ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

பாத்திரத்தை பார்க்காதே பாத்திரத்தில் உள்ள பொருளை பார்


பழைய கல்லூரி மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தங்களின் பழைய கல்லூரி பேராசிரியரை பார்க்க சென்றனர் .அவர்கள் உடன் அனைவருக்கும் ஒரு சிறு தேனீர்விருந்து அளிக்க அப்பேராசியர் விரும்பினார்

அப்போது நடைபெற்ற குழுவிவாதத்தில் பொதுவான நலன் விசாரிப்பிற்கு பின் அவர்கள் அனைவரும் தங்களுடைய பணியிலும் வாழ்விலும் ஏராளமான பிரச்சினைகளை சந்திப்பதால் மனஅழுத்தம் மிக அதிகஅளவில் ஏற்படுகின்றது என்றும் அதிலிருந்து எவ்வாறு மீண்டுவருவது என்றும் தங்களுடைய பழைய கல்லூரி பேராசிரியரிடம் வினவினர்

இந்நிலையில் அப்பேராசியர் ஒரு பாத்திரத்தில் தேனீரும் அதனோடு பீங்கான் ,அலுமினியம் ,வெள்ளி ஆகியவற்றினால் ஆன குவளைகளையும் கொண்டுவந்து வைத்து அவரவர்கள் விருப்ப பட்ட குவளைகளில் தேனீரை ஊற்றிகொண்டு அருந்தலாம் என கூறினார்

பழைய கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் ஆவலாய் பரந்து சென்று வெள்ளி, பீங்கான் ஆகியவற்றினால் ஆன குவளைகளை மட்டும் தெரிவு செய்து அவைகளில் தேனீரை ஊற்றி அருந்த ஆரம்பித்தனர் ஆனால் யாரும் அலுமினியத்தாலான குவளையை கைகளால் தொடக்கூட இல்லை .

உடன் அப்பேராசியர் பார்த்தீர்களா மாணவர்களே நாம் அனைவரும் பாத்திரத்தில் உள்ள ஒரேமாதிரியான தேனீரைத்தான் அருந்த விருக்கின்றோம் ஆனால் நாம் அனைவரும் அந்த தேனீரை வைத்து குடிப்பதற்கான குவளையை மட்டும் மிகச்சிறந்ததாக இருக்கவேண்டும் என விரும்பி அதற்காக அல்லல்படுகின்றோம் .

ஆயினும் சாதாரண அலுமினிய குவளையை நாம்யாரும் தொடவேஇல்லை இதுதான் நம்முடைய மனஅழுத்தத்திற்கு காரணம் ஆகும். அதாவது சிறந்த குவளை நமக்கு கிடைக்காது போய்விடுமோ என அனைவரும் தேனீரை குடிப்பதைபற்றி கவலைபடாமல் அதை தாங்குகின்ற குவளை சிறந்ததாக இருக்கவேண்டும் என முட்டிமோதி அல்லாடுகின்றோம் இதனால் தான் நமக்கு மனஅழுத்தம் ஏற்படுகின்றது கூறினார் .

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...