ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

இந்தியமக்கள் திருந்தும் நாள் எந்தநாளோ?


நண்பர் ஒருவர் இந்தியாவின் பிரபலமான நகரத்திலுள்ள உணவகத்திற்கு சென்றார் அவ்வுணவகத்தில் அனைவரும் சத்தமாக பேசிக்கொண்டும் சாப்பிடும் உணவுகளை கீழே சிந்திகொண்டும் சிறிதளவு மட்டும் சாப்பிட்டுவிட்டு மிகுதியை அப்படியே வீணாக தட்டில் வைத்து வீணாக்கிவிட்டு எழுந்து கொண்டும் இருந்தார்கள்

ஒருவரிடம் "ஐயா! உங்களுடைய தட்டில் சாப்பிடாமல் மிகுதி இவ்வளவு உணவை வீணாக வைத்திடுகின்றிர்களே! சரியா?" என கேள்வி கேட்டவுடன் "அந்த உணவிற்குதான் நான் பணம் கொடுத்துவிட்டேன் அதனால் அதனை நான் முழுவதும் சாப்பிட்டு காலியாக்குவதும் மிகுதி வீணாக வைத்துவிட்டு எழுவதும் என்னுடைய விருப்பம்" என சண்டையிட துவங்கிவிட்டார்.

இதே நிகழ்வு ஜெர்மனி நாட்டில் எவ்வாறு கையாளபடுகின்றது தெரியுமா அவ்வாறு வீணாக்குபவர்களை உடன் காவல் அதிகாரி வந்து "அந்த பொருட்களுக்கு நாம் பணம் கொடுத்தாலும் அதனை வீணாக்காமலிருந்தால் வேறுயாருக்காவது தேவைப்படுபவர்களுக்கு பயன்படுமல்லவா உணவில்லாமல் பட்டிணியால் வாடுபவர்கள் எத்தனை கோடிபேர்கள் அவர்களுக்கு இந்த வீணாக்கிய உணவு பயன்படுமல்லவா" என விவரம் கூறி தண்டத்தொகையை வசூலித்து செல்வார்கள்

ஆனால் இந்தியாவில் இதுபோன்று எண்ணற்ற வளங்களை வீணாக்குவதிலேயே அனைவரும் குறியாக இருக்கின்றனர் கேள்விகேட்டால் அதற்கான தொகையைதான் வழங்கிவிட்டோமே என வாதிடுவார்கள் இந்தியமக்கள் திருந்தும் நாள் எந்தநாளோ?

நிறுவனத்தின் திறமையற்ற மேலாளர்களின் பொதுவான பண்பியல்புகள்


திறனற்ற மேலாளர்கள் தமக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களைவிட மிக உயர்ந்த பதவியில் இருப்பதால் அவர்களிடமிருந்து மிக தூரத்தில் விலகியே இருப்பார்கள்

திறனற்ற மேலாளர்களுக்கும் அவர்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இடையே எப்போதும் இரும்புத்திரையொன்று பிரி்த்துவைத்திருக்கும்

தம்முடைய குழுவின் வெற்றிகரமான பணித்திறனை மற்றவர்களிடம் தான்ஒருவன்மட்டுமே அதை செய்ததாக திறனற்ற மேலாளர்கள் பறைசாற்றிகொள்வார்கள் \

திறனற்ற மேலாளர்கள் தமக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்கள் தவறுதலாக செய்துவிடும் சின்னஞ்சிறு குறைகளையும் அனைவருக்கும் தெரியுமாறு ஊதிபெருக்கி தம்பட்டம் அடித்துகூறியபடி அவர்களை மட்டம் தட்டிவிடுவார்கள்

திறனற்ற மேலாளர்களுக்கும் அவர்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இடையே எப்போதும் மிகச்சரியான செய்தி தொடர்பு இருக்கவே இருக்காது

அவ்வப்போதுமாறிக்கொண்டேஇருக்கும் நிலைக்கேற்ப புதிய புதிய உத்திகளை பின்பற்றாமல் பழைய உத்திகளையே தங்களுடைய பணிகளுக்கு திறனற்ற மேலாளர்கள் பயன்படுத்தி கொண்டிருப்பார்கள்

திறனற்ற மேலாளர்கள் குழுஉறுப்பினர்கள் செய்திடும் தவறை சுட்டிகாட் பலர் அறிய அவர்களை திட்டுவதும் அவர்கள் திறமையாக பணிபுரிந்தால் அதனை தான் செய்ததாக தட்டிபறிப்பதும் ஆகிய செயல்களை எப்போதும் செய்வார்கள்

குழுஉறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் அவரவர்களுடைய பகுதியில் சிறந்த தலைமையாளராக வருமாறுதட்டிகொடுத்து வளரசெய்வதற்கு பதிலாக அவ்வாறாக வளரும் தலைவர்கள் தமக்கு போட்டியாக உயர்ந்து விடுவார்களோ என பயந்து கொண்டு தம்மை மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திடுவார்கள்

திறனற்ற மேலாளர்கள் சிறிய குழு அளவிற்கு மட்டுமே நல்ல தலைமையாளராக இருப்பார்கள் பலகுழுக்களை ஒருங்கிணைத்து பேரளவு குழுவாக கொண்டுசெல்ல திறனற்றவர்களாக இருப்பார்கள்

திறனற்ற மேலாளர்களின் திட்டஇலக்கு எப்போதும் சரியானதாக இருக்காது

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

திறமையான மேலாளாராக இருப்பதற்கான வழிமுறைகள்


எந்தவொருசிறுசெயலையும் விட்டிடாமல் கவனத்துடன் அனைத்து செயல்களும் நன்றாக செயல்படுவதை கன்கானித்திடுக

குழுவான ஊழியர்களின் தனிநபரின் திறமையை பலரும் கூடியிருக்கும்போது புகழ்ந்து பேசுக தனியொருவரின் தவறுகளை தனிப்பட்டமுறையில் சுட்டிகாட்டி திருத்திசெயல்படசெய்க

ஊழியர்கள்ஒவ்வொருவருடனும் தனிப்பட்டமுறையில் உறவை பராமரித்திடுக அதாவது அவரவர்களின் தனிப்பட்ட குணநலன்களை அங்கீகரித்து அவருடைய குடும்ப நிகழ்வுகளில சொந்த சகோதரன் போன்று பங்கெடுத்து கொள்க

அனைத்து அதிகாரமும் தனக்குமட்டுமேஉண்டுஎன வைத்துகொள்ளாமல் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட அதிகாரத்தை பிரித்து வழங்கிடுக

ஒவ்வொருவரும் தத்தமது பணியை திறனுடன் எவ்வாறு செய்திடவேண்டும் என பயிற்சியளித்திடுக

ஊழியர்கள் செய்திடும்சிறுசிறு தவறுகளை ஆழ்ந்து பரிசீலிக்காமல் விட்டிட்டு அந்ததவறுகளை அவரவர்களே முயன்று திருத்தி சரியாக செய்துகொள்ளுமாறு ஊக்குவித்திடுக

ஊழியர் ஒவ்வொருவருக்கும் ஒருசில தனிப்பட்ட சிறந்த திறன்கள் இருக்கும் அவற்றை ஆதரித்து ஊக்குவித்திடுக

ஊழியர்கள் அனைவரையும் அவருவர்களுடைய குணநலன்களுக்கு ஏற்ப தனித்தனியாக நிருவகித்திடுக ஊழியர்கள் அவரவர்களும் தத்தமதுபணியை முடிப்பதற்கு உடனே முடிக்கவேண்டும் என துரிபடுத்தாமல் பணியை சிறப்பாக முடிப்பதற்கு சிறிது கால அவகாசம் வழங்கிடுக

இவ்வுலகில் முயன்றால் முடியாததில்லை


முன்னொரு காலத்தில் அரசனுக்கு ஒரேயொருமகள்மட்டும் பிறந்ததால் அந்தமகளை நன்கு கல்விகற்கவைத்து அறிவிற்சிறந்த இளவரசியாக உருவாக்கினார் அதன்பின் அந்த இளவரசியானவள் கல்விகற்ற அறிஞர்கள் அனைவரையும் அறிவுபூர்வ விவாததிறமையால் தோற்கடித்தாள் அதனாள் தன்னை யாரேனும் இந்த அறிவுபூர்வ விவாதபோட்டியில் வெல்பவர்களே தான் திருமணம் செய்துகொள்ளமுடியும் என நாடுமுழுவதும் அறிவிப்பை அந்த அரசனால் செய்யபட்டது அதனை தொடர்ந்து பலநாட்டு இளவரசர்களும் அந்த இளவரசியுடன் போட்டியிட்டு தோற்று சென்றனர்

தொடர்ந்த அந்த நாட்டின் இளவரசியுடன் போட்டியிட்டு தோல்வியுற்ற அறிஞர் ஒருவர் அந்த இளவரசியை எப்படியாவது தோற்கடிக்கத்திடவேண்டும் எனதிட்டமிட்டார் அதற்காக ஊரின் ஒதுக்குபுறமாக இருந்த மரத்தில் ஒருவன் நுனிக்கிளையில் அமர்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்டிகொண்டிருந்தான்

இவனை கொண்டு அந்த நாட்டின் இளவரசிநடத்தும் போட்டியில் அந்த இளவரசியை தோற்கடித்து இளவரசியை இவனுக்கு திருமணம் செய்து வைத்திட வேண்டும் என முடிசெய்து அவனை மரத்தை விட்டு கீழேஇறங்க செய்து தம்பி என்னோடு வா என அழைத்து சென்று அவனை நன்கு குளிப்பாட்டி புதுஆடைகள் அணியசெய்து தம்பி நீஇந்த நாட்டின் இளவரசி நடத்தும் அறிவுபோட்டியில் கலந்து கொள் அவள் கேட்கும் கேள்விக்கு வாய்திறந்து பதில் எதுவும் கூறாதே அதற்குபதில் உன்னுடைய கைகளைமட்டும் அசைத்து காட்டு போதும் பின்னர் நீவென்றதாக உனக்கும் இந்த நாட்டின் இளவரசிக்கும் திருமணம் நடக்கும் என கூறி தயார் படுத்தி மறுநாள் அந்த இளைஞனை அரசவைக்கு அழைத்து சென்றார்

அரசவையில் அனைவரும் கூடி இருந்தனர் இந்தஅறிஞர் அனைவரிடமும் இந்த இளைஞன் இளவரசியுடன் நடக்கும் அறிவுபோட்டியில் வாய்திறந்து பேசமாட்டான் அதற்குபதிலாக தன்னுடைய கைகளைமட்டும் அசைத்து காண்பிப்பான் அதற்கு ஒத்து கொண்டால் போட்டி நடத்தலாம் என அந்த இளைஞன் சார்பாக வேண்டினார் இளவரசியும் சரி என ஏற்றுகொண்டாள்

முதலில் இளவரசியானவள் தன்னுடைய ஆள்காட்டிவிரலை மட்டும் உயர்த்தி காண்பித்தாள் உடன் அந்த இளவரசி தன்னுடைய ஒரு கண்ணை குருடாக்கபோவதாக எண்ணிக்கொண்டு அந்த இளைஞனானவன் இளவரசியின் இருகண்களையும் குருடாக்கிவிடுவதாக இருவிரலை உயர்த்தி காண்பித்தான்

அதாவதுஇளவரசியானவள் இந்த உலகமுழுவதற்கும் ஒரேஒரு இறைவன்மட்டுமே என தன்னுடைய கையின் சைகைக்கு அர்த்தமாகும் என விவரித்தாள் இந்த உலகம் முழுவதும் இறைவன்மட்டுமல்லாது மக்களும்உள்ளனர் என்ற அர்த்தமாகும் என அந்த இளைஞனின் செய்கைக்கு அறிஞர் விளக்கமளித்தார்

அடுத்ததாக இளவரசியானவள் தன்னுடைய ஒரு கையிலுள்ள ஐந்துவிரலையும் உயர்த்தி காண்பித்தாள் உடன் இளைஞன் தன்னை தரைமட்டத்தில் தள்ள முயற்சிக்கின்றாள் என எண்ணி கைவிரல்களை அனைத்தையும் மடக்கி முஷ்டி போன்றுஉயர்த்தி உன்னை குத்திவிடுவேண் என காண்பித்தான்

அதாவது இளவரசியானவள் மனிதனுக்கு ஐந்து வகையான குணநலன்கள் உள்ளன என அர்த்தமாகும் என விவரி்த்தாள் அறிஞன் அந்த ஐந்து குணநலன்களையும் கட்டுபடுத்தி நடந்தால் மட்டுமே அறிஞனாக உயரமுடியும் என அர்த்தமாகும் என விவரித்தார்

இவ்வாறு இளவரசியின் பல்வேறுவகையான கைசைகைகளுக்கு ஏற்ப இளைஞனின் பதில் கைசைகைகளை காண்பிப்பதையும் அதற்கான அர்த்தமும் விவரிக்கபட்டன முடிவில் அந்த இளைஞன் தன்னை போட்டியில் வென்றுவிட்டதாகவும் போட்டியில் தான் ஒத்துக்கொண்டவாறு அந்த இளைஞனை திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பதாகவும் இளவரசி உறுதிகூறினாள் அதனை தொடர்ந்து அந்த முட்டாள் இளைஞனுக்கும் அந்த நாட்டு இளவரசிக்கும் திருமணம் நடைபெற்றது

திருமணத்திற்கு பின்னரே அந்த இளைஞன் முட்டாள் என அறிந்து மனவருத்ததுடன் அந்த இளைஞனை ஒதுக்கிவைத்துவாழ்ந்து வந்தாள்

இதனால் விரக்தியுற்ற அந்த இளைஞன் நல்ல ஆசிரியரை தேடிபிடித்து அவரிடம் கல்விகற்று சிறந்த கவிஞனாக தன்னை வளர்த்து கொண்டார் அதன்பின்னர் சாகுந்தளம் மேகதூதம் ஆகிய காவியங்களை படைத்து வெளியிட்டார்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

மற்றவர்களை பற்றி அவர்களின் முதுகிற்குபின்புறம் குறைகூறுவதை விட்டிடுக


.பணியிடையே தொழிலாளர்களின் பணிமேம்பாட்டிற்கான பயிற்சியை அவ்வப்போது நிறுவனங்கள் நடத்துவது வழக்கமான செயலாகும்

அவ்வாறானதொரு பயிற்சிவகுப்பில்" தன்னுடன் பணிபுரியும் சகதொழிலாளர்களை பற்றி அவர்கள் இல்லாதபோது மற்றவர்களுடன் இல்லாத நபரை பற்றி அவதூறு செய்வதே ஒருதொழிலாளருடைய பழக்கம் என்றும் அதனால் அந்த தொழிலாளர் பணிபுரியும் இடத்தில் எப்போதும் சண்டையும் சச்சரவுமாக இருக்கின்றது என்றும் இதற்கான தீர்வை கூறுங்கள்" என பயிற்சி ஆசிரியரிடம் பயிற்சியில் கலந்துகொண்ட தொழிலாளர் ஒருவர் கோரினார்

"மிகநல்லது ஐயா உண்மையில் உங்களுடைய நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் குணநலன்களையும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் கூறி அதற்கான தீர்வுகூறிடுமாறு கோரியதற்கு நன்றி உங்களுடைய கையில் வைத்துள்ள இந்த செல்லிடத்து பேசியை அதோதெரிகின்றதே சேரும் சகதியுமான பகுதியில்வீசிஎறிந்துவிட்டுவாருங்கள் அந்த பிரச்சினைக்கான தீர்வினை கூறுகின்றேன்" என பயிற்சி ஆசிரியர் கூறினார்

ஆனால் அவ்வாறு பயிற்சி ஆசிரியர் கூறியவாறு தன்னுடைய கைபேசியை தூக்கி சேரும்சகதியுமான பகுதியில் வீசுவதற்கு தயங்கி நின்றார்

உடன் அந்த பயிற்சிஆசிரியர் "பார்த்தீர்களா ஐயா நமக்கு நெருக்கமான நம்முடைய உடைமையான பொருளை வீசிஎறிய மனம் துனிவதில்லை ஆனால் நம்முடையவாழ்வில் பணிபுரியும் சக தொழிலாளர்களை மட்டும் அவர்கள் இல்லாதுபோது முன்பின்யோசிக்காமல் அவர்களைபற்றிய அவதூறுகளை இலவசமாக பரப்புகின்றோம் இதுசரியா எனயோசியுங்கள்" என பதிலிறுத்ததை தொடர்ந்து

சிறிதுநேரம் சிந்தித்த அந்த தொழிலாளரும் "ஆம் ஐயா நாங்கள் அனைவரும் இன்றுமுதல் மற்றவர்களை பற்றிஅவர்களின் முதுகிற்கு பின்புறம் புறங்கூறும் செயலை விட்டிட்டு அனைவருடனும் சுமுகமாக நல்ல நட்புடன் பழகிடுமாறு உடன் பணிபுரிபவரிடம் உறுதிஎடுத்துகொள்ள செய்கின்றேன்" என்றார்

நாமும் அவ்வாறான உறுதிமொழியை பின்பற்றிடுவோமே

நாம் அனைவரும் நம்முடைய சமூகத்தில் உள்ளமற்றநபர்களுடன் நல்லுறவுடன் பழகுதல் செய்தால் அவ்வாறான நல்லுறவு நம்முடைய ஆபத்துகாலத்தில் நமக்கு பேருதவியாக இருக்கும்


தொழிலாளி ஒருவர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார் அந்த தொழிலாளியானவர் உடன்பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமல்லாது சமூகத்தில் வாழும்அனைத்து நபர்களுடனும் மிகநெருக்கமான உறவினர்போன்று பழகிவந்தார்

ஒருநாள் பணிநேரம்முடிந்து அனைவரும் தத்தமது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர் இந்த தொழிலாளியும் அவ்வாறே தன்னுடைய அன்றைய இறுதி பணியை முடித்து வெளியே கிளம்ப ஆயத்தம் செய்து கொண்டிருக்கும்போது அந்த தொழிலாளி பணிபுரிந்துகொண்டிருந்த இடத்திற்கான வாயில் கதவு தானாகவேமூடிகொண்டது

அதனால் பயமுற்ற அந்த தொழிலாளியானவர் வாயில் கதவினை தட்டியும்வெளியிலிருக்கும் மற்றவர்களின் பெயரை அழைத்தும் அங்கு வெளியில் யாரும்இல்லாததால் மூடிய கதவை திறக்கவில்லை அவ்வளவுதான் இன்று இரவு முழுவதும் இந்த தொழிலகத்திற்குள்ளேயே இருந்து இறக்கவேண்டியதுதான் என பலமணிநேரம் போராடியும் யாருடைய கவணத்தையும் ஈர்த்து வாயில் கதவினை திறக்கமுடியவில்லையேயென சோர்வுற்று அமர்ந்துவிட்டார்

இரண்டுமணிநேரம் கழித்தபின்னர் அந்த தொழிலகத்தின் பாதுகாவலர் ஒருவர் வந்து அவர் இருந்த பகுதியின் கதவினை திறந்தார் அப்போதுதான் அவருக்கு உயிர்வந்தார் போன்று மகிழ்ச்சியுற்ற தொழிலகத்தை விட்டு வெளியேறினார் அப்போது அந்த பாதுகாவலரிடம் "நான் இவ்வளவுநேரம் தொண்டைவரள கத்தியும், கதவினை தட்டிபார்த்தும் திறக்காத வாயில் கதவினை நீங்கள் மட்டும் இவ்வளவுநேரம் கழித்து வந்து கதவினை திறந்து என்னை எவ்வாறு காத்திடமுடிந்தது" என வினவியபோது

"ஐயா! நீ்ங்கள் எப்போதும் பணிக்கு உள்வருகை செய்திடும்போதும் பணிமுடிந்து வெளியே செல்லும் போதும் மற்றவர்களிடம் நெருக்கமாக பழகுவதை போன்று என்னிடமும் பணிக்கு செல்கின்றேன் என்றும் பணிமுடிந்து திரும்பும்போது நாளை பார்க்கலாம் என்று கூறிவிட்டுதான் செல்வீர்கள் இன்று அவ்வாறு பணிக்கு உள்நுழைவு செய்திடும்போது என்னிடம் பணிக்கு செல்கின்றேன் என கூறினீர்கள் ஆனால் பணிமுடிந்து திரும்பும்போது நாளை பார்க்கலாம் என்று கூறுவதை காணவில்லை அதனால் ஏதோ நடந்துவிட்டது என எண்ணி ஒவ்வொரு பகுதியாக திறந்து பார்வையிட்டுவந்து கடைசியாக உங்களை இங்கு பார்த்தேன்" என பதிலிறுத்ததைதொடர்ந்து

" நன்றி பாதுகாவலரே மிகச்சரியான நேரத்தில் வந்த என்னுடைய உயிரை காத்தீர்" என பாதுகாவலருக்கும நன்றி செலுத்தினார்

அதுபோன்றே நாம் அனைவரும் நம்முடைய சமூகத்தில் உள்ளமற்றநபர்களுடன் நல்லுறவுடன் பழகுதல் செய்தால் அவ்வாறான நல்லுறவானது நம்முடைய ஆபத்துகாலத்தில் நமக்கு பேருதவியாக இருக்கும் என்பது திண்ணம்

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

எந்த நிலையிலும் எந்தவொரு நிகழ்விலும் மற்றநபர்களை கோபமூட்டுவதுபோன்றோ எரிச்சலூட்டுவதுபோன்று செய்திடாதீர்கள்


தமிழ்நாட்டின் கிராமத்தில் விவாசாயி ஒருவர்வாழ்ந்து வந்தார் அவருக்கு சொந்தமாக சிறிதளவு நிலம் இருந்துவந்தது அதனைகொண்டு அவர் வாய்க்கும் கைக்குமாக வாழ்ந்துவந்தார் அவருடைய நிலத்திற்கு அருகிலிருந்த நிலத்தை அருகிலிருந்த நகரத்தில் வாழும் வழக்குரைஞர் ஒருவர் விலைக்குவாங்கி பயன்படுத்தி வந்தார் அந்த வழக்குரைஞரும் வாரவிடுமுறை அன்று தன்னுடைய நிலத்திற்கு வந்து நாள்முழுவதும் இருப்பது வழக்கமாகும்

இந்நிலையில் வழக்கமாக வாரவிடுமுறையில் வந்தபோது அவருடைய நிலத்தின்மீது பறந்து சென்ற புறா ஒன்றினை வேட்டையாடினார் உடன் பறந்துகொண்டிருந்த அந்த புறாவானது அருகிலிருந்த கிராமத்து விவசாயியின் நிலத்தில் விழுந்தது அதனை தொடர்ந்து வழக்குரைஞர் ஆனவர் பக்கத்து நிலத்திற்குள் உள்நுழைவு செய்து தான் வேட்டையாடிய புறாவை எடுத்திட முனைந்தார்

உடன் அருகிலிருந்த நிலத்தின் சொந்தககார விவசாயியானவர் ஐயா என்னுடைய நிலத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் அத்துமீறி உள்நுழைவு செய்துள்ளீர்கள் அதுமட்டுமல்லாது என்னுடைய நிலத்தின்மீது உள்ள பொருட்கள் அனைத்தும் எனக்குமட்டுமே சொந்தமாகும் அதனால்அந்த புறாவை நீங்கள் எடுத்து செல்லமுடியாது என தடுத்தார் அவ்வாறு அந்த விவசாயியானவர் தடுத்ததும் வழக்குரைஞருக்கு அளவிற்கு அதிகமான கோபம் உருவாகி நான் தெரியுமா அருகிலுள்ள நகரத்தில் பெரிய வழக்குரைஞராக நான் இருக்கின்றேன் உன்னை என்னசெய்கின்றேன் பார் நீதிமன்றத்திற்கு முன் மன்டியிட்டு மன்னிப்பு கேட்க வைக்கின்றேன் உன்னுடைய நிலம்முழுவதையும் விற்று அபராதமாக கட்டவைக்கின்றேன் பார் என கத்தினார்

எல்லாம் சரிஐயா உங்களுடைய சட்டம் நீதி எல்லாம் உங்களுடைய நீதிமன்றத்திலேயே வைத்துகொள்ளுங்கள் இங்கு கிராமத்தில் வழிவழியாக பின்பற்றிவரும் பழக்கவழக்கங்களை மட்டும் நீதிமன்றம் தலையிட்டு மாற்றிடமுடியாது எனவிவசாயிக்கூறியதை தொடர்ந்து ரொம்ப சரி இந்த நிகழ்விற்கான பழக்கவழக்கந்தான் என்ன என வழக்குரைஞர் வினவினார்

அதற்கு அந்த விவசாயி இங்கு கிராமத்தில் இவ்வாறான நிகழ்விற்கு மூன்றுஉதை எனும் விதியை பின்பற்றிவருகின்றோம் அதனை பின்பற்றி நீங்கள் கோரும் புறாவை எடுத்துசெல்லலாம் என அந்தவிவசாயி கூறியதை தொடர்ந்து அதுஎன்ன மூன்று உதை விதி விவரித்தால் நானும் அதனை பின்பற்றுவேன் என வழக்குறைஞர் கோபம் தனிந்து விவசாயியிடம் கேட்டார் முதலில் நான் உங்களுக்கு மூன்று உதைகொடுப்பேன் பதிலுக்கு நீங்கள் மூன்று உதை எனக்கு கொடுங்கள் அதன்பின்னர் நீங்கள் கோரியபடி அந்த புறாவை எடுத்து செல்லலாம் என பதிலிறுத்ததை வழக்குரைஞர் அமோதித்தார்

உடன் விவசாயி தன்னுடைய காலால் முதலில் வழக்குரைஞரின் மூக்கு உடைபடுமாறு எட்டிஉதைத்தார் ஐயோ என வழக்குரைஞர் கைகளால் முகத்தை தடவிகொடுத்தார்

இரண்டாவதாக வழக்குரைஞரின் இடுப்பில் உதைவிட்டார் ஐயோஅம்மா என கத்திக்கொண்டு தரையில் உட்கார் ஆரம்பித்தார்

மூன்றாவதாக வழக்குரைஞரின் தொடைபகுதியில் எட்டிஉதைத்தர் ஐயய்யோ என கூவிக்கொண்டு விவசாயி கொடுத்த மூன்று உதையும் தாங்கமுடியாமல் அப்படியே தரையில் படுத்துவிட்டார்

சரி ஐயா வழக்குரைஞரே இப்போது உங்களுடைய முறை நீங்கள் மூன்று உதை எனக்கு கொடுத்துவிட்டு இந்தாருங்கள் நீங்கள் கோரிய இந்த புறாவை எடுத்து செல்லுங்கள் என புறாவை அந்த வழக்குரைஞரை நோக்கி வீசிஎறிந்தார்

அந்த வழக்குரைஞரும் எழுந்து நடமுடியாத நிலையில் இருந்ததால் பதில் செயலை செய்யாமல் படுத்தபடுக்கையாகிவிட்டார் அடடா அருகிலிருந்த விவசாயியின் நிலத்திற்குள் அத்துமீறி நுழைசெய்தது மட்டுமல்லாது அவரை நீதிமன்றத்தில்அபராதம் கட்டவைப்பேன் என மிரட்டியது தவறு என உணர்ந்து மெதுவாக நகரத்திற்கு வந்துசேர்ந்தார்

எந்த நிலையிலும் எந்தவொரு நிகழ்விலும் மற்றநபர்களை கோபமூட்டுவதுபோன்றோ எரிச்சலூட்டுவதுபோன்று செய்திடாதீர்கள்

நாம் வாழும் இந்த இயற்கையை வீணாக்காமல் பாதுகாத்தால் நாம் எதிர்பார்த்திடும் நன்மை நமக்கு கிடைத்திடும்


ஒரு பெற்றோருக்கு ஒரேயொரு குழந்தை பிறந்து அதுவும் பெண்பிள்ளையாக பிறந்ததால் அதனை அந்த பெற்றோர்கள் சீரும் சிறப்புமாக கொண்டாடி மகிழ்ச்சியுடனும் மிகசெல்லம் கொடுத்து சீராட்டி வளர்த்துவந்தனர் அவர்களுடைய மகள் எதுகேட்டாளும் உடன்வாங்கி வழங்கிவந்தனர் இந்நிலையில் அவர்களுடைய மகளுக்கு பிறந்தநாள் வந்தது அவர்களுடைய மகள் தனக்கு கையில் அணிவதற்கு தங்க மோதிரம் வேண்டும் என கோரியவுடன் அவ்வாறே மோதிரத்தை வாங்கி பரிசாக அளித்தனர்

தினமும் அந்த பெண்குழந்தையின் தந்தையானவர் இரவு படுக்கைக்கு செல்லும்போது தன்னுடைய பிள்ளைக்கு அறிவுரை கதைகளையும் நீதிக்கதைகளை யும்கூறி தூங்கவைப்பது வழக்கமாகும் அப்போது அந்த தந்தையானவர் அவருடைய மகளிடம் பரிசாக அளித்தசிறு மோதிரத்தை தனக்கு கழற்றி கொடுக்குமாறு வேண்டுவார் உடன் அவருடைய மகளும் ஐயோ அப்பா அதைமட்டும் நான் கழற்றிதர மாட்டேன் என மறுத்துவிடுவது வழக்கமான செயலாகும்

இந்நிலையில் ஒருநாள் அந்த பெண்ணின் தாய் கழுத்தில் நல்ல ஒளிவீசக்கூடிய முத்துகளால் செய்யபட்ட மாலை அணிந்ததை பார்த்து அதேபோன்ற நல்ல ஒளிவீசக்கூடிய முத்துகளால் செய்யபட்ட மாலை தனக்கும் வேண்டும் என மனவருத்ததுடன் முழங்காலை மடக்கி கட்டி கொண்டு படுக்கையில் உட்கார்ந்து இருந்தது .

அப்போது அந்த பெண்ணின்தந்தை வந்ததும் இந்தாருங்கள் அப்பா நீங்கள்கேட்ட மோதிரம் எனக்கு அம்மா அணிந்துள்ளவாறு நல்ல ஒளிவீசக்கூடிய முத்துகளால் செய்யபட்ட மாலை வேண்டும் என கோரினாள் உடன் அந்த தந்தையும் பெட்டியை திறந்து அவர்களுடைய மகள் கோரிய பரிசுபொருளை அவளுடைய கழுத்தில் அணியசெய்தார் உடன் அவர்களுடைய மகள் மிகமகழ்ச்சியுற்று பெற்றோர்களை கட்டிபிடித்து மகிழ்ச்சிகூச்சலிட்டால்

வா ஆம் நாமனைவரும் வாழும் இந்த இயற்கையை வீணாக்காமல் பாதுகாத்துவந்தால் நாம் எதிர்பார்த்திடும் நன்மையை நமக்கு இயற்கையானது தானாகவே கிடைத்திடச்செய்திடும் என்பதே உண்மைநிலவரமாகும்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...