப்-பட்டுள்ளது இந்திய அரசின் MSME அமைச்சகமானது இந்த திட்டத்தை செயல்படுத்திடுவதற்கென்றே தனியாக சிறப்பு கவணம் செலுத்துகின்றது இந்த திட்டத்தின்வாயிலாக தேசிய மற்றும் சர்வதேச கண்காட்சிகளில் நம்முடைய நிறுவனத்தினை பங்கேற்பு செய்தல், கூட்டு நிதியளிப்பு கண்காட்சிகள், பல்வேறு வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்றல், வாங்குபவர் -விற்பனையாளர் ஆகியோர்களின் சந்திப்பு, விளம்பரபடுத்துதல, சந்தைபடுத்திடும் நிகழ்வுகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு நம்முடைய நிறுவனத்தினை வெற்றிபெற முயற்சி செய்திடுவோம் இந்த திட்டத்தின் வாயிலாக உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச சந்தையிலும் நம்முடைய பொருட்களை அல்லது சேவைகளை சந்தைப்படுத்துவதன் மூலம் நம்முடைய நிறுவனத்தின் விற்பனை வருவாயை அதிகரிக்க செய்யமுடியும்
அவ்வாறான சர்வேச சந்தைபடுத்துதலில் கலந்துகொள்ளும் நிறுவனங்களுக்கு 95% விமான கட்டண சலுகையும் பொருட்காட்சியில் காட்சிபடுத்துகின்ற இடத்தின் வாடகையில் 95% சலுகையும் அனுமதிக்கப்படுகின்றது இந்த வசதியை பயன்படுத்தி கொள்வதற்காக அதிக சிரமப்படத்தேவையில்லை இந்த திட்டத்தில் பங்குகொண்டு சந்தை படுத்த விழையும் குறுசிறுநடுத்தரநிறுவனங்கள் இதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அருகிலுள்ள தேசியசிறுதொழில்வளர்ச்சி கழக அலுவலகத்தில் சமர்ப்பித்தால் மட்டும் போதுமானதாகும் என்ற செய்தியை மனதில் கொள்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக