சனி, 27 ஏப்ரல், 2013

தூயஅன்பிற்கு இணையேதுமில்லை


ஒரு ஊரில் இரு சகோதரர்கள் தங்களுடைய பெற்றோர்களை இழந்தாலும் தங்களின் முன்னோர் தமக்காக விட்டுசென்ற நிலத்தில் ஒற்றுமையுடன் பாடுபட்டு தங்களுக்கென தனித்தனி வீட்டினை கட்டிகொண்டு நல்ல நிலைமையில் வசதியுடன் வாழ்ந்துவந்தனர்.

இந்நிலையில் இவர்களின் உழைப்பையும் நல்ல வசதியான வாழ்க்கையும் கண்டு பெண்வீட்டார்கள் நான் நீ என போட்டிபோட்டுகொண்டு வந்தனர்

இருந்தாலும் பெரியவனுக்குமட்டும் திருமணம் ஆனதால் தம்முடைய உடைமைகளை சமமாக பங்கிட்டுகொண்டு தனிக்குடித்தனமாக பிள்ளைகள் மனைவிஎன வாழ்ந்துவந்தான் இளையவன் ஏதோ காரணத்தால் திருமணம் ஆகவில்லை இருந்தாலும் தனியாக மற்றொருவீட்டில் வாழ்ந்தவந்தான்

. இந்நிலையில் இளையவன் அண்ணனுக்கு திருமணம் ஆனதால் மனைவி பிள்ளைகள் என பெரிய குடும்பமாக உள்ளனர் அதனால் அவர்களின் தேவை அதிகமாக இருக்கும் நாம் தனியொருவனாக வாழ்ந்து வருவதால் நம்முடைய தேவை குறைவாகத்தான் இருக்கும் இருந்தாலும் இருவரும் சமமாக பங்கிட்டு கொண்டுள்ளது அநியாயமாகும் அதனால் என்னுடைய பங்கில் என்ஒருவனுடைய தேவைபோக மிகுதியை அண்ணனுக்கு வழங்கிவிடுவோம் என முடிவுசெய்து தன்னுடைய நிலத்தில் விளைந்து வீட்டில் சேமித்து வைத்துள்ள தானியங்களை தன்னுடைய அண்ணனுடைய வீட்டிற்கு அவருடைய தானியத்தை சேமித்துவைக்கும் குதிருக்குள் யாருக்கும் தெரியாமல் தினமும் இரவில் கொண்டுசென்று சேர்த்துவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான் இளையவன்

இவ்வாறே பெரியவனும் நான் பரவாயில்லை திருமணம் ஆகி மனைவி பிள்ளைகள் என குடும்பமாகிவிட்டேன் பிற்காலத்தில் என்னை கவனித்து கொள்ள மனைவி , பிள்ளைகள் ஆகியோர் இருப்பார்கள் ஆனால் தம்பிக்குஎன தனியாக குடும்பம் இல்லையாதலால் அவனை பிற்காலத்தில் கவனித்துகொள்ள யாருமே இருக்கமாட்டார்கள் அதற்குபதிலாக பணம் பொருள் என நிறைய அவனிடம் இருந்தால் அதற்காகவாவது அவனை யாராவது கவனித்து கொள்வார்கள் . ஆனால் இப்போது சம்மாக பங்கு பிரித்து கொண்டுவிட்டதால் நிறைய பொருளை தம்பியால் சேர்த்துவைக்க முடியாது அதனால் என்னுடைய பங்கில் எங்களுடைய தேவைபோக மிகுதியை தம்பிக்கு வழங்கிவிடுவோம் என முடிவுசெய்து தன்னுடைய நிலத்தில் விளைந்து வீட்டில் சேமித்து வைத்துள்ள தானியங்களை தன்னுடைய தம்பியினுடைய வீட்டிற்கு தானியத்தை சேமித்துவைக்கும் குதிருக்குள் யாருக்கும் தெரியாமல் தினமும் இரவில் கொண்டுசென்று சேர்த்துவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான் பெரியவன்

இந்நிகழ்வுகள் பலநாட்களாக நடைபெற்றுவந்தன என்னடா நம்முடைய குதிரில் உள்ள விளைபொருட்கள் குறையவேஇல்லையே என இருவரும் ஆச்சரியபட்டனர் இந்நிலையில் இருவரும் ஒருநாள் இரவில் இந்நிகழ்வின்போது எதிர்பாராதவிதமாக சந்தித்து கொண்டனர் இவன் அண்ணா என்றும் அவர் தம்பி என்றும் கட்டி பிடித்து கொண்டுஅழுதனர்

ஆம் தூய அன்பு செலுத்திடும இருவர் தமக்கு இல்லையென்றாலும் தாம் அன்புசெலுத்துபவருக்காக தம்முடைய பொருளையும் கொடுக்கமட்டுமே மனம் வரும் என இதிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...