சனி, 15 ஆகஸ்ட், 2020

தேர்விற்கான காலியான கேள்வித்தாள்

 
ஒரு நாள் ஒரு பேராசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்து தனது மாணவர்களிடம் ஒரு வித்தியாசமான தேர்வுநடத்த தயாரானார். மாணவர்கள் அனைவரும் அந்த தேர்வு எழுதுவதற்கு தங்கள் இருக்கைகளில் ஆவலுடன் காத்திருந்தனர். பேராசிரியர் வழக்கம் போல் தேர்விற்கான வினாத்தாளை அனைத்து மானவர்களிடமும் வழங்கினார். அவர் அனைவருக்கும் கேள்வித்தாளை ஒப்படைத்தவுடன், தங்களுடைய விடைத்தாளில் பதில் எழுத தொடங்கும்படி மாணவர்களைஅனுமதித்தார். மாணவர்கள்அனைவரும் ஆச்சரியமாக கேள்வித்தாளை திருப்பிதிருப்பி பார்த்தனர் ,அந்த சேள்வித்தாளில் கேள்விகள் எதுவும் இல்லை, ஆனால் கேள்வித்தாளின் மையத்தில் ஒரேயொரு கருப்பு புள்ளி மட்டுமே இருந்தது.
அனைவரின் முகத்திலும் ஆச்சரியவெளிப்பாட்டைக் கண்ட பேராசிரியர்,மாணவர்களிடம், “நீங்கள் உங்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாளில் என்ன பார்க்கின்றீர்களோ அதை நீங்கள் எழுத வேண்டும்” என்று கூறினார். இவ்வாறு பேராசிரியர் கூறியதை கேட்டவுடன் மிகவும் குழப்பமான மாணவர்கள் காலியான கேள்வித்தாளை வைத்து எவ்வாறு பதில் எழுதுவது என்ற விவரிக்க முடியாதசிக்கலில் தங்களுடைய விடை எழுதும் பணியை தொடங்கினர். அனைவரும் தங்களுடைய பதிலை எழுதி பேராசியிரிடம் ஒப்படைத்தனர் வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் விடைத்தாளை ஒப்படைத்துமுடித்தபின்னர், பேராசிரியர் அனைத்து விடைத்தாட்களையும் எடுத்து, அவை ஒவ்வொன்றையும் அம்மாணவர்களின் முன்னால் உரக்கப் படிக்கத் தொடங்கினார். விதிவிலக்குகள் இல்லாமல் அவர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாளின் மையத்தில் இருந்த கருப்பு புள்ளியை பற்றி மட்டுமே விவரித்து எழுதிஅதனை விளக்க முயன்றனர்.
அனைத்துவிடைத்தாட்கள் எல்லாம் படித்த பிறகு, வகுப்பறை அமைதியாக இருந்தது. பேராசிரியர் விளக்கத் தொடங்கினார், “நான் உங்கள் அனைவரையும் வித்தியாசமாக சிந்திக்குமாறு தூண்டுவதற்காக விரும்பினேன். அதற்காக காலியான வினாத்தாளை உங்களுக்கு வழங்கினால் நீங்கள் சிறிது வித்தியாசமாக சிந்தித்து எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்அவ்வாறு வழங்கினேன் ஆனால் உங்களுள் யாரும் நான் எதிர்பார்த்தவாறு காகிதத்தின் வெள்ளை பகுதி பற்றி எழுதவேயில்லை. எல்லோரும் மையத்தில் இருந்த கருப்பு புள்ளியில் மட்டுமே கவனம் செலுத்தினீர்கள், நம் வாழ்க்கையிலும் இதே போன்று நிகழ்கிறது. வித்தியாசமாக சிந்திக்கவும் அதற்கேற்ப செயல்படவும் நம்மிடம் வெள்ளை தாள் போன்று நல்ல பகுதி ஏராளமாக உள்ளன, ஆனால் நாம் அனைவரும் எப்போதும் சிறிய இருண்ட கருப்பு புள்ளிபோன்ற குறைகளின் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறோம். அதனை ஊதிபெரியதாக ஆக்கி வாழ்க்கையை வீணடித்து அதனால் நம்முடைய மனத்தை எப்போதும் மாசாக்கி வீணடிக்கின்றோம் வெள்ளைதாளை போன்ற ஏராளமான அளவிலான பல்வேறு நல்ல செயல்கள் எதுவும் நம்முடைய கண்ணிற்கு தெரிவதே இல்லை அதனை ஏற்று அனைவருடன் அன்புடனும் அக்கறையுடனும் அவை இயற்கை நமக்கு அளித்த பரிசாக. கொண்டாடி மகிழ்ச்சியுடன் வாழ மறந்துவிடுகின்றோம்
அதாவது நம்மைத் தொந்தரவு செய்யும் உடல்நலப் பிரச்சினைகள், பணமின்மை, குடும்ப உறுப்பினருட னான சிக்கலான உறவு, நண்பர்களுடனான ஏமாற்றம் போன்ற நம்முடைய வாழ்வின் இருண்ட கருப்பு புள்ளியில் மட்டுமே நாம் கவனம் அனைத்தையும் செலுத்தி நம்முடைய வாழ்க்கையை வீணாக்குகின்றோம் அவைதான் நம் மனதை மாசுபடுத்துகின்றன.அவ்வாறானநம்முடைய வாழ்க்கையில் உள்ள கருப்பு புள்ளிகளிலிருந்து கண்களை விலக்கிக் வெள்ளைதாளை போன்ற ஏராளமான அளவில் உள்ள நல்ல செயல்களில் கவணம் செலுத்திடுக., வாழ்க்கை உங்களுக்கு ஒவ்வொரு கணமும்வழங்கும் பல்வேறு நல்ல செயல்களை கொண்டு. சாதகமாக மாற்றி மகிழ்ச்சியாக வாழ்ந்திடுக! ” என நீண்ட விளக்கமளித்தார்
பேராசிரியர் விளக்கமளித்தபடி, வாழ்க்கை என்பது நல்ல மற்றும் கெட்ட செய்திகளின் ஒரு கலவையாகும், நம் அனைவரின் முன் நேர்மறையான செயல்களும் எதிர்மறைசெயல்களும் உள்ளன. ஆனால் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான நேர்மறைகளில் மட்டு் நாம் எப்போதும் அதிக கவனம் செலுத்த வேண்டும். எதிர்மறைகளைப் பற்றி நினைத்து நம்முடைய நேரத்தை வீணாக்கவேண்டாம்


கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...