இன்று, பெரும்பாலான சரக்கு சேவைவரி(GST) வல்லுநர்கள் தங்களுடைய வாடிக்கை யாளர்களுக்கு உள்ளீட்டு வரிவரவு (Input TaxCredit(ITC)) மறு ஒத்திசைவினை (Reconciliation) செய்யாமல் விட்டு விடுகின்றனர். ஏனெனில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும்இந்த ஐ.டி.சி மறு ஒத்திசை வினை செய்வது மிகவும் அதிக காலஅவகாசம் எடுத்து கொள்ளும் என்பதும் வாடிக்கையாளரிட மிருந்து பெறப்பட்ட கட்டணங்கள் போதுமானதாக இருக்காது என்பதும் புரிந்து கொள்ளத் தக்கதுதான். மேலும், வாடிக்கையாளர்களின் பரிமாற்றங்கள் பற்றிய புரிதல் இல்லாமை மற்றும் செய்ய வேண்டிய வேறு சில மறு ஒத்திசைவுகள் போன்ற பல்வேறு பணிச்சுமைகள் மிகவும் அதிக மாக இருக்கும்போது இந்த உள்ளீட்டு வரிவரவு மறு ஒத்திசை வினை செய்வதற்காக அவர்கள் அதிக மனிதசக்தியை செலவிடவேண்டிய நெருக்கடி ஏற்படுகின்றது.
இருப்பினும், உள்ளீட்டு வரிவரவை மறு ஒத்திசைவினை செய்யாமல்விடுவது வாடிக்கையாளர்களை மோசமாக பாதிக்கலாம். - மேலும் வாடிக்கையாளருக்கான உள்ளீட்டு வரிவரவு இழப்பு ஏற்படும் சூழலும் உருவாகும் அதுமட்டுமல்லாது ஜிஎஸ்டிஆர் 2 ஏ இல் காட்டப் பட்டுள்ளதை விட அதிகமானவரவு இருப்பதன் காரணமாக சசேவ துறையிலிருந்து இது குறித்து எச்சரிக்கை அறிவிப்பைப் பெறுவதற்கான சூழலும் உருவாகும்
அதைவிட இயல்புநிலை வழங்குநர்களுக்கு முழுமையாக தொகை செலுத்ததவறுதல் ,இயல்புநிலையில் வாடிக்கையாளரின் நம்பிக்கையை இழத்தல் ,அதிகப்படியான வரவு மீள்திருத்த உரிமைகோருதலால் வாடிக்கையாளருக்கான கூடுதல் வட்டி செலவு ஆகியவற்றிற்கான வழிவகுக்கின்றது,
உள்ளீட்டு வரிவரவு மறு ஒத்திசைவு என்பது சசேவஇன்கீழ் பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்து-வோரின் கொள்முதல் விவரங்களுடன் பொருளை அல்லது சேவையை வழங்கியோர் பதிவேற்றிய விவரங்களுடன் பொருத்தமாக இருக்கின்றதாவென சரிபார்ப்பதற்கான ஒரு செயல்முறையாகும். பொதுவாக பொருளை அல்லது சேவையை வழங்குபவர் தனது ஜிஎஸ்டிஆர் 1 இல் பதிவேற்றிய அத்தகைய விவரங்கள் பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோரின் ஜிஎஸ்டிஆர் 2 ஏவில் பிரதிபலிக்கும். பொருளை அல்லது சேவையை வழங்குபவர் பதிவேற்றிய விவரங்களில் விலைப்-பட்டியல் மட்டுமல்லாது பற்று குறிப்புகள், வரவு குறிப்புகள் மற்றும் எந்தவொரு ஆவணத்திற்கும் செய்யப்பட்ட திருத்தங்களும் அதில் உள்ளடங்கும். , பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோரால் இவ்வாறான உள்ளீட்டு வரிவரவுமறுஒத்திசைவிற்காக ஜிஎஸ்டிஆர் 2 ஏ உடன் ஒப்பிடுகையில் எந்தெந்த பதிவுகள் பொருந்துகின்றன, எவை பொருந்தவில்லை எவை கொள்முதல் விவரங்களில் காணவில்லை ஆகியவிவரங்களை இதன் வாயிலாக எளிதாக அடையாளம் காண முடியும்.
இவ்வாறான உள்ளீட்டு வரிவரவுமறு ஒத்திசைவின் மேற்கொள்வதால் - ஆலோசனைக்கான வாடிக்கையாளர் சார்பு அதிகரித்தல் வாடிக்கையாளர் நம்பிக்கை அதிகரித்து வரிவரவை பெறுவதன் மூலம் வாடிக்கையாளர்களின் வரிசெலுத்துதலைச் சேமித்தல் உள்ளீட்டு வரிவரவு இழப்பினைத் தவிர்த்தல் மேலும் மறுஒத்திசைவின் போது அடையாளம் காணப்பட்ட முரண்பாடுகள் குறித்து மிகச்சரியான நேரத்தில் மிகச்சரியான நடவடிக்கையினால் மிகவும் துல்லியமான உள்ளீட்டு வரிவரவை பெற்று செலவைப் குறைப்பதற்கு வழிவகுக்கும் அதன் வாயிலாக வாடிக்கையாளருக்கு செலவிலிருந்து சேமித்தல் உருவாகும்
பொதுவாக , ஜி.எஸ்.டி.ஆர் 2 ஏ , கொள்முதல் தரவுகள் ஆகிய இரண்டும் வழக்கமாக மாதாந்திர அடிப்படையில் மறு ஒத்திசைவு செய்யப்பட்டுவிடும். இருப்பினும், பதிவுசெய்யப்பட்ட அனைத்து வரி செலுத்துவோருக்கும் இது சாத்தியமில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஜி.எஸ்.டி.ஆர் 2 ஏ , கொள்முதல் தரவுகள் ஆகியஇரண்டினையும் வருடாந்திட மறு ஒத்திசைவு செய்வது மிகவும்அவசியமாகும் மேலும் இவ்வாறு மறு ஒத்திசைவு செய்யப்பட வேண்டிய செயலினை அந்த நிதியாண்டைத் தொடர்ந்து அடுத்துவரும் செப்டம்பர் மாதத்தில் வருடாந்திர ஜி.எஸ்.டி ஆண்டறிக்கையை சமர்ப்பிதற்கு முன் செய்யப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக - 2018-19 நிதியாண்டில், செப்டம்பர் 2019 மாதத்தில் ஜிஎஸ்டி ஆண்டுஅறிக்கையை சமர்ப்பிப்பவதற்கு முன் வருடாந்திர மறுஒத்திசைவு செய்யப்படவேண்டும்.
அவ்வாறான கொள்முதல் தரவுகளுடன் ஜிஎஸ்டிஆர் 2 ஏவினனை மறுஒத்திசைவு செய்திடும்போது, - பின்வரும் நான்கு வகையானமுடிவுகளைப் பெறலாம்.
அ). பொருந்திய விலைப்பட்டியல்கள் - இவை ஜிஎஸ்டிஆர் 2 ஏ , கொள்முதல் தரவு ஆகிய இரண்டிலும் ஒன்றோடு ஒன்று பொருந்தக்கூடியதாக அமைகின்றன. அத்தகைய அனைத்து பதிவுகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளீட்டு வரிவரவு ஒரே மாதிரியாக கிடைக்கின்றது.
ஆ). பொருந்தாத விலைப்பட்டியல் கள்- இவை ஜி.எஸ்.டி.ஆர் 2 ஏ , கொள்முதல் தரவுகள் ஆகிய இரண்டிலும் விலைப்பட்டியல்கள் உள்ளன, ஆனால் இரண்டிலும் பதிவு செய்யப்பட்ட விலைப்பட்டியலின் விவரங்களில் முரண்பாடுகளுடன் உள்ளன. விலைப்பட்டியல் மதிப்பு, விலைப்பட்டியல் தேதி, வரி தொகை, விலைப்பட்டியலின் எண் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகள் காரணமாக இந்த முரண்பாடுகள் இருக்கலாம். பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோர் அத்தகைய முரண்பாடுகளை இதனை வழங்குபவருக்கு அறிவிப்பார், உடன் வழங்குபவர்கள் அவ்விவரங்களை திருத்தி டுவார்கள். அத்தகைய விவரங்கள் திருத்தப்பட்டதும், புதுப்பிக்கப்பட்ட விவரங்கள் பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோரின் ஜி.எஸ்.டி.ஆர் 2 ஏ-யில் பிரதிபலிக்கும், அதன்பிறகுவரிவரவு கோரப்படும். வழங்கப்படும் இடம் , வழங்கல் தேதி போன்ற திருத்த முடியாத ஒருசில பிழைகள் அடையாளம் காணப்படும். இந்த சந்தர்ப்பங்களில், ஆவணம் நிராகரிக்கப்பட வேண்டும் மேலும் புதிய ஆவணம் வழங்குபவரால் புதுப்பிக்கப்பட வேண்டும்.
இ). GSTR 2A இல் இல்லாதவை - கொள்முதல் தரவுகளில் பதிவுசெய்யப்பட்ட ஒருசில விலைப்பட்டியல்கள் இருக்கலாம், ஆனால் GSTR 2A இல் காணப்படவில்லை எனில். வழங்குபர் தனது அறிக்கையை சமர்ப்பிக்காத காரணத்தினால் இது இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோர் இதுபோன்ற காணாமல் போன விலைப்பட்டியலில் உள்ளீட்டு வரிவரவை பெறுவது கடினமாகும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோர் வழங்குபவரைத் தொடர்புகொண்டு அதற்கேற்ப சரியானவிவரங்களை புதுப்பிக்கும்படி கோர வேண்டும்.
ஈ). கொள்முதல் தரவில் இல்லாதவை - ஜி.எஸ்.டி.ஆர் 2 ஏ-யில் புதுப்பிக்கப்பட்ட ஒருசில விலைப் பட்டியல்கள் இருக்கலாம், ஆனால் கொள்முதல் தரவுகளில் பதிவு செய்யப்படவில்லை. அதற்கான விலைப்பட்டியல் பெறப்படவில்லை அல்லது கொள்முதல் தரவில் புதுப்பிக்கப்படுவதை தவற விட்டிருக்கலாம். அத்தகைய விலைப்பட்டியல்கள் கொள்முதல் பதிவில் சேர்க்கப்படவேண்டும், மேலும் அது தகுதியுடையதாக இருந்தால் உள்ளீட்டு வரிவரவினைப் பெறலாம்.
எடுத்துக்காட்டாக - வணிக பயணங்களுக்காக ஊழியர்களால் முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கான விலைப்பட்டியலில் ஜிஎஸ்டியில் பொதுவாக கொடுக்கப்பட்ட ஜிஎஸ்டி எண்ணின் படி அவ்வப்போது புதுப்பிக்கப்படவேண்டும்.
வரி வல்லுநர்கள் எதிர்கொள்ளக்கூடிய அனைத்து சவால்களிலும், உள்ளீட்டு வரிவரவு நல்லிணக்கத்தை செய்வது முக்கியமாகும். பொதுவாக அதிக பணிச்சுமையைக் கையாள நாம் வழக்கமாக மென்பொருள் கருவிகளைப் பயன்படுத்துகிறோம், ஆனால் இதில் அதிக அளவு சம்பாதிக்க வாய்ப்பு இருந்தால் நாம் எந்த வகையான மென்பொருள் கருவியைப் பயன்படுத்துகிறோம் என்பதைஉண்மையில் வரையறுக்கின்ற. ஒருசில கருவிகள் சந்தையில்உள்ளன, ஆனால் அவற்றில் பெரும்பாலானவை உள்ளீட்டு வரிவரவு நல்லிணக்கத்தை செய்ய உதவும் மேஜைக்கணினி கருவிகளாகும். இருப்பினும், அத்தகைய மென்பொருள் கருவிகள் நம்மை அடிப்படை நல்லிணக்கத்திற்கு மட்டுமே கட்டுப்படுத்துகின்றன, அங்கு அவை பொருந்திய பதிவுகளை மட்டுமே அடையாளம் காண உதவுகின்றன. ஆனால் பொருந்தாத மற்றும் காணாமல் போன பதிவுகளை கையாளுவதற்காக GSTHero என்பது இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட GST Suvidha வழங்குநராகும், மேலும் இது ஒரு மேம்பட்ட உள்ளீட்டு வரிவரவு நல்லிணக்க அம்சத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான ஒரு மென்மையான பொறிமுறையுடன் கூடிய மேககணினி அடிப்படையிலான பல பயனர் மென்பொருளாகும், இது நமக்கும் நம்முடைய வாடிக்கையாளர்களுக்கும் உள்ளீட்டு வரிவரவைக் கையாளுவதற்காக ஒரு தானியங்கி கருவியை வழங்குகின்றது. அதனால்இதனை பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக