திங்கள், 30 செப்டம்பர், 2013

பணியாளர்களின் நல்லசெயல்களை மட்டும் பாராட்டினால் நிறுவனத்தின் உறபத்தி திறன் உயரும்


ஒரு சமயம் ராக்பெல்லர் என்பவருடைய ஆயில் நிறுவனத்தின் பணிபுரிந்த மிகமூத்த அதிகாரி ஒருவர் செய்த சிறு தவறினால் அந் நிறுவனத்திற்கு ஏறத்தாழ 2 மில்லியன டாலர் இழப்பு ஏற்பட்டுவிட்டது இந்த நிகழ்வானது ஊரறிந்த ஒரு இரகசியமாகிவிட்டது அதனால் அவரோடு பணிபுரிந்த மற்ற மூத்த அதிகாரிகள் அனைவரும் முதலாளி ராக்பெல்லர் தவறிழைத்த அந்த அதிகாரியை உண்டு இல்லையென ஒருவழியாக ஆக்கிவிடுவார் அதற்கேற்ற தண்டனையை அந்த தவறிழைத்த அதிகாரிக்கு வழங்கிடுவார் என எதிர்பார்த்திருந்தனர்

ஆனால் அந்த ஆயில் நிறுவனத்தின் முதலாளி ராக்பெல்லர் என்பவர் தன்னுடைய அந்தரங்க செயலரை அழைத்து அவருடைய ஆயில் நிறுவனத்தில் 2 மில்லியன டாலர் இழப்பு ஏற்படும் அளவிற்கு தவறிழைத்த அதிகாரியின் தனித்திறன் என்னென்ன முன்பு அவருடைய திறனால் அந்நிறுவனத்திற்கு எவ்வளவு வருமானம் கூடுதலாக கிடைத்தது என்பன போன்ற விவரங்களை பட்டியலாக அச்சிட்டு வருமாறுகூறி அதனை மற்றொரு மூத்த அதிகாரியின் நிலையில் படித்து காண்பித்து இவ்வளவு நல்ல அதிகாரியை அவர் செய்த சிறு தவறிற்காக தண்டிக்கலாமா கூடாது அவர் செய்த நன்மைகளையும் நிறுவனம் முன்னேறுவதற்கு அவருடைய கடுமையான உழைப்பை மட்டுமே காணவேண்டுமே தவிர வேறுஅவர் செய்த சிறுசிரு தவறுகளை கண்டிப்பாக பெயரி பிரச்சினையாக ஆக்க்கூடாது என கூறி அந்த பிரச்சினையை அதோடு அனைவரும் விட்டுவிடும்படி அனைவருக்கும் ஆலோசனை கூறினார்

ஆம் நாமும் நாம் பணிபுரியம் நிறுவனத்தில் நம்மோடு நமக்கு கீழ் பணிபுரிபவர்கள் செய்த, செய்கின்ற சிறு சிறு தவறுகளை மறப்போம் மன்னிப்போம் என கைவிட்டு அவரவர்செய்த நல்ல செயல்களை அவரிடம் கூறி பாராட்டினால் அதற்கு பிறகு அதுபோன்ற தவறுகளை தன்னுடைய வாழ்வில் அவர்கள் கண்டிப்பாக செய்யமாட்டார்கள் என்பது திண்ணம்

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

பிரச்சினை என்னவென்று அதன் அடிப்படையை தெரிந்து கொள்ளாமலேயே தவறான முடிவை எடுத்துவிடுகின்றோம்



     புதியதாக கணினியின் மென்பொருள் அறிவியல் பட்டம் பெற்ற ஒரு மாணவன்  பிரபலமான கணினிமென்பொருள் மேம்படுத்தும் ஒரு நிறுவனத்தின் நிரல் தொடர்கட்டளை எழுதிடும் வல்லுநர் பணியில் சேருவதற்கான நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டபோது அந்நிறுவனத்தின் வயது முதிர்ந்த தேர்வாளர் தம்பி!  நீ கணினி மென்பொருளின் தருக்கமுறைமை பற்றி நல்ல அறிவு பெற்றிருக்கின்றாயா ? “ என வினவியபோது  அதிலென்ன சந்தேகம் ஐயா!” என பதிலிருத்தான் அப்படியானால் சரி! நான் புதிர்  ஒன்றை கூறுகின்றேன் அதற்கான விடையை மிகச்சரியாக கூறுகின்றாயா?  என பார்த்தபின்னரே உன்னை இந்த நிறுவனத்தில் பணிக்கு எடுப்பது பற்றி முடிவுசெய்யமுடியும் எனக்கூறினார்.
 1தொடர்ந்து  இரு தொழிலாளர்கள் ஒரு கொதிகலணின் புகைபோக்கியிலிருந்து இறங்கி வந்தார்கள் அவர்களில் ஒருவர் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருந்தது மற்றொருவர் முகம் அவ்வாறு  எதுவும் படியாமல் சுத்தமாக இருந்தது  இருவரில் யார் முகத்தினை கழுவி தூய்மை  செய்வார் என அந்த தேர்வாளர் வினவினார்.
 உடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட மாணவர் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்த தொழிலாளியேஎன பதிலிருத்தான்  தவறு!   முகத்தில்  கரியும் சாம்பலும் படியாத தொழிலாளியே, தன்னுடைய முகத்தினை  கழுவி தூய்மை  செய்வார் . ஏனெனில் முகத்தில்  கரியும் சாம்பலும் படிந்த தொழிலாளி எதிரில் உள்ள தொழிலாளியின் முகத்தை பார்க்கும்போது சுத்தமாக இருப்பதை அறிந்து நம்முடைய முகமும் சுத்தமாக இருக்கும் என எண்ணி விட்டுவிடுவார்.ஆனால், முகத்தில்  கரியும் சாம்பலும் படியாத தொழிலாளியானவர்  எதிரில்உள்ள தொழிலாளியின் முகத்தை பார்க்கும்போது அந்த  முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருப்பதை கண்டு தன்னுடைய முகமும் அவ்வாறே இருக்கும் என எண்ணி தன்னுடைய முகத்தினை  கழுவி தூய்மை  செய்வார். எனக்கூறினார் அந்த தேர்வாளர். .  

   2ஐயா! வேறு ஒரு வாய்ப்பினை வழங்குங்கள் என அந்த மாணவன் கூறியபோது
 சரி! இரு தொழிலாளர்கள் ஒரு கொதிகலணின் புகைபோக்கியிலிருந்து இறங்கி வந்தார்கள் அவர்களில் ஒருவர் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருந்தது மற்றொருவர் முகம் அவ்வாறு  எதுவும் படியாமல் சுத்தமாக இருந்தது  இருவரில் யார் முகத்தினை கழுவி தூய்மை  செய்வார் என இரண்டாவது முறை அந்த தேர்வாளர் வினவினார்.
  உடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட மாணவர் முகத்தில் கரியும் சாம்பலும் படியாத தொழிலாளியேஎன பதிலிருத்தான்
தவறு!   இருவருமே தத்தமது முகத்தினை  கழுவி தூய்மை  செய்வார்கள்  ஏனெனில்  முகத்தில்  கரியும் சாம்பலும் படியாத தொழிலாளியானவர்  எதிரில்உள்ள தொழிலாளியின் முகத்தை பார்க்கும்போது அந்த  முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருப்பதை கண்டு தன்னுடைய முகமும் அவ்வாறே இருக்கும் என எண்ணி தன்னுடைய முகத்தினை  கழுவி தூய்மை  செய்வார் .அதனை கண்டு முகத்தில் கரியும் சாம்பலும் படியாத தொழிலாளியே தன்னுடைய முகத்தை கழுவி சுத்தபடுத்திடும்போது ,ஏன் நாமும் நம்முடைய முகத்தை கழுவி சுத்தபடபடுத்திடக்கூடாது? என அவரும் தன்னுடைய முகத்தினை கழுவி சுத்தபடுத்திகொள்வார் எனக்கூறினார் அந்த தேர்வாளர்.
 3 ஐயா! மற்றொரு வாய்பிபினை வழங்குங்கள் என அம்மாணவன் வேண்டியபோது மீண்டும் மூன்றாவது முறையாக   
இரு தொழிலாளர்கள் ஒரு கொதிகலணின் புகைபோக்கியிலிருந்து இறங்கி வந்தார்கள் அவர்களில் ஒருவர் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருந்தது மற்றொருவர் முகம் அவ்வாறு  எதுவும் படியாமல் சுத்தமாக இருந்தது  இருவரில் யார் முகத்தினை கழுவி தூய்மை  செய்வார் என மூன்றாவது முறை அந்த தேர்வாளர் வினவினார்.
  உடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட மாணவர் இரண்டு தொழிலாளியுமே தங்களுடைய முகத்தினை கழுவி சுத்தபடுத்திகொள்வார்கள் என பதிலிறுத்தபோது
  தவறு!  இருவருமே தங்களுடைய முகத்தினை கழுவமாட்டார்கள். ஏனெனில்  முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருக்கும் தொழிலாளி எதிரில் இருக்கும் தொழிலாளியின் முகம் தூய்மையாக  இருப்பதை பார்த்து தன்னுடைய முகமும் தூய்மையாக இருக்கும் என தன்னுடைய முகத்தை கழுவி சுத்தபடுத்திடமாட்டார்.   ஆனால் முகத்தில் கரியும் சாம்பலும் படியாத தொழிலாளி எதிரில் இருக்கும் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்த தொழிலாளியே தன்னுடைய முகத்தினை கழுவி சுத்தபடுத்தாதபோது நாம் மட்டும் ஏன் கழுவவேண்டும் என விட்டுவிடுவார் எனகூறினார். அன்த தேர்வாளர்.
4சரி! ஐயா! இறுதிவாய்ப்பாக  ஒரு கேள்வியை கேளுங்கள் ஐயா!” என அந்த மாணவன் வேண்டியபோது
  இரு தொழிலாளர்கள் ஒரு கொதிகலணின் புகைபோக்கியிலிருந்து இறங்கி வந்தார்கள் அவர்களில் ஒருவர் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருந்தது மற்றொருவர் முகம் அவ்வாறு  எதுவும் படியாமல் சுத்தமாக இருந்தது  இருவரில் யார் முகத்தினை கழுவி தூய்மை  செய்வார் என இறுதியாக நான்காவதுமுறை அந்த தேர்வாளர் வினவியபோது
  என்னடாஇது ?எப்படி பதில் கூறினாலும் தருக்க முறையில் தவறு என வேறு பதிலையே இந்த தேர்வாளர் கூறுகின்றாரே எனத்தடுமாறி ஐயா இந்த கேள்விக்கான பதிலை என்னால் கூறஇயலவில்லை  நான் தருக்கஇயலில் கரைகண்டவன் அன்று ஒருமாணவன் மட்டுமே என மிகபணிவுடன்கூறியபோது
  அதனாலெனென்ன தம்பி!பரவாயில்லை ! ஒரு கொதிகலணின் புகை போக்கியில்இருந்து இருவர் இறங்கி வரும்போது எவ்வாறு ஒருவர்முகத்தில் மட்டும் கரியும் சாம்பலும் படிந்திருக்கும்? இருவர் முகத்திலுமே கரியும் சாம்பலும் படிந்திருக்கும்.என்ற அடிப்படை உண்மையை தெரிந்துகொள் . அதனால் முதலில் பிரச்சினை என்ன அதனுடைய அடிப்படையான இயல்பு, குணநலன் என்னவென தெரிந்து கொள் அதன்பின் தருக்கவியலை அதில்புகுத்தி அந்த பிரச்சினைக்கான விடையை கண்டுபடிக்க முயற்சிசெய் என விடை கொடுத்து அனுப்பினார் அந்த தேர்வாளர்.
   ஆம்,ஆம். நம்மில் பலரும்இதேபோன்றே எந்தவொரு நிகழ்வையும முழுவதுமாக அதனுடைய இயற்கை அமைவை பற்றியும் அந்நிகழ்வு ஏற்படுவதற்கான அடிப்படை  உண்மைகளை பற்றியும்  முழுவதும் தெரிந்து கொள்ளாமல் அரைகுறையாக அறிந்துகொண்டு தவறான முடிவெடுத்து நம்முடைய வாழ்வில் அல்லல்படுகின்றோம். என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

எந்த நிகழ்வு நடந்தாலும் அதனை ஆராய்ந்து பார்க்க தவறிவிடுகின்றோம்


ஒருநாள் இரண்டாவது தளத்தில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கொத்தனாரை மூன்றாவது தளத்திலிருந்து மேற்பார்வையாளர் உடனடியாக அவரை நேரில் அழைத்து ஒருசில ஆலோசனைகளை செயற்படுத்துமாறு கூறுவதற்காக அந்த கொத்தனாரின் பெயரிட்டுஅழைத்தபோது அந்த கொத்தனார் திரும்பி பார்க்காததால் அந்த கொத்தனாரின் கவனத்தை ஈர்க்கும்பொருட்டு ஒரு பத்து ரூபாய் தாளை வீசி ஏறிந்தார் உடன் கொத்தனாரும் ஏதோ காற்றில் ரூபாய் தாள் தவறி வந்துவிட்டது போலும் நம்முடைய அதிருஷ்டம்தான் என எண்ணி அந்த பத்து ரூபாய் தாளை எடுத்து சட்டைபயில் வைத்து கொண்டு தன்னுடைய பணியை தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்

பின்னர் மேற்பார்வையாளர் நூறு ரூபாய் தாளையும் அதன்பின்னர் ஐந்நூறு ரூபாய் தாளையும் வீசி எறிந்தபோதும் அதே நிலைமை தொடர்ந்தது

அதனால் எரிச்சலுற்ற மேற்பார்வையாளர் சிறு கல் ஒன்றை எடுத்து கொத்தனாரை நோக்கி வீசிஎறிந்தபோது மிகச்சரியாக அந்த சிறு கல்லானது கொத்தனாரின் தலையில் விழுந்தவுடனே வலிபொறுக்கமுடியாமல் தலையை தடவிகொண்டே மேல்தளத்தை நோக்கி திரும்பினார் அங்கு அவருடைய மேற்பார்வையாளர் அவரை மேலே வருமாறு அழைத்ததை தொடர்ந்து அங்கு சென்றார்

இவ்வாறே நாமும் நம்முடைய வாழ்வில் ஏதேனும் சிறு நல்ல நிகழ்வு நடந்தால் அதனை நம்முடைய அதிருஷ்டம் என எண்ணி மகிழ்கின்றோம் அது ஏன் நடந்தது என ஆராய்ந்து பார்க்க தவறிவிடுகின்றோம் ஆனால் துன்ப நிகழ்வு ஏற்படும்போது மட்டும் நாம் உடனே எனக்குமட்டும் ஏன் இவ்வாறான துன்பம் ஏற்படுகின்றதுஎன அதை தீர்வு செய்வதற்கான நடவடிக்கை எதுவும் செய்திடாமல் மனச்சோர்வு அடைந்துவிடுகின்றோம்

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

யாரையும் ஆளின் தோற்றத்தை வைத்து தவறாக முடிவுசெய்திட வேண்டாம்


மனநல மனைக்கு தேவையான பொருட்களை வழக்கமாக ஏற்றிவரும் சுமைஉந்துவண்டியின் ஓட்டுநர் பொருட்களை இறக்கியபின் தன்னுடைய வண்டியின் அனைத்து சக்கரங்களின் டயர்களும் நல்லநிலையில் உள்ளதாவென சரிபார்த்தபோது ஒருசக்கரத்தில் காற்றில்லாமல் மிகமேசமாக இருப்பதை கண்டு உடனடியாக அதனை கழற்றி தயார்நிலையில் உள்ள மாற்று சக்கரத்தை மாற்றியமைக்கலாம் என முனையும்போது அந்த சக்கர்த்தை பொருத்துவதற்கான திருகாணிகள் அனைத்தும் தவறி அருகில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடைநீரில் விழுந்துவிட்டன

அய்யோ திருகாணிகள் இல்லாமல் எவ்வாறு அந்த பழுதடைந்த சக்கரத்திற்குபதிலாக மாற்று சக்கரத்தை பொருத்துவது என தவித்து நின்றபோது அந்தவ்வழியாக ஒருநமனநலன் பாதித்த ஒருநபர் கடந்து செல்லும்போது இந்த ஓட்டுநருடைய நிலையை பார்த்து என்ன நடந்து என வினவியபோது நடந்த நிகழ்வை ஓட்டுநர் அந்த மனநிலை பாதித்தநபரிடம் கூறினார்

இந்த நிகழ்விற்காகவா கலங்கியபோய் இருக்கின்றீர்கள் பயப்படவேண்டாம் மிகுதி சக்கரங்களில் இருந்து ஒவ்வொரு திருகாணிகளை கழற்றி இதில் பொருத்தி அருகில் இருக்கும் பணிமனைவரை பத்திரமாக மெதுவாக ஓட்டிசென்றுவிட்டு அங்கு உங்களுக்கு தேவையான திருகாணிகளை வாங்கி பொருத்தி வழக்கம்போன்று ஓட்டி செல்லலாமே என பதிலிருத்ததை கண்டு அடடா அருமையான ஆலோசனையாயிற்றே இவ்வளவு புத்திசாலியாக இருக்கும் நீங்கள் எப்படி இந்த மனநல மருத்தவமனைக்கு வந்து சேர்ந்தீர்கள் என இந்த ஓட்டுநர் ஆச்சரியம்க கேட்டபோது நான் மனநலன் பாதித்தவனேயன்றி முட்டாள் அன்று என கூறிசென்றார்

அதாவது யாரையும் ஆளின் தோற்றத்தை வைத்து இப்படித்தான் இருப்பார் என தவறாக முடிவுசெய்திட வேண்டாம் அவரவருடைய உண்மையான குணநலன்களையும் செயல்களையும் தெரிந்து அதன்பின் முடிவுசெய்க என்பதேயாகும்

புதன், 24 ஜூலை, 2013

ஒருநிறுவனத்தின் மேலாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையேயான உறவை சுமுகமானதாக வளர்த்துகொள்ள

பொதுவாக தலைமையாளர்களுடன் கீழ்நிலை பணியாளர்களின் உறவு மிக்கடினமானதாகவே இருந்து வருகின்றன இரகசியம் பாதுகாப்பதாக கூறிக்கொண்டு எந்தவொரு செயலையும் பிரச்சினைக்கான தீர்வினையினையும் சுமூகமாக பின்பற்றபடுவதேயில்லை

ஆயினும் இந்த உறவு சுமுகமாக இருந்தால் நம்பிக்கை மிக்கதான கருவியாக இருக்கும் அதற்காக பின்வரும் படிமுறைகளை பின்பற்றி பணியாளர்களுக்கும் தலைமைக்கும் உள்ள உறவை சுமுகமானதாக ஆக்கமுடியும்

1.நடைமுறையில் வீடுஎன ஒன்றிருந்தால் அதற்கு வாயில்,சன்னல் என்பன போன்றஉறுப்புகள் இருக்கவேண்டும் அதுபோன்றே எந்தவொரு தொழிலிலும் ஒரு சில பிரச்சினைகள் அவ்வப்போது குறுக்கே வந்துகொண்டுதான் இருக்கும் பிரச்சினையே இல்லாத தொழில் எதுவுமேயில்லை இருந்தாலும் அந்தபிரச்சினையால் எழும் பொதுவான பாதிப்பு பிரச்சினைக்கேவிற்கு உரிய பாதிப்பு அதனால் நம்முடைய பணிஎவ்வாறு பாதிக்கும் அதனைதொடர்ந்து நிறுவனத்தின் குறிக்கோள் எவ்வாறு பாதிக்கும் என்பன போன்ற விவரங்களை மிக விரிவாகவும் விவரமாகவும்தலைமையாளரிடம் பணியாளர்கள் உடனடியாக தகவல் தெரிவித்திடுவது நன்று

2. சரி பிரச்சினையைமட்டும் தலைமையாளரிடம் விவரமாக கூறிவிட்டால் போதுமா அந்த பிரச்சினைக்குரிய தீர்வை நாம் எவ்வாறு முயன்று கண்டோம் அந்த முயற்சியினால் நாம் என்னென்ன தெரிந்துகொண்டோம் எத்தனைவகையான மாற்று தீர்வுகள் அந்த பிரச்சினைக்காக உள்ளன அதில் நம்முடைய பரிந்துரை என்ன என்பதே இரண்டாவது படிமுறையாகும்

3 அந்த பிரச்சினையை நாம் கூறும் வழியில் தீர்வுசெய்து வெற்றிகொண்டால் என்னென்ன பயன் உண்டாகும் சிறிய அளவில் அந்த தீர்வினை சரிபார்த்தபின்னர் மற்றவர்களுடன்அதனை எவ்வாறுபகிர்ந்துகொண்டோம் என்பதே மூன்றாவது படிமுறையாகும்

4.இறுதியாக இதனை செயல்படுத்துவதற்கான பொறுப்பான நபர் யார் அதனைதொடர்ந்து செயல்படுத்துவதன் இறுதி விளைவு என்ன என்பதே இறுதி படிமுறையாகும் இந்த ஒளிவுமறைவற்ற படிமுறையை பின்பற்றி ஒருநிறுவனத்தின் மேலாளர்களுக்கும்பணியாளர்களுக்கும் இடையேயான உறவைசுமுகமானதாக வளர்த்துகொள்ளமுடியும்

சனி, 22 ஜூன், 2013

நம்முன் பரந்து கிடக்கும்வாய்ப்புகளையும், வசதிகளையும் மிகச்சரியாகபயன்படுத்தி முன்னேறசெய்யாமல் சோம்பேறியாக நமக்கு கிடைத்தது அவ்வளவுதான் என முடங்கிபோய்விடுகினறோம்.


முன்னொரு காலத்தில் ஒரு மரத்தின்மீது இருந்த பறவையின் கூட்டில் நிறைய மூட்டைகள் இருந்தன திடீரன ஒருநாள் வீசிய பயங்கர சூறாவளி காற்றினால்அந்த மூட்டைகள் காற்றில் அடித்துசெல்லபட்டு தரையில் வீசியெறியபட்டது அவற்றில்ஒருமுட்டைமட்டும் விழுந்த இடம் கோழிகள் வாழும் இடமாக இருந்ததால் கோழிமுட்டையுடன் இந்த பறவையின் முட்டையும் கலந்துவிட்டது

ஒரு வயதானபெட்டைகோழி தன்னுடைய முட்டைகளுடன் இந்த பறவையின் முட்டையும் சேர்த்து அடைகாத்தது. இறுதியாக மற்ற முட்டைகளிலிருந்து கோழிகுஞ்சுகள் முட்டை ஓட்டை உடைத்து கொண்டு பிறந்ததை போன்று இந்த பறவையின் குஞ்சும் அதனுடைய ஓட்டை உடைத்து கொண்டு அழகிய பறவை குஞ்சாக பிறந்தது

இது மற்ற கோழிகுஞ்சுகள்போன்றே இரைதேடவும் தரையை சீய்த்து புழுபூச்சிகளை தேடிபிடித்து உண்ணவும் அதிகபட்சம் ஓரடி உயரம் மட்டும் தாவி பறக்கவும் பயிற்றுவிக்கபட்டு அந்த செயல்களைமட்டும் செய்ய பழகி அவைகளை மட்டும் பின்பற்றி வந்தது

ஒருநாள் ஒருஅழகியபறவைஒன்று வானத்தில் வட்டுமிட்டு பறப்பதை பார்த்த இந்த பறவையின் குஞ்சானது வயதான பெட்டைக்கோழியை பார்த்து அம்மாஅதோ உயரத்தில் பறக்கின்றதே அதுஎன்னஅம்மா அதுஎவ்வாறு வானத்தில் பறக்கின்றது என வினவியபோது அது ஒரு பறவை வனத்தில் பறப்பதற்காகவே பிறந்திருக்கின்றது நாமெல்லோரும் கோழிகள் நாம் தரையில் மட்டுமே நடக்கமுடியும் அந்த பறவை போன்று நம்மால் பறக்க முடியாது பறந்து சென்று இரைதேடிட முடியாது அதனால் நாம்நடந்து சென்று குப்பைமேடுகளில் சிந்தி சிதறிகிடக்கும் தானியங்களையும் புழுபூச்சிகளையும் இரையாக உட்கொள்ளமுடியும் என அறிவரைகூறியது

அதைஅப்படியேநம்பி தானும் ஒரு கோழிமட்டுமே தன்னால் அவ்வாறு வானத்தில் பறக்கமுடியாது மேலும் பலஇடங்களுக்கு பறந்து சென்று இரைதேடமுடியாது என எண்ணி வாழ்ந்து மடிந்தது.

அதுபோன்றே நம்மில் பலர் நம்முன் பரந்து கிடக்கும்வாய்ப்புகளையும், வசதிகளையும் மிகச்சரியாகபயன்படுத்தி முன்னேறசெய்யாமல் சோம்பேறியாக நமக்கு கிடைத்தது அவ்வளவுதான் என முடங்கிபோய்விடுகினறோம்.

ஞாயிறு, 16 ஜூன், 2013

நாம் கூறும் சொல் ஒவ்வொன்றும் மற்றவர்களுக்கு பாதிப்பெதுவும் ஏற்படாமல்இருக்குமாறு பார்த்து கொள்க


ஒரு வயதான மனிதன் தன்னுடைய வீட்டிற்கு அருகில் வசிக்கும் இளைஞன்தான் அவ்வூரில் நடைபெறும் அனைத்து திருட்டிற்கும் காரணம் என்று பார்ப்பவர்கள் அனைவரிடமும் பொய்யான வதந்தி செய்தியை பரப்பிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்

அதனால் உண்மையாகவே அந்த இளைஞன் திருடியிருப்பானோ என்றும் அவ்வூரில் நடைபெறும் திருட்டிற்கும் அந்த இளைஞனுக்கும் என்றும் அந்த ஊரின் காவல்துறையானது சந்தேகபட்டுஅந்த இளைஞனை கைதுசெய்து சிறையில் அடைத்தது சிறிது காலம் கழித்தபின் அந்த இளைஞனுக்கும் அவ்வூரில் நடைபெறும் திருட்டிற்கும் தொடர்பே இல்லை என்றும் அவன் நிரபராதி என்றும் தீர்ப்பு கிடைக்கபெற்று அந்த இளைஞன் விடுவிக்கப்பட்டான்

பிறகுஅந்த இளைஞன் வீடுவந்து சேர்ந்ததும் பக்கத்து வீட்டு வயாதனவன் மீது இதுகுறித்து நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடுத்தான் அதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது அவ்வழக்கினை விசாரித்துவரும் நீதிபதியானவர் அந்த வயதான பெரியவரிடம் "ஏன் ? இவ்வாறு பொய்யான வதந்தியை பரப்பிவிட்டீர்கள்" என வினவியபோது "சும்மாபொழுது போக்காக இருக்குமாறுதான் நான் கூறினேனே தவிர உண்மையில் அவ்விளைஞன் பாதிக்குமாறு நான் ஏதும் செய்யவில்லை" என சாதித்தார் உடன் நீதிபதியானவர் அன்றைய தினமனி செய்திதாளை அந்த வயதான பெரியவரிடம் கொடுத்து "இந்த செய்திதாளை உங்களுடைய வீடுபோய்சேரும்வரை சிறுசிறு துண்டாக கிழித்தெரிந்துகொண்டே செல்க நாளை காலையில் நீதிமன்றத்திற்கு வந்து சேருக" என கூறிஅனுப்பினார்

அன்று அந்த வயதான பெரியவர் தன்னுடைய வீட்டிற்கு போய்ச்சேரும் வரை நீதிபதி கூறியவாறு செய்திதாளை சிறுசிறு துண்டுகளாக கிழித்து எறிந்துகொண்டே சென்று மறுநாள் நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தார்

மறுநாள் நீதிபதிவந்ததும் அந்த வயதான மனிதனை பார்த்து "நேற்று உங்களிடம் கொடுத்த செய்திதாளை முழுமையாக சேகரித்து ஒட்டிஎடுத்துவருக " எனக்கூறியவுடன் வயதானவர் "அதுஎப்படி முடியும் நான்தான் அந்த செய்திதாள் முழமையும் சிறுசிறு துண்டுகளாக கிழித்து தரையில் எறிந்துவிட்டேனே அவைகள் எல்லாம் காற்றில் பறந்து போய்விட்டிருக்குமே" என பதில் கூறியபோது "அவ்வாறே நீங்கள் அந்த இளைஞனை பற்றிய அவதூறாக செய்தியை மற்றவர்களிடம் கூறியவுடன் அவை செய்திதாள்துண்டுகள் காற்றில் பரந்து சென்றவாறு இந்த தவறான அக்கப்போரான செய்தியும் உடன் பரவி அனைவரும் அவ்விளைஞனை பற்றிய தவறான நோக்கத்தில் பார்த்திடுமாறு அந்த இளைஞனுக்கு மனஉளைச்சலும் மனவருத்தமும் ஏற்பட்டுவிட்டது

அதனால் இனி அவ்வாறு நடந்துகொள்ளாதீர் மீறினால் உங்களுக்கு தக்க அபராதம் இந்த நீதிமன்றம் விதிக்கும்" என எச்சரித்து அனுப்பினார் அதை போன்றே நாம் கூறும் சொல் ஒவ்வொன்றும் மற்றவர்களுக்கு பாதிப்பெதுவும் ஏற்படாமல்இருக்குமாறு பார்த்து கொள்க

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...