வியாழன், 27 ஆகஸ்ட், 2020

கட்டாயமாக மாற்றக்கூடிய கடனீட்டுபத்திரங்களை சமவிகித பங்குகளாக எவ்வாறுமாற்றுவது

 

கடனீட்டு பத்திரம்’ என்பது நிறுவனங்களுக்கு நிதிவசதி ஏற்படுத்தக்கூடிய ஒரு கடன் வாங்குவதற்கான கருவியாகும், இதனை நிறுவனங்கள் தங்களுக்கு நீண்ட காலத்திற்குதேவையானகடன்தொகையை நிலையான வட்டி விகிதத்தில் வாங்குவதற்காகப் பயன்படுத்திகொள்கின்றன.கடன் பத்திரங்கள், பத்திரங்கள் அல்லது வேறு எந்த கருவியும் உள்ளடங்கிய, அவ்வாறான கடன்பெறுவதற்காக நிறுவனத்தின் சொத்துக்களின் மீது அடைமானமாக ஆக்கப்பட்டாலும் ஆக்கப்படவில்லைஎன்றாலும் ஒரு நிறுவனத்தின் கடனை நிரூபிக்கும் எதுவும் கடன்பத்திரமாகும்” என நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 2 (30) கடன் பத்திரங்களை பற்றி வரையறுக்கிறது. மேலும் நிறுவனங்களின் விதி 18 (பங்கு மூலதனம் மற்றும் கடன் பத்திரங்கள்) விதிகள், 2014 மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 71, கடன் பத்திரங்கள் பற்றி விவாதிக்கின்றன.

மாற்றத்தக்க கடனீட்டுபத்திரங்கள் என்பது ஒரு நிறுவனத்தால் வழங்கப்படும் கடனீட்டு பத்திரங்களின் வகைகளில் ஒன்றாக வரையறுக்கப்படுகிறது, இதனை அந்நிறுவனத்தின் பங்குகளாக மாற்றப்படலாம். கட்டாயமாக மாற்றக்கூடிய கடனீட்டு பத்திரங்கள்(Compulsorily convertible debenture), கடனீட்டுபத்திரங்களின் செலவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அந்நிறுவனத்தின் சமவீத பங்காக மாற்றப்படுகிறது. இதனை CCDஎனும் சுருக்கமான பெயரால் அழைக்கப்படுகிறது. இந்தCCD என்பது தூய கடன் அல்லது தூய பங்கு ஆகியவற்றின் கலவையாக இருப்பதில்லை. நிறுவனத்தின் இந்த கடனீட்டு பத்திரங்களின் வெளியீட்டின் போது, கடன்தொகைகளில் இருந்து சமவீத பங்கு மூலதனத்திற்கு மாற்றுவதற்கான விகிதம் எந்த விகிதத்தில் இருக்கும் என்பதை இந்த சிசிடி தீர்மானிக்கிறது.
இவ்வாறான சிசிடிஐ சமவீதபங்காக மாற்றுவதற்கான நடைமுறை பின்வருமாறு;

1. நிறுவனத்தின் Articles of Associationஇல் இவ்வாறு மாற்று விருப்பத்தை அனுமதிக்க வேண்டும்.
2.
இயக்குநர்களின் குழுக் கூட்டத்தை நடத்தி, சி.சி.டி.யை சமவீத பங்குகளாக மாற்றுவதற்கான இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் அதற்கு தேவையான தீர்மானத்தை நிறைவேற்றுவதோடு, நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒப்புதலுக்காக பொதுப்பேரவை கூட்டத்தின் அறிவிப்பை அங்கீகரிக்கவேண்டும்.
3.
நிறுவனத்தின் பங்குதாரர்களின் பொதுப்பேரவைக் கூட்டத்தை நடத்தி, சி.சி.டி.யை சமவீத பங்குகளாக மாற்றுவதற்கான சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றுவதும். நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 62 ன் படி, சிறப்புத் தீர்மானத்திற்கு விளக்கமளிக்கும் அறிக்கையைத் தயாரிப்பதும் கட்டாயமாகும். அவ்வறிக்கையில் அவ்வாறு மாற்றம் செய்வதற்கு தேவையான அனைத்து தகவல்களும் இருக்க வேண்டும்.

4. இவ்வாறான சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றிய 30 நாட்களுக்குள் படிவம்- MGT -14 வாயிலாக இதுகுறித்த தகவலை நிறுவன பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

5. அதற்கான ஒரு வாய்ப்பு கடிதம் கட்டாயமாக மாற்றக்கூடிய கடன் பத்திரதாரர்களுக்கு அனுப்பப்படவேண்டும். இவ்வாறான மாற்றத்திற்காக கடன் பத்திரதாரர்கள் ஏற்புகை செய்து அனுப்பிய அந்த ஒப்புதலை சரிபார்க்க வேண்டியது நிறுமச்செயலாளரின் கடமையாகும்.

6. இதுகுறித்து அந்நிறுவனம் மாற்றத்திற்கான மதிப்பீட்டு அறிக்கையைப் பெற வேண்டும்.

7. பொதுப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் சமவீதபங்களை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் அவ்வாறு வழங்கப்படும்பங்கின் விலை தீர்மானிக்கப்படவேண்டும்.

8. இவ்வாறான பங்குதாரர்களுக்கு படிவம் SH-1 இன் படி, பங்கு சான்றிதழை தயாரித்து வழங்குவது கட்டாயமாகும்.
9.
சமவீத பங்கினை ஒதுக்கீடு செய்பவர்களுக்கு பங்குச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் மேலும் அவர்களின் பெயர்கள் உறுப்பினர்களின் பதிவேட்டில் பதிவுசெய்யப்படவேண்டும்.

10. இவ்வாறு பங்கு ஒதுக்கீடுசெய்யப்பட்ட 30 நாட்களுக்குள், பங்குகளாக ஒதுக்கீடு செய்வது குறித்து அறிக்கையை படிவம் PAS -3 நிறுமங்களின்பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும். முழுமையான பங்குகள் ஒதுக்கிடுசெய்தவர்களின் பட்டியலுடன் நிறுவனங்கள் (பதிவு அலுவலகங்கள் மற்றும் கட்டணம்) விதிகள், 2014 இன் படி கட்டணம் செலுத்தப்பபட வேண்டும்.

11. மேலும் இந்த PAS -3 எனும் படிவத்துடன் தேவையான பட்டியல், பங்குகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டவர்களின் பட்டியல், இயக்குநர்களின்குழுத்தீர்மான நகல், பொதுப்பேரவைசிறப்புத் தீர்மானத்தின் நகல் , மதிப்பீட்டு அறிக்கை ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...