நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் (MCA) ஆனது நிறுவனங்கள் (இயக்குநர்களின் நியமனம் மற்றும் தகுதி) மூன்றாம் திருத்த விதிகள், 2019 (படிவம் DIR-3 KYC / படிவம் DIR-3 KYC WEB ஐ தாக்கல் செய்தல்) எனும் புதிய திருத்தத்தை (இயக்குநர்களின் நியமனம் மற்றும் தகுதி ) விதி, 2014 இல் கடந்த ஜூலை 25, 2019.இலிருந்து நடைமுறைக்கு வருமாறு அறிமுகப்படுத்தியுள்ளது இந்த திருத்தங்களின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு;
இயக்குநர் அடையாள எண் (Director Identification Number (DIN))பெற்றுள்ள ஒவ்வொரு தனிநபரும் ஒரு நிதியாண்டின் மார்ச் 31 ஆம் தேதி வரை, அந்த நிதியாண்டிற்கான DIR-3-KYC என்ற மின்-படிவத்தை அடுத்த நிதியாண்டின் செப்டம்பர் 30 இற்குள் அல்லது அதற்கு முன்னதாக மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆயினும், ஏற்கனவே எந்தவொரு முந்தைய நிதியாண்டு தொடர்பாக மின்-படிவம் DIR-3 KYC ஐ சமர்ப்பித்த எந்தவொரு இயக்குநரும், அடுத்த நிதியாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் இது தொடர்பாக வலைபடிவ DIR-3 KYC-WEB ஐ இணையத்தின்மூலம் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, எந்தவொரு தனிநபருக்கும் குறிப்பிட்ட நிதியாண்டில் புதிய DIN எண் கிடைத்தால், அவர் / அவள் உடனடியாக அடுத்த நிதியாண்டின் செப்டம்பர் 30 அல்லது அதற்கு முன்னதாக மினனு-படிவம் DIR-3 KYC யை சமர்ப்பிப்பார்கள், அதன்பிறகு அவர் / அவள் வலைபடிவம் DIR-3 KYC WEB ஐ ஒவ்வொரு நிதியாண்டிற்கும் அடுத்த நிதியாண்டு செப்டம்பர் 30 க்குள் சமர்ப்பித்திடவேண்டும்.
இந்த புதிய வலை படிவம் DIR-3 KYC WEB என்பது இயக்குநர்கள் நடைமுறையில் எளிதாக பின்பற்றிடுவதற்காக MCA ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அவர்கள் ஏற்கனவே தங்களுடையKYC ஆவணங்களை மின்னனு-படிவ DIR-3 KYC இல் முந்தைய நிதியாண்டில் சமர்ப்பித்துள்ளனர், அதனால் இந்த புதிய வலை படிவத்திற்கு புதியதாக எந்தவித இணைப்பு ஆவணங்களும் தேவையில்லை அல்லது அது தொடர்பு விவரங்களின் OTP சரிபார்ப்பு என்தும் தேவையில்லை , அதனோடு எந்தவொரு தொழில்முறை சான்றிதழ் / சான்றளிப்பு ம் தேவையில்லை.என்ற கூடுதல் தகவல்களையும் மனதில் கொள்க
மேலும், ஒரு நபர் தனது தனிப்பட்ட செல்லிடத்து பேசி எண்ணை அல்லது மின்னஞ்சல் முகவரியை தனது DINதகவல்களின் தரவுகளில் புதுப்பிக்க விரும்பினால், அவர் / அவள் மின்னணு படிவம் DIR-3 KYCயை மட்டும் சமர்ப்பிப்பதன் மூலம் புதுப்பிக்க வேண்டும். இது ஒவ்வொரு நிதியாண்டிலும் செப்டம்பர் 30 அல்லது அதற்கு முன்னர் DIN வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் செய்ய வேண்டிய புதிய இணக்கமாக இருக்கும். இவ்வாறான நடைமுறை செயல்படுத்தபட்ட பின்னர் இந்த வலைபடிவம் DIR-3 KYC WEB ஐ ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்காத இயக்குநரின் DIN எண்ணானது செயலிழக்கம் செய்யப்படும் மேலும் இவ்வாறு தவறிய நபரின்மீது அபாரத தொகை ரூ 5,000./- மட்டும் விதிக்கப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக