செவ்வாய், 13 ஏப்ரல், 2021
எளியவர்களுக்கு உதவியாக இருந்திடுக
திரு. கண்ணன் என்பவர் அன்றைய அலுவலகபணியை முடித்து விட்டு தங்களுடைய வீட்டிற்குசெல்வதற்குத் தயாராகி கொண்டிருந்தார், மேலும் அன்று பணிமுடிந்து வீடுதிரும்பும்போது ஒரு கிலோ வாழைப்பழங்களை கண்டிப்பாக வாங்கிகொண்டு வருமாறு இன்றுகாலையில் அவரது மனைவி கோரியதை அவர் நினைவில் கொண்டார். . திரு. கண்ணன் வழக்கமாக அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு திரும்பிடும்போது தங்களுடைய அலுவலகத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள ஒரு பெரிய பழக் கடையில் இருந்து பழங்கள் வாங்கிசெல்வதுவழக்கமாக கொண்டிருந்தார் , ஆனால் இன்று அவர் அவசரமாக வீட்டிற்குச் செல்லவேண்டி இருந்ததால், அவர் வீட்டிற்கு திரும்பி செல்லும்வழியில், சாலையோரத்தில் ஒரு வயதான பெண்மணி வாழைப்பழங்களை விற்பனை செய்து கொண்டிருந்தை கண்டார் இன்று மட்டும் அந்த சாலையோர கடையிலேயே வாழைப்பழங்களை வாங்கி செல்வோமே என ஆலோசித்தார். அதனால்அவர் அந்த வயதான பெண்மணியிடம் சென்று வாழைபழத்திற்கான விலை எவ்வளவு என வினவியபோது. அந்த வயதான பெண்மனி "ஐயா ஒரு கிலோ வாழைப்பழம் $ 70/- ",என கூறினார். உடன் திரு.கண்ணன் என்பவர், "ஆனால் அம்மா நான் வழக்கமாக வாங்கும் பழக்கடையில் எனக்கு ஒரு கிலோ வாழைப்பழங்களை $ 50/- க்கு கொடுத்தனரே, அதனால் அதே விலையில் நீங்கள் எனக்கு கொடுக்கலாமே?" எனவினவினார். அதனை தொடர்ந்து அந்த வயதான பெண்மனி, “இல்லை ஐயா, அந்த விலைக்கு என்னால் கொடுக்க முடியாது. வேண்டுமானால் உங்களுக்காக ஒருகிலோ வாழைப்பழங்களை $ 60 /- க்கு நான் வழங்க முடியும். உங்களுக்காக நான் கொடுக்கக்கூடியது இதுதான். ”என பதில் கூறினார் திரு. கண்ணன் அந்த வயதான பெண்மனியிடம், “பரவாயில்லைஅம்மா” என்று கூறி . அவர் தான் வழக்கமாக பழங்களை வாங்கிடும் கடையை நோக்கி புறப்பட்டார். அவர் அந்த கடையின் உள்ளே சென்று நல்ல வாழைங்களாக எடுத்துகொண்டு அதற்கான பணம் செலுத்த காசாளரிடம் சென்றார், அந்த கடையின் காசாளர் ஒரு கிலோ வாழைப்பழங்களின் விலை $ 100/- என்று கூறி அந்த தொகையை வழங்கிடுமாறு கூறியபோது திரு. கண்ணன் ஆச்சரியப்பட்டார். அதனால் திரு. கண்ணன் காசாளரிடம், "நான் ஒரு சில ஆண்டுகளாக இங்கிருந்து மட்டுமே பழங்களை வாங்கிவருகின்றேன், விலை அதிகமாக இருக்கின்றது ஒரு வழக்கமான வாடிக்கையாளராக இருப்பதற்காக எனக்கு விலைகுறைத்து வழங்க முடியாதா?" எனக்கோரினார் அந்த கடையின் மேலாளர் இதனை கண்ணுற்று அங்கு வந்தார். தொடர்ந்து அவர் திரு. கண்ணனிடம், "மன்னிக்கவும் ஐயா, ஆனால் எங்கள் கடையில் பொருட்களின் விலைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன, எங்களால் பேரம் பேசி அதைவிட குறைக்கமுடியாது." எனக்கூறினார் திரு. கண்ணன் அந்த அணுகுமுறையால் அதிர்ச்சியடைந்தார். அவர் ஒரு நொடி யோசித்து அந்த வாழைப்பழங்களை மீண்டும் அதனுடைய இடத்தில் வைத்துவிட்டு அந்த பழக்கடையை விட்டு வெளியேறி மீண்டும் வயதான பெண்மணியின் சாலையோர கடைக்கு சென்றார். திரு கண்ணனை உடனடியாக அடையாளம் கண்டு கொண்டு அந்த வயதானபெண்மனி, “ஐயா!, என்னால் நீங்கள் கோரிய அந்த விலைக்கு வழங்க முடியாது, என்னால் நட்டத்திற்கு வியாபாரம் செய்ய முடியாது” என்று சொன்னார். திரு.கண்ணன் அந்த வயதான பெண்மனியிடம், “அம்மா! இப்போது நான் விலையைப் பற்றி கவலைப்படவில்லை, தற்போது நான் உங்களுடைய கடையிலுள்ள வாழைப்பழங்களை கிலோஒன்றிற்கு $ 100/- வாங்கிகொள்வதற்கு தயாராக இருக்கின்றேன்! எனக்கு 2கிலோ வாழைப்பழங்களை கொடுங்கள். ” எனக்கூறினார் உடனடியாக 2 கிலோ வாழைப்பழங்கள் விற்பணையாகின்றதே என அந்த வயதான பெண்மனி மிகவும் மகிழ்ச்சியடைந்தார், அதனால் அவர் 2 கிலோ வாழைப்பழங்களை பையில் வைத்து, “ஐயா! நான் ஒருகிலோ வாழைப்பழங்களை $ 100/- என்ற அதிக விலைக்கு வழங்க விரும்பவில்லை , ஆனால் உங்களுக்காக நான் ஒரு கிலோஒன்றிற்கு $ 70/- இற்கு வழங்குகின்றேன். . ”எனக்கூறினார் மேலும் திருகண்ணனிடம், “என் கணவர் ஒரு சிறிய பழக் கடை வைத்திருந்தார், ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை.அவரால் எழுந்து நடமாடக்கூட முடியவில்லை. அதனால் அந்த பழக்கடையை அவரால் தொடர்ந்து நடத்தமுடியவில்லை எங்களை ஆதரிப்பதற்கு பிள்ளைகளோ அல்லது உறவினர்களோ யாரும் இல்லை. அவரது மருத்துவ கட்டணங்களை ஈடுகட்டவும் நாங்கள் இருவரும் உயிர்வாழவும் போதுமான வருமானம் கிடைப்பதற்காக நான் இந்த பழக்கடையை தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளது, அதனால் எங்களுடைய எஞ்சிய வாழ்நாளை இருப்பதற்கு போதுமான வருமானம் மட்டும் கிடைத்தால் போதுமானதாகும்” அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது." திரு. கண்ணன் அந்த வயதான பெண்மனியிடம், "கவலைப்படாதே, அம்மா , நாளை முதல், நான் உங்களிடமிருந்து மட்டுமே பழங்களை வாங்குவேன்" என்று கூறினார். அவர் தனது பணப்பையை வெளியே எடுத்து அதிலிருந்து $ 1000/-தாளொன்றினை எடுத்து அந்த வயதான பெண்மனியிடம் கொடுத்து, “இதை எடுத்துக் கொள்ளுங்கள், நாளை விற்க இன்னும் பலவிதமான பழங்களைக் கொண்டு வாருங்கள், நான் உங்களிடமிருந்து வாங்கும் பழங்களுக்கான முன்பணமாக இதை எண்ணிக்கொள்ளுங்கள். பழங்களை வாங்கி விற்க உங்களுக்கு அதிக வாய்ப்புகள் இருந்தால் நீங்கள் அதிகம் சம்பாதிக்கலாம் அல்லவா. ” எனக்கூறியவாறு தொகையை வழங்கினார் வயதான பெண்மனி அவருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர், அவர் தனது சக பணியாளர்கள் பலரை அந்த வயதான பெண்மணியிடமிருந்து பழங்களை வாங்க பரிந்துரைத்தார். திரு. கண்ணன் மற்றும் சக பணியாளர்களின் ஆதரவுடன், அந்த வயதான பெண்மனியானவர் ஒரு சிறந்த வாழ்க்கையை மேற்கொண்டார்.
பெரும்பாலும் நாம் பெரிய கடைகளிலேயே பொருட்களைவாங்குவதை தேர்வு செய்கிறோம். அக்கடைகளில் எப்போதும் பேரம் எதுவும் பேசாமல் அவர்கள் குறித்த விலையை செலுத்துகிறோம். பெரிய கடைகளில் பொருட்களை கொள்முதல் செய்யும் போது பேரம் பேச நமக்கு தைரியம் இருப்பதில்லை, அவர்கள் குறிப்பிட்ட விலையை கொடுக்கு தயாராக இருக்கின்றோம் ஆனால் தெருவோரம் விற்பணைசெய்கின்ற சிறிய விற்பனையாளர்களுடன் மட்டும் பேரம் பேச முயற்சிக்கிறோம்? அது ஏன் என சிந்தித்திடுக.
இவ்வாறான எளியவர்கள் அன்றாட உயிர்வாழ்வதற்கு போதுமான அளவு வருமானம் வந்தால் போதுமென வாழ்பவர்களுக்கு எப்போதும் உதவியாகவும் ஆதரவாகவும் இருக்க முயற்சித்திடுக
சனி, 3 ஏப்ரல், 2021
நாம் என்ன செய்கின்றோமோ அதன்விளைவே நமக்கு கிடைக்கும்
மிகவும் வெற்றிகரமான தொழிலதிபர் ஒருவர், ஒருநாள் தனது அலுவலகத்திற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தார். அவர் தனது மகிழ்வுந்தில் ஏறுவதற்காக அதன் கதவைத் திறக்கமுயன்றபோது, அவரது மகிழ்வுந்திற்கு அடியில் தூங்கிக்கொண்டிருந்த நாய் ஒன்று திடீரென வெளியே வந்து என்ன இவன் நம்முடைய தூக்கத்தை கெடுக்கின்றானே என அந்த தொழிலதிபரின் காலை கடிக்கவந்தது! அத்தொழிலதிபர் மிகவும் கோபமடைந்து விரைவாக ஒரு சில கற்களை எடுத்து நாய் மீது வீசினார், ஆனால் அத்தொழிலதிபர் வீசிய கற்கள்எதுவும் நாய்மீது படவில்லை. அந்த நாயும் அடிஎதுவும் படாமல் தப்பித்தால் போதுமென வேகமாக பாய்ந்தோடிவிட்டது.
அவர் தனது அலுவலகத்தை அடைந்ததும், அத்தொழிலதிபர் தனக்கு கீழ்பணிபுரியும் அனைத்து துறைத்தலைவர்களையும் அன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைத்தார், அந்த துறைதலைவர்களின் கூட்டத்தின் போது அவர் நாயின் மீது இருந்த கோபத்தை அவர்கள் அனைவரின் மீது காண்பித்து யாரும் தங்களுடைய கடமையை சரியாக செய்வதில்லை என திட்டி அனுப்பிவைத்தர்.
கூட்டம் முடிந்ததும் துறைத்தலைவர்கள் அனைவரும் தங்களுடைய முதலாளி தங்களிடம் காண்பித்த கோபத்தால் வருத்தப்பட்டு கொண்டே சென்று தங்களுடைய இருக்கையில் அமர்ந்து கொண்டு அன்றைய பணியை கவணிக்க ஆரம்பித்தனர்
இருந்தபோதிலும் தங்களுக்கு கீழ்பணிபுரியும் மேற்பார்வையாளர்களிடம், தங்களுடைய கோபத்தை காண்பித்தனர். இந்த எதிர்வினையின் சங்கிலி ஊழியர்களின் கீழ் மட்டம் வரை சென்று கொண்டே இருந்தது, இறுதியாக, அந்த கோபம் அலுவலக த்தில்பணிபுரிந்த அலுவலக உதவியாளரை சென்றடைந்தது. இப்போது, அவ்வலுவலக உதவியாளரின் கீழ் வேறு யாரும் பணிபுரிய வில்லை! எனவே, அவரிடமே தங்கிஇருந்தது
அன்று சாயுங்காலம் அலுவலகபணி நேரம் முடிந்ததும், அவ்வலுவலக உதவியாளர் தனது வீட்டை சென்றடைந்தார்,அவரது மனைவி வீட்டின் கதவைத் திறந்தார். அப்போது அவருடைய மனைவி அவரிடம், “ ஏன் இன்று காலதாமதமாக வருகின்றீர்கள்?” என்று கேட்டவுடன். தன்னிடம் அடக்கி வைத்துகொண்டிருந்த கோபத்தால் , தன்னுடைய மனைவிக்கு ஒரு அறை கொடுத்தார்! மேலும், “நான் ஒன்றும் கால்பந்து விளையாடுவதற்காக அலுவலகத்திற்குச் செல்லவில்லை, நான் அலுவலக பணிக்குச் சென்றுவருகின்றேன், உன் முட்டாள்தனமான கேள்விகளால் என்னை எரிச்சலடையச் செய்யாதே!” என கோபத்தில் பொரிந்து தள்ளினார் .எப்போதும் இவ்வாறு கோபப்படாத அவ்வுதவி யாளரால் , இப்போது ஒரு திட்டும் அறையும் தனக்கு கிடைத்ததே என்று அவ்வுதவியாளரின் மனைவி மிகவும் வருத்தப்பட்டார். அதனால் வீட்டில் தொலைகாட்சிபெட்டியில் அன்றைய நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த தங்களுடைய மகன் மீது காண்பித்தார் அதாவது தங்களுடைய மகனின் கன்னத்தில் ஒரு அறைகொடுத்து, “எப்போதும் தொலைகாட்சி பெட்டியே கதியென்றி நீ இருப்பாய், படிப்பதில் உனக்கு ஒன்றும் ஆர்வம் இல்லை! இப்போது தொலைகாட்சியை நிறுத்து! ” என கோபமாக திட்டினார் . அவர்களுடைய மகன் என்ன இது நம்முடைய அம்மா இன்றுமட்டும் நம்மை இவ்வாறு அடித்து திட்டுகின்றாரே என மிக வருத்தப்பட்டான்! தொடர்ந்து அவர்களுடைய மகன் அந்த வருத்தத்தில் தங்களுடைய வீட்டினை விட்டு வெளியேவந்தான் ஒரு நாய் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான் அதனால் கோபத்திலும் விரக்தியிலும் ஒருகல்லை எடுத்து அந் நாயை நோக்கிவீசி எறிந்தான். அந்த நாய்,ஆனது அந்தகல்லால் அடிபட்டு, வலியால் குரைத்து கொண்டே ஓடியது. காலையில் தொழிலதிபரைக் கடிக்கமுயன்ற அதே நாய் தான்தான்இது.
நீதி: ஒருவர் விதைத்ததைப் போலவே அறுவடை செய்வார். நம்முடைய வாழ்க்கையும் இப்படித்தான் செயல்படுகிறது. நம்முடைய செயல்களின் அடிப்படையில் நம்மனைவருக்குமான மகிழ்ச்யும் துக்கமும் உருவாகின்றது,அதனால் நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்தினால் போதும். நல்லது செய்தால், நல்லது வந்து சேரும், தவறு செய்தால், தண்டனை வந்துசேரும்.
சனி, 27 மார்ச், 2021
உலகம் ஒரு கண்ணாடி போன்றது
ஒரு நாள் ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தாம் பணிபுரியும் அலுவலகத்திற்கு வந்து சேரும்போது, அவ்வலுவலக வாயிலில் “நேற்று இந்த நிறுவனத்தில் உங்கள் வளர்ச்சிக்கும் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் தடையாக இருந்த நபர் ஒருவர் காலமாகிவிட்டார். அலுவலக உடற்பயிற்சிகூடத்தில் அவருக்காக நடைபெறும் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளுமாறு உங்கள் அனைவரையும் அழைக்கிறோம் ”. என்ற பெரிய அறிவிப்பு ஒன்று எழுதப்பட்டிருப்பதை கண்டணர் இந்த அறிவிப்பினை கண்டவுடன் ஆரம்பத்தில், அனைவரும் தங்களுடன் பணிபுரிந்த சக ஊழியர்களில் ஒருவரின் மரணத்திற்கு வருத்தமடைந்தனர், ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு, சக ஊழியர்களின் வளர்ச்சியையும், நிறுவனத்தின் வளர்ச்சியையும் தடுத்த அந்த மனிதர் யார் என்பதை அறிய மிக அதிக ம் ஆர்வகாட்டத் தொடங்கினர். இன்றைய அலுவலக பணியை பின்னர் பார்த்து கொள்வோம் நம்மடைய வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக இருந்த அந்த சக ஊழியன் யார் என அறிந்த கொள்ள மிகவும் ஆவலுடன் அனைவரும் உடற்பயிற்சி கூடத்தை நோக்கி மிகவிரைவாக சென்றுகொண்டிருந்தனர் , இவ்வாறு ஒட்டுமொத்த ஊழியர்களும் ஒரேஅறைக்குள் வந்தால் அக்கூட்டத்தை கட்டுப்படுத்திடுமாறு பாதுகாவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதனால் அவர்கள் ஒவ்வொருவராக மட்டுமே அந்த அறைக்குள் சென்றிடுமாறு அறிவுறுத்தபட்டு அனுமதிக்கப்பட்டனர் அதிகமான மக்கள் கூட்டம் அவ்வுடற்பசிற்சி கூடத்தை அடைந்ததும், உற்சாகம் கரைபுரண்டோடியத . ஊழியர்கள் அனைவரும்: “என்னுடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர் யார்? யாராயிருந்தாலும் பரவாயில்லை , இப்போது அவர் இறந்துவிட்டார்! அதனால் நாம் நிம்மதியாக பணியாற்றலாம் ” என தங்களுக்குள் பேசிகொண்டனர் .இவ்வாறு சிலிர்த்த பேசிக்கொண்டிருந்த ஊழியர்கள் ஒவ்வொருவராக சவப்பெட்டியை நெருங்கினர், அவர்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்று பார்த்தபோது திடீரென்று பேச்சற்றவர்களாக மாறினர். சவப்பெட்டியின் அருகே நின்று, உள்ளே பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்,அதாவது அந்த சவப்பெட்டியின் உள்ளே ஒரு கண்ணாடி மட்டுமே இருந்தது: அதனை பார்த்தபோது அனைவருமே தங்களுடைய உருவத்தை மட்டுமே க் காண முடிந்தது. அந்த நிலைக்கண்ணாடியின் அருகில் அறிவிப்பு ஒன்றும் இருந்தது: "உங்கள் வளர்ச்சிக்கான வரம்புகளை நிர்ணயிக்கும் திறன் கொண்ட ஒருவர் மட்டுமே இருக்கிறார்: அது நீங்கள் தான்." , என்ற செய்தியை கண்டபோது அமைதியாக யாரோ தங்கள் ஆன்மாவின் ஆழமான பகுதியைத் தொட்டது போல. உணர்ந்தனர்
ஆம் உங்கள் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரே நபர் நீங்கள் தான். உங்கள் மகிழ்ச்சியையும், உங்கள் வெற்றியையும் பாதிக்கக்கூடிய ஒரே நபர் நீங்கள் தான். நீங்களே உங்களுக்கு உதவக்கூடிய ஒரே நபர். உங்கள் முதலாளி மாறும்போதும், உங்கள் நண்பர்கள் மாறும்போதும், உங்கள் நிறுவனம் மாறும்போதும் உங்கள் பங்குதாரர் மாறும்போதும் உங்கள் வாழ்க்கை மட்டும் மாறாது. ஆனால் நீங்கள் மாறும்போது மட்டுமே உங்கள் வாழ்க்கை மாறுகிறது, உங்கள் வரம்புக்குட்பட்ட நம்பிக்கைகளுக்கு அப்பால் நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு என்பதை நீங்கள் உணரும்போது. "உங்களுடனான மிக முக்கியமான உறவு உங்களுடனேயே உள்ளது என அறிவீர்கள்".
நீதி: உலகம் ஒரு கண்ணாடி போன்றது: ஒருவர் வலுவாக நம்பிய எண்ணங்களின் பிரதிபலிப்பை அது யாருக்கும் திருப்பித் தருகிறது. நீங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதம் தான் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.
சனி, 16 ஜனவரி, 2021
நாம் ஒருமணிநேரத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கின்றோம் ?
– ஒரு அர்த்தமுள்ள கேள்விக்கான பதிலுடன் கூடிய கதை,
தற்போதைய இயந்திரமயமான வாழ்க்கை வாழும் ஒருவர் தனது அன்றைய பணி முடிந்து தாமதமாக, சோர்வாக வீட்டிற்கு வந்து சேர்ந்தார் அப்போது அவருடைய . 5 வயது மகன் அவர்களுடைய வீட்டின் வாசலில் அவருக்காக காத்திருப்பதைக் கண்டார்
அவருடைய மகன் : “அப்பா! நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?” என கோரியபோது அவர்: " மகனே! தாராளமாக கேள்வி கேட்கலாம் அந்த கேள்வி என்ன?” என பதிலளித்தார். தொடர்ந்து அவருடைய மகன்: “அப்பா! நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள்?” என கேள்வி எழுப்பியபோது தந்தை: “இது உனக்கு தேவையில்லாதது. ஏன் அவ்வாறு கேட்கின்றாய்? ” என அவர் மிக கோபமாக எரிந்து விழுந்தார். இருந்தபோதிலும் அவருடைய மகன் அமைதியாக: “நான் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். அப்பா! தயவுசெய்து சொல்லுங்கள், நீங்கள் ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள்? ”என மீண்டும் வினவியபோது தந்தையானவர்: "நான் ஒரு மணி நேரத்திற்கு ரூ .100/- சம்பாதிக்கிறேன்."என பதிலளித்தார் அதனை தொடர்ந்து அவருடைய மகன்: “அவ்வாறாயின் அப்பா! எனக்கு ரூ .50/- மட்டும் கடன் தருவீர்களா?” என கோரியபோது தந்தை அதிக கோபமடைந்தார், “ விளையாடுவதற்கான பொம்மை அல்லது வேறு சில முட்டாள்தனமான பொருட்கள் ஏதேனும் வாங்குவதற்கு உனக்கு பணம் தேவை அதனால் என்னிடம் கடன் வாங்கவிரும்புகின்றாய் உனக்கு என்னவேண்டுமோ என்னிடம் நேரடியாக கேள்! அதனை உனக்கு நானே நேரடியாக வாங்கி தருகின்றேன் அதனால்,தேவையில்லாத செயலில் நீ தலையிடாதே. இரவுசாப்பாடு சாப்பிட்டு விட்டிருந்தால் பேசாமல் நேராக படுத்து தூங்கசெல்." என உத்திரவிட்டார் . அதனால் அந்தச் சிறுவன் வேறுஏதும் பேசாமல் தனது அறைக்குச் சென்று கதவினை மூடி அமைதியாக படுத்துவிட்டான் . சிறிது நேரம் கழித்தவுடன் அந்த மனிதன் அமைதி அடைந்தார்:, “அந்தசிறுவன் உண்மையில் இவ்வாறு அடிக்கடி பணம் கேட்பது வழக்கமில்லை. இருந்த போதிலும் இன்று அவ்வாறு பணம் கேட்கின்றான் என்றால் அவனுக்கு உண்மையிலேயே ஏதேனும் விளையாட்டு பொருட்கள் உடனடியாக வாங்குவதற்கு அந்த ரூ .50/- தேவைப்பட்டிருக்கலாம், அதனால் அவ்வாறு கேட்டிருக்கலாம் அல்லவா! " என யோசிக்க ஆரம்பித்தார் அதனால் அந்த மனிதன் சிறுவனின் அறையின் கதவை திறந்து உள்ளே சென்றார் . ” மகனே! தூங்குகின்றாயா? ” என தன்னுடைய மகனிடம் கேட்டார். "இல்லை அப்பா!, " என்று சிறுவன் பதிலளித்தான். "மகனே! முன்பு நான் உன்னிடம் மிகவும் கோபமாக திட்டிவிட்டேன். நீ கேட்ட ரூ .50/- இந்தா வாங்கிகொள். ” என கூறியவாறு தன்னுடைய மகனிடம் ரூ .50/- ஐ கொடுத்தார் உடன் அந்த சிறுவன் சிரித்தபடி படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து “ நன்றி அப்பா!” என கூறியவாறு அந்த பணத்தினை வாங்கி கொண்டான். . பின்னர், தனது தலையணைக்கு அடியில் வைத்திருந்த பணத்தையும் வெளியே எடுத்தான்.பின்னர் அந்தச் சிறுவன் மெதுவாக பணத்தை மொத்தம் எவ்வளவு உள்ளது என கணக்கிட்டான், அதன் பின்னர் தன் தந்தையைப் பார்த்தபோது. பையனிடம் ஏற்கனவே பணம் இருப்பதைக் கண்ட மனிதன், மீண்டும் கோபத்துடன் "உன்னிடம் ஏற்கனவே பணம் இருந்தால் மேலும் ஏன் அதிக பணம் உனக்கு வேண்டும்?" என முணுமுணுத்தார். "ஏனென்றால் அந்த பணம் எனக்கு போதுமானதாக இல்லை, அப்பா!,அதனால்தான் நான் உங்களிடம் ரூ .50/- ஐ கடனாக எனக்கு தருமாறு கோரினேன் இப்போது என்னிடம் ரூ .100/-.உள்ளது உங்களுடைய நேரத்தின் ஒரு மணிநேரத்தை நான் வாங்கலாமா? அப்பா! நாளைய உங்களுடைய பணியை ஒருமணிநேரத்திற்குமுன்னரே முடித்து வீட்டிற்கு சீக்கரம் வந்து சேருங்கள். அந்த ஒருமணி நேரத்தில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தினை நான் இன்றே உங்களுக்கு தருகின்றேன். நாளை நான் உங்களுடன் அந்த ஒருமணிநேரம் இரவு உணவை சாப்பிட்டுகொண்டே மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புகிறேன். " எனகோரிக்கை வைத்ததும் அத்தந்தைக்கு “அடடா! தினமும் நம்முடைய பிள்ளையுடன் சிறிதுநேரம் கூட அமர்ந்து இல்லாமல் எப்போதும் வேலை வேலை என இயந்தரமயமான இந்த சூழலில் வாழ்ந்து கொண்டிருக் கின்றேனே!” என்ற உண்மை அவருடைய நெஞ்சில் சுருக்கென முள்குத்தியதை போன்று இருந்தது . அவர் தனது சிறிய மகனைச் தனது கைகளால் சேர்த்து அனைத்துகொண்டு, மன்னிப்பு கோரினார்.
வாழ்க்கையில் எப்போதும் வேலை வேலை என மிகவும் கடினமாக உழைத்து வாழும் நம் அனைவருக்கும் ஒரு நினைவூட்டல். நமக்கு உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்தவர்களுடன், சிறிது நேரம் செலவிடாமல் நேரத்தை நழுவ விடாதீர்கள்…
தற்போதைய இயந்திரமயமான வாழ்க்கை வாழும் ஒருவர் தனது அன்றைய பணி முடிந்து தாமதமாக, சோர்வாக வீட்டிற்கு வந்து சேர்ந்தார் அப்போது அவருடைய . 5 வயது மகன் அவர்களுடைய வீட்டின் வாசலில் அவருக்காக காத்திருப்பதைக் கண்டார்
அவருடைய மகன் : “அப்பா! நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?” என கோரியபோது அவர்: " மகனே! தாராளமாக கேள்வி கேட்கலாம் அந்த கேள்வி என்ன?” என பதிலளித்தார். தொடர்ந்து அவருடைய மகன்: “அப்பா! நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள்?” என கேள்வி எழுப்பியபோது தந்தை: “இது உனக்கு தேவையில்லாதது. ஏன் அவ்வாறு கேட்கின்றாய்? ” என அவர் மிக கோபமாக எரிந்து விழுந்தார். இருந்தபோதிலும் அவருடைய மகன் அமைதியாக: “நான் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். அப்பா! தயவுசெய்து சொல்லுங்கள், நீங்கள் ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள்? ”என மீண்டும் வினவியபோது தந்தையானவர்: "நான் ஒரு மணி நேரத்திற்கு ரூ .100/- சம்பாதிக்கிறேன்."என பதிலளித்தார் அதனை தொடர்ந்து அவருடைய மகன்: “அவ்வாறாயின் அப்பா! எனக்கு ரூ .50/- மட்டும் கடன் தருவீர்களா?” என கோரியபோது தந்தை அதிக கோபமடைந்தார், “ விளையாடுவதற்கான பொம்மை அல்லது வேறு சில முட்டாள்தனமான பொருட்கள் ஏதேனும் வாங்குவதற்கு உனக்கு பணம் தேவை அதனால் என்னிடம் கடன் வாங்கவிரும்புகின்றாய் உனக்கு என்னவேண்டுமோ என்னிடம் நேரடியாக கேள்! அதனை உனக்கு நானே நேரடியாக வாங்கி தருகின்றேன் அதனால்,தேவையில்லாத செயலில் நீ தலையிடாதே. இரவுசாப்பாடு சாப்பிட்டு விட்டிருந்தால் பேசாமல் நேராக படுத்து தூங்கசெல்." என உத்திரவிட்டார் . அதனால் அந்தச் சிறுவன் வேறுஏதும் பேசாமல் தனது அறைக்குச் சென்று கதவினை மூடி அமைதியாக படுத்துவிட்டான் . சிறிது நேரம் கழித்தவுடன் அந்த மனிதன் அமைதி அடைந்தார்:, “அந்தசிறுவன் உண்மையில் இவ்வாறு அடிக்கடி பணம் கேட்பது வழக்கமில்லை. இருந்த போதிலும் இன்று அவ்வாறு பணம் கேட்கின்றான் என்றால் அவனுக்கு உண்மையிலேயே ஏதேனும் விளையாட்டு பொருட்கள் உடனடியாக வாங்குவதற்கு அந்த ரூ .50/- தேவைப்பட்டிருக்கலாம், அதனால் அவ்வாறு கேட்டிருக்கலாம் அல்லவா! " என யோசிக்க ஆரம்பித்தார் அதனால் அந்த மனிதன் சிறுவனின் அறையின் கதவை திறந்து உள்ளே சென்றார் . ” மகனே! தூங்குகின்றாயா? ” என தன்னுடைய மகனிடம் கேட்டார். "இல்லை அப்பா!, " என்று சிறுவன் பதிலளித்தான். "மகனே! முன்பு நான் உன்னிடம் மிகவும் கோபமாக திட்டிவிட்டேன். நீ கேட்ட ரூ .50/- இந்தா வாங்கிகொள். ” என கூறியவாறு தன்னுடைய மகனிடம் ரூ .50/- ஐ கொடுத்தார் உடன் அந்த சிறுவன் சிரித்தபடி படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து “ நன்றி அப்பா!” என கூறியவாறு அந்த பணத்தினை வாங்கி கொண்டான். . பின்னர், தனது தலையணைக்கு அடியில் வைத்திருந்த பணத்தையும் வெளியே எடுத்தான்.பின்னர் அந்தச் சிறுவன் மெதுவாக பணத்தை மொத்தம் எவ்வளவு உள்ளது என கணக்கிட்டான், அதன் பின்னர் தன் தந்தையைப் பார்த்தபோது. பையனிடம் ஏற்கனவே பணம் இருப்பதைக் கண்ட மனிதன், மீண்டும் கோபத்துடன் "உன்னிடம் ஏற்கனவே பணம் இருந்தால் மேலும் ஏன் அதிக பணம் உனக்கு வேண்டும்?" என முணுமுணுத்தார். "ஏனென்றால் அந்த பணம் எனக்கு போதுமானதாக இல்லை, அப்பா!,அதனால்தான் நான் உங்களிடம் ரூ .50/- ஐ கடனாக எனக்கு தருமாறு கோரினேன் இப்போது என்னிடம் ரூ .100/-.உள்ளது உங்களுடைய நேரத்தின் ஒரு மணிநேரத்தை நான் வாங்கலாமா? அப்பா! நாளைய உங்களுடைய பணியை ஒருமணிநேரத்திற்குமுன்னரே முடித்து வீட்டிற்கு சீக்கரம் வந்து சேருங்கள். அந்த ஒருமணி நேரத்தில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தினை நான் இன்றே உங்களுக்கு தருகின்றேன். நாளை நான் உங்களுடன் அந்த ஒருமணிநேரம் இரவு உணவை சாப்பிட்டுகொண்டே மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புகிறேன். " எனகோரிக்கை வைத்ததும் அத்தந்தைக்கு “அடடா! தினமும் நம்முடைய பிள்ளையுடன் சிறிதுநேரம் கூட அமர்ந்து இல்லாமல் எப்போதும் வேலை வேலை என இயந்தரமயமான இந்த சூழலில் வாழ்ந்து கொண்டிருக் கின்றேனே!” என்ற உண்மை அவருடைய நெஞ்சில் சுருக்கென முள்குத்தியதை போன்று இருந்தது . அவர் தனது சிறிய மகனைச் தனது கைகளால் சேர்த்து அனைத்துகொண்டு, மன்னிப்பு கோரினார்.
வாழ்க்கையில் எப்போதும் வேலை வேலை என மிகவும் கடினமாக உழைத்து வாழும் நம் அனைவருக்கும் ஒரு நினைவூட்டல். நமக்கு உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்தவர்களுடன், சிறிது நேரம் செலவிடாமல் நேரத்தை நழுவ விடாதீர்கள்…
சனி, 2 ஜனவரி, 2021
ஒரு வயதான மனிதனும் அவரது மகனும்
தற்போதைய கிராமத்தில் வாழமுடியாத சூழலில் ஒரு இளைஞன் பிழைப்பினை தேடி நகரத்தினை நோக்கி செல்வதற்காக அழைத்தான் அப்போத தன்னுடைய தந்தையையும் தன்னுடன் நகரத்திற்கு அழைத்தபோது தான் பிறந்து வளர்ந்த இந்த கிராமத்தை விட்டு தன்னால் வரமுடியாது என மறுத்து தனியாக தான் இருப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அவ்விளைஞன் பிழைப்பதற்காக நகரத்தை நோக்கி பயனபட்டான் அதனால் அம்முதியவர் அவருடைய கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். அதன்பின்னர் அந்த வருடத்தில்அக்கிராமத்தில் நல்ல மழைபொழிந்தது அதனை தொடர்ந்து அவர் தனது நிலத்தில் மக்காச்சோளம் அல்லது குச்சிவல்லி கிழங்கு பயிரிட விரும்பினார், ஆனால் அதற்காக அவர் மிகவும் கடினமாக உழைக்கவேண்டியிருந்தது மேலும் நிலத்தினை உழுதிடுவதற்காக போதுமான பணமும் கைவசம் இல்லை பிழைப்பினை தேடி நகரத்திற்கு சென்ற அந்த இளைஞனை தீவிரவாதி என சந்தேகபட்டு சிறையில் அடைத்துவிட்டனர் அதனால். அவருக்கு உதவி செய்த அவரது ஒரே மகன் சிறையில் இருந்ததால், அவ்விளைஞனை வெளியே கொண்டுவருவதற்காக போதுமான பணவசதி இல்லாததால் ஒரு வழக்கறிஞரை நியமிக்க முடியவில்லை. அதனால் அவ்வயதானவர் தனது மகனுக்கு தனது நிலைமையைக் குறிப்பிட்டு பின்வருமாறு ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தர்:
அன்புள்ள மகனே,
நான் மிகவும் மோசமானநிலையில் இருப்பதாக உணர்கின்றேன், ஏனெனில் இந்த ஆண்டு நமது கிராமத்தில் நல்ல மழைபொழிந்துள்ளது ஆயினும் நமது நிலத்தில் மக்காச்சோளம் அல்லது குச்சிவல்லி கிழங்கு பயிரிடுவதற்கு போதுமான நிதிவசதி இல்லாததால் அவ்வாறு செய்ய முடியாது என்று தெரிகிறது. உன்னுடைய தாயார் எப்போதும் மழைபொழிந்துவிட்டது நம்முடைய நிலத்தில் பயிர்செய்திடுமாறு புலம்பிகொண்டே இருக்கின்றார் அவ்வாறு என்னால் செய்யஇயலாத நிலையில் நான் அதனை நான் வெறுக்கிறேன். எனெனில் எனக்கு வயதாகிவிட்டதால் நிலத்தில் என்னால் கடின உழைப்பை ஈடுபடமுடியவில்லை. நீ இங்கே இருந்திருந்தால், ஏதாவது செய்துகொண்டிருப்பாய்அதனால் எங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் முடிந்துவிடும். ஆனால் நீ சிறையில் இருப்பதால் எதுவும் செய்யமுடியாமல், தவிக்கின்றோம் என்னசெய்வது என்று தடுமாறி இருக்கின்றோம் .
அன்பு, அப்பா
அதன்பின்னர் அந்த வயதானவருக்கு ஒரு தந்தி வந்தது அதில்பின்வருமாறு செய்தி இருந்தது,
அப்பா, நிலத்தினை நீங்கள் உழுவதை பற்றி கவலைப்பட வேண்டாம்! அங்குதான் நான் ஏராளமான அளவில் துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் புதைத்து வைத்திருக்கின்றேன் !! ’
அதனை தொடர்ந்து மறுநாள் அதிகாலையிலேயே அவருடைய நிலத்தில் , அருகிலிருந்த நகரத்தின் ஏராளமானஅளவிலான FBI முகவர்களும் காவல்துறை அலுவலர்களும் அவருடைய நிலத்தில் துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் கண்டுபிடிப்பதற்காக முழு தோட்டத்தையும் தோண்டிபுரட்டி பார்த்து ஏதும் கிடைக்கததால் . குழப்ப்ததுடன் சென்றுவிட்டனர்,
பின்னர் அவ்வயதானவர் தனது மகனுக்கு அவருடைய நிலத்தில் என்ன நடந்தது என்று மற்றொரு கடிதத்தினை எழுதி, அடுத்து தான் என்ன செய்வது என்று கேட்டார்.
அதனைதொடொர்ந்து அவரது மகன் : ‘நீங்கள் நம்முடைய நிலத்திற்கு சென்று நீங்கள் விரும்பியவாறுமக்காச்சோளம் அல்லது குச்சிவல்லி கிழங்கு பயிரிடுக அப்பா. இங்கிருந்து உங்களுக்காக நான் செய்யக்கூடியது இதுதான். ’
எனக்குறிப்பிட்டார்
நீதி: நாம் உலகில் எங்கிருந்தாலும் பரவாயில்லை, நாம் மனப்பூர்வமாக ஏதாவது செய்ய முடிவு செய்திருந்தால், நாம் எங்கு இருக்கிறீர்கள் அல்லது நம்மிடம் உதவிகோரும் நபர் எங்கே இருக்கிறார் என்பது முக்கியமன்று அவ்வுதவியை நாம் செய்யலாம்..
ஞாயிறு, 20 டிசம்பர், 2020
தவறுகளிலிருந்து கற்றல்
தாமஸ் எடிசன் எனும் அறிவியல் அறிஞர் மின்சாரத்தில் ஒளிரும் விளக்கை கண்டுபிடிப்பதற்காக இரண்டாயிரம் வெவ்வேறு பொருட்களில் முயற்சித்து கொண்டிருந்தார். எதுவும் திருப்திகரமாக ஒளிதரும் மின்விளக்காக அமையவில்லை அதனால் அவருடன் அந்த ஆய்வகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த, அவரது உதவியாளர் , “ஐயா இரண்டாயிரம் முறை முயன்றும் நம்முடைய பணிகள் அனைத்தும் வீணாக போய்விட்டது நமக்கு இதுவரையில் ஒன்றும் சரியாக அமைய வில்லை, மின்சாரத்தை பயன்படுத்தி மின்சாரத்தில் மிகச்சரியாக ஒளிரும் மின்விளக்கை நம்மால் கண்டுபிடித்திட முடியுமா என்று உறுதியாக தெரியவில்லை. ” என மிக மனம் வெறுத்து கூறினான் அதனை தொடர்ந்து எடிசன் மிகவும் நம்பிக்கையுடன் , “ஓ, அப்படியா தம்பி நாம் வெகுதூரம் வந்துவிட்டோம், போன்றிருக்கின்றதே பரவாயில்லை ஒரு நல்ல ஒளி விளக்கை உருவாக்க நம்மால் பயன்படுத்த முடியாத இரண்டாயிரம் தவறுகள் இருப்பதை நாம் அறிவோம் அவைகளிலிருந்த நாம் நிறைய கற்றுக்கொண்டுள்ளோம்.அதே தவறினை மீண்டும் செய்யாது முயற்சிசெய்தால் நாம் கண்டிப்பாக வெற்றிபெறுவோம்” என நம்பிக்கை ஏற்படுத்தினார் : ஆம் நம்முடைய தவறுகளிலிருந்தும் அதனை வெற்றியாக்குவதற்கு நாம் கற்றுக்கொள்ளமுடியும்.
சனி, 5 டிசம்பர், 2020
அமெரிக்க சுற்றுலாபயனியும் தமிழக மீனவர்ஒருவரும் - வாழ்க்கை பாடம்
ஒரு அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் தமிழ்நாட்டின் கடற்கரையோர சிறியதொரு மீனவ கிராமத்தின் அருகில் உல்லாச சுற்றுலா படகில் நின்று பயனம் செய்து கொண்டிருந்த போது மீனவர் ஒருவரின் சிறிய மீன்பிடி படகு அந்த உல்லாச சுற்றுலாபடகிற்கு அருகே வந்துவிட்டது. அச்சிறிய படகில் அம்மீனவர் பிடித்து கொண்டுவந்த மீன்கள் குவியலாக இருந்தன. அமெரிக்கர் அம்மீன்கள் தரம் குறித்தும் ஏராளமானஅளவில்மீன்களை அம்மீனவர் பிடித்துகொண்டுவருவதை குறித்தும் அம்மீனவரைப் பாராட்டினார். "இம்மீன்களைப் பிடிக்க எவ்வளவு நேரம் ஆனது?" என அமெரிக்கர் அம்மீனவரிடம் வினவினார். "இப்போதுதான் கடலிற்குள் சென்றேன் ஐயா!மிககுறைந்த நேரத்தில் இந்த மீன்களை பிடித்துகொண்டு திரும்பிவருகின்றேன் ஐயா!" என அம்மீனவர் மிகவும் பணிவுடன் பதிலளித்தார். "அதுசரி இவை உங்களுக்கு போதுமா? நீங்கள் ஏன் அதிக நேரம் கடலிற்குள் இருந்து மிகஅதிக மீன்களைப் பிடிக்கக்கூடாது?"என அமெரிக்கர் அம்மீனவரிடம் வினவியபோது மீனவர் "இது எனது குடும்பத்தின் தேவைகளை ஆதரிக்க போதுமானது ஐயா!" என்று கூறினார்.. தொடர்ந்து அந்த அமெரிக்கர் அம்மீனவரிடம் "ஆனால் உங்களுடைய மீதமுள்ள நேரத்தை நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என சந்தேகம் எழுப்பியபோது மீனவர் , “நான் தினமும் கடலிற்குள் சென்று மிககுறைந்த நேரம் மட்டும் , கொஞ்சம் மீன் பிடித்தபிறகு,மிகுதிநேரத்தில் என் குழந்தைகளுடன் விளையாடுகிறேன், என் மனைவி யுடனும் பிள்ளைகளுடன் ஒன்றாக சேர்ந்து உணவு அருந்துகின்றேன், ஒவ்வொரு நாள் மாலையும் கிராமத்தில் உலா வருகிறேன், சக உறவினர்களுடனும் நண்பர்களுடனும சேர்ந்து ஏதேனும் இசையை வாசிகின்றேன். என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொருநாளின் முழுநாளும் ஏதாவது பணி இருந்துகொண்டே யிருக்கின்றதுஐயா! ” என விவரமாக கூறினார்: அதனை தொடர்ந்து அமெரிக்கன் அமமீனவரை கேலி செய்தார்: “நான் ஒரு ஹார்வர்ட் பல்கலைகழக எம்பிஏ, மீன்பிடித்து விற்பணை செய்திடும் உங்களுடைய மீன்வியாபாரத்தில் நீங்கள் முன்னேறுவதற்கு என்னால் உதவ முடியும். நீங்கள் மீன்பிடிக்க தற்போத செலவிடும் நேரத்தை விட அதிக நேரம் செலவிட வேண்டும், அதனால் அதிகஅளவு மீன்களை பிடிக்கலாம் அதனால் அதிக வருமானம் ஈட்டமுடியும் அவ்வாறான அதிக வருமானத்தினால் நீங்கள் ஒரு பெரிய படகு வாங்கலாம், தொடர்ந்து அப்பெரிய படகிலிருந்து கிடைக்கும் வருமானத்துடன், அதிக எண்ணிக்கையில் மீன்பிடி படகுகளை வாங்கலாம்.அதனால் அதிக அளவு மீன்களை பிடித்து அதிக வருமானத்தினை ஈட்டலாம் இறுதியில் நீங்கள் மீன்பிடி படகுகளுடன் கூடிய பெரிய கப்பலை வாங்கி மீன்பிடித்து கொண்டுவருவதற்காக பயன்படுத்தலாம். அதனை தொடர்ந்து நீங்கள் பிடித்த மீன்களை ஒரு இடைத்தரகருக்கு விற்பதற்கு பதிலாக, நீங்களே நேரடியாக நுகர்வோருக்கு விற்பதற்கான கட்டமைப்பினை உருவாக்கி மீன்விற்பணை முழுவதும் உங்கள் கட்டுபாட்டில் கொண்டுவரலாம் மேலும், இறுதியில் உங்களுடைய மீன்களை பதப்படுத்திடும் உங்களுடைய சொந்த தொழிற்-சாலையை உருவாக்கலாம். அதன் மூலம் மீன்பதப்படுத்திடும் தயாரிப்பு, செயலாக்கம் , விநியோகம் ஆகிய அனைத்தையும் நீங்கள் ஒருவரே கட்டுப்படுத்திடமுடியும். அதனால் இந்த சிறிய கடலோர மீன்பிடி கிராமத்தை விட்டு வெளியேறி சென்னை மும்பை போன்ற மிகப்பெரிய நகரங்களுக்கு நீங்கள் குடிபெயர்ந்த பின்னர் இறுதியில் உங்களுடைய மீன்வியாபாரத்தினை இந்தியா முழுவதும் விரிவடைந்துவரும் மிகப்பெரிய நிறுவனமாக உங்களுடைய நிறுவனத்தை நடத்துவீர்கள். ” என தன்னுடைய மீன் வியாபாரத்தினை மேம்படுத்திடும் கருத்துகளை மிக நீண்ட சொற்பொழிவுடன் விவரித்தார் அச்சொற்பொழிவின் இறுதியில் அம்மீனவர் : "ஆனால், ஐயா!, இவ்வாறு வளர்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?" என சந்தேகம் எழுப்பினார் அதற்கு அமெரிக்கர் : "சுமார் 15முதல் 20 ஆண்டுகள் ஆகும் ."என க்கூறினார் "சரிதான் ஐயா! ஆனால், அதன்பின்னர் என்ன செய்யவேண்டும்? என அம்மீனவர் மீண்டும் கேள்வி எழுப்பியபோது அமெரிக்கர் சிரித்துக் கொண்டே : “அதுவே சிறந்த நேரம் அனைத்தும் மிகச்சரியாக இருக்கும்போது, நீங்கள் உங்களுடைய நிறுவனத்தில் - பொது சலுகையை அறிவிப்பீர்கள், மேலும் உங்கள் நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு விற்று மிகவும் பணக்காரராகி விடுவீர்கள். ”எனக்கூறினார் “அதன்பிறகு ? ” என அம்மீனவர் தொடர்ந்து சந்தேகம் எழுப்பியபோது அமெரிக்கர் மிகமெதுவாக : “அதன்பிறகு நீங்கள் உங்களுடைய வியாபாரத்திலிருந்து ஓய்வு பெறுவீர்கள். ஒரு சிறிய கடலோர மீன்பிடி கிராமத்திற்குச் செல்வீர்கள், அங்கு நீங்கள் தாமதமாக தூங்கலாம், கொஞ்சம் மீன் பிடிக்கலாம், மிகுதிநேரத்தில் உங்களுடைய குழந்தைகளுடன் விளையாடிடலாம், உங்களுடைய மனைவி யுடனும் பிள்ளைகளுடன் ஒன்றாக சேர்ந்து உணவு அருந்தலாம், ஒவ்வொரு நாள் மாலையும் கிராமத்தில் உலா வரலாம், சக உறவினர்களுடனும் நண்பர்களுடனும சேர்ந்து ஏதேனும் இசையை வாசிக்கலாம் ” என பதில் கூறியபோது ”அதைத்தான் ஐயா! இப்போது நான் செய்து கொண்டிருக்கின்றேன்” என்றார் அந்த மீனவர் இறுதியாக.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
மண்பானை செய்திடும் ஒரு குயவன் தான் கொண்டுசென்ற பானைகளை யெல்லாம் விற்றுவிட்டு சந்தையிலிருந்து திரும்பிவந்து கொண்டிருக்கும் போது, வழியில் கண்...
-
ஒரு நிறுமத்தின் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபடும் , ஊழியர்கள் நிறுவனத்தை நன்றாக வழிநடத்தி செல்லும் இயக்குநர்கள...
-
பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமும் நீண்ட வரலாறும் கொண்ட நாடு நமது இந்திய நாடு. அறிவியல் தொழிற் நுட்பம் பண்டைய இந்தியாவில், ஏனைய உலக கலாசாரப் ப...