வெள்ளி, 31 மே, 2013

எதிர்மறை எண்ணங்களை அவ்வப்போது நீக்கி நல்ல எண்ணங்களை கொண்டு நம்முடைய வாழ்வை வளப்படுத்த முயற்சி செய்க


புறநகரில் வசிக்கும் ஒருவர் தன்னுடைய வீட்டை சுற்றி காலியிடம் ஏராளமாக இருந்ததால் அதனை வீணாக புறம்போக்கு நிலம்போன்று விட்டுவிடாமல் காய்கறி செடிகளையும் பூஞ்செடிகளையும் நட்டு நல்ல அருமையான தோட்டமாக பராமரித்து வந்தார்

அந்நிலையில் அவருடைய தோட்டத்தில் நாம் வெளிநாட்டில் இருந்து அரசுபள்ளிகளில் ஏழைக்குழந்தைகளின் மதிய உணவிற்காக இறக்குமதிசெய்த மக்காச்சோளத்தோடு கூடவே இலவசஇணைப்பாக தாணாகவே வந்து சேர்ந்த பர்தீனியம் எனும் விசமுள்ள களைச்செடி முளைத்திருப்பதை பார்த்து அதனால் நம்முடைய தோட்டத்திற்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என அலட்சியமாக விட்டுவிட்டார்

ஏதோவொரு அவசரவேலையாக குடும்பத்துடன் அருகிலிருந்த உறவினரின் ஊருக்கு சென்று ஓரிருவாரம் கழித்து வீடு திரும்பி வந்தார்

நம்முடைய வீட்டுத் தோட்டம் எவ்வாறு உள்ளது என சுற்றிபார்த்தபோது அவருடைய தோட்டத்தில் இருந்த காய்கறி பூஞ்செடிகள் அனைத்தையும் அந்த பர்தீனியம் எனும் களைச்செடி பரவி அழித்து விட்டதை கண்டு அதிர்ச்சியுற்றார்

அடடா ஒற்றையாக சிறியதாக இருந்தபோது அந்த பர்தீனிய களைச்செடியை பிடுங்கி விட்டிருந்தால் அரும்பாடுபட்டு உருவாக்கிய நம்முடைய தோட்டம் இவ்வாறு அழிந்திருக்காதே மேலும் நம்முடைய தோட்டத்தை திரும்பவும் அனைத்து செடிகளுக்குமான புதியதாக நாற்று வாங்கி நட்டு உருவாக்கவேண்டுமே என வருத்தபட்டு அந்த பர்தீனிய களைச்செடியை அழித்து ஒழிப்பதற்கு மிகசிரமபட்டு பிடுங்கி கொண்டிருந்தார்

அதேபோன்றே நாமும் நம்முடைய வாழ்வில் எதிர்ப்படும் தீங்கான எதிர்மறை எண்ணங்களை அவ்வப்போது நீக்கி நல்ல எண்ணங்களை கொண்டு நம்முடைய வாழ்வை வளப்படுத்த முயற்சிக்காமல் பெரியதாக முற்றவிட்டு நம்முடைய மனத்தையும் வாழ்வையும் வீணாக்கி கொண்டிருக்கின்றோம்

திங்கள், 27 மே, 2013

தேவையற்ற செய்திகளை நம்முடைய நினைவில் நீண்ட நாட்களுக்கு வைத்துகொள்ளவேண்டாம்


ஒரு அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் தன்னுடைய வகுப்பு மாணவர்களிடம் மறுநாள் அனைத்து மாணவர்களும் அவர்கள் வெறுக்கும் நபர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருஉருளை கிழங்கு வீதம் எத்தனை நபர்களை வெறுக்கின்றார்களோ அத்தனை உருளை கிழங்குகளை ஒரு பிளாஷ்டிக் பையிலிட்டு எடுத்துவரும் படி கூறினார் .

மறுநாள் அவ்வாறே அனைத்து மாணவர்களும் ஒன்று இரண்டு என அவரவர்கள் வெறுக்கும் நபர்களுக்கு ஏற்ற எண்ணிக்கையில் உருளைகிழங்குகளை தத்தமது பையிகளிலிட்டு பள்ளிக்கு எடுத்து வந்தனர் .

உடன் அவ்வாசிரியர்”இந்த பையை சாப்பிடும் போதும் தூங்கும் போதும் எந்தவேலை செய்தாலும் எங்கு சென்றாலும் எப்போதும் உங்கள் கையிலேயே இருக்கவேண்டும் “ எனக்கூறினார்

ஓரிரு நாட்கள் அவ்வாறே அம்மாணவர்களும் நடந்துகொண்டனர் ஆனால் மூன்றாவது நாட்களுக்கு மேல் அனைவரும் அவ்வாசிரியரிடம் “ஐயா! நீங்கள் கூறியவாறு உருளைகிழங்குகள் உள்ள இந்த பையை எப்போதும் எங்களிடம் வைத்திருந்தால் அழுகிய நாற்றம் வீசஆரம்பித்துவிட்டது. இதற்குமேல் இந்த பையை எங்களால் வைத்து கொண்டு வேறு பணிகளை செய்யமுடியாது” என புகாரிட ஆரம்பித்தனர்.

“நல்லது. மாணவர்களே! சாதாரண உருளைகிழங்குகளையே உங்களால் இரண்டு அல்லது மூன்ற நாட்களுக்குமேல் வைத்திருக்கமுடியவில்லை அழுகிய நாற்றம் வீசஆரம்பித்துவிட்டது என கூறுகின்றீர்கள். ஆனால் நீங்கள் வெறுக்கும் நபரை மட்டும் உங்களின் நினைவில் நீண்ட நாட்களுக்கு வைத்துள்ளீர்களே! அது ஏன் ? அவ்வாறு அந்நபர்களை பற்றிய செய்தியை மிக நீண்ட நாட்களுக்கு உங்களுடைய நினைவில் வைத்திருந்தால் உங்களால் உங்களுடைய வேறுமுன்னேற்ற செயல்கள் எதையும் செய்யமுடியாது அதனால் இன்றோடு அவைகளை நினைவில் இருந்து அழித்துவிட்டு உங்களின் முன்னேற்றம் வளர்ச்சி ஆகியவைபற்றி மட்டும் சிந்தித்து செயல்பட உங்கள் நினைவை பயன்படுத்துக” என அறிவுரைகூறினார் .

சனி, 25 மே, 2013

அவரவர் பணியை விருப்பு வெறுப்பின்றி முழுமையாக செய்திடுக


நல்ல திறமையான கொத்தானார் ஒருவர் தான் பணிபுரியும் முதலாளியிடும் தன்னுடைய வயது முதிர்வினால் தன்னால் இனி அவரிடம் பணிசெய்ய இயலாத நிலையில் உள்ளதால் தனக்கு விருப்ப ஓய்வு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்

உடன் முதலாளியானர் நீங்கள் நல்ல திறமையான பணியாளராக இருக்கின்றீர் உங்களை பணியில் இருந்து ஓய்வளிக்க எனக்க மனம் இடந்தரவில்லை இருந்த போதிலும் உங்களுடைய விருப்படி நீங்கள் பணியிலிருந்து ஓய்வெடுத்து கொள்ள அனுமதிக்கின்றேன் அதற்குமுன் இந்த வீட்டைமட்டும் கடைசியாக உங்களுடைய திறமையை பயன்படுத்தி விரைவில் கட்டிமுடித்துவிட்டு பணிஓய்வெடுக்க செல்லுங்கள் என கேட்டு கொண்டதற்கினங்க வேண்டா வெறுப்பாக அரைகுறையாகவும் ஏனோதானோவென்றும் தரம் குறைந்த பொருட்களை கொண்டு அந்த வீட்டை கட்டிமுடித்தார்

ஒருவழியாக அந்த வீட்டின் அனைத்து பணிகளும் முடிந்த அன்று தன்னுடைய முதலாளியிடம் விடைபெறசென்றபோது முதலாளியானவர் அந்த கொத்தனார் கடைசியாக கட்டிமுடித்த வீட்டின் சாவியை அந்த கொத்தானாரிடமே கொடுத்து அதனுடன் கொத்தனாரின் பெயருக்கு மாற்றம் செய்த அந்த வீட்டிற்கான உரிமை பத்திரத்தையும் வழங்கி இதுநாள் வரையில் செய்த அவருடைய பணிக்கான பரிசாக இந்த வீட்டினை வைத்து கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார்

அந்த கொத்தனாருக்கு நெருப்பை விழுங்கிய கோழிபோன்று மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கும் நிலையாகிவிட்டது

அவரால் கடைசியாக கட்டபட்டஇந்தவீடானது தனக்கு பரிசாக கிடைக்கபோகின்றது என தெரிந்திருந்தால் மிகசிறப்பாக தரமான பொருளை கொண்டு கட்டியிருக்கலாமே என வருத்தபடமட்டுமே அந்நிலையில் அவரால் முடிந்தது .

புதன், 22 மே, 2013

மிககுறுகிய நம்முடைய இந்த வாழ்வை மகிழ்வோடு உடல்நலனையும் மனநலனையும் பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்திடுவோம்


பேராசிரியர் ஒருவர் பொதுமக்களுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றில் அவர்களுடைய வாழ்வில் ஏற்படும் இடர்களை தவிர்த்து நிம்மதியாக எவ்வாறு தத்தமது வாழ்வை வெற்றிகொள்வது என அறிவுரை வழங்கிகொண்டிருந்தபோது அவர் தம்முடைய கைகளால் நீர்நிறைந்த சிறுடம்ளர் ஒன்றை தூக்கி வைத்து கொண்டு “இது எவ்வளவு எடைஇருக்கும்” என தன்னுடைய அறிவுரையை கேட்பதற்காக குழுமியருந்தவர்களிடம் கேட்டார்

உடன் “கால்கிலோ இருக்கும்” என ஒருவரும் “200 கிராம் இருக்கும் “ என மற்றொருவரும் என்றவாறு அனைவரும் ஆளாளுக்கு மனதில் யூகித்த எடையை கூறினர். அந்த பேராசியர் .”அமைதி! அமைதி! இங்கு இந்த டம்ளரில் இருக்கும் உண்மையான தண்ணீரின் எடை ஒரு பொருட்டன்று. இதனை நாம் எவ்வளவு நேரம் நம்முடைய கைகளால் தாங்கி கொண்டுள்ளோம் என்பதற்கேற்ப நம்முடைய கைகள் அதனுடைய எடை எவ்வளவு என உணரச்செய்கின்றது. உதாரணமாக ஒருசில நிமிடங்கள் எனில் டம்ளரின் தண்ணீருடன் கூடிய எடை ஒரு பொருட்டாக தெரியாது. அதையே ஒருமணிநேரம் கைகளில் வைத்திருந்தால் கைகளில் வலி ஏற்பட்டு அதிக எடையை தாங்குவதாக உணருவோம். அதையே நாள்முழுவதும் எனில் உடனடியாக நம்மை மருத்துவமனைக்கு ஏழைத்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.. அதாவது நீர்நிறைந்த சிறுடம்ளரை கைகளால் வைத்திருப்பதற்கே இவ்வாறான நிலை எனில்? நாம் தினமும் அலுவலகத்தில் அல்லது வாழ்வில் எதிர் கொள்ளும் எந்தவொரு பிரச்சினையையும் அவ்வப்போது மனதில் இருந்து அப்புறபடுத்திவிடவேண்டும் அதாவது அன்றன்று நாம் வீடு திரும்பும்போது அலுவலகத்தோடு அவைகளை விட்டிட்டு வீட்டின் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தபின் மறுநாள் அலுவலகம் சென்று அதனை எதிர்கொணடால் அதற்கான தீர்வை மிகசுலபமாக எளிதாக காணமுடியும் அதனைவிடுத்து எப்போதும் அவைகளை நம்மோடு கொண்டு சென்றால் நம்மை அவை படுக்கையில் நோயாளியாக வீழ்த்திவிடும்” என அறிவுரை கூறினார் .

ஆம் நாமும் இந்த அறிவுரையை பின்பற்றி மிககுறுகிய நம்முடைய இந்த வாழ்வை மகிழ்வோடு உடல்நலனையும் மனநலனையும் பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்திடுவோம்.

திங்கள், 13 மே, 2013

தேவையற்ற செய்திகளையும் நிகழ்வுகளையும் நம்முடைய மனதில் குப்பை போன்று தேக்கிவைத்திட வேண்டாம்


ஒரு முதிய துறவியும்(சாமியாரும்) அவருடைய உதவியாளரான இளைய துறவியும்(சாமியாரும்) அங்காங்கு கோவில்,மடம் என நாடுநகரங்கள் அனைத்தும் சுற்றி திரிந்து தங்களின் காலத்தை கழித்து வந்தனர்

இந்நிலையில் அவ்விருவரும் ஒரு ஆற்றை கடக்கவேண்டிய நிலையில் ஒருஇளம்பெண்ணும் அதே ஆற்றை கடப்பதற்காக எவ்வாறு கடந்து செல்வது என தயங்கி கொண்டிருந்ததை கவணித்த முதியதுறவியார் தான் அந்த இளம்பெண்ணிற்கு உதவுவதாக கூறி அப்படியே இருகைகளாலும் ஏந்திகொண்டு அந்த கரைக்கு ஆற்றில் கழுத்தளவு தண்ணீரில் கடந்து சென்றார்

அவருடன் கூடவே வந்த அவருடைய உதவியாளரான இளைய துறவிக்கு இந்த நிகழ்வை கண்டு மிக அதிக அதிர்ச்சி ஆகிவிட்டது ‘துறவி என்றால் முற்றும் துறந்தவராயிற்றே பெரியவர் எப்படி அந்த இளம்பெண்ணைதன்னுடைய கைகளால் தொடலாம் தொட்டதுமட்டுமல்லாமல் இருகைகளாலும் தூக்கிகொண்டுவேறு செல்கின்றாறே’ என மனதிற்குள் பொருமி கொண்டே சென்றார்

அடுத்த கரை சென்றவுடன் முதியதுறவியானவர் அந்த இளம்பெண்ணை தரையில் இறக்கி விட்டு “பத்திரமாக வீடு போய் சேரு தாயே!” என அறிவுரைகூறிவிட்டு அவர் அடுத்தஊருக்கு செல்லும் பாதையில் தம்முடைய பயனத்தை தொடர்ந்தார். இளையதுறவியும் மனதிற்குள் பொருமிக்கொண்டே அவரை பின்பற்றி சென்றார்

அன்று சாயுங்காலம் அருகிலிருந்த ஊருக்க அவ்விரு துறவிகளும் சென்று சேர்ந்தனர் அவ்வூரில் உள்ள தருமசத்திரத்தில் இரவு உணவை இருவரும் அருந்திய பின் ஓய்வுகொள்ள முனைந்திடும்பேது இளந்துறவி தன்னுடைய மனதில் குடைந்து கொண்டிருந்த கேள்வியை வாயை திறந்து கேட்டுவிட்டார்” ஐயா! நீங்களோ முற்றும் துறந்த துறவியார் ஆவீர்! அதனால் எந்த ஒரு பெண்ணையும் உங்கள் கைகளால் தொடக்கூடாது. அப்படியான நிலையில் இன்று ஆற்றை கடக்கும்போது எவ்வாறு ஒரு இளம்பெண்ணை இருகைகளால் ஏந்தி தூக்கி கொண்டு வரலாம்? அது உங்களுடையை துறவிற்கு பங்கம் இல்லையா? “என வினவினார்

“தம்பி! நான் அந்த இளம் பெண்ணை ஆற்றங்கரையிலேயே இறக்கிவிட்டுவிட்டேனே! ஆனால், நீ இன்னும் உன்னுடைய மனதில் இருந்து இறக்கிவிடவில்லையா?” என பதிலுக்கு வினவிய போதுதான் அந்த இளந்துறவிக்கு தான் இன்னும் அந்த முதியதுறவிபோன்று மனபக்குவம் அடையவில்லையென தெரிந்துகொண்டு அந்த முதிய துறவியிடம் தன்னை மன்னித்துவிடும்படி கோரினார்

நாம் பல்வேறு தேவையற்ற செய்திகளையும் நிகழ்வுகளையும் நம்முடைய மனதில் குப்பை போன்று தேக்கிவைத்து ஆக்க சிந்தனை எதுவுமின்றி நம்முடைய பொழுதினை வீணடிப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களின் மனதையும் புண்படுத்திவிடுகின்றோம் இதனை தவிர்த்திடுக

வெள்ளி, 10 மே, 2013

அதிபயங்கரமான தலைமையாளர்கள்


நம்முடை ய பணியில் நாம் எவ்வாறு பணிபுரிந்தோம் என்பது பெரிய செய்தியன்று நம் சகபணியாளருடன் நம்முடைய பணியானது எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுத்தபட்டது என்பதும் நம்முடைய பணியின் தலைவர்களான மேற்பார்வையாளர் அல்லது மேலாளர் நமக்கு எவ்வாறு வழிகாட்டி நம்முடைய பணியின் நிலையை நல்லதொரு இனிய அனுபவமாக எவ்வாறு கொண்டு சென்றார்கள் என்பதே மிகமுக்கியமான செய்தியாகும் ஆயினும் நம்முடைய பணியை மேற்பார்வையிடும் தலைவர்களும் நம்மைபோன்ற மனிதர்களே அவர்களுக்கும் மற்ற மனிதர்கள் போன்ற அனைத்து குணநலன்களும் விருப்பு வெறுப்புகளும் குறைபாடுகளும் உண்டு என்பதை மனதில் கொள்க இருந்தாலும் அவர்கள் நம்மைவிட சிறந்தவர்களாக திறன்வாய்ந்தவர்களாக வழிகாட்டிகளாக இருக்கவேண்டும் அதனால் அந்த தலைமையாளர்களில் எத்தனை வகைஉண்டுஎன இப்போது காண்போம்

1.பாதுகாப்பற்ற (நிலையற்ற) தலைமையாளர் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என பயந்து பயந்து தற்போது நடப்பில் இருப்பதை மாற்றாமல் அப்படியே பராமரித்து கொண்டு செயல்படும் தலைமையாளர்கள் இந்தவகையை சேர்ந்தவர்கள்

2 சித்தபிரமையுடைய தலைமையாளர் இந்த வகை தலைமையாளர் இவருடைய பணித்திறனே கேள்விக்குறியாக இருந்திடும்போது தன்னுடைய தவற்றை மறைப்பதற்காக தன்கீழ்பணிபுரியும் ஊழியர்களை அல்லது பணியாளர்களை மேலதிகாரிகளிடம் போட்டுகொடுத்து தன்னை மட்டும் பாதுகாத்து கொள்வார்

3. சுயநலதலைமையாளர் இந்த வகை தலைமையாளர் தான் பணிபுரியம் இடத்தி எந்தவொரு அநீதி நடந்தாலும் கண்டு கொள்ளமாட்டார் தம்கீழ் பணிபுரிபவர்களை அவர்களின் தவறாக செய்திடும் சிறிய பணிகளைகூட கண்டித்து பணியை சரியாக முடிக்கசெய்ய மாட்டார் ஆனால் தன்னுடைய சொந்தவாழ்வின் சுகதுக்கங்களை மட்டும் மூட்டைகட்டிகொண்டு வந்து அலுவலகத்தில் மற்றவர்களிடம் அதனை கூறிதன்மீது இறக்கம் கொள்ளுமாறு நடந்துகொள்வார்

4 பொறுப்பை மற்றவர்களுக்கு மாற்றிவிடும் தலைமையாளர் நல்ல மனநிலையில் இவர் இருக்கும்போது ஊழியர்களுக்கு நல்ல மரியாதை கொடுத்து பணிவாங்குவார் அந்த பணியை தானே செய்யமுயற்சிப்பதாகவும் நன்றாக நடிப்பார் ஆனால் அனைத்து பணிகளையும் ஏன் அந்த தலைமையாளர் முடிக்கவேண்டிய பணிகளையும் தன்கீழ்பணிபுரியம் பணியாளர்களை நைசாக பேசி அவர்களை கொண்டு முடித்து கொள்வார் அனைத்த பொறுப்புகளை ஊழியர்களிடம் பகிர்ந்து அளிப்பதிலேயே குறியாக இருப்பார் தான்மட்டும் எந்த பொறுப்பையும் ஏற்றுகொள்ளமாட்டார்

4 நம்மைவிட நன்றாக செயல்படக்கூடிய தலைமையாளர்கள் ஒரு சில தலைமையாளர்கள் மனிதர்களை நிருவகிப்பதில் திறமைசாலியாகஇருப்பார்கள் ஆனால் பணியாளர்களை வழிநடத்திசெல்வதிலும் , தலைமைபண்பிலும் , செயலை வெற்றி நோக்கி கொண்டு செல்வதிலும் திறமையற்றவர்களாக இருப்பார்கள். அவர்களின் தலைமை பண்பை பற்றி நாம் தவறாக எண்ணத்தேவையில்லை ஆனால் அவர்கள் எப்படியும் தங்களுடைய இலக்குகளை அடைந்துவிடுவார்கள்

புதன், 8 மே, 2013

எந்த வொரு சிக்கலுக்கும் மறுபுறம் என்ற ஒன்று உள்ளது


தந்தையும் மகனும் ஒருவீட்டில் இருந்தனர் தந்தை மிகதீவிரமாக ஏதோவொரு முக்கியமான பணியை செய்துவரும்போது அவருடைய மகன் அவருடைய பணியின் இடையிடையே தொந்தரவு செய்து கொணடிருந்தான் அதனால் முழுமையாக அவருடைய பணியை முடிக்கமுடியாமல் அவர் மிகதிணறி கொண்டிருந்தார்

இந்த நேரத்தில் அவருடைய மேஜையிலிருந்த புத்தகத்தின் இந்திய வரைபடத்தை அம்மகன் தாறுமாறாக கீழித்துகொண்டிருந்தான் உடன் அந்த தந்தையானவர் அம்மகனை இதற்குமேல் விட்டால் நம்மால் முழுமையாக பணியை முடிக்கமுடியாது

அதனால் மகனே முதலில் நீகிழித்துவிட்ட இந்த இந்திய வரைபடத்தை மிகச்சரியாக ஒட்டிகொண்டு வா அதன்பின் உனக்கு அதற்காக ஒரு பரிசு தருகின்றேன் என அவனுடைய தொந்தரவு இதனாலாவது குறையும் நாமும் நம்முடைய பணியை விரைவாக முடிக்கலாம் என திட்டமிட்டார்

ஆனால் என்ன ஆச்சரியம் எப்போதும் துறுதுறுவென இருக்கும் அவருடைய மகன் ஓரிரு நிமிடங்களில் இந்தியவரை படத்தை மிகச்சரியாக பொருத்தமாக ஒட்டி கொண்டுவந்து தன்னுடைய தந்தையிடம் எங்கே பரிசுபொருள் உடன் தருக என வந்து சேர்ந்தான் இது எவ்வாறு ஓரிரு நிமிடங்களில் சாத்தியமானது என அம்மகனிடம் வினவியபோது அந்த வரைபடத்திற்கு பின்புறம் ஒருமனிதனின் முகம் இருந்தது அதனை மிகச்சரியாக பொருத்தியவுடன் முன்புறம் இந்திய வரைபடம் சரியாக பொருந்தி அமைந்தவிட்டது அவ்வளவுதான் என பதிலிறுத்தான்

ஆம் எந்த வொரு சிக்கலுக்கும் மறுபுறம் என்ற ஒன்று உள்ளது அதனை சரியாக கண்டுபிடித்து தீர்வுசெய்தால் நடப்பு சிக்கலுக்குஎளிதில் தீர்வு கிடைத்துவிடும்.

ஞாயிறு, 5 மே, 2013

நடைபெறும் செயல் ஒன்றுதான் அதன் பலன் அவரவருடைய மனதிற்கு மட்டுமே தெரியும்


ஒரு அரசனிடம் ஆலோசனை கூறுவதற்காக மதியூக மந்திரியும் ஊரின் பாதுகாப்பிற்காக ஊர்காவல் தளபதியும் பணிபுரிந்து வந்தனர் மந்திரிக்கு ஒரு மகன் இருந்தான்

அவனிடம் தினமும் ஊர்காவல் தளபதி தன்னுடைய ஒரு கைநிறைய தங்ககாசுகளையும் மற்றொரு கைநிறைய வெள்ளிக்காசுகளையும் வைத்துகொண்டு "இவைகளில் மதிப்புமிக்க பொருள் எவையோ அவற்றுள் ஒரு காசு எடுத்துகொள்" என கோரிய போதெல்லாம் "வெள்ளிக்காசுகளே மதிப்பு மிக்கவை" என கூறி வெள்ளிக்காசுகளை வைத்துள்ள கையிலிருந்து ஒரு வெள்ளி காசைமட்டும் எடுத்து சட்டைபையில் வைத்துகொண்டு படிப்பதற்கான பள்ளிக்கு செல்வது வழக்கமாகும்

உடன் அருகிலிருப்போரெல்லாம் "ஹா ஹா பார்த்தீர்களா மதியூக மந்திரியின் பிள்ளை எவ்வளவு முட்டாள்" என ஏளனம் செய்து கைகொட்டி சிரித்தனர்

அதனால் ஒருநாள் அந்த ஊர்காவல் தளபதியும் மதியூக மந்திரியிடம் "என்ன மந்திரியாரே நீங்கள் சிறந்த அறிவாளியாக இருக்கின்றீர் நம்முடைய நாட்டு அரசனுக்கே ஆலோசனை கூறுகின்ற அளவு புத்தி சாதுரியமாக உள்ளீர் ஆனால் உங்களுடைய மகன் சாதாரணமாக வெள்ளி காசிற்கும் தங்ககாசிற்கும் மதிப்பு வித்தியாசம் தெரியாதவனாக வளர்த்து வருகின்றீரே" என நக்கலோடு கூறினார்

அன்று இரவு மந்திரி தன்னுடைய வீட்டிற்கு திரும்பியவுடன் தன்னுடைய மகனை அழைத்து "வெள்ளி காசு தங்ககாசு ஆகிய இரண்டிலும் எது மதிப்பு மிக்கது" என வினவியபோது "தங்ககாசு தான் மதிப்புமிக்கது" என உடனே பதிலிருத்தான் "சரிமகனே ஆனால் நம்முடைய ஊர்க்காவல் படைத்தளபதியிடம் மட்டும் ஏன் வெள்ளிக்காசுதான மதிப்புமிக்கது என கூறுகின்றாய்" என தொடர்ந்து வினவியபோது அம்மந்திரியின் மகன் தான் தங்கியுள்ள அறைக்கு மந்திரியை அழைத்து சென்ற அங்குள்ள பெட்டியில் சுமார் நூறு வெள்ளி காசுகள் இருப்பதை காண்பித்து "நான் தங்ககாசுதான் மதிப்பு மிக்கது என கூறியிருந்தால் ஒரே ஒரு தங்ககாசோடு அந்த விளையாட்டு முடிந்துவிட்டிருக்கும் ஆனால் நான் வெள்ளிக்காசுதான் மதிப்புமிக்கதுஎனக்கூறியதால் தினமும் இந்த விளையாட்டு நடக்கின்றது என்னிடமும் சுமார் நூறுகாசுகள் சேர்ந்துள்ளன " என கூறினான்

ஆம் நடைபெறும் செயல் ஒன்றுதான் ஆனால் அந்த செயலானது அவரவருடைய நோக்கில் ஒருவருக்கு சரியாகவும் மற்றொருவருக்கு தவறாகவும் மாறுபட்டு தோன்றிடும் ஆனால் இதில் யார்வெற்றி பெறுகின்றார்கள் யார் தோல்வியுற்றார்கள் என்பது அவரவருடைய மனதிற்கு மட்டுமே தெரியும்.

வியாழன், 2 மே, 2013

உலகை மாற்றியமைப்பதற்கு முன்பு நம்மை மாற்றிகொள்


முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் தன்னுடைய நாடு நகரங்கள் அனைத்தையும் சுற்றிபார்க்க விரும்பினார். ஆனால் தற்போது இருப்பது போன்று அந்த காலத்தில் போக்குவரத்து வசதி இல்லை. அதனால் கால்நடையாக தன்னுடைய அமைச்சர்கள் படைத்தலைவர்களுடன் மிக நீண்ட சுற்றுபயனம் செய்து பார்வையிட்டு திரும்பினார்.

அப்போது நாட்டில்இருந்த சாலைகள் அனைத்தும் கரடுமுரடாக கல்லும் முல்லும் கலந்து இருந்ததால் அவருடைய கால்களில் சிறுசிறு காயம் ஏற்பட்டு வலி மிகஅதிகஇருந்தது .என்ன இது நம்முடைய நாட்டின் சாலைகள் அனைத்தும் கரடுமுரடாக நடப்பவரின் கால்களை காயம் ஏற்படுத்தகின்றன அதனால் நம்முடைய நாட்டில் உள்ள சாலைகளின் மீது மாடுகளின் தோலை பரப்பிமூடி மிருதுவாக்குங்கள் அதற்காக எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என உத்தரவிட்டார்

இதனால் ஆயிரகணக்கான மாடுகளை கொல்லவேண்டியநிலை ஏற்படும் அதனால் விவசாயிகளுக்கு விவசாயத்தில் உதவிபுரிவதற்கான மாடுகளும் நாம் அனைவரும் குடிப்பதற்கான பாலும் கிடைக்காது அதுமட்டுமல்லாமல் இதனால் ஏராளமான செலவாகும் அதற்கு பதிலாக மிகச்சிறிய துண்டு மாட்டின் தோலைகொண்டு அரசனுக்கு தேவையான காலணிகளை செய்து நாட்டினை சுற்றிபார்க்க செல்லும்போது கால்களில் அணிந்துகொண்டு சென்றால் கால்களில் சிறு சிறு காயமும் ஏற்படாது கால்வலியும் வராது என அவருடைய அமைச்சர் ஆலோசனை கூறினார் அப்படியா உடனடியாக அவ்வாறே செய்என மாற்றிஉத்திரவிட்டார்

ஆம் இந்த உலகை மகிழ்வோடு இருப்பதற்காக மாற்றியமைக்க முயற்சிக்குமுன் நாம் மகிழ்வோடு இருப்பதற்கு முயற்சியினை செய் அதாவது உலகை மாற்றியமைப்பதற்கு முன்பு நம்மை மாற்றிகொள் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்க

புதன், 1 மே, 2013

குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் நன்று


ஒரு நகரத்தில் புதியதாக திருமணம் ஆன இளம் தம்பதியர் மிகஅமைதியாகவும் மகிழ்வாகவும் வாழ்ந்து வந்தனர் இதனை கண்ணுற்ற அக்கம் பக்கம் இருந்தவர்களில் ஒருவர் இந்த தம்பதியரில் இளம்மணைவிக்கு மட்டும் சிறந்த ஆலோசனை ஒன்றை கூறுவதாகவும் அதனை பின்பற்றினால் அவர்களின் மனவாழ்க்கை மேலும் சிறப்பாக அமையும் எனவும் கூறினார்

அந்த இளமனைவியும் உடன் அந்த ஆலோசனையை நடைமுறைபடுத்த விழைந்தார் அதனால் ஒருநாள் தம்பதியர்கள் இருவரும் மனமகிழ்வோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டு தோழி கூறிய ஆலோசனைபடி ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கை துனையினுடைய நடவடிக்கைகளில் மற்றவரின் மனம் புன்படுத்துமாறு உள்ள செயல்களை மட்டும் பட்டியலிட்டு அதனை மற்றவருக்கு படித்து காண்பத்தபின் அதனை திருத்தி சரியாக மாற்றியமைத்து கொண்டால் இன்னும் மனமகிழ்வோடு பிரச்சினையே இல்லாமல் அமையும் என முடிவுசெய்து அந்த இளம் தம்பதியர்கள் இருவரும் தனித்தனி அறைக்கு சென்று மற்றவர் நடவடிக்கையில் தமக்கு பிடிக்காதவை எவையெவையென பட்டியலிட முனைந்தனர்

ஓரிரு மணிநரம் கழித்து இருவரும் சந்தித்து கொண்டனர் முதலில் இளம் மனைவி தன்னுடைய இளம் கணவரின் நடவடிக்கையில் தனக்கு பிடிக்காதவைகள் என மூன்று பக்கம் எழுதியருந்ததை ஒவ்வொன்றாக படிக்க படிக்க அடடா நம்முடைய நடவடிக்கைகளில் இவ்வளவு நடவடிக்கைகள் தம்முடைய இளம் மனைவிக்கு மனவருத்தை தருமாறு உள்ளனவா என கண்ணீர்விட்டு அழுத பின் சரிசரி இனிமேல் அவைகளை தவிர்த்து சரியாக கவணமாக உனக்கு மனவருத்தம் இல்லாமல் என்னுடைய நடவடிக்கையை பார்த்து கொள்கிறேன் என உறுதிகூறினார்

உடன் இளம் மனைவியும் நிரம்ப சரி இனி நீங்கள் எழுதிய பட்டியலை படியுங்கள் என கோரியபோது இளம் தம்பதியரில் கணவனானவர் எனக்கு மனவருத்தம் தருமாறான செயல்கள் எதுவுமே உன்னிடம் இல்லை அனைத்துமே எனக்கு பிடித்தமான நடவடிக்கை களைத்தான் நீ செய்கின்றாய் அதனால் பட்டியல் தயார் செய்யவேண்டிய தேவை எதுவுமே இல்லை என கூறினார்

குடும்ப தம்பதியரில் ஒருவருக்கொருவர் மற்றவரின் குற்றம் குறைகளை பூதாகரமாக பெரிதுபடுத்தமால் விட்டுகொடுத்து பெருந்தன்மையாக மகிழ்வோடு ஏற்று அனுசரித்து போவதுதான் நல்லமகிழ்வான குடும்பவாழ்விற்கு அடிப்படையாகும் என தன்னுடைய கணவனின் இந்த செயலில் இருந்து அறிந்த கொண்ட அந்த இளம் மனைவி தன்னுடைய கணவனின் பெருந்தன்மையை கண்ணுற்று தேம்பிதேம்பி அழ ஆரம்பித்தார் .

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...